வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவில் உள்ள எந்தப் பல்லுயிர்ப் பூங்கா, முதலாவது பயனுள்ள பகுதி சார்ந்த பாதுகாப்புத் தளமாக (OECMs) அறிவிக்கப்பட்டுள்ளது?

Correct Answer: B [ஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா]

Notes:

குருகிராமின் ஆரவல்லி பல்லுயிர்ப் பூங்கா இந்தியாவின் முதல் OECM தளம் (2022). [Group 1 2022]

2.  
பின்வரும் சட்டங்களை அதனோடு தொடர்புடைய ஆண்டுகளோடு பொருத்துக.
(a) மதராஸ் வன யானைகள் பாதுகாப்புச் சட்டம் – 1. 1882
(b) தமிழ்நாடு வனச் சட்டம் – 2. 1980
(c) வனப் பாதுகாப்புச் சட்டம் – 3. 1972
(d) வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் – 4. 1873

Correct Answer: B [4 1 2 3]

Notes:

யானைகள் சட்டம் 1873, தமிழ்நாடு வனச் சட்டம் 1882, வனப் பாதுகாப்பு 1980, வனவிலங்கு பாதுகாப்பு 1972. [Group 1 2022]

3.  
தமிழகத்தில் இந்திரா காந்தி தேசியப் பூங்கா (ஆனைமலை புலிகள் காப்பகம்) அமைந்துள்ள மாவட்டம்/மாவட்டங்கள் _____

Correct Answer: A [கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர்]

Notes:

ஆனைமலை புலிகள் காப்பகம் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ளது. [CBT 2022]

4.  
அணில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள இடம் :

Correct Answer: C [ஸ்ரீவில்லிபுத்தூர்]

Notes:

சாம்பல் நிற அணில் சரணாலயம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது. [VCGS 2022]

5.  
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலுள்ள சுற்றுச்சூழல் பூங்காவின் பரப்பு அளவு :

Correct Answer: B [2.5 ஏக்கர்]

Notes:

பள்ளிக்கரணை சதுப்பு நில சுற்றுச்சூழல் பூங்காவின் பரப்பு சுமார் 2.5 ஏக்கர். [SD 2022]

6.  
வல்லநாடு வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [தூத்துக்குடி]

Notes:

வல்லநாடு வெளிமான் சரணாலயம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. [Junior Rehabilitation Officer 2023]

7.  
இவற்றுள் எந்தக் காடு மக்களுடைய, மக்களுக்காக மற்றும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட வனம் என்று வரையறுக்கப்படுகிறது?

Correct Answer: B [சமூகக் காடுகள்]

Notes:

மக்களின், மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்படும் காடு சமூகக் காடுகள் ஆகும். [Bursar 2023]

8.  
பின்வருவனவற்றுள் எந்த வனவிலங்கு சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: B [முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்]

Notes:

முண்டந்துறை சரணாலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது; களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பகுதி. [Road Inspector 2023]

9.  
தமிழ்நாட்டில் தேசிய தொல்லுயிர்ப் படிம மரப் பூங்கா இங்கு அமைந்துள்ளது :

Correct Answer: A [விழுப்புரம்]

Notes:

தேசிய கல்மரப் பூங்கா விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ளது. [Geology Service 2023]

10.  
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

Correct Answer: C [1972]

Notes:

வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ல் நிறைவேற்றப்பட்டது. [Asst. Training Officer (Textile) 2023]

11.  
தமிழ்நாட்டில் அதிகப் பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம் :

Correct Answer: A [தர்மபுரி]

Notes:

பாடநூல்படி தமிழ்நாட்டில் அதிகக் காட்டுப் பரப்பைக் கொண்ட மாவட்டம் தர்மபுரி. [AAO & AHO 2024]

12.  
தமிழ்நாட்டில் எத்தனை ஈரநிலங்கள் உள்ளன?

Correct Answer: A [24684]

Notes:

தேசிய ஈரநில வரைபடத் தொகுப்பின்படி தமிழ்நாட்டில் 24,684 ஈரநிலங்கள் உள்ளன. [AAO & AHO 2024]

13.  
கீழ்க்கண்டவற்றுள் எது தமிழ்நாட்டில் இல்லாத உயிர்க்கோளப் பெட்டகம்?

Correct Answer: B [நந்தா தேவி உயிர்க்கோளப் பெட்டகம்]

Notes:

நந்தா தேவி உயிர்க்கோளக் காப்பகம் உத்தராகண்டில் உள்ளது; தமிழ்நாட்டில் இல்லை. [AAO & AHO 2024]

14.  
அறிவியல் ரீதியாக Cirrochroa thais என அழைக்கப்படுவது தமிழ்நாட்டின் மாநில _____ ஆகும்.

Correct Answer: A [வண்ணத்துப்பூச்சி]

Notes:

Cirrochroa thais (தமிழ் மறவன்) தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சி (2019). [Special Competitive Exam 2025]

15.  
பின்வரும் பறவைகள் சரணாலயங்களை அவற்றின் மாவட்டங்களுடன் பொருத்துக :
பறவைகள் சரணாலயம் – மாவட்டம்
(a) வேட்டங்குடி – 1. சிவகங்கை
(b) மயூரா தோட்டம் – 2. அரியலூர்
(c) வெள்ளோடு – 3. தூத்துக்குடி
(d) கரைவெட்டி – 4. ஈரோடு

Correct Answer: C [1 3 4 2]

Notes:

வேட்டங்குடி–சிவகங்கை, மயூரா தோட்டம்–தூத்துக்குடி, வெள்ளோடு–ஈரோடு, கரைவெட்டி–அரியலூர். [Group 2A Mains 2025]

16.  
தமிழ்நாடு அரசாங்கத்தால் குறைவாக அறியப்பட்ட அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதில், பின்வரும் எந்த இனத்தின் மீது சமீபத்தில் (2025) கவனம் செலுத்துகிறது?
(i) சிங்கவால் மக்காக் (குரங்கு) மற்றும் மெட்ராஸ் ஹெட்ஜ்ஹாக் (முள்ளெலி)
(ii) கரியால் மற்றும் ஹாக்ஸ்பில் கடல் ஆமை
(iii) வரிக் கழுதைப்புலி (ஹைனா) மற்றும் திமில்-தலை கொண்ட மஹ்சீர் மீன்
(iv) பிக்மி ஹாக் (குள்ளக் காட்டுப் பன்றி) மற்றும் மலபார் சிவெட் (குனுகு பூனை)

Correct Answer: D [(i) மற்றும் (iii) மட்டும்]

Notes:

2025-ல் சிங்கவால் குரங்கு, மெட்ராஸ் முள்ளெலி, வரிக் கழுதைப்புலி, மஹ்சீர் பாதுகாப்புக்கு ₹1 கோடி. [Group 2A Mains Re-Exam 2026]

17.  
அரிட்டாபட்டியைப் பல்லுயிர் பாரம்பரியப் பகுதியாகத் தமிழக அரசு அறிவித்ததன் நோக்கம் என்னவென்றால் :
(i) இந்த அறிவிப்பு இப்பகுதியின் உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்க உதவும்
(ii) விவசாய நிலங்களை மேம்படுத்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
(iii) அரிட்டாபட்டி கிராமம் என்பது ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள பகுதியாகும்

Correct Answer: D [(i) மற்றும் (iii) மட்டும்]

Notes:

அரிட்டாபட்டி (மதுரை) ஏழு குன்றுகள் கொண்ட தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலம் (2022). [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0