வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
2012–13 ஆம் ஆண்டில், இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு :

Correct Answer: C [11 சதவிகிதம்]

Notes:

2012-13-ல் இந்திய சிமெண்ட் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 11%. [Veterinary Assistant 2020]

2.  
பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐப் பொருத்தி கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
பட்டியல் I – பட்டியல் II
(a) பட்டுத் தொழிற்சாலை – 1. மேற்கு வங்காளம்
(b) பருத்தித் தொழிற்சாலை – 2. தமிழ்நாடு
(c) கயிற்றுத் தொழிற்சாலை – 3. மகாராஷ்டிரா
(d) சணல் தொழிற்சாலை – 4. கேரளா

Correct Answer: A [2 3 4 1]

Notes:

பட்டு–தமிழ்நாடு, பருத்தி–மகாராஷ்டிரா, கயிறு–கேரளா, சணல்–மேற்கு வங்காளம். [ARGS 2020]

3.  
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க :
கூற்று (A): ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் சென்னை மிகப்பெரிய அளவிலான வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புக்கான இடமாக விளங்குகிறது
காரணம் (R): தமிழ்நாடு இந்திய அளவில் வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 28%-உம், லாரி உற்பத்தியில் 19%-உம், பயணியர் கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தியில் 18%-உம் பங்கு கொண்டுள்ளது

Correct Answer: A [(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R), (A)-க்கு சரியான விளக்கம்]

Notes:

வாகனத் தொழில் மையமாக இருப்பதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்'; வாகனத் துறையில் தமிழ்நாட்டுக்கு 28% பங்கு. [GSCE 2021]

4.  
“ஆசியாவின் டெட்ராய்ட்” என்று சென்னை ஏன் அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [மோட்டார் வாகனத் தொழில் இருப்பதனால்]

Notes:

மோட்டார் வாகனத் தொழில் மிகுந்திருப்பதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' எனப்படுகிறது. [Group 1 2021, Junior Rehabilitation Officer 2023]

5.  
தமிழ்நாடு _____ இடங்களில் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டு முதலிடத்தில் திகழ்கிறது.
1. அரியலூர், விருதுநகர்
2. தஞ்சாவூர், சென்னை
3. கோயம்புத்தூர், திருநெல்வேலி
4. புதுக்கோட்டை, மதுரை

Correct Answer: B [1 மற்றும் 3 சரி]

Notes:

தமிழ்நாட்டின் சிமெண்ட் ஆலைகள்: அரியலூர், விருதுநகர், கோயம்புத்தூர், திருநெல்வேலி. [Executive Officer Gr. III (HR&CE) 2022]

6.  
எந்த நகரம் ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [சென்னை]

Notes:

வாகன உற்பத்தி மையமான சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' எனப்படுகிறது. [DPGS 2022, Reporter 2022]

7.  
ஏன் சென்னை வங்கித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது?

Correct Answer: A [உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்துள்ளது]

Notes:

உலக வங்கி, IFC முதலீடுகளை ஈர்த்ததால் சென்னை 'வங்கித் தலைநகரம்' எனப்படுகிறது. [DPGS 2022]

8.  
ஜவஹர்லால் நேரு தன்னுடைய தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தின்போது, இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 90% பங்களிப்பதால் “குட்டி ஜப்பான்” என்று குறிப்பிட்ட நகரம் எது?

Correct Answer: B [சிவகாசி]

Notes:

தீப்பெட்டி உற்பத்திக்காக நேரு சிவகாசியை 'குட்டி ஜப்பான்' என்றார். [CEGS 2022]

9.  
பின்வரும் இடங்களை அவற்றோடு தொடர்புடையவற்றோடு பொருத்துக.
(a) ராணிப்பேட்டை – 1. கோழிப்பண்ணை
(b) சேலம் – 2. மஞ்சள்
(c) ஈரோடு – 3. தோல்
(d) நாமக்கல் – 4. உருக்கு இரும்பு

Correct Answer: D [3 4 2 1]

Notes:

ராணிப்பேட்டை–தோல், சேலம்–எஃகு, ஈரோடு–மஞ்சள், நாமக்கல்–கோழிப்பண்ணை. [FA 2022]

10.  
சிவகாசியை “குட்டி ஜப்பான்” என்று அழைத்தவர் யார்?

Correct Answer: A [ஜவஹர்லால் நேரு]

Notes:

சிவகாசியை 'குட்டி ஜப்பான்' என்று அழைத்தவர் ஜவஹர்லால் நேரு. [FA 2022, Asst. Conservator of Forests 2023, CTS (Interview Posts) 2024]

11.  
தமிழ்நாட்டில் ‘பின்னலாடை நகரம்’ என்று அழைக்கப்படுவது எது?

Correct Answer: C [திருப்பூர்]

Notes:

தமிழ்நாட்டின் 'பின்னலாடை நகரம்' திருப்பூர். [Reporter 2022]

12.  
கோயம்புத்தூர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவதன் காரணம் என்ன?

Correct Answer: B [அதிக எண்ணிக்கையிலான துணி ஆலைகள் செயல்படுவதால்]

Notes:

அதிக துணி ஆலைகளால் கோயம்புத்தூர் 'தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' எனப்படுகிறது. [Reporter 2022]

13.  
தமிழக அரசின் கொள்கைக் குறிப்பு 2021-22-ன்படி தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சியை அதனோடு தொடர்புடைய இந்திய அளவிலான தரவரிசையோடு பொருத்துக.
(a) துணி – 1. முதலிடம்
(b) உணவுப் பதப்படுத்தல் – 2. இரண்டாமிடம்
(c) ரப்பர் மற்றும் நெகிழி – 3. மூன்றாமிடம்
(d) வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள் – 4. நான்காமிடம்

Correct Answer: C [2 4 3 1]

Notes:

கொள்கைக் குறிப்பு 2021-22: வாகனம் 1, துணி 2, ரப்பர்–நெகிழி 3, உணவுப் பதப்படுத்தல் 4. [Jailor 2022]

14.  
இந்தியாவில் தோல் பொருட்களை அதிகளவில் தயாரித்து ஏற்றுமதி செய்யும் மாவட்டம் எது?

Correct Answer: B [வேலூர்]

Notes:

முடிவுற்ற தோல் பொருட்கள் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டம் முன்னணி. [CSSS 2023]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0