வினாடி வினா
← திரும்பச் செல்ல
பொது விநியோக முறை மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்களை மாதந்தோறும் வழங்குகிறது. [Group 1/1A 2025]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
நிர்வாக வருவாய் குறித்த பின்வரும் கூற்றுகளில் உண்மையானவை எவை?
(i) சிறப்பு மதிப்பீடுகள் மேம்பாட்டு வரி (betterment levy) என்று குறிப்பிடப்படுகின்றன
(ii) அபராதங்கள் மற்றும் தண்டனைகள் தன்னிச்சையாகவே தீர்மானிக்கப்படுகின்றன; இவற்றுக்கும் நிர்வாகச் செலவுக்கோ அரசின் நடவடிக்கைகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை
(iii) இது ஒரு தன்னார்வப் பங்களிப்பு

Correct Answer: B [(i) மற்றும் (ii) மட்டும்]
Notes:
சிறப்பு மதிப்பீடு மேம்பாட்டு வரி; அபராதம் தன்னிச்சையானது; நிர்வாக வருவாய் தன்னார்வமல்ல. [Asst. Public Prosecutor Gr. II 2025]
2.
கீழ்வருவனவற்றுள் எவை தமிழ்நாடு பாதுகாப்பான மற்றும் நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக் கொள்கை, 2020 இன் நோக்கங்கள் ஆகும்?
(i) பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு முறைகளைத் திறனாய்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும்
(ii) வெளிப்படையான தரவுகள், தரவு மாதிரிகள் மற்றும் கணினி வளங்களுக்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்குதல்
(iii) தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முதலீடுகளை ஈர்த்தல்

Correct Answer: B [(i) மற்றும் (iii) மட்டும்]
Notes:
தமிழ்நாடு AI கொள்கை 2020 – AI மதிப்பீட்டு நெறிமுறைகள், AI ஆராய்ச்சி முதலீடு ஈர்ப்பு. [Group 1/1A 2025]
3.
கூற்று [A]: இந்தியாவில் சமூகத் துறைகளுக்கான ஒட்டுமொத்த கொள்கை கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது.
காரணம் [R]: கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசுகள் கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
காரணம் [R]: கொள்கைகளை வடிவமைப்பதில் மாநில அரசுகள் கணிசமான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுள்ளன.
Correct Answer: B [கூற்று [A] காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கான சரியான விளக்கமல்ல]
Notes:
சமூகத்துறைக் கொள்கைக் கட்டமைப்பை மத்திய அரசு வகுக்கிறது; மாநிலங்களுக்கு நெகிழ்வுத்தன்மை உண்டு. [Group 1/1A 2025]
4.
"பிரகதி தளம்" (Pragati Platform) பற்றிய கூற்றுகளைக் கருதுக; சரியான கூற்றுகளைக் கண்டறிக.
1. இதுவோர் செயலூக்கம்சார் ஆளுகையும், உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்கும் தளமாகும்
2. இத்தளமானது உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடிப்பதற்குத் தொன்மையான பொறியியற் கருவிகளை இதனுடன் இணைக்கிறது
3. இத்தளமானது, செயற்கை நுண்ணறிவு, பேரளவு தரவு பகுப்பாய்வு ஆகியவற்றை, உரிய காலத்திற்குள் முடிக்க, அத்திட்டப் பணிகளுடன் இணைக்கிறது
4. இந்த பிரகதி தளமானது 2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும்.

Correct Answer: D [1, 3 மற்றும் 4 மட்டும்]
Notes:
PRAGATI 2015-ல் தொடங்கப்பட்ட, திட்டங்களைக் குறித்த காலத்தில் முடிக்க உதவும் டிஜிட்டல் ஆளுகைத் தளம். [Asst. Public Prosecutor Gr. II 2026]
5.
கூற்று [A]: தமிழ்நாடு அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை, ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகளின் நலனை எப்போதும் உறுதி செய்து வருகிறது.
காரணம் [R]: பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் இந்த ஏற்பாடுகளிலிருந்து உண்மையில் பயனடைவதை உறுதி செய்வதற்காக, இச்சட்டங்கள் குறித்துப் பெண்கள் மற்றும் சமூகத்தில் உள்ள மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தத் துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Correct Answer: C [கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி]
Notes:
சமூக நலத்துறை நலத்திட்டங்களுடன் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. [Asst. Public Prosecutor Gr. II 2026]
6.
மாவட்ட ஆட்சியரின் பணிகள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
(i) அவர் குடிமைப் பாதுகாப்புத் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார்.
(ii) அவர் தன் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறார்
(iii) அவர் மாவட்டத் திட்டச் செயலாக்கக் குழுவினைத் தலைமையேற்று வழிநடத்துகிறார்

