வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
சுகாதார சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் குழு அறிக்கை _____ ஆகும்.

Correct Answer: D [சர் ஜோசப் போர் குழு]

Notes:

ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவையைப் பரிந்துரைத்த முதல் குழு போர் குழு (1946). [Junior Analyst 2024]

2.  
தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட முதல் பெருநிறுவன மருத்துவமனை எது?

Correct Answer: D [அப்பல்லோ மருத்துவமனை]

Notes:

1983-இல் சென்னையில் தொடங்கிய அப்பல்லோ, இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை. [Combined Accounts Service 2024]

3.  
கலைஞர் கருணாநிதி அவர்களின் 97-ஆவது பிறந்தநாள் விழாவின்போது தமிழ்நாடு அரசு _____ உருவாக்குவதாக அறிவித்தது.

Correct Answer: A [சென்னையில் உயர்தரப் பல்நோக்கு மருத்துவமனையை]

Notes:

கலைஞர் பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உயர்தரப் பல்நோக்கு மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. [AAO & AHO 2024]

4.  
தமிழ்நாட்டில் இரத்த சோகை இல்லா இந்தியா (Anemia Mukt Bharat) திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Correct Answer: C [2018]

Notes:

இரத்த சோகை இல்லா இந்தியா (Anemia Mukt Bharat) திட்டம் 2018-இல் தொடங்கப்பட்டது. [Group 4 2024]

5.  
ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் _____ ஆண்டுகள்.

Correct Answer: C [7]

Notes:

JICA உதவியுடனான நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் செயலாக்கக் காலம் 7 ஆண்டுகள். [Group 4 2024]

6.  
2017 – 2018 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018 – 2019-இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு _____ பிரிவைச் சேர்ந்ததாகிறது.

Correct Answer: A [மேம்படுத்தப்பட்ட தரவரிசை]

Notes:

சுகாதாரக் குறியீடு மூன்றாம் சுற்றில் (2018-19) தமிழ்நாடு மேம்பட்ட தரவரிசைப் பிரிவில் இடம்பெற்றது. [Group 1 2024]

7.  
மாநிலத்தில் குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த _____ தமிழ்நாடு பின்பற்றுகிறது.

Correct Answer: A [சமூகத் தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை]

Notes:

குடும்ப நலத் திட்டங்களில் தமிழ்நாடு சமூகத் தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. [Group 1 2024]

8.  
சமீபத்தில் செய்திகளில் வெளியான "நமஸ்தே" இணைய முகப்பு எந்தத் துறையுடன் தொடர்புடையது?

Correct Answer: D [பாரம்பரிய மருத்துவம்]

Notes:

NAMASTE இணைய முகப்பு ஆயுஷ் (பாரம்பரிய மருத்துவம்) அமைச்சகத்தின் தரவுத் தளம். [CTS (Interview Posts) 2024]

9.  
பின்வருவனவற்றைச் சரியாகப் பொருத்துக :
(a) UNICEF – 1. பல்மருந்து சிகிச்சைக்கான உதவி
(b) SIDA – 2. உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான உதவி
(c) ODA – 3. பார்வையிழப்புக் கட்டுப்பாட்டுக்கான தேசியத் திட்டம்
(d) DANIDA – 4. குடும்ப நலத் திட்டம்

Correct Answer: A [(a) 2 (b) 1 (c) 4 (d) 3]

Notes:

UNICEF–நோய்த்தடுப்பு; SIDA–பல்மருந்து சிகிச்சை; ODA–குடும்ப நலம்; DANIDA–பார்வையிழப்புக் கட்டுப்பாடு. [CTS (Non-Interview Posts) 2024]

10.  
கூற்று [A] : தமிழ்நாட்டில் கருவளம் மிகக் குறைவாக உள்ளது.
காரணம் [R] : இம்மாநிலம் 80% எழுத்தறிவினைக் கொண்டுள்ளது.

Correct Answer: C [[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]-விற்குச் சரியான விளக்கம்]

Notes:

உயர் எழுத்தறிவு (2011-இல் 80.09%) தமிழ்நாட்டில் கருவளம் குறைவாக இருப்பதற்குக் காரணம். [CTS (Non-Interview Posts) 2024]

11.  
_____ எனும் அமைப்பு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அல்லது கல்வித் துறையின் கீழ் செயல்படுகிறது.

Correct Answer: C [குழந்தை நெறிப்படுத்தும் சிகிச்சையகம்]

Notes:

குழந்தை நெறிப்படுத்தும் சிகிச்சையகங்கள் சுகாதார அல்லது கல்வித் துறையின் கீழ் இயங்குகின்றன. [Group 1B/1C 2024]

12.  
தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் சுகாதார அமைப்புகளில் அவற்றின் ஆண்டுடன் சரியாகப் பொருந்தியவற்றைத் தேர்வு செய்க :
1. தமிழ்நாடு மாநிலக் கிராமப்புறச் சுகாதாரத் திட்டம் – 2005
2. தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் – 1939
3. தமிழ்நாடு மாநிலச் சுகாதாரக் கொள்கைத் தொலைநோக்கு – 2032
4. தமிழ்நாடு மகப்பேறு நலத் திட்டம் – 1989

Correct Answer: C [1 மற்றும் 2 சரியானவை]

Notes:

மாநில ஊரக சுகாதாரத் திட்டம் 2005; தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939. [Group 1B/1C 2024]

13.  
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், இந்திய அளவில் எய்ட்ஸ் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கென _____ பதிவு செய்யப்பட்ட சங்கம் ஆகும்.

