வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
TICEL இதனோடு தொடர்புடையது
(1) இரப்பர் பூங்கா
(2) ஜவுளி பூங்கா
(3) உணவு பூங்கா
(4) உயிரி பூங்கா

Correct Answer: D [(4)]

Notes:

TICEL என்பது சென்னை தரமணியில் உள்ள உயிரி தொழில்நுட்பப் பூங்கா (Bio Park). [Group 1 2024]

2.  
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: A [2007]

Notes:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) 2007-ல் சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. [CTS (Non-Interview Posts) 2024]

3.  
தமிழ்நாட்டில் மின் ஆளுமைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Correct Answer: B [மே – 2006]

Notes:

தமிழ்நாட்டில் மின் ஆளுமை இயக்ககம் 2006-ல் தொடங்கப்பட்டது; TNeGA 2007-ல் வந்தது. [CTS (Interview Posts) 2024]

4.  
தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் என்ற முகமை கீழ்க்காணும் தொழிலை வளர்க்க உருவாக்கப்பட்டது

Correct Answer: B [கனரக மற்றும் நடுத்தர தொழில்]

Notes:

TIDCO (1965) பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களை மேம்படுத்த அமைக்கப்பட்டது. [Group 1B/1C 2024]

5.  
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தொடங்கப்பட்ட நாள்

Correct Answer: B [செப்டம்பர் 29, 2015]

Notes:

NIRF 29 செப்டம்பர் 2015 அன்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. [Group 1B/1C 2024]

6.  
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் கீழ்க்கண்ட தொழில் அமைப்பினை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது
(i) கனரகத் தொழிற்சாலை
(ii) நடுத்தரத் தொழிற்சாலை
(iii) சிறு தொழில் தொழிற்சாலை

Correct Answer: A [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

SIPCOT (1971) பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களை வளர்க்க அமைக்கப்பட்டது. [Group 1/1A 2025]

7.  
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், 2022ஆம் வருடம் முதல் அதன் சொந்தப் புதிய பிரத்யேக வளாகத்தில் செயல்பட்டு வரும் இடம்

Correct Answer: D [பெரும்பாக்கம்]

Notes:

CICT 2022 முதல் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள புதிய வளாகத்தில் செயல்படுகிறது. [Group 2/2A 2025]

8.  
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது த.நா.மி.வா 2.0 உடன் தொடர்புடையது?

Correct Answer: D [மின்சார உற்பத்தியை இரட்டிப்பாக்க வேண்டும்]

Notes:

TNEB 2.0 திட்டம் 2030-க்குள் மாநில மின் உற்பத்தியை இருமடங்காக்க இலக்கு வைத்தது. [Asst. Public Prosecutor Gr. II 2026]

9.  
பின்வருவனவற்றில் எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளன?
(1) TANFUND போர்டல் – தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர்களின் உலகளாவிய வலையமைப்பை வளர்ப்பது
(2) மெண்டார் (Mentor) தமிழ்நாடு போர்டல் – சரியான நிறுவனருக்குச் சரியான வழிகாட்டி
(3) ஏஞ்சல்ஸ் தமிழ்நாடு போர்டல் – தமிழ்நாடு தொடக்க நிறுவனங்களை உலகளாவிய முதலீட்டாளர்களுடன் இணைப்பது
(4) இன்னோவேட் தமிழ்நாடு போர்டல் – புதுமையைச் செயல்படுத்துதல்

Correct Answer: A [(1) மற்றும் (3)]

Notes:

TANFUND முதலீட்டாளர்களை இணைக்கும் தளம்; Angels TN தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் வலைப்பின்னல். [Asst. Public Prosecutor Gr. II 2026]

10.  
தனித்து வேறுபடும் ஒன்றைத் தெரிவு செய்க.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (சிப்காட்) நன்மைகள் குறித்து கீழே உள்ள அறிக்கைகளைக் கவனியுங்கள்.

