வினாடி வினா
← திரும்பச் செல்ல
தமிழ்நாட்டின் முக்கியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் காற்றாலை; முப்பந்தல் புகழ்பெற்றது. [Group 2/2A 2025]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
தமிழ் மரபில் நிலம் இயற்கை அமைப்பின் அடிப்படையில் ஐந்து பெரும் பிரிவுகளாகப் பகுக்கப்படுகிறது. பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) குறிஞ்சி – 1. வளமான பகுதி
(b) முல்லை – 2. காட்டுப் பகுதி
(c) மருதம் – 3. கடல் பகுதி
(d) நெய்தல் – 4. மலைப் பகுதி
(a) குறிஞ்சி – 1. வளமான பகுதி
(b) முல்லை – 2. காட்டுப் பகுதி
(c) மருதம் – 3. கடல் பகுதி
(d) நெய்தல் – 4. மலைப் பகுதி
Correct Answer: D [4 2 1 3]
Notes:
குறிஞ்சி–மலை, முல்லை–காடு, மருதம்–வயல், நெய்தல்–கடல் என்பது ஐந்திணைப் பகுப்பு. [ADGS 2021]
2.
2019-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட ஐந்து புதிய மாவட்டங்கள் _____.
Correct Answer: A [திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி]
Notes:
2019-ல் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாயின. [PTGS 2021]
3.
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
(a) செஞ்சி – 1. ஸ்தல துர்கா
(b) ஆனைமலை – 2. வன துர்கா
(c) வேலூர் – 3. கிரி துர்கா
(d) பாஞ்சாலங்குறிச்சி – 4. ஜல துர்கா
(a) செஞ்சி – 1. ஸ்தல துர்கா
(b) ஆனைமலை – 2. வன துர்கா
(c) வேலூர் – 3. கிரி துர்கா
(d) பாஞ்சாலங்குறிச்சி – 4. ஜல துர்கா
Correct Answer: C [3 2 4 1]
Notes:
செஞ்சி–கிரி துர்கம், ஆனைமலை–வன துர்கம், வேலூர்–ஜல துர்கம், பாஞ்சாலங்குறிச்சி–ஸ்தல துர்கம். [Group 2 2022]
4.
இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, பரப்பளவில் _____ இடத்தில் உள்ளது.
Correct Answer: B [10வது]
Notes:
1,30,058 ச.கி.மீ. பரப்புடன் தமிழ்நாடு பரப்பளவில் 10ஆவது பெரிய மாநிலம். [CAGS 2022]
5.
_____ 'கிழக்கின் டிராய்' என அழைக்கப்படுகிறது.
Correct Answer: B [செஞ்சிக் கோட்டை]
Notes:
விழுப்புரம் மாவட்டச் செஞ்சிக் கோட்டை 'கிழக்கின் டிராய்' எனப்படுகிறது. [CEGS 2022]
6.
தமிழ்நாடு அதிகமான மழைப்பொழிவைப் பெறும் காலம் _____ ஆகும்.
Correct Answer: A [அக்டோபரிலிருந்து டிசம்பர் வரை]
Notes:
தமிழ்நாடு அக்டோபர்–டிசம்பர் வடகிழக்குப் பருவமழையில் அதிக மழை பெறுகிறது. [PSY 2022]
7.
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படக் காரணமாக இருப்பது _____ ஆகும்.
Correct Answer: B [அதிக மழை]
Notes:
நீலகிரியில் நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் கனமழை. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
8.
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக சதவிகித நகர்ப்புற மக்கள்தொகையைக் கொண்ட மாநிலம் எது?
Correct Answer: B [தமிழ்நாடு]
Notes:
2011 கணக்கெடுப்பில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடே அதிக நகர்ப்புற சதவீதம் (48.4%) கொண்டது. [Junior Rehabilitation Officer 2023]
9.
பின்வருவனவற்றுள் தமிழ்நாட்டின் முக்கியப் பழங்குடியினர் யாவர்?
(i) குறும்பர்
(ii) பணியர்
(iii) தோடர்
(iv) பைனா
(i) குறும்பர்
(ii) பணியர்
(iii) தோடர்
(iv) பைனா
Correct Answer: C [(i), (ii) மற்றும் (iii)]
Notes:
குறும்பர், பணியர், தோடர் தமிழ்நாட்டுப் பழங்குடியினர்; பைனா தமிழ்நாட்டினர் அல்ல. [Jailor 2022]
10.
கூற்று (A): தமிழ்நாட்டில் நீர் நிலைகள் நிரம்ப முழுமையாக மழையைச் சார்ந்துள்ளது.
