வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழ்நாட்டில் அனைத்து மின் ஆளுகை (e-Governance) முயற்சிகளையும் செயல்படுத்தும் முதன்மை முகமை எது?

Correct Answer: C [TNeGA]

Notes:

தமிழ்நாட்டின் மின் ஆளுகை முயற்சிகளுக்கான முதன்மை முகமை TNeGA. [Veterinary Assistant 2020, ADGS 2021]

2.  
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) தொடங்கப்பட்ட ஆண்டு

Correct Answer: A [2014]

Notes:

தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் (TRANSTAN) 2014இல் அமைக்கப்பட்டது. [ARGS 2020]

3.  
சென்னையில் டைடல் பூங்காவை (தகவல் தொழில்நுட்பப் பூங்கா) உருவாக்கிய நிறுவனங்கள் டிட்கோ மற்றும்

Correct Answer: B [எல்காட்]

Notes:

சென்னை டைடல் பூங்காவை TIDCO, ELCOT இணைந்து உருவாக்கின (2000). [AHGS 2021]

4.  
தமிழ்நாடு சமூக நல வாரியத்துடன் தொடர்புடைய பின்வரும் நோக்கங்களில் எவை உண்மை?
I. மாநிலத்தில் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் மேம்பாடு
II. அரசு சாரா சமூக நல அமைப்புகளை அமைப்பதை ஊக்குவித்தல்
III. சிறந்த தரமான சேவைகளுக்காகத் தன்னார்வ நிறுவனங்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குதல்
IV. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்திற்காகப் பாடுபடுவது

Correct Answer: D [I, II மற்றும் III]

Notes:

தமிழ்நாடு சமூக நல வாரியம் தன்னார்வ அமைப்புகளை ஊக்குவித்து நிதி, தொழில்நுட்ப உதவி வழங்குகிறது. [Group 1 2021]

5.  
"நம்பிக்கை இணையம் (Nambikkai Inaiyam – NI)" என்ற தமிழ்நாடு அரசுத் திட்டம் எதைப் பற்றியது?

Correct Answer: A [மாநிலம் தழுவிய பிளாக்செயின் (Blockchain) உள்கட்டமைப்பு]

Notes:

நம்பிக்கை இணையம் என்பது TNeGA உருவாக்கிய மாநிலம் தழுவிய பிளாக்செயின் கட்டமைப்பு. [Group 1 2022]

6.  
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டுகள்

Correct Answer: A [1961 மற்றும் 1970]

Notes:

வீட்டு வசதி வாரியம் 1961; குடிசைப்பகுதி மாற்று வாரியம் (2021இல் நகர்ப்புற வாழ்விட வாரியம் எனப் பெயர் மாற்றம்) 1970. [Group 2 2022]

7.  
வலியுறுத்தல் (A): தமிழக அரசின் பார்வை அல்லது நோக்கம் என்பது "சாதாரண மனிதன் அரசின் சேவைகளை அவன் குடியிருப்பு வட்டாரத்திலேயே அணுகுமாறு ஏற்பாடு செய்வது".
காரணம் (R): பொதுச்சேவை மையங்கள் மூலமாக, திறம்படவும், வெளிப்படையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், கட்டுப்படியாகும் விலையிலும் வழங்குதல்.

Correct Answer: B [(A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) க்கான சரியான விளக்கம்]

Notes:

NeGP தொலைநோக்கு: பொதுச் சேவை மையங்கள் மூலம் அரசுச் சேவைகளை மக்களின் வட்டாரத்திலேயே வழங்குதல். [Executive Officer Gr. III (HR&CE) 2022]

8.  
தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) தொடங்கப்பட்ட ஆண்டு

Correct Answer: C [1970]

Notes:

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) 1970இல் நிறுவப்பட்டது. [CAGS 2022]

9.  
தமிழ்நாட்டில் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Correct Answer: A [2018]

Notes:

விவசாயிகளுக்கான 'உழவன்' செயலி 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [DPGS 2022]

10.  
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு

Correct Answer: C [1971]

Notes:

SIPCOT 1971இல் நிறுவப்பட்டு தொழிற்பூங்காக்களை உருவாக்குகிறது. [DPGS 2022]

11.  
இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் அமைந்துள்ள இடம்

Correct Answer: B [தமிழ்நாடு]

Notes:

இராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. [DPGS 2022]

12.  
"காவலன் SOS" (Kaavalan SOS) என்ற செயலியின் நோக்கம் _____ ஆகும்.

Correct Answer: A [ஆபத்துக் காலங்களில் மக்களின் இருப்பிடத்தைக் கண்டறிதல்]

Notes:

காவலன் SOS செயலி ஆபத்தில் உள்ளவரின் இருப்பிடத்தைக் காவல்துறைக்கு உடனே அனுப்புகிறது. [PSY 2022]

13.  
பின்வருவனவற்றுள் தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் செயல்பாடுகள் எவை?
(i) நிறுவன அளவிலான கட்டமைப்பு (Enterprise Architecture)
(ii) விதிமுறைகள், கொள்கைகள், தரநிலைகள்
(iii) பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாடு
(iv) உபரி இருப்புச் செயல்பாடு (Buffer stock)

Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii)]

Notes:

TNeGA பணிகள்: நிறுவனக் கட்டமைப்பு, விதிகள்-தரநிலைகள், பயிற்சி-மனிதவள மேம்பாடு. [Executive Officer Gr. III (HR&CE) 2022]

14.  
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிறுவனங்களிலும் மருந்துகள் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைப்பதை உறுதிசெய்யும் அமைப்பு

Correct Answer: C [தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்]

Notes:

அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வழங்குவதை TNMSC (1994) உறுதிசெய்கிறது. [CBT 2022]

15.  
TIIC – விரிவாக்கம் தருக.

Correct Answer: C [தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் லிமிடெட்]

Notes:

TIIC – தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (1949), தொழில்களுக்குக் கடன் வழங்குகிறது. [VCGS 2022]

16.  
தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் பின்வருவனவற்றுள் எந்தத் துறையின் கீழ் செயல்படுகிறது?

Correct Answer: D [சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை]

Notes:

திருநங்கைகள் நல வாரியம் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் (உரிமைத்) துறையின் கீழ் இயங்குகிறது. [SD 2022]

17.  
தமிழ்நாடு சமூக நல வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு _____.

Correct Answer: B [1954]

Notes:

தமிழ்நாடு சமூக நல வாரியம் 1954இல் அமைக்கப்பட்டது. [Jailor 2022]

18.  
பின்வருவனவற்றுள் தொழில் வளர்ச்சி நிறுவனம் அல்லாதது எது?

Correct Answer: C [MEPG]

Notes:

TIDCO, SIDCO, SIPCOT தொழில் வளர்ச்சி நிறுவனங்கள்; MEPG அவ்வகையைச் சேர்ந்ததல்ல. [Bursar 2023]

19.  
தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் தலைவராகச் செயல்படுபவர் யார்?

Correct Answer: D [முதலமைச்சர்]

Notes:

தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் (1971) தலைவர் முதலமைச்சர். [Bursar 2023]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0