வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழ்நாட்டின் தொழில் தொகுப்புகளை (Industry Clusters) பொருத்துக.
(a) திருச்செங்கோடு – (1) ஜவ்வரிசி (மரவள்ளி)
(b) சேலம் – (2) வாகனக் கூண்டு கட்டுதல்
(c) ராஜபாளையம் – (3) ஆழ்துளையிடும் பணிகள்
(d) கரூர் – (4) அறுவை சிகிச்சைப் பருத்திப் பொருட்கள்

Correct Answer: A [(3) (1) (4) (2)]

Notes:

திருச்செங்கோடு–ஆழ்துளை, சேலம்–ஜவ்வரிசி, ராஜபாளையம்–அறுவை சிகிச்சைப் பருத்தி, கரூர்–பேருந்துக் கூண்டு. [Asst. Conservator of Forests 2023]

2.  
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?

Correct Answer: D [லிக்னைட் – கன்னியாகுமரி]

Notes:

லிக்னைட் நெய்வேலியில் (கடலூர்) கிடைக்கிறது; கன்னியாகுமரியில் அல்ல. [Asst. Conservator of Forests 2023]

3.  
ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில்துறைப் பூங்கா தமிழ்நாட்டில் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: A [கும்மிடிப்பூண்டி]

Notes:

ஏற்றுமதி ஊக்குவிப்பு தொழில் பூங்கா கும்மிடிப்பூண்டியில் (திருவள்ளூர்) உள்ளது. [Asst. Conservator of Forests 2023]

4.  
தமிழ்நாட்டில் அதிகம் உற்பத்தியாகும் பொருட்கள் :

Correct Answer: B [வாழை மற்றும் தேங்காய்]

Notes:

பாடநூல்படி வாழை, தேங்காய் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. [Asst. Conservator of Forests 2023]

5.  
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
I. கரூர் – பேருந்துக் கூண்டு கட்டுதல்
II. தூத்துக்குடி – முக்கிய இரசாயன உற்பத்தி
III. சேலம் – எஃகு நகரம்
IV. ஈரோடு – வாகன உதிரிபாகங்கள்

Correct Answer: D [I, II மற்றும் III]

Notes:

கரூர்–பேருந்துக் கூண்டு, தூத்துக்குடி–இரசாயனம், சேலம்–எஃகு நகரம் சரியான இணைகள். [Library Service 2023]

6.  
தமிழ்நாட்டில் பின்னலாடை உற்பத்தி அதிகம் உள்ள இடம் :

Correct Answer: B [திருப்பூர்]

Notes:

தமிழ்நாட்டில் பின்னலாடை உற்பத்தி திருப்பூரில் குவிந்துள்ளது. [Geology Service 2023]

7.  
பின்னலாடைகளை ஏற்றுமதி செய்யும் திருப்பூர் _____ என அழைக்கப்படுகிறது.

Correct Answer: D [“பின்னலாடைகளின் நகரம்”]

Notes:

திருப்பூரின் வேறு பெயர் 'பின்னலாடை நகரம்' (Knitting City). [AAO & AHO 2024]

8.  
தமிழ்நாடு அரசு புத்தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆண்டு :

Correct Answer: C [2018]

Notes:

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-ல் வெளியிடப்பட்டது. [Group 1 2024]

9.  
மத்திய அரசு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படும் பொதுத்துறை நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடவும்.

Correct Answer: B [மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட்]

Notes:

மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். [Group 1B/1C 2024]

10.  
தொழிற்சாலைகளை அவற்றின் மாவட்டங்களுடன் பொருத்துக :
(a) BHEL – 1. கோயம்புத்தூர்
(b) HPL – 2. திருச்சிராப்பள்ளி
(c) NLC – 3. சென்னை
(d) ICF – 4. கடலூர்

Correct Answer: C [2 1 4 3]

Notes:

BHEL–திருச்சி, HPL–கோயம்புத்தூர், NLC–கடலூர், ICF–சென்னை. [Group 1B/1C 2024]

11.  
தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தில் இணைக்கப்பட்டுள்ள நகரங்களைக் கண்டறிக.

Correct Answer: C [சேலம், கோயம்புத்தூர், ஒசூர், திருச்சிராப்பள்ளி]

Notes:

தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தடம்: சென்னை, ஒசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி. [Special Competitive Exam 2025]

12.  
தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME-கள்) பற்றி பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
(i) உத்யம் பதிவுகளில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
(ii) மாநிலத்தின் 30% தொழில்முனைவோர் பெண்கள்.
(iii) கோயம்புத்தூரில்தான் மாநிலத்திலேயே அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

உத்யம் பதிவில் தமிழ்நாடு 3-ஆம் இடம்; மாநிலத் தொழில்முனைவோரில் 30% பெண்கள் (2025). [Group 2/2A 2025]

13.  
பின்வருவனவற்றில் பொருத்தமான இணைகளைத் தேர்ந்தெடு :
1. மணவாளக்குறிச்சி – இல்மனைட்
2. கஞ்சமலை – இரும்புத் தாது
3. வாடிப்பட்டி – செப்பு
4. காரியாபட்டி – மாக்னசைட்

Correct Answer: B [[1] மற்றும் [2] சரி]

Notes:

மணவாளக்குறிச்சி–இல்மனைட், கஞ்சமலை–இரும்புத் தாது சரியான இணைகள். [CTS (ITI Posts) 2025]

14.  
பொருந்தாத விடையினைத் தேர்ந்தெடு.
தமிழ்நாட்டின் சர்க்கரை ஆலைகளின் அமைவிடம் மற்றும் அதன் பெயர்களில் காணப்படும் தவறைக் குறிப்பிடுக.

Correct Answer: B [சேலம் சர்க்கரை ஆலை – பாலக்கோடு]

Notes:

பாலக்கோட்டில் உள்ளது தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை; சேலம் ஆலை–பாலக்கோடு தவறு. [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0