காரணம் (R): தமிழ்நாட்டில் பருவ கால மழை பெய்யாமையால் தண்ணீர் பஞ்சம் மற்றும் கடுமையான வறட்சி நிலவுகின்றது.
காரணம் (R): தமிழ்நாட்டில் பருவ கால மழை பெய்யாமையால் தண்ணீர் பஞ்சம் மற்றும் கடுமையான வறட்சி நிலவுகின்றது.
Correct Answer: B [(A) மற்றும் (R) இரண்டும் சரி மற்றும் (R) என்பது (A)-க்குச் சரியான விளக்கம்]
Notes:
நீர்வளம் மழையைச் சார்ந்திருப்பதால் பருவமழை பொய்த்தால் தமிழ்நாட்டில் வறட்சி ஏற்படுகிறது. [Jailor 2022]
11.
தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் இன்னும் இரண்டாகப் பிரிக்கப்படவில்லை?
Correct Answer: C [கன்னியாகுமரி]
Notes:
கன்னியாகுமரி மாவட்டம் இதுவரை பிரிக்கப்படவில்லை. [Bursar 2023]
12.
_____ தமிழ்நாட்டின் மாநில மலராக விளங்குகிறது.
Correct Answer: D [குளோரியோசா சூப்பர்பா]
Notes:
தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் (Gloriosa superba). [Bursar 2023]
13.
தமிழ்நாடு _____ கி.மீ. கடற்கரைப் பகுதியைக் கொண்டிருக்கிறது.
Correct Answer: B [1076]
Notes:
தமிழ்நாட்டின் கடற்கரை நீளம் சுமார் 1,076 கி.மீ. [Combined Engineering Subordinate Service 2023]
14.
சரியான விடையைத் தேர்ந்தெடு :
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள் _____.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பொழியும் மாதங்கள் _____.
Correct Answer: C [அக்டோபர் – டிசம்பர்]
Notes:
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர்–டிசம்பர் காலத்தில் பொழிகிறது. [Combined Engineering Subordinate Service 2023]
15.
தமிழ்நாட்டில் எத்தனை வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன?
Correct Answer: C [ஏழு]
Notes:
தமிழ்நாட்டில் ஏழு வேளாண் காலநிலை மண்டலங்கள் உள்ளன. [Asst. Training Officer (Textile) 2023, DPGS 2022]
16.
தமிழ்நாடு மாநிலமாக உருவானபோது _____ மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.
Correct Answer: A [13]
Notes:
உருவானபோது தமிழ்நாட்டில் (சென்னை மாநிலம்) 13 மாவட்டங்கள் இருந்தன. [Research Asst. (Animal Husbandry) 2023, Group 1B/1C 2024]
17.
மேற்குத் தொடர்ச்சி மலையின் எந்தச் சிகரம் அதன் உயரத்துடன் சரியாகப் பொருந்தியுள்ளது?
சிகரங்கள் – உயரம் (மீ)
சிகரங்கள் – உயரம் (மீ)
Correct Answer: D [தொட்டபெட்டா – 2637]
Notes:
நீலகிரியின் தொட்டபெட்டா (2,637 மீ) தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம். [CTS (ITI Posts) 2024]
18.
தமிழ்நாட்டின் முக்கிய நீர்ப்பாசன ஆதாரம் எது?
Correct Answer: C [கிணறுகள்]
Notes:
தமிழ்நாட்டின் முதன்மைப் பாசன ஆதாரம் கிணறுகள். [Group 1B/1C 2024, Reporter 2022]
19.
பின்வரும் வேளாண்மை வகைகளைத் தமிழ்நாட்டின் சரியான பகுதிகளுடன் பொருத்துக :
(a) தீவிர தன்னிறைவு வேளாண்மை – 1. காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகள்
(b) தோட்ட வேளாண்மை – 2. தமிழ்நாட்டின் சில பகுதிகள் தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது
(c) கலப்பு வேளாண்மை – 3. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகள்
(a) தீவிர தன்னிறைவு வேளாண்மை – 1. காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகைகள்
(b) தோட்ட வேளாண்மை – 2. தமிழ்நாட்டின் சில பகுதிகள் தவிர்த்து அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றப்படுகிறது
(c) கலப்பு வேளாண்மை – 3. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைச்சரிவுகள்
Correct Answer: C [2 3 1]
Notes:
தோட்டப் பயிர் வேளாண்மை மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளில் நடைபெறுகிறது. [Special Competitive Exam 2025]
20.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் எது?
Correct Answer: A [காற்றாலை]
Notes:
தமிழ்நாட்டின் முக்கியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் காற்றாலை; முப்பந்தல் புகழ்பெற்றது. [Group 2/2A 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
