வினாடி வினா
← திரும்பச் செல்ல
தமிழகத்தில் விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. [VCGS 2022]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
இந்தியாவில் முதன் முதலாக மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்திய மாநிலம்
Correct Answer: D [தமிழ்நாடு]
Notes:
மூன்றாம் பாலினத்தவர்களுக்கான ஓய்வூதியத்தை இந்தியாவில் முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் தமிழ்நாடு. [ADGS 2021]
2.
"நலமான தமிழகம்" திட்டம் _____ஆல் செயல்படுத்தப்படுகிறது.
Correct Answer: B [பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம்]
Notes:
'நலமான தமிழகம்' பொது சுகாதார மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தால் செயல்படுத்தப்படுகிறது. [AHGS 2021]
3.
ப்ரி மெட்ரிக் கல்வி உதவித்தொகையின் பயனாளிகள்
Correct Answer: C [6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள்]
Notes:
தமிழகத்தில் ப்ரி மெட்ரிக் உதவித்தொகை 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. [AHGS 2021]
4.
_____ நினைவுப் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டது.
Correct Answer: C [சிவகாமி அம்மையார்]
Notes:
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு காலத்தில் சிவகாமி அம்மையார் நினைவுப் பெயரில் செயல்பட்டது. [PTGS 2021]
5.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானது எது/எவை?
I. இத்திட்டம் 1989-ல் தொடங்கப்பட்டது.
II. 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டம், பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கானது.
III. மணமகள் 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.
I. இத்திட்டம் 1989-ல் தொடங்கப்பட்டது.
II. 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டம், பட்டயம் படித்த ஏழைப் பெண்களுக்கானது.
III. மணமகள் 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.
Correct Answer: D [(I), (II) மற்றும் (III)]
Notes:
மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் 1989-ல் தொடங்கியது; மணமகள் 18 வயது நிறைந்திருக்க வேண்டும். [PTGS 2021]
6.
கருவுற்ற ஏழைத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் உதவி வழங்கும் திட்டம்
Correct Answer: A [டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம்]
Notes:
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் ஏழைக் கர்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குகிறது. [PTGS 2021]
7.
விதவை மறுமணத்தையும் விதவைகளின் மறுவாழ்வையும் ஊக்குவிக்கும் தமிழக அரசின் திட்டத்தை அடையாளம் காண்க.
Correct Answer: B [தர்மாம்பாள் அம்மையார் நினைவுத் திட்டம்]
Notes:
விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் திட்டம் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவுத் திட்டம். [PTGS 2021]
8.
தமிழக அரசால் வழங்கப்படும் கலப்புத் திருமண உதவித் திட்டம், யாரின் பெயரால் வழங்கப்படுகிறது?
Correct Answer: A [டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி]
Notes:
கலப்புத் திருமண உதவித் திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் வழங்கப்படுகிறது. [PTGS 2021]
9.
"தரமான சவாரி திட்ட முன்னேற்றம்" என்ற திட்டம் தமிழ்நாட்டில் எதற்காகத் தொடங்கப்பட்டது?
Correct Answer: C [சாலைகளைத் தரம் உயர்த்த]
Notes:
தரமான சவாரி திட்ட முன்னேற்றம் (IRQP) சாலைகளின் தரத்தை உயர்த்துவதற்கான திட்டம். [AGGS 2021]
10.
பின்வரும் கூற்றுகளில் 'தொட்டில் குழந்தைத் திட்டத்தின்' நோக்கம் அல்லாதது எது?
Correct Answer: A [குடும்பக் கட்டுப்பாட்டு முறையை உறுதி செய்வது]
Notes:
தொட்டில் குழந்தைத் திட்டம் பெண் சிசுக்கொலை ஒழிப்புக்கானது; குடும்பக் கட்டுப்பாடு அதன் நோக்கம் அல்ல. [Group 1 2021]
11.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் கீழ்வருவனவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
Correct Answer: D [குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்]
Notes:
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் பவானி உபரி நீரால் குடிநீர், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கானது. [Group 1 2021, Asst. Public Prosecutor Gr. II 2025]
12.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
1. சாகுபடிப் பரப்பை அதிகரிக்கச் செய்தல்
2. தரிசு நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டு வருதல்
3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
4. நீர் ஆதாரங்களைப் பெருக்குதல்
1. சாகுபடிப் பரப்பை அதிகரிக்கச் செய்தல்
2. தரிசு நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டு வருதல்
3. புதிய பயிர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயிர் முறையை மாற்றுதல்
4. நீர் ஆதாரங்களைப் பெருக்குதல்
Correct Answer: C [1, 2 மற்றும் 4 சரி]
Notes:
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் திட்டம் தரிசு நிலச் சாகுபடி, பரப்பு அதிகரிப்பு, நீர் ஆதாரப் பெருக்கத்துக்கானது. [Group 1 2022]
13.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியான பயனாளிகள்
Correct Answer: C [6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழக அரசுப் பள்ளிகளில் பயின்று இளநிலைப் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவியர்]
Notes:
புதுமைப் பெண் திட்டம் 6–12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவியருக்கானது. [Group 1 2022]
14.
"எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் நோக்கங்களைப் பின்வரும் கூற்றுகளில் எது சிறப்பாக விளக்குகிறது?
I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளைச் சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் எழுத, படிக்க, எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
I. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளைச் சரிசெய்ய குழந்தைகளுக்கு உதவும் வண்ணம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
II. அனைவருக்கும் கல்வி என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
III. சமத்துவ சமூகத்தை வளர்க்கும் உயரிய நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
IV. 2025 ஆம் ஆண்டிற்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளையும் எழுத, படிக்க, எண்களை அறிந்தவர்களாக மாற்றுவது என்ற நோக்கத்துடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
Correct Answer: D [I மற்றும் IV மட்டும்]
Notes:
எண்ணும் எழுத்தும் திட்டம் 2025-க்குள் 8 வயதுக்குட்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவை உறுதிசெய்யும். [Group 1 2022]
15.
ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம் (JSSK) இலவச டிராப் பேக் (Free Drop Back) சேவை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
(i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது வரையிலான குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
(i) JSSK ஆனது TNHSP-ஆல் தமிழ்நாட்டில் ஒரு முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது.
(ii) டிராப் பேக் வாகனம் ஒரு வயது வரையிலான குழந்தையையும் தாயையும் கொண்டு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Correct Answer: C [(i) மற்றும் (ii) இரண்டும் உண்மை]
Notes:
JSSK இலவச டிராப் பேக் சேவை தாயையும் ஒரு வயது வரையிலான குழந்தையையும் வீட்டில் சேர்க்கிறது. [Group 2 2022]
16.
பின்வருவனவற்றில் எது "தாய்" திட்டத்துடன் தொடர்புடையது?
Correct Answer: A [தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம்]
Notes:
'தாய்' (THAI) என்பது தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாட்டுத் திட்டம். [Executive Officer Gr. III (HR&CE) 2022]
17.
_____ வளரிளம் பருவத்தினருக்கான சுகாதாரத் திட்டம்.
Correct Answer: B [வாழ்வொளி திட்டம்]
Notes:
வாழ்வொளி திட்டம் பள்ளி மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சுகாதாரத் திட்டம். [Executive Officer Gr. III (HR&CE) 2022]
18.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
திட்டம் – பெயர்
(a) ஏழை விதவையின் மகள் திருமண உதவி – 1. அன்னை சத்யா அம்மையார்
(b) விதவை மறுமணம் – 2. ஈ.வெ.ரா. மணியம்மையார்
(c) அரசு ஆதரவற்றோர் இல்லங்கள் – 3. சத்தியவாணி முத்து அம்மையார்
(d) தையல் இயந்திரம் இலவச வழங்கல் – 4. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார்
திட்டம் – பெயர்
(a) ஏழை விதவையின் மகள் திருமண உதவி – 1. அன்னை சத்யா அம்மையார்
(b) விதவை மறுமணம் – 2. ஈ.வெ.ரா. மணியம்மையார்
(c) அரசு ஆதரவற்றோர் இல்லங்கள் – 3. சத்தியவாணி முத்து அம்மையார்
(d) தையல் இயந்திரம் இலவச வழங்கல் – 4. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார்
Correct Answer: B [2 4 1 3]
Notes:
விதவை மகள் திருமணம்–மணியம்மையார், மறுமணம்–தர்மாம்பாள், இல்லங்கள்–சத்யா, தையல் இயந்திரம்–சத்தியவாணி முத்து. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
19.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்திற்கு _____ உதவுகிறது.
Correct Answer: A [உலக வங்கி]
Notes:
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்துக்கு உலக வங்கி நிதியுதவி அளிக்கிறது. [CAGS 2022]
20.
தமிழ்நாட்டில், முதலமைச்சரின் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் _____ ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Correct Answer: B [2011]
Notes:
முதலமைச்சரின் சூரிய சக்தி பசுமை வீடு திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. [DPGS 2022]
21.
'படியரிசித் திட்டம்' யாருடைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது?
Correct Answer: D [சி.என். அண்ணாதுரை]
Notes:
படியரிசித் திட்டம் சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது அறிமுகமானது. [PSY 2022]
22.
தமிழக அரசு வழங்கும் விலையில்லா கறவை மாடு பெறத் தகுதியானவர்கள் யார்?
Correct Answer: A [வறுமையிலும் வறுமையான குடும்பத் தலைவியாக உள்ள பெண்கள்]
Notes:
விலையில்லா கறவை மாடு திட்டப் பயனாளிகள் வறுமையான பெண் தலைமைக் குடும்பங்கள். [PSY 2022]
23.
தமிழக அரசால் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் +1, +2 மாணவ மாணவியருக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவ மாணவியருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வரும் ஆண்டு
Correct Answer: A [2011 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது]
Notes:
தமிழகத்தில் விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. [VCGS 2022]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 5: வினா 92–113)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
