வினாடி வினா
← திரும்பச் செல்ல
சமூக நீதி: ஏற்றத்தாழ்வு நீக்கம், கண்ணியமான வாழ்க்கைத் தரம், நலிந்தோர் நலன் காப்பு. [CTS (ITI Posts) 2025]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
"மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும்" என்று கூறியவர் யார்?
Correct Answer: A [தந்தை பெரியார்]
Notes:
சுயமரியாதையைப் பிறப்புரிமை என்றவர் தந்தை பெரியார்; 1925-இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கினார். [Group 1 2021]
2.
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை _____ எனப்படும்.
Correct Answer: B [தேசிய ஒருங்கிணைப்பு]
Notes:
சமூகங்களிடையே ஒற்றுமை வளர்க்கும் சமூக, கல்வி, உளவியல் செயல்முறை தேசிய ஒருமைப்பாடு. [Group 4 2022]
3.
கீழ்க்காண்பவற்றுள் எது/எவை 'சமூக நீதி'யை வரையறுக்கும்போது சேர்த்துக் கொள்ளப்படுகிறது/கின்றன?
1. சம உரிமை
2. சம வாய்ப்பு
3. சமமாக நடத்துதல்
4. செல்வத்தினை அனைவருக்கும் சமமாகப் பகிர்தல்
1. சம உரிமை
2. சம வாய்ப்பு
3. சமமாக நடத்துதல்
4. செல்வத்தினை அனைவருக்கும் சமமாகப் பகிர்தல்
Correct Answer: C [1, 2 மற்றும் 3 மட்டும்]
Notes:
சமூக நீதி = சம உரிமை, சம வாய்ப்பு, சமமான நடத்துதல். [SD 2022]
4.
"பொதுவுடைமை அறிக்கை" எனும் நூலை எழுதியவர்கள் யார்?
Correct Answer: C [கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கல்ஸ்]
Notes:
பொதுவுடைமை அறிக்கையை (1848) மார்க்ஸ், ஏங்கல்ஸ் இணைந்து எழுதினர். [Jailor 2022]
5.
சமூக வளங்களை சமமற்ற வடிவங்களாகப் பகிர்வது பொதுவாக எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Correct Answer: A [சமூக சமத்துவமின்மை]
Notes:
சமூக வளங்களை அணுகுவதில் உள்ள சமமின்மை சமூக சமத்துவமின்மை எனப்படும். [Fisheries Inspector / SI 2023]
6.
சமூக நீதி எனும் கருத்துரு _____ இல் உருவானது.
Correct Answer: C [19ஆம் நூற்றாண்டு]
Notes:
சமூக நீதி என்ற கருத்து 19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சிப் பின்னணியில் உருவானது. [CSSS 2023]
7.
நீதியை நியாயம் என்று கூறியவர் யார்?
Correct Answer: D [ஜான் ராவல்ஸ்]
Notes:
'நீதி என்பது நியாயம்' என்றவர் ஜான் ராவல்ஸ் — A Theory of Justice (1971). [Group 3A 2023]
8.
பின்வருவனவற்றில் எது/எவை சமூக நீதியை மேம்படுத்துகிறது?
Correct Answer: D [இவை அனைத்தும்]
Notes:
பொருளாதாரம், வேலை, கல்வி ஆகியவற்றில் சமவாய்ப்பு அனைத்தும் சமூக நீதியை மேம்படுத்துகின்றன. [CTS (Non-Interview Posts) 2024]
9.
கூற்று [A] : சுற்றுலாவில் நேர்மறையான சமூக தாக்கங்கள் உருவாகும்.
காரணம் [R] : பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்வது மற்றும் சகிப்புத் தன்மையை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.
காரணம் [R] : பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றி அறிந்து கொள்வது மற்றும் சகிப்புத் தன்மையை அதிகரிப்பது ஆகியவை அடங்கும்.
Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] ஆனது [A]க்கான சரியான விளக்கம் ஆகும்]
Notes:
பிற பண்பாடுகளை அறிதல், சகிப்புத்தன்மை வளர்தல் — சுற்றுலாவின் நேர்மறைச் சமூகத் தாக்கங்கள். [CTS (ITI Posts) 2024]
10.
கூற்று [A] : பாலின சமத்துவம் இன சமத்துவம் போன்ற பிற உரிமைகளை பாதிக்காது.
