வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
நமது தேசத்தின் புதிய கல்விக் கொள்கையில் (2020), 10 + 2 என்ற அமைப்பு _____ என மாற்றப்பட உள்ளது.

Correct Answer: C [5 + 3 + 3 + 4]

Notes:

தேசியக் கல்விக் கொள்கை 2020: 10+2-க்குப் பதிலாக 5+3+3+4 அமைப்பு. [PTGS 2021]

2.  
கன்னியாகுமரி மாவட்டம் மிக அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகத் திகழக் காரணம் என்ன?

Correct Answer: A [கேரள மாநில நிகழ்வுகளின் தாக்கம்]

Notes:

கேரளத் (திருவிதாங்கூர்) தாக்கத்தால் கன்னியாகுமரி எழுத்தறிவில் முதலிடம் (91.75%). [AGGS 2021]

3.  
அனைத்து இந்திய உயர் கல்விக்கான கணக்கெடுப்பு 2019-இன்படி எந்த மாநிலம் 2018-இல் அதிகபட்ச எண்ணிக்கையிலான பி.எச்.டி.-களை (முனைவர்களை) உருவாக்கியுள்ளது?

Correct Answer: A [தமிழ்நாடு]

Notes:

AISHE 2019 அறிக்கைப்படி 2018-இல் அதிக முனைவர்களை உருவாக்கியது தமிழ்நாடு. [Group 1 2021, FA 2022]

4.  
பின்வரும் நிறுவனங்களில் எது தேசிய நிறுவன தர கட்டமைப்பின் படி ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றது?

Correct Answer: A [IIT, சென்னை]

Notes:

NIRF ஒட்டுமொத்தத் தரவரிசையில் 2019–2025 வரை சென்னை IIT முதலிடம். [Group 1 2022]

5.  
2021-இல் நீதியரசர் டி. முருகேசன் குழு _____ காரியத்தை ஆராய அமைக்கப்பட்டது.

Correct Answer: C [தொழிற்கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம்]

Notes:

நீதியரசர் டி. முருகேசன் குழு அரசுப் பள்ளி மாணவர்களின் தொழிற்கல்விச் சேர்க்கையை ஆராய்ந்தது. [Group 2 2022]

6.  
கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப் படித்து வினாவிற்கு விடையளிக்கவும். உங்களது விடை கட்டாயமாகப் பத்தியின் அடிப்படையில் மட்டுமே அமைய வேண்டும்.
பத்தி
கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு இணைய வழியில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரின் தரவுகளும் நிகழ்நேர அடிப்படையில் பராமரிக்கப்படுகின்றன. இத்தகவல்களைப் பயன்படுத்திப் பல பணிகள் தானியங்கு முறையில் செய்யப்படுகின்றன, எளிதாக்கப்படுகின்றன, நாள்தோறும் அறிக்கையிடப்படுகின்றன.
பின்வருவனவற்றுள் பத்தியிலிருந்து சிறப்பாகப் பெறப்படும் கருத்து எது?

Correct Answer: B [சிறப்பான தகவல் மூலமான கொள்கை முடிவெடுக்க அரசிற்கு இது உதவும்]

Notes:

EMIS நிகழ்நேரத் தரவுகள் மூலம் அரசுக்குச் சிறந்த கொள்கை முடிவெடுக்க உதவுகிறது. [Group 2 2022]

7.  
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் _____ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Correct Answer: A [தமிழ் இணையக் கல்விக்கழகம்]

Notes:

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் 'தமிழ் இணையக் கல்விக்கழகம்' எனப் பெயர் மாற்றப்பட்டது. [CAGS 2022]

8.  
திறன் மேம்பாட்டு கல்வி திட்டம் – இதை எந்த நிறுவனம் கையாள்கிறது?

Correct Answer: D [என்.யூ.இ.பி.ஏ.]

Notes:

கல்வித் திட்டமிடலில் திறன் மேம்பாட்டைக் கையாள்வது NUEPA (2017 முதல் NIEPA). [DPGS 2022]

9.  
2011-இல் தமிழ்நாட்டில் மொத்த எழுத்தறிவு விகிதாச்சாரம் _____ இருந்தது.

Correct Answer: C [80.33%]

Notes:

2011 தற்காலிகக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு 80.33% (இறுதி 80.09%). [DPGS 2022]

10.  
பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?

