வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழ்நாடு, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வலுவான செயல்திறன் கொண்ட, கண்டுபிடிப்பு அடிப்படையிலான ஒரு _____ ஆகும்.

Correct Answer: B [பொருளாதாரம்]

Notes:

தமிழ்நாடு உற்பத்தி, சேவைத் துறைகளில் வலுவான புத்தாக்க அடிப்படையிலான பொருளாதாரம். [Hostel Supdt. cum PTO 2024]

2.  
தமிழகத்தின் கனவு : மக்களின் _____ பாதிக்காமல் தமிழகத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே எங்கள் தொலைநோக்குப் பார்வை.

Correct Answer: B [மகிழ்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் வாழ்வாதாரம்]

Notes:

டிரில்லியன் டாலர் இலக்கு மக்களின் மகிழ்ச்சி, சுற்றுச்சூழல், வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வளர்ச்சியாக இருக்க வேண்டும். [AAO & AHO 2024]

3.  
2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அதே காலகட்டத்தில் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதமான 7.24%-க்கு எதிராக _____% வளர்ச்சியடைந்தது.

Correct Answer: D [8.19]

Notes:

2022-23-ல் தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சி 8.19% (இந்தியா 7.24%) என மதிப்பிடப்பட்டது. [Group 4 2024]

4.  
கோவிட்-19-க்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் _____ சதவீதம் உயர்ந்துள்ளது.

Correct Answer: B [8%]

Notes:

கோவிட்-க்குப் பின் (2021-22 முதல் 2023-24 வரை) தமிழ்நாட்டின் பொருளாதாரம் நிலையான விலையில் ஆண்டுக்கு 8%-க்கு மேல் வளர்ந்தது. [Group 1 2024]

5.  
2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய, தமிழ்நாடு எவ்வளவு சதவீத ஆண்டு வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்?

Correct Answer: A [18%]

Notes:

2030-க்குள் டிரில்லியன் டாலர் இலக்குக்கு ஆண்டுக்குச் சுமார் 18% வளர்ச்சி தேவை எனக் கணிக்கப்பட்டது. [CTS (Interview Posts) 2024]

6.  
கூற்று மற்றும் காரணம் வகை :
கூற்று (A) : பொது வழங்கல் முறையின் கீழ் தமிழ்நாடு அரசு நலன்புரி அரசு என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு உணவு தானியங்களையும் அத்தியாவசியப் பண்டங்களையும் மலிவு விலையில் வழங்குகிறது.
காரணம் (R) : இந்திய உணவுப் பொருளாதாரச் சூழலில், வறுமையை ஒழிக்கும் நோக்கோடு அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படுகின்றன.

Correct Answer: B [(A) மற்றும் (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்]

Notes:

வறுமை ஒழிப்பு நோக்கில் தமிழ்நாடு அரசு PDS மூலம் மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குகிறது. [CTS (Non-Interview Posts) 2024]

7.  
தமிழ்நாட்டின் புவிசார் குறியீடுகளை அவற்றின் இடம் மற்றும் உற்பத்தியுடன் சரியாகப் பொருத்தவும் :
(a) நாகர்கோவில் – 1. குத்து விளக்கு
(b) ஈரோடு – 2. வெண்கலச் சிலைகள்
(c) சுவாமிமலை – 3. மஞ்சள்
(d) நாச்சியார்கோவில் – 4. கோவில் நகைகள்

Correct Answer: C [4 3 2 1]

Notes:

நாகர்கோவில்–கோவில் நகை, ஈரோடு–மஞ்சள், சுவாமிமலை–வெண்கலச் சிலை, நாச்சியார்கோவில்–குத்துவிளக்கு. [CTS (ITI Posts) 2024]

8.  
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிக்கும் இரண்டாவது பெரிய மாநிலம் எது?

Correct Answer: C [தமிழ்நாடு]

Notes:

GDP பங்களிப்பில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு இரண்டாவது பெரிய மாநிலம். [CTS (Interview Posts) 2024]

9.  
2025-2026 மத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சியின் நான்கு இயந்திரங்களைப் பொருத்துக :
(a) 1வது இயந்திரம் – 1. MSMEs
(b) 2வது இயந்திரம் – 2. ஏற்றுமதி
(c) 3வது இயந்திரம் – 3. விவசாயம்
(d) 4வது இயந்திரம் – 4. மக்களில் முதலீடு

Correct Answer: B [3 1 4 2]

Notes:

2025-26 மத்திய பட்ஜெட்டின் நான்கு இயந்திரங்கள்: வேளாண்மை, MSME, முதலீடு, ஏற்றுமதி. [Group 1/1A 2025]

10.  
வணிக நிறுவனங்கள் ஏன் தமிழ்நாட்டை முதலீட்டிற்கு விருப்பமான இடமாகத் தேர்வு செய்கின்றன?

