வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
'தேசியப் புகையிலைக் கட்டுப்பாடு' திட்டம், தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது?

Correct Answer: C [2007]

Notes:

தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் தமிழகத்தில் 2007 முதல் செயல்படுகிறது. [Library Service 2023]

2.  
கூற்று [A] : 1956-ஆம் ஆண்டு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : பள்ளிகளில் இடைநிற்றலைத் தவிர்க்க.

Correct Answer: B [[A] மற்றும் [R] சரி; [R], [A]-விற்கான சரியான விளக்கம்]

Notes:

இடைநிற்றலைத் தடுக்க 1956-ல் காமராசர் ஆட்சியில் பள்ளி மதிய உணவுத் திட்டம் அறிமுகமானது. [Combined Engineering Subordinate Service 2023]

3.  
தமிழகத்தில், இலவசமாகத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், _____ அம்மையார் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

Correct Answer: A [சத்தியவாணிமுத்து]

Notes:

இலவசத் தையல் இயந்திரத் திட்டம் சத்தியவாணிமுத்து அம்மையார் பெயரில் வழங்கப்படுகிறது. [AJ 2023]

4.  
அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நாள்

Correct Answer: C [மார்ச் 18, 2022]

Notes:

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அறிவிப்பு 18 மார்ச் 2022 தமிழக பட்ஜெட்டில் வெளியானது. [Geology Service 2023]

5.  
திட்டங்களைக் காலவரிசைப்படி அமைக்க.
1. தொட்டில் குழந்தைத் திட்டம்
2. தமிழ்நாடு மதிய உணவுத் திட்டம்
3. முத்துலட்சுமி (ரெட்டி) மகப்பேறுத் திட்டம்
4. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டம்

Correct Answer: A [2, 4, 3, 1]

Notes:

மதிய உணவு 1956, TINP 1980, முத்துலட்சுமி மகப்பேறு 1987, தொட்டில் குழந்தை 1992. [Junior Scientific Officer 2023]

6.  
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
தமிழ்நாடு உயர்கல்வி உறுதித் திட்டம் 2022 வழங்குவது :
(i) மாணவிகளுக்கு நிதியுதவி
(ii) மாணவர் மாணவியருக்கு நிதியுதவி
(iii) மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிதியுதவி
(iv) பெற்றோருக்கு நிதியுதவி

Correct Answer: C [(i) மட்டும்]

Notes:

உயர்கல்வி உறுதித் திட்டம் 2022 மாணவிகளுக்கு மட்டுமே நிதியுதவி வழங்குகிறது. [Junior Scientific Officer 2023]

7.  
"ஒரு ரூபாய் படியரிசித் திட்டம்" நடைமுறைப்படுத்தப்பட்ட நகரங்கள் _____ மற்றும் _____ ஆகும்.

Correct Answer: A [சென்னை மற்றும் கோயம்புத்தூர்]

Notes:

ஒரு ரூபாய் படியரிசித் திட்டம் சென்னை, கோயம்புத்தூர் நகரங்களில் செயல்படுத்தப்பட்டது. [Research Asst. (Animal Husbandry) 2023]

8.  
தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?

Correct Answer: D [ஜெ. ஜெயலலிதா]

Notes:

பெண் சிசுக்கொலையைத் தடுக்க 1992-ல் ஜெயலலிதா தொட்டில் குழந்தைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். [Junior Analyst 2023]

9.  
தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் முதன்மைக் குறிக்கோள் என்ன?

Correct Answer: C [குடியிருப்புவாசிகளுக்குக் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வழங்குதல்]

Notes:

THAI திட்டம் கிராமக் குடியிருப்புகளுக்குக் குறைந்தபட்ச அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வழங்குகிறது. [Junior Analyst 2023]

10.  
கற்றல் மேம்பாட்டுத் திட்ட முறைகள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனிக்கவும் :
(i) ஆங்கிலம் தமிழ் சித்திர அகராதி
(ii) ஆசிரியர் வடிவியல் பெட்டி
(iii) எண்ணியல் ஒளிக்காட்சி தட்டு வடிவிலான கதைகள்
(iv) பள்ளிகளுக்கிடையிலான கூட்டு
கற்றல் மேம்பாட்டுத் திட்ட முறைகள் தொடர்பான மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி எனக் கூறவும்.

Correct Answer: B [(i), (ii) மற்றும் (iii)]

Notes:

கற்றல் மேம்பாட்டுத் திட்டத்தில் சித்திர அகராதி, வடிவியல் பெட்டி, கதை DVD ஆகியவை வழங்கப்பட்டன. [Mass Interviewer 2023]

11.  
_____ மாநிலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவும், மதிய உணவும் வழங்குகிறது.