Correct Answer: D [இது பல்வேறு கடன்களையும், இலவச மின்சாரத்தையும் வழங்குகிறது]

Notes:

SIPCOT தொழிற்பூங்கா, நில வசதி தருகிறது; இலவச மின்சாரம் வழங்குவதில்லை. [Group 2A Mains 2025]

11.  
தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
(i) எல்காட் நிறுவனம் கூட்டுறவுச் சங்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதாகும்
(ii) இதன் ஒரு பகுதி மட்டும் தமிழக அரசுக்குச் சொந்தமானதாகும்
(iii) இது தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான முதன்மை நிறுவனம் ஆகும்
(iv) இந்நிறுவனம் 1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும்

Correct Answer: A [(iii) மற்றும் (iv) மட்டும் சரியானது]

Notes:

ELCOT 1977-ல் தொடங்கப்பட்டது; அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கான முதன்மை நிறுவனம். [Group 2A Mains 2025]

12.  
தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்ட ஆண்டுடன் சரியாகப் பொருத்தவும்.
(a) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் – 1. 1949
(b) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் – 2. 1965
(c) தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் – 3. 1971
(d) தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் – 4. 1972

Correct Answer: D [1 4 2 3]

Notes:

TIIC 1949, TIDCO 1965, SIPCOT 1971, TNCSC 1972 ஆகிய ஆண்டுகளில் நிறுவப்பட்டன. [Group 2A Mains Re-Exam 2026]

13.  
பின்வருவனவற்றை கால வரிசைப்படி நிரல்படுத்துக
(i) TIIC
(ii) TANSI
(iii) SIDCO
(iv) SIPCOT

Correct Answer: D [(i), (ii), (iii), (iv)]

Notes:

காலவரிசை: TIIC (1949), TANSI (1965), SIDCO (1970), SIPCOT (1971). [Group 2A Mains Re-Exam 2026]

14.  
கீழ்க்கண்ட நிறுவனங்களை அவை தொடங்கப்பட்ட ஆண்டுகளின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக:
(1) TANSI – தமிழ்நாடு சிறுதொழில் கழகம்
(2) TANMAG – தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்
(3) TAMIN – தமிழ்நாடு கனிம நிறுவனம்
(4) TANCEM – தமிழ்நாடு சிமெண்ட் கழகம்

Correct Answer: A [(1), (4), (3), (2)]

Notes:

வரிசை: TANSI (1965), TANCEM (1976), TAMIN (1978), TANMAG (1979). [Group 2A Mains Re-Exam 2026]

15.  
தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) நோக்கங்கள் என்ன?
(i) இது நடுத்தர தொழில்களுக்கான காலக் கடன்கள் (term loans) வழங்கல்.
(ii) இது சிறு தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வழங்கல்.
(iii) சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல்.

Correct Answer: A [(i) மட்டும்]

Notes:

SIPCOT நடுத்தரத் தொழில்களுக்கு நீண்டகாலக் கடன் வழங்கியது; சிறு தொழில் மூலப்பொருள் அதன் பணியல்ல. [Group 2A Mains Re-Exam 2026]

16.  
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) என்பது ஒரு

Correct Answer: A [சட்டப்பூர்வ அமைப்பு]

Notes:

CMDA தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971-ன் கீழ் அமைந்த சட்டப்பூர்வ அமைப்பு. [Group 2A Mains (Revoked) 2026]

17.  
தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாயிருக்கிறது

Correct Answer: C [இந்திய ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனமாக]

Notes:

TNPFIDC ரிசர்வ் வங்கியில் வங்கி சாரா நிதி நிறுவனமாக (NBFC) பதிவு பெற்றது. [Group 2A Mains (Revoked) 2026]

18.  
TAWDEVA என்ற சுருக்கம் எதைக் குறிக்கிறது?

Correct Answer: C [தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை]

Notes:

TAWDEVA – தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை (Tamil Nadu Watershed Development Agency). [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0