வினாடி வினா
← திரும்பச் செல்ல
UNCRPD 3 மே 2008 அன்று நடைமுறைக்கு வந்தது. [Special Competitive Exam 2025]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தேசியப் பட்டியல் சாதியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSFDC), பட்டியல் சாதியினர் குடும்பங்களின் _____ மேம்பாட்டிற்கென இயங்குகிறது.
Correct Answer: D [பொருளாதார]
Notes:
NSFDC பட்டியல் சாதிக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டுக்குக் கடனுதவி வழங்குகிறது. [PTGS 2021]
2.
கீழ்வரும் கருத்து மற்றும் காரணம் ஆகியவற்றைக் கவனிக்கவும்.
கருத்து (A): அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கைக் குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R): மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.
கருத்து (A): அரசாங்க முடிவெடுத்தலில், பணக்காரர்கள் மற்றும் அதிகாரம் படைத்த மக்களின் செல்வாக்கைக் குறைப்பது என்பது "ஜனநாயக விரிவாக்கம்" எனும் கருத்தின் சவால் ஆகும்.
காரணம் (R): மக்கள் பங்கெடுப்பு மற்றும் அவர்களின் கட்டுப்பாடு என்பது பணக்காரர்களின் செல்வாக்கு குறைக்கப்படும்போது மட்டுமே பொருளுடையதாக மாறும். இதுவே ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் நடவடிக்கையுமாகும்.
Correct Answer: A [(A) தவறு ஆனால் (R) சரி]
Notes:
செல்வந்தர் செல்வாக்கைக் குறைப்பது ஜனநாயகத்தை ஆழப்படுத்தும் சவால்; விரிவாக்கச் சவால் அல்ல. [Group 1 2021]
3.
இந்தியப் பெரும் முக்கோணவியல் அளவாய்வு 1802 ஏப்ரல் 10 அன்று _____ நகரில் தனது பணியைத் தொடங்கியது.
Correct Answer: D [மதராஸ்]
Notes:
பெரும் முக்கோணவியல் அளவாய்வு 1802-ல் மதராஸிலிருந்து தொடங்கியது. [Group 1 2022]
4.
தமிழ்நாட்டில் மனிதனுக்கும், மிருகங்களுக்குமிடையே சச்சரவு ஏற்பட முக்கியக் காரணம்
Correct Answer: B [பயிர்விளைச்சலை மிருகங்கள் சேதப்படுத்துதல்]
Notes:
தமிழ்நாட்டில் மனித-விலங்கு மோதலுக்கு முக்கியக் காரணம் காட்டு விலங்குகளின் பயிர்ச் சேதம். [PSY 2022]
5.
கூற்று (A): தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்-காப்பர் தொழிற்சாலையை மூடவேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
காரணம் (R): ஸ்டெர்லைட்-காப்பர் தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் அதில் கசியும் வாயு, காற்றையும், தூத்துக்குடி கடலோரப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கின்றன.
காரணம் (R): ஸ்டெர்லைட்-காப்பர் தொழிற்சாலையின் கழிவுகள் மற்றும் அதில் கசியும் வாயு, காற்றையும், தூத்துக்குடி கடலோரப் பகுதியின் சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்கின்றன.
Correct Answer: B [(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்]
Notes:
ஸ்டெர்லைட் ஆலை மாசுபாடே தூத்துக்குடி மக்கள் போராட்டத்திற்குக் காரணம். [CBT 2022]
6.
'தசசூத்ரா' என்பது
Correct Answer: C [சுய உதவிக் குழுக்களின் பத்துக் கொள்கைகள்]
Notes:
தசசூத்ரா – சுய உதவிக் குழுக்களுக்கான பத்துக் கொள்கைகள். [CBT 2022]
7.
மனிதனை ஏற்றிச் செல்லும் முதல் ராக்கெட் விகாஸ் இன்ஜினை இஸ்ரோ வெற்றிகரமாகச் சோதித்த இடம் (ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டம்) _____ ஆகும்.
Correct Answer: A [மகேந்திரகிரி – தமிழ்நாடு]
Notes:
ககன்யானுக்கான விகாஸ் இன்ஜின் சோதனை மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாகத்தில் நடந்தது. [Reporter 2022]
8.
தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது?
Correct Answer: C [எழும்பூர்]
Notes:
தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் சென்னை எழும்பூரில் உள்ளது. [Jailor 2022]
9.
தமிழக விவேகானந்தா கேந்திராவின் புதிய முறை உயிரி வாயுவினை உற்பத்தி செய்யும் மாதிரி சாதனமானது _____ என்று அழைக்கப்படுகிறது.
Correct Answer: A [சக்தி சுரபி]
Notes:
விவேகானந்தா கேந்திரா உருவாக்கிய உயிரி வாயு கலன் 'சக்தி சுரபி'. [Junior Rehabilitation Officer 2023]
10.
