வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
"காவலன்" செயலி தமிழ்நாடு காவல்துறையின் முன்முயற்சி. இதன் முக்கிய இலக்குக் குழு

Correct Answer: B [பெண்கள்]

Notes:

காவலன் செயலி முக்கியமாகப் பெண்களின் பாதுகாப்புக்கானது. [Fisheries Inspector / SI 2023]

2.  
கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. TANCEM – 1976
2. SIPCOT – 1965
3. TANSI – 1970
4. TIIC – 1949

Correct Answer: B [1 மற்றும் 4 சரி]

Notes:

TANCEM 1976, TIIC 1949 சரி; SIPCOT 1971, TANSI 1965இல் நிறுவப்பட்டன. [District Educational Officer 2023]

3.  
பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டுள்ளவை எவை?
I. TNSWAN – தமிழ்நாடு மாநிலப் பெரும்பரப்பு வலையமைப்பு
II. TNDRC – தமிழ்நாடு பேரிடர் மறுசீரமைப்பு மையம்
III. TNeGA – தமிழ்நாடு மின் ஆளுகை முகமை
IV. TNSDC – தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மையம்

Correct Answer: C [II மற்றும் IV]

Notes:

TNDRC – பேரிடர் மீட்பு மையம், TNSDC – மாநிலத் தரவு மையம்; II, IV தவறு. [District Educational Officer 2023]

4.  
(i) ஏழைகளின் வாழ்க்கையை மேம்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் அமைக்கப்பட்டது.
(ii) இது தற்போது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படுகிறது.
(iii) நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு வழங்குகிறது.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொடர்பாக மேற்கூறிய கூற்றுகளில் எவை உண்மை?

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

குடிசைப்பகுதி மாற்று வாரியம் (1970) 2021இல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமானது. [District Educational Officer 2023]

5.  
(i) ஏப்ரல் 2008 இல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் திருநங்கைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கான முக்கிய அமைப்பாக உருவாக்கப்பட்டது.
(ii) வருவாய் உதவி, வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு போன்ற தேவைகளைத் திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பிற்கு வாரியம் நிறைவு செய்கிறது.
(iii) திருநங்கைகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய என்ன செய்யலாம் என்று விவாதிக்க சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும், தனியார் துறையினரையும் ஒன்றிணைக்கும் ஒரு தளம் இது.
திருநங்கைகள் நல வாரியம் தொடர்பாக மேற்கண்ட கூற்றுகளில் எவை உண்மை?

Correct Answer: B [(i), (ii) மட்டும்]

Notes:

திருநங்கைகள் நல வாரியம் 2008இல் அமைக்கப்பட்டு சமூகப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்கிறது. [District Educational Officer 2023]

6.  
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தைத் தன்னாட்சி அமைப்பாக நிறுவிய அரசு?

Correct Answer: A [திமுக]

Notes:

குடிசைப்பகுதி மாற்று வாரியம் 1970இல் அப்போதைய திமுக அரசால் நிறுவப்பட்டது. [Asst. Conservator of Forests 2023]

7.  
தமிழ்நாடு உள்துறையால் இ-சலான் முறை எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: B [போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்த]

Notes:

இ-சலான் முறை போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்துக் குறைப்பதற்காக அறிமுகமானது. [Asst. Conservator of Forests 2023]

8.  
விவசாயிகளுக்குத் தொழில்நுட்பத் தகவல்களைப் பரப்புவதற்குப் பயன்படும் செயலி எது?

Correct Answer: B [உழவன்]

Notes:

விவசாயிகளுக்கான தொழில்நுட்பத் தகவல் செயலி 'உழவன்'. [Asst. Conservator of Forests 2023]

9.  
காவலன் SOS செயலியை எந்த அரசு அறிமுகப்படுத்தியது?

Correct Answer: B [தமிழ்நாடு அரசு]

Notes:

காவலன் SOS செயலியைத் தமிழ்நாடு அரசின் காவல்துறை அறிமுகப்படுத்தியது. [Road Inspector 2023]

10.  
பின்வருவனவற்றில் தவறாக இணைக்கப்பட்டுள்ளவை எவை?
(i) TACTV – தமிழ்நாடு ஆணையம் கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட்.
(ii) PACCS – தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்.
(iii) VPRCs – கிராம வறுமைக் குறைப்புக் குழுக்கள்.
(iv) CSCs – மத்தியச் சேவை மையங்கள்.

Correct Answer: D [(i) மற்றும் (iv)]

Notes:

TACTV – அரசு கேபிள் டிவி கழகம், CSC – பொதுச் சேவை மையங்கள்; (i), (iv) தவறு. [Combined Research Assistant 2023]

11.  
தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) அமைந்துள்ள இடம் எது?

Correct Answer: C [ஆடுதுறை]

Notes:

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) ஆடுதுறையில் உள்ளது; ADT ரகங்கள் இங்கு உருவானவை. [Research Asst. (Animal Husbandry) 2023]

12.  
மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்

Correct Answer: D [சென்னை]

Notes:

மத்தியத் தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI, CSIR) சென்னை அடையாறில் உள்ளது. [Junior Analyst 2023]

13.  
கூற்று [A]: தமிழ்நாட்டின் தகவல் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப அகாடமி (ICTACT) தொடங்கப்பட்டது.
காரணம் [R]: இது தொழில்களுக்கு மட்டுமே பயிற்சித் திட்டங்களை நடத்த உதவுகிறது.

Correct Answer: A [[A] உண்மை ஆனால் [R] தவறு]

Notes:

ICTACT ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கிறது; தொழில்களுக்கு மட்டுமல்ல. [Junior Analyst 2023]

14.  
தமிழ்நாடு மின் ஆளுகை முகமை _____ கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Correct Answer: C [சங்கங்கள் சட்டம்]

Notes:

TNeGA தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டது. [Mass Interviewer 2023]

15.  
தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் போர்ட்டலின் நோக்கம் யாது?

Correct Answer: C [மாநில அளவிலான முழுமையான குடியிருப்போர் தரவுகளை மின்னணு முறையில் நிர்வகித்தல்]

Notes:

மக்கள் போர்ட்டல் மாநில அளவிலான குடியிருப்போர் தரவுகளை மின்னணு முறையில் நிர்வகிக்கிறது. [Executive Officer Gr. I (HR&CE) 2024]

16.  
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?

Correct Answer: A [1956]

Notes:

நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகம் 1956இல் நிறுவப்பட்டது. [Group 2/2A 2024]

17.  
தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்துப் புவியிடத் தரவுகளுக்குமான ஒற்றை ஆதாரம் (one-stop source) பின்வருவனவற்றுள் எது?

Correct Answer: B [தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு]

Notes:

மாநிலப் புவியிடத் தரவுகளுக்கான ஒற்றை ஆதாரம் TNGIS (தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு). [Group 2/2A 2024]

18.  
எந்த ஆண்டு பிளிப்கார்ட் நிறுவனம் தமிழ்நாடு MSME வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புப் பணியகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

Correct Answer: A [2021]

Notes:

2021இல் பிளிப்கார்ட் தமிழ்நாடு MSME வர்த்தக முதலீட்டு ஊக்குவிப்புப் பணியகத்துடன் ஒப்பந்தம் செய்தது. [Group 2/2A 2024]

19.  
தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் அனைத்துக் குடிமக்களுக்கும் _____ உறுதி செய்வதாகும்.

Correct Answer: A [உணவுப் பாதுகாப்பு]

Notes:

தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு. [Group 1 2024]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0