Correct Answer: B [நிதி ஆயோக்]

Notes:

பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை (SEQI) நிதி ஆயோக் அறிமுகப்படுத்தியது. [Executive Officer Gr. III (HR&CE) 2022]

11.  
பட்டியல் I மற்றும் பட்டியல் II-ஐப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்வு செய்க :
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மாநிலங்களின் எழுத்தறிவு வீதம்
பட்டியல் I (மாநிலம்) – பட்டியல் II (எழுத்தறிவு வீதம் (%))
(a) கேரளா – 1. 93.99%
(b) தமிழ்நாடு – 2. 75.36%
(c) கர்நாடகா – 3. 67.02%
(d) ஆந்திரப் பிரதேசம் – 4. 80.09%

Correct Answer: B [1 4 2 3]

Notes:

2011 எழுத்தறிவு: கேரளா ~94%, தமிழ்நாடு 80.09%, கர்நாடகா 75.36%, ஆந்திரா 67.02%. [Executive Officer Gr. III (HR&CE) 2022]

12.  
2015–16ஆம் ஆண்டு நிதி ஆயோக் அறிக்கையின்படி (NER) தொடக்கநிலை நிகர மாணவர் சேர்க்கை வீதத்தின் அடிப்படையில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?

Correct Answer: A [தமிழ்நாடு]

Notes:

நிதி ஆயோக் 2015–16 தரவில் தொடக்கநிலை நிகர சேர்க்கை வீதத்தில் தமிழ்நாடு முதலிடம். [Executive Officer Gr. III (HR&CE) 2022]

13.  
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டம் மிக அதிகமான எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது?

Correct Answer: C [கன்னியாகுமரி]

Notes:

2011 கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு கன்னியாகுமரி மாவட்டம். [Executive Officer Gr. III (HR&CE) 2022, CTS (Interview Posts) 2024]

14.  
பின்வருவனவற்றில் எது தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது?
1. SBSE – மாநிலப் பள்ளித் தேர்வுகள் வாரியம்
2. BHSE – உயர் பாதுகாப்புத் தேர்வு வாரியம்
3. TNBSE – தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியம்
4. TNBHSE – தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி வாரியம்

Correct Answer: B [2 மற்றும் 3 தவறானவை]

Notes:

BHSE = Board of Higher Secondary Examinations; TNBSE = TN Board of Secondary Education. [SD 2022]

15.  
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI) எங்கு உள்ளது?

Correct Answer: A [தஞ்சாவூர்]

Notes:

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ளது. [SD 2022]

16.  
பின்வருவனவற்றுள் எந்த அரசியல் கட்சி தமிழகத்தில் ஆரம்பக் கல்வியில் இருபாலர் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது?

Correct Answer: D [நீதிக் கட்சி]

Notes:

தொடக்கக் கல்வியில் இருபாலர் கல்வி முறையை நீதிக் கட்சி அறிமுகப்படுத்தியது. [Reporter 2022]

17.  
பின்வருவனவற்றில் எதற்காக மகாத்மா காந்தியின் சமுதாயக் கல்லூரி தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது?

Correct Answer: C [சிறைக் கைதிகளுக்குச் சிறையில் தொழிற்பயிற்சி அளித்தல்]

Notes:

மகாத்மா காந்தி சமுதாயக் கல்லூரிகள் சிறைக் கைதிகளின் தொழிற்பயிற்சிக்காகத் தொடங்கப்பட்டன. [Fisheries Inspector / SI 2023]

18.  
ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு (ODB)-இன் நோக்கம்:

Correct Answer: A [நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தலா இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகளை மார்ச் 2023-க்குள் உருவாக்குதல்]

Notes:

ஆபரேஷன் டிஜிட்டல் போர்டு (2019): இடைநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் மத்திய அரசுத் திட்டம். [Asst. Conservator of Forests 2023]

19.  
2713 அரசு _____ களுக்கு உயர்தரக் கணினி ஆய்வகங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Correct Answer: B [நடுநிலைப் பள்ளி]

Notes:

2,713 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டன. [Road Inspector 2023]

20.  
ஆங்கிலேயர் ஆட்சியில் கல்விக் கொள்கை பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
(i) நான்கு காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
(ii) 1845-இல் சர் சார்லஸ் வுட் டெஸ்பேட்ச் தொடங்கப்பட்டது.
(iii) இது மாக்னா கார்ட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

Correct Answer: B [(ii) மட்டும்]

Notes:

வுட் அறிக்கை 1854-இல் வெளியானது; அது இந்தியக் கல்வியின் மகா சாசனம். [Road Inspector 2023]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0