வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவிலுள்ள 13 பெரிய துறைமுகங்களில், தமிழ்நாட்டில் உள்ள 3 பெரிய துறைமுகங்கள் _____, _____ மற்றும் _____.

Correct Answer: B [சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்]

Notes:

தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்கள்: சென்னை, எண்ணூர் (காமராஜர்), தூத்துக்குடி (வ.உ.சி). [ARGS 2020]

2.  
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டம் முழுமையாகச் செயல்படத் தொடங்கிய நாள் :

Correct Answer: B [10.2.2019]

Notes:

சென்னை மெட்ரோ முதல் கட்டம் 10.02.2019 அன்று முழுமையாகச் செயல்பட்டது. [GSCE 2021]

3.  
தமிழ்நாட்டின் முதலாவது பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவில் _____ அமைப்பிற்குத் தொடர்பு இல்லை.

Correct Answer: D [சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்]

Notes:

மாப்பேடு MMLP-ல் NHLML, RVNL, சென்னை துறைமுகம், TIDCO பங்கேற்கின்றன; CMDA இல்லை. [Group 4 2022]

4.  
தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் _____ ஆகும்.

Correct Answer: A [4]

Notes:

தமிழ்நாட்டில் 4 பன்னாட்டு விமான நிலையங்கள்: சென்னை, கோவை, திருச்சி, மதுரை. [Group 3A 2023]

5.  
பின்வருவனவற்றுள் இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் எது?

Correct Answer: C [சென்னை]

Notes:

பாடநூல்படி சென்னை, மும்பைக்கு அடுத்த இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம். [Group 3A 2023]

6.  
பின்வருவனவற்றுள் எந்த நான்கு முக்கியப் பெருநகரங்கள் தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன?

Correct Answer: C [புது டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை]

Notes:

தங்க நாற்கரம் டெல்லி, கொல்கத்தா, சென்னை, மும்பையை இணைக்கிறது. [AJ 2023]

7.  
_____ தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் மற்றும் தமிழ்நாட்டின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றாகும்.

Correct Answer: C [திருச்சிராப்பள்ளி சந்திப்பு]

Notes:

திருச்சிராப்பள்ளி சந்திப்பு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாகக் குறிப்பிடப்படுகிறது. [Hostel Supdt. cum PTO 2024]

8.  
NH-44 தமிழ்நாட்டின் மிக நீளமான நெடுஞ்சாலை ஆகும். இது ஒசூரில் இருந்து _____ வரை செல்கிறது.

Correct Answer: C [கன்னியாகுமரி]

Notes:

NH-44 தமிழ்நாட்டில் ஒசூர் முதல் கன்னியாகுமரி வரை செல்கிறது. [Combined Accounts Service 2024]

9.  
தமிழ்நாட்டின் மிகவும் நீளமான தேசிய நெடுஞ்சாலை NH-44. இது ஒசூர் முதல் கன்னியாகுமரி வரை _____ கி.மீ. செல்கிறது.

Correct Answer: D [627.2]

Notes:

தமிழ்நாட்டில் NH-44-ன் நீளம் சுமார் 627.2 கி.மீ. [CTS (ITI Posts) 2024]

10.  
பொருத்துக :
தமிழ்நாட்டின் சிறிய துறைமுகங்கள் – மாவட்டங்கள்
(a) எண்ணூர் – 1. தூத்துக்குடி
(b) திருச்சோபுரம் – 2. சென்னை
(c) புன்னக்காயல் – 3. நாகப்பட்டினம்
(d) திருக்கடையூர் – 4. கடலூர்

Correct Answer: C [2 4 1 3]

Notes:

எண்ணூர்–சென்னை, திருச்சோபுரம்–கடலூர், புன்னக்காயல்–தூத்துக்குடி, திருக்கடையூர்–நாகப்பட்டினம். [Asst. Public Prosecutor Gr. II 2025]

11.  
எண்ணூர் என்னும் முக்கியத் துறைமுகத்திற்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள _____ சிறிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Correct Answer: C [காட்டுப்பள்ளி]

Notes:

எண்ணூர் அருகே திருவள்ளூர் மாவட்ட சிறிய துறைமுகம் காட்டுப்பள்ளி. [Group 2A Mains Re-Exam 2026]

12.  
இந்தியாவின் நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி–கொல்கத்தா–சென்னை–மும்பை ஆகியவற்றை இணைக்கும் தங்க நாற்கரச் சாலையின் நீளம் _____ கி.மீ.

Correct Answer: C [5846 கி.மீ]

Notes:

தங்க நாற்கர நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 5,846 கி.மீ. [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0