Correct Answer: A [நவீன உள்கட்டமைப்பு]

Notes:

நவீன உள்கட்டமைப்பு வசதிகளே தமிழ்நாட்டை முதலீட்டுக்கு விருப்பமான இடமாக்குகின்றன. [Group 1/1A 2025]

11.  
கூற்று [A] : தமிழ்நாடு அரசு தனது 2025-26 பட்ஜெட்டில் ரூபாய் சின்னத்தை (₹) கைவிட்டு, அதற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தான 'ரூ' என மாற்றியுள்ளது.
காரணம் [R] : அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்தல்.

Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கம்]

Notes:

2025-26 தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ₹ குறியீட்டுக்குப் பதில் 'ரூ' பயன்படுத்தப்பட்டது. [Group 1/1A 2025]

12.  
2024-2025 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையின் படி, அதன் உற்பத்தித்திறனைப் பொறுத்து பின்வருவனவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துங்கள்.
(1) நெல் உற்பத்தித்திறன்
(2) மக்காச்சோளம் உற்பத்தித்திறன்
(3) எண்ணெய் வித்துகள், நிலக்கடலை மற்றும் கரும்பு உற்பத்தித்திறன்

Correct Answer: A [(1) (2) (3)]

Notes:

உற்பத்தித்திறனில் தமிழ்நாடு: நெல் 3ஆம், மக்காச்சோளம் 2ஆம், எண்ணெய் வித்து–நிலக்கடலை–கரும்பு முதலிடம். [Group 4 2025]

13.  
பின்வருவனவற்றில் 2021-2022-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வேளாண்மை சாகுபடியோடு தொடர்புடைய உண்மையான கூற்று(க்கள்) எவை/யாவை?
(i) மயிலாடுதுறையில் தமிழ்நாட்டிலேயே அதிகமான பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
(ii) பெரம்பலூரில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.
(iii) கள்ளக்குறிச்சியில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக கரும்பு சாகுபடி செய்யப்பட்டது.

Correct Answer: D [(ii) மற்றும் (iii) மட்டும்]

Notes:

2021-22-ல் மக்காச்சோளத்தில் பெரம்பலூர், கரும்பில் கள்ளக்குறிச்சி முன்னிலை வகித்தன. [Group 4 2025]

14.  
கூற்று மற்றும் காரணத்தை நன்றாக புரிந்து கொண்ட பின் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
கூற்று [A]: தமிழ்நாட்டின் 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையின் படி தமிழ்நாட்டின் நகர்ப்புற பணவீக்கம் 2019-2020 ஆம் ஆண்டில் 6% லிருந்து 2024-2025 ஆம் ஆண்டில் 4.5% ஆகக் குறைந்து காணப்படுகிறது. அதே நேரத்தில் கிராமப்புற பணவீக்கம் 5.4% என்ற விகிதத்தில் நிலையாக உள்ளது.
காரணம் [R]: இது முக்கியமாக அரசாங்கத்தினால் அமல்படுத்தப் பெறும் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் போன்ற பிற வருமான ஆதரவுத் திட்டங்களால் ஏற்படுகிறது.

Correct Answer: B [[A] மற்றும் [R] சரி மற்றும் [R] ஆனது [A] யினுடைய சரியான விளக்கம் ஆகும்]

Notes:

PDS, வருமான ஆதரவுத் திட்டங்களால் நகர்ப்புறப் பணவீக்கம் 6%-லிருந்து 4.5%-ஆகக் குறைந்தது (2024-25). [Group 4 2025]

15.  
தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை 2024-25-ன் சிறப்பு அம்சங்களின் அடிப்படையில் பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) 2024-25 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி – 1. 2030
(b) தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு (2023-24) – 2. 8.33%
(c) $1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய இலக்கு வைக்கப்பட்ட ஆண்டு – 3. 8%-க்கும் அதிகம்
(d) மாநிலத்தின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (2023-24) – 4. 9.21%

Correct Answer: A [3 4 1 2]

Notes:

ஆய்வறிக்கை 2024-25: தேசிய GDP-யில் TN பங்கு 9.21%, 2023-24 உண்மை வளர்ச்சி 8.33%, இலக்கு ஆண்டு 2030. [CTS (Interview Posts) 2025]

16.  
சரியான விடையைத் தேர்வு செய்க.
2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடன்–வைப்பு விகிதம் _____.