தமிழ்நாட்டில் கோவிட்-19 இன் போது நகரங்களுக்குப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட முக்கிய பிரச்சினைகளாவன?
(i) உணவுப் பிரச்சினைகள்
(ii) ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு
(iii) அறுவடைப் பணிகள் தாமதமானது
(i) உணவுப் பிரச்சினைகள்
(ii) ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு
(iii) அறுவடைப் பணிகள் தாமதமானது
Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]
Notes:
கோவிட்-19-ல் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, ஊட்டச்சத்து, வாழ்வாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டனர். [Bursar 2023]
11.
முதல் மாநில நிதி ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
Correct Answer: D [1994]
Notes:
தமிழ்நாட்டின் முதல் மாநில நிதி ஆணையம் 1994-ல் அமைக்கப்பட்டது. [Asst. Conservator of Forests 2023]
12.
பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் பி.எம். பிர்லா கோளரங்கம் அமைந்துள்ள இடம்
Correct Answer: D [சென்னை]
Notes:
பி.எம். பிர்லா கோளரங்கம் சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் மையத்தில் உள்ளது. [Asst. Conservator of Forests 2023]
13.
பெண்களுக்கெதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நிறுவப்பட்ட சட்ட ரீதியான அமைப்பு _____ ஆகும்.
Correct Answer: B [மாநில மகளிர் ஆணையம்]
Notes:
பெண்களுக்கு எதிரான குற்றப் புகார்களை மாநில மகளிர் ஆணையம் விசாரிக்கிறது. [Asst. Conservator of Forests 2023]
14.
பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை 1989-இல் நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?
Correct Answer: C [தமிழ்நாடு]
Notes:
1989-ல் தமிழ்நாடு மகள்களுக்கு மூதாதையர் சொத்தில் சம உரிமை வழங்கியது. [Combined Engineering Subordinate Service 2023]
15.
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக. கொடுக்கப்பட்ட குறியீடுகளைக் கொண்டு விடையளி.
பட்டியல்-I – பட்டியல்-II
(a) பொழுதுபோக்கு நகரம் – 1. பனாஜி
(b) நிர்வாக நகரம் – 2. புது டெல்லி
(c) தொழில் நகரம் – 3. ஜாம்ஷெட்பூர்
(d) சமய நகரம் – 4. மதுரை
பட்டியல்-I – பட்டியல்-II
(a) பொழுதுபோக்கு நகரம் – 1. பனாஜி
(b) நிர்வாக நகரம் – 2. புது டெல்லி
(c) தொழில் நகரம் – 3. ஜாம்ஷெட்பூர்
(d) சமய நகரம் – 4. மதுரை
Correct Answer: B [1 2 3 4]
Notes:
பனாஜி பொழுதுபோக்கு, புது டெல்லி நிர்வாகம், ஜாம்ஷெட்பூர் தொழில், மதுரை சமய நகரம். [AJ 2023]
16.
1967 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்து திருமணச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டத்திருத்தம்) முக்கிய நோக்கம்
Correct Answer: B [தமிழகத்தில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்டபூர்வமான அங்கீகாரம் அளிப்பது]
Notes:
1967 இந்து திருமண (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் சுயமரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது. [AJ 2023]
17.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
Correct Answer: A [1982]
Notes:
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் 1982-ல் நிறைவேற்றப்பட்டது. [Junior Scientific Officer 2023]
18.
தமிழ்நாட்டில் 1948 ஆம் ஆண்டு ஜமீன்தார் முறையை ஒழிக்க பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக.
Correct Answer: B [பிரகாசம் குழு]
Notes:
தமிழ்நாட்டில் ஜமீன்தாரி ஒழிப்பைப் பரிந்துரைத்தது பிரகாசம் குழு; சட்டம் 1948. [Combined Research Assistant 2023]
19.
கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்ட இணைகள் எவை?
(1) 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
(2) 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
(3) 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
(4) 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
(1) 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
(2) 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
(3) 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
(4) 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
Correct Answer: B [(1) மற்றும் (2) சரி]
Notes:
TOPS 2014-லும் MY Bharat 2023-லும் தொடங்கின; SAI 1984, துரோணாச்சாரியார் விருது 1985. [Group 2/2A 2024]
20.
1987-ஐ _____ ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
Correct Answer: B [சர்வதேச உறைவிடம் இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் ஆண்டு]
Notes:
ஐ.நா. 1987-ஐ உறைவிடமற்றோருக்கு உறைவிடம் வழங்கும் சர்வதேச ஆண்டாக அறிவித்தது. [Group 2/2A 2024]
21.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐ.நா. உடன்படிக்கை (UNCRPD) நடைமுறைக்கு வந்த நாள்
Correct Answer: B [3 மே 2008]
Notes:
UNCRPD 3 மே 2008 அன்று நடைமுறைக்கு வந்தது. [Special Competitive Exam 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