Correct Answer: B [முதலாவதாகப்]

Notes:

TANSACS (1994) எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்காக இந்தியாவில் பதிவான முதல் சங்கம். [Asst. Public Prosecutor Gr. II 2025]

14.  
தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையானது தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை சுகாதாரத் துறையில் _____ நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது.

Correct Answer: B [ஜப்பான்]

Notes:

நகர்ப்புற சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்துக்கு ஜப்பான் (JICA) நிதியுதவி அளிக்கிறது. [Special Competitive Exam 2025, AGGS 2021, Combined Research Assistant 2023]

15.  
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்திற்கான ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை மற்றும் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு விகிதம் _____.

Correct Answer: C [85 : 15]

Notes:

நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் JICA–மாநில அரசு பங்களிப்பு விகிதம் 85:15. [Special Competitive Exam 2025]

16.  
தமிழ்நாடு சுகாதார அமைப்புச் சீர்திருத்தத் திட்டம் (TNHSRP) பற்றிய தவறான கூற்று(களை)க் கண்டறிக.
(i) இத்திட்டத்திற்கு உலக வங்கி ஆதரவு அளிக்கின்றது.
(ii) இத்திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் 60 : 40 என்ற விகிதத்தில் நிதியுதவி வழங்குகின்றன.
(iii) முடிவு அடிப்படையில் அமைந்த இத்திட்டம் தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் செயல்படுத்தப்படுகிறது.
(iv) இத்திட்டம் SDG 9 இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Correct Answer: C [(ii) மற்றும் (iv) மட்டும்]

Notes:

TNHSRP: உலக வங்கி ஆதரவு, முடிவு அடிப்படைத் திட்டம்; இலக்கு SDG 3; 60:40 பங்கீடு இல்லை. [Group 4 2025]

17.  
கூற்று [A] : மாநிலத்தில் அரசு சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்களின் வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதிப்படுத்தச் சுகாதாரத் துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
காரணம் [R] : தமிழ்நாடு மருத்துவ சேவை நபர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சொத்துச் சேதம் அல்லது இழப்புத் தடுப்பு) சட்டத்தின் தண்டனை விதிகள், மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Correct Answer: C [கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி]

Notes:

மருத்துவப் பணியாளர் பாதுகாப்புச் சட்டத்தின் (2008) தண்டனை விதிகள் மருத்துவமனைகளில் தமிழ், ஆங்கிலத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. [CTS (Interview Posts) 2025]

18.  
2017–18 அறிக்கையின்படி, 108 ஆம்புலன்ஸ் சேவைகள் பல்வேறு வகையான மருத்துவ அவசரங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை வரிசைப்படுத்துக.
(1) சாலைப் போக்குவரத்து விபத்து
(2) இதயம் தொடர்பான
(3) மகப்பேறு தொடர்பான
(4) விஷம் மற்றும் தற்கொலை தொடர்பான

Correct Answer: B [(3), (1), (2), (4)]

Notes:

2017-18-இல் 108 அவசர ஊர்தி அதிகம் பயன்பட்டது மகப்பேறு, பின் சாலை விபத்து, இதய நோய்க்கு. [CTS (ITI Posts) 2025]

19.  
பொருத்துக :
(a) விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது – 1. 1952
(b) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது – 2. 1992
(c) வரதட்சணை தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது – 3. 1856
(d) தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது – 4. 1961

Correct Answer: A [(a) 3 (b) 1 (c) 4 (d) 2]

Notes:

விதவை மறுமணம் 1856; குடும்பக் கட்டுப்பாடு 1952; வரதட்சணைத் தடுப்பு 1961; தொட்டில் குழந்தை 1992. [CTS (ITI Posts) 2025]

20.  
உலகச் சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் யுனிசெஃப் (UNICEF) உருவாக்கிய குழந்தை வளர்ப்புப் பராமரிப்புக் கட்டமைப்பின் (Nurturing Care Framework) கீழ், தந்தையர் சமபங்காளர்களாக இருக்க வேண்டிய பகுதிகளைக் கண்டறிக.

Correct Answer: A [உடல் நலம், ஊட்டச்சத்து, ஆரம்பக் கல்வி]

Notes:

WHO–UNICEF பராமரிப்புக் கட்டமைப்பு: உடல்நலம், ஊட்டச்சத்து, ஆரம்பக் கற்றலில் தந்தையரும் சமபங்காளர். [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0