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]
Notes:
மாவட்ட ஆட்சியர் குடிமைப் பாதுகாப்பு, நகராட்சி மேற்பார்வை, திட்டச் செயலாக்கக் குழுத் தலைமை ஏற்கிறார். [Group 2A Mains 2025]
7.
கூற்று [A]: ஒரு செயலாளர் கோப்புகளில் மூழ்கி, வழக்கமான பணிச்சுமையுடன் இருக்க வேண்டும்.
காரணம் [R]: அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் சூழலைப் புரிந்துகொள்ளவும், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மதிப்பிடவும் அவருக்கு நேரம் இருப்பது அவசியம்.
காரணம் [R]: அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் சூழலைப் புரிந்துகொள்ளவும், அது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மதிப்பிடவும் அவருக்கு நேரம் இருப்பது அவசியம்.
Correct Answer: C [[A] தவறு, [R] சரி]
Notes:
செயலாளர் வழக்கமான கோப்புகளில் மூழ்காமல் கொள்கை சார்ந்த பார்வைக்கு நேரம் ஒதுக்க வேண்டும். [Group 2A Mains 2025]
8.
மாவட்ட நிர்வாகத்தின் பரிணாம வளர்ச்சியை அவற்றுடன் தொடர்புடைய ஆண்டோடு சரியாகப் பொருத்தவும்:
(a) அதிகாரப் பரவலாக்கம் மீதான ராயல் ஆணையம் – 1. 1772
(b) இந்தியச் சட்டமுறை ஆணையம் – 2. 1885
(c) வங்காள உள்ளூர் சுய ஆட்சிச் சட்டம் – 3. 1909
(d) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 4. 1927
(a) அதிகாரப் பரவலாக்கம் மீதான ராயல் ஆணையம் – 1. 1772
(b) இந்தியச் சட்டமுறை ஆணையம் – 2. 1885
(c) வங்காள உள்ளூர் சுய ஆட்சிச் சட்டம் – 3. 1909
(d) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 4. 1927
Correct Answer: D [3 4 2 1]
Notes:
ஆட்சியர் அலுவலகம் 1772; வங்காள உள்ளாட்சிச் சட்டம் 1885; ராயல் ஆணையம் 1909; சைமன் ஆணையம் 1927. [Group 2A Mains 2025]
9.
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
கூற்று [A]: 'தாசில்தார்' என்ற சொல் முகலாயர் பயன்படுத்திய 'தாசில்' என்னும் சொல்லினடியாக உருவானது. அதாவது 'வருவாய் ஈட்டும் பகுதி' எனப் பொருள்படும்.
காரணம் [R]: தாலுகாக்கள், வட்டங்கள் என மறுபெயரிடப்பட்டதால், தாசில்தார்கள், வட்டாட்சியர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டும் சரி; ஆனால் [A] க்கு [R] சரியான விளக்கம் அல்ல]
Notes:
'தாசில்' முகலாயச் சொல்; தமிழ்நாட்டில் தாசில்தார் 'வட்டாட்சியர்' எனப்படுகிறார். [Group 2A Mains Re-Exam 2026]
10.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் பணிவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளன?
Correct Answer: C [பிரிவு 309]
Notes:
அரசுப் பணியாளர் பணிவிதிகள் அரசியலமைப்புப் பிரிவு 309-ன் கீழ் உருவாக்கப்படுகின்றன. [Group 2A Mains Re-Exam 2026]
11.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கான மாநில ஆணையர் பதவி உருவாக்கப்பட்ட ஆண்டு
Correct Answer: D [1999]
Notes:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில ஆணையர் பதவி தமிழ்நாட்டில் 1999-ல் உருவாக்கப்பட்டது. [Group 2A Mains Re-Exam 2026]
12.
இந்தியாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கியவர்
Correct Answer: A [வாரன் ஹேஸ்டிங்ஸ்]