Correct Answer: A [117.7%]

Notes:

2019-20-ல் தமிழ்நாட்டின் கடன்–வைப்பு விகிதம் 117.7%; 100%-ஐத் தாண்டியது. [CTS (Interview Posts) 2025]

17.  
பின்வருவனவற்றுள் எது 'தொலைநோக்குப் பார்வை 2023' (Vision Tamil Nadu 2023) ஆவணத்தின் விளைவாகும்?

Correct Answer: B [2023-ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாடு உயர் சமூக வளர்ச்சி நிலையை அடைந்து, மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டில் வளர்ந்த நாடுகளுடன் இணையாகும்]

Notes:

தொலைநோக்கு 2023: தமிழ்நாடு HDI-ல் வளர்ந்த நாடுகளுக்கு இணையான சமூக வளர்ச்சி அடையும் இலக்கு. [Asst. Public Prosecutor Gr. II 2026]

18.  
வெளிநாட்டு நிறுவனங்களுடனான தமிழக முதல்வரின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அவற்றின் துறைகளுடன் சரியாகப் பொருத்துக :
(a) நோக்கியா – 1. இணையவழிப் பணப் பரிமாற்றம்
(b) பேபால் – 2. தொலைத்தொடர்பு
(c) மைக்ரோசிப் – 3. சுகாதாரம்
(d) இன்ஃபின்க்ஸ் – 4. குறைகடத்திகள்

Correct Answer: A [2 1 4 3]

Notes:

நோக்கியா–தொலைத்தொடர்பு, பேபால்–இணையப் பணப்பரிமாற்றம், மைக்ரோசிப்–குறைகடத்தி, இன்ஃபின்க்ஸ்–சுகாதாரம். [Asst. Public Prosecutor Gr. II 2026]

19.  
கூற்று [A]: 2023-ஆம் ஆண்டுக்குள் வறுமை இல்லாத, மிகவும் வளமான மற்றும் முற்போக்கான மாநிலமாகத் தமிழகம் இருக்கும் என்று 'தொலைநோக்குப் பார்வை 2023' தமிழ்நாடு ஆவணம் கணித்துள்ளது.
காரணம் [R]: பொருளாதாரத்தை உற்சாகப்படுத்துவதிலும், அனைத்துப் பிரிவுகளிலும் மேம்பட்ட போட்டித்திறன், செயல்திறன், துடிப்பு ஆகியவற்றின் நல்வட்டத்தை உருவாக்குவதிலும் உற்பத்தித் துறைக்கு முக்கியப் பங்கு அளிக்கப்பட்டுள்ளது.

Correct Answer: D [கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி]

Notes:

தொலைநோக்கு 2023: வறுமையற்ற வளமான தமிழ்நாடு; உற்பத்தித் துறைக்கு முக்கியப் பங்கு. [CTS (Interview Posts) 2026]

20.  
தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2022-23-ல் 8.13% ஆகவும் 2023-24-ல் _____% ஆகவும் இருந்தது.

Correct Answer: B [8.23%]

Notes:

நிலையான விலையில் தமிழ்நாட்டின் GSDP வளர்ச்சி 2023-24-ல் 8.23% (அக்டோபர் 2024 மாநில மதிப்பீடு). [Group 2A Mains 2025]

21.  
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
கூற்று [A]: தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்தது.
காரணம் [R]: 2023-24-ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் காவிரி டெல்டா பகுதியில் உள்கட்டமைப்பை உருவாக்க அரசு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

Correct Answer: D [கூற்று [A] மற்றும் காரணம் [R] சரி, ஆனால் காரணம் [R] [A] கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல]

Notes:

காவிரி டெல்டா 2020 சட்டப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; 2023-24-ல் ₹1,000 கோடி தனி அறிவிப்பு. [Group 2A Mains Re-Exam 2026]

22.  
2025-26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில பட்ஜெட்டின் அம்சங்கள் எது/எவை?
(i) சொத்து மற்றும் பிற சொத்துகள் ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டால், ரூ. 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துகளுக்கு முத்திரைத் தீர்வையில் 1% குறைவு.
(ii) பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு அவர்களது கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித்தொகை.
(iii) ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு முறை மீண்டும் கொண்டுவரப்பட்டு, 30 நாட்கள் வரையிலான ஈட்டிய விடுப்பை ஒப்படைத்துப் பணமாக்கிக் கொள்ளலாம்.

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

2025-26 பட்ஜெட்: பெண்களுக்கு 1% முத்திரைத் தீர்வைச் சலுகை; பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ₹2,000 உதவி. [Group 2A Mains Re-Exam 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0