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

அரசுப் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. [CEGS 2024]

12.  
சரியான கூற்றைத் தேர்வு செய்க :
IPOP திட்டமானது முதியோருக்குப் பின்வருவனவற்றை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகும் :
(i) தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பு
(ii) தையல் பயிற்சி
(iii) கடன் வசதி
(iv) எழுத்தறிவு மேம்பாடு

Correct Answer: C [(i) மட்டும்]

Notes:

IPOP திட்டம் முதியோருக்குத் தங்குமிடமும் மருத்துவப் பராமரிப்பும் வழங்குகிறது. [CEGS 2024]

13.  
கிராமப் பெண்களை மேம்படுத்துவதற்கான மகளிர் திட்டத்தின் நான்கு முக்கியக் கூறுகளில் கீழ்வருவன எவை?

Correct Answer: C [சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி]

Notes:

மகளிர் திட்டம் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டது. [CEGS 2024]

14.  
நகரங்களைத் தூய்மைப்படுத்திக் குப்பைகள் இல்லாப் பகுதிகளாக்க ஜூன் 2022-இல் தமிழ்நாட்டில் _____ தொடங்கப்பட்டது.

Correct Answer: B [தூய்மைக்கான மக்கள் இயக்கம்]

Notes:

நகரங்களைக் குப்பையில்லாமல் ஆக்க ஜூன் 2022-ல் "தூய்மைக்கான மக்கள் இயக்கம்" தொடங்கப்பட்டது. [Executive Officer Gr. I (HR&CE) 2024]

15.  
STEP என்பது, பெண்களுக்குப் பயிற்சி மற்றும் _____ க்கான ஆதரவைக் குறிக்கிறது.

Correct Answer: B [வேலைவாய்ப்பு]

Notes:

STEP என்பது பெண்களுக்குப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆதரவுத் திட்டம். [Executive Officer Gr. I (HR&CE) 2024]

16.  
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களுக்காக, 2023-2024ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு மதிப்பீட்டில் ரூ. _____ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Correct Answer: C [ரூ. 3512.85]

Notes:

ஆதிதிராவிடர்–பழங்குடியினர் நலனுக்கு 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.3,512.85 கோடி ஒதுக்கப்பட்டது. [Group 4 2024]

17.  
கூற்று [A] : "மங்கள மாலை திட்டம்" 2012-2013இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
காரணம் [R] : அனாதைப் பெண்களுக்குத் தகுந்த மணமகன் கிடைக்க வழிவகை செய்கிறது.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]-வின் சரியான விளக்கம்]

Notes:

அனாதைப் பெண்களுக்குத் தகுந்த மணமகன் கிடைக்க உதவும் மங்கள மாலைத் திட்டம் 2012-13-ல் தொடங்கியது. [Group 4 2024]

18.  
தமிழக அரசின் 'புதுமைப் பெண்' திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?

Correct Answer: B [பெண்களுக்கு உயர் கல்வி]

Notes:

புதுமைப் பெண் திட்டம் பெண்களுக்கு உயர்கல்வியை உறுதிசெய்கிறது. [Group 1 2024]

19.  
முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக வைப்புத்தொகை செலுத்தப்பட்ட 6-ஆவது ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வழங்கப்படும் ஆண்டு ஊக்கத்தொகையின் மதிப்பு

Correct Answer: C [ரூ. 1,800/-]

Notes:

பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தில் 6-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு ரூ.1,800 கல்வி ஊக்கத்தொகை. [Group 1 2024]

20.  
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது?

Correct Answer: C [விதவை மறுமண உதவித்தொகை]

Notes:

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவுத் திட்டம் விதவை மறுமணத்திற்கான உதவி. [Group 1 2024]

21.  
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) குழந்தைகள் உதவி எண் – 1098
(2) பெண்கள் உதவி எண் – 1090
(3) சைபர் கிரைம் உதவி எண் – 1940
(4) கடலோரப் பாதுகாப்பு உதவி எண் – 1093

Correct Answer: B [(2) மற்றும் (3)]

Notes:

பெண்கள் உதவி எண் 181, சைபர் குற்றம் 1930; 1090, 1940 தவறு. [Group 1 2024]

22.  
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்.
(1) இந்தத் திட்டம் தமிழ்நாட்டால் தொடங்கப்பட்டது
(2) இது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காகவும் செயல்படுத்தப்படும்
(3) இந்தத் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Correct Answer: C [(1) மற்றும் (3) மட்டும்]

Notes:

காலை உணவுத் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாகத் தமிழகத்தில் தொடங்கியது; 1–5 வகுப்பினருக்கானது. [Group 1 2024]

23.  
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
(1) வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு
(2) இந்தியாவில் தயாரிப்போம் (Make in India)
(3) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
(4) தேசியத் திறன் மேம்பாட்டு இயக்கம்

Correct Answer: A [(3), (2), (4), (1)]

Notes:

TNCDW 1983, Make in India 2014, தேசியத் திறன் இயக்கம் 2015, SANKALP 2018. [Group 1 2024]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 5: வினா 92–113)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0