Notes:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 1772-ல் வாரன் ஹேஸ்டிங்ஸால் உருவாக்கப்பட்டது. [Group 2A Mains Re-Exam 2026]
13.
பின்வரும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளைப் படிநிலைப்படி வரிசைப்படுத்தவும்.
(1) வட்டாட்சியர்
(2) மாவட்ட வருவாய் அலுவலர்
(3) மாவட்ட ஆட்சியர்
(4) கோட்டாட்சியர்
(1) வட்டாட்சியர்
(2) மாவட்ட வருவாய் அலுவலர்
(3) மாவட்ட ஆட்சியர்
(4) கோட்டாட்சியர்
Correct Answer: D [(3), (2), (4), (1)]
Notes:
படிநிலை: ஆட்சியர் → மாவட்ட வருவாய் அலுவலர் → கோட்டாட்சியர் → வட்டாட்சியர். [Group 2A Mains Re-Exam 2026]
14.
சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்க
(1) தமிழ்நாட்டில் பொதுத்துறை உருவாக்கப்பட்டது – 1670
(2) தமிழ்நாட்டில் தலைமைச் செயலர் பதவி உருவாக்கப்பட்டது – 1800
(3) இராணுவ வாரியம் நிறுவப்பட்டது – 1796
(4) வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது – 1838
(1) தமிழ்நாட்டில் பொதுத்துறை உருவாக்கப்பட்டது – 1670
(2) தமிழ்நாட்டில் தலைமைச் செயலர் பதவி உருவாக்கப்பட்டது – 1800
(3) இராணுவ வாரியம் நிறுவப்பட்டது – 1796
(4) வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது – 1838
Correct Answer: A [(1) மற்றும் (2) மட்டும்]
Notes:
சென்னை வருவாய் வாரியம் 1786-ல் அமைந்தது; தலைமைச் செயலாளர் பதவி 1800-ல் உருவானது. [Group 2A Mains Re-Exam 2026]
15.
கூற்று [A]: வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கினார்.
காரணம் [R]: வருவாய் வசூலிப்பதற்கும் நீதித்துறை மேற்பார்வைக்காகவும் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது.
காரணம் [R]: வருவாய் வசூலிப்பதற்கும் நீதித்துறை மேற்பார்வைக்காகவும் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது.
Correct Answer: B [[A] மற்றும் [R] சரி; மற்றும் [R] ஆனது [A] ன் சரியான விளக்கம்]
Notes:
1772-ல் ஆட்சியர் அலுவலகம் வருவாய் வசூலுக்கும் நீதித்துறை மேற்பார்வைக்கும் உருவாக்கப்பட்டது. [Group 2A Mains (Revoked) 2026]
16.
பொருத்துக:
தலைப்பு – வருடம்
(a) சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது – 1. 1688
(b) மெட்ராஸ் மாவட்டக் காவற்படைச் சட்டம் – 2. 1937
(c) தமிழ்நாடு சட்ட மேலவை (Legislative Council) மேலவையாக மாறியது – 3. 1859
(d) பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவப்பட்டது – 4. 1986
5. 1862

Correct Answer: D [5 3 2 1]
Notes:
சென்னை மாநகராட்சி 1688, மாவட்டக் காவல் சட்டம் 1859, உயர்நீதிமன்றம் 1862, மேலவை 1937. [Group 2A Mains (Revoked) 2026]
17.
பொது விநியோக முறையின் நோக்கங்கள் என்ன?
(i) இது வருமான நிலையின் அடிப்படையில் அமைந்துள்ளது
(ii) இது இராணுவ வீரர்களின் குடும்பங்களை மையமாகக் கொண்டுள்ளது
(iii) இது ஒவ்வொரு மாதமும் மலிவு விலையில் நல்ல தரமான அத்தியாவசியப் பொருள்களைக் கிடைக்கச் செய்வதன் மூலம் உறுதி செய்கிறது

Correct Answer: C [(i) மற்றும் (iii) மட்டும்]
Notes:
பொது விநியோக முறை மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்களை மாதந்தோறும் வழங்குகிறது. [Group 1/1A 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0