காரணம் [R] : சமூக நீதி வாதிகள் பாலின சமத்துவத்தை சமூக சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக கருதுகின்றனர்.
காரணம் [R] : சமூக நீதி வாதிகள் பாலின சமத்துவத்தை சமூக சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாக கருதுகின்றனர்.
Correct Answer: C [[A] தவறு [R] சரி]
Notes:
பாலின சமத்துவம் பிற உரிமைகளுடன் தொடர்புடையது; அது சமூகச் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சம். [CTS (ITI Posts) 2024]
11.
சமஸ்கிருதமயமாதல் என்பது
(a) தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்த முயற்சி செய்து வருகின்றனர்
(b) உயர் சாதியினரின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம்
(a) தாழ்த்தப்பட்ட சாதியினர் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்த முயற்சி செய்து வருகின்றனர்
(b) உயர் சாதியினரின் வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் மூலம்
Correct Answer: B [(a) மற்றும் (b) சரி]
Notes:
உயர் சாதியினரின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி அந்தஸ்து உயர்த்தல் சமஸ்கிருதமயமாதல் — எம்.என். ஸ்ரீனிவாஸ். [Group 1B/1C 2024]
12.
பொருத்துக :
அட்டவணை I – துறை நிபுணர்கள் / அட்டவணை II – மதவாத வன்முறை காரணிகள்
(a) சமூகவியலாளர் – 1. பொருளாதார இழப்பு
(b) மத நிபுணர்கள் – 2. சார்பு இழப்பு
(c) அரசியல் அறிவியலாளர் – 3. அடிப்படை மற்றும் ஒத்துமை வாதிகளின் வன்முறை
(d) மார்க்சியர்கள் – 4. அதிகார போராட்டம்

Correct Answer: A [2 3 4 1]
Notes:
மார்க்சியர் பொருளாதார இழப்பையும், அரசியல் அறிஞர் அதிகாரப் போராட்டத்தையும் வகுப்புவாதக் காரணமாகக் கூறுவர். [Group 1B/1C 2024]
13.
கூற்று [A] : பொதுவாக சமூக நீதியின் நடைமுறை இலட்சியங்கள் ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ அல்லது சமூகத்திலோ சமூக நீதியின் ஒரு குறிப்பிட்ட கருத்தை உணரும் முயற்சியை குறிக்கின்றன.
காரணம் [R] : அத்தகைய இலட்சியங்களின்படி அவை பின்பற்றப்படும் வரலாற்று மற்றும் கலாச்சார சூழ்நிலைகளுடன் மாறுபடும்.
காரணம் [R] : அத்தகைய இலட்சியங்களின்படி அவை பின்பற்றப்படும் வரலாற்று மற்றும் கலாச்சார சூழ்நிலைகளுடன் மாறுபடும்.
Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] ஆனது [A] க்கான சரியான விளக்கம் ஆகும்]
Notes:
சமூக நீதியின் நடைமுறை இலட்சியங்கள் வரலாற்று, பண்பாட்டுச் சூழலுக்கேற்ப மாறுபடும். [Special Competitive Exam 2025]
14.
கூற்று [A] : சமூக நீதி என்பது அடிப்படையில் சமமான சமூக வாய்ப்புகளைக் கையாள்வதில்லை.
காரணம் [R] : சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
காரணம் [R] : சமூக நீதி என்பது சமூக சமத்துவம் அல்லது சமூக உரிமைகளுக்கு விகிதாசாரமற்றது.
Correct Answer: D [[A] மற்றும் [R] இரண்டும் தவறானவை.]
Notes:
சமூக நீதி சம வாய்ப்பு, சமத்துவம், சமூக உரிமைகளுடன் நேரடியாகத் தொடர்புடையது. [Group 1/1A 2025]
15.
கூற்று [A], காரணம் [R] வகை வினாவைக் கருதி, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
கூற்று [A] : சமூகநீதி என்பது, நீதிபெறும் ஓர் ஒருங்கிணைந்த பொதுவானதோர் வகைப்பாட்டு வடிவத்தின் அங்கமாகும்
காரணம் [R] : ஏனெனில், நீதி என்பது, பொதுமைப்படுத்தப்பட்ட வகைப்பாட்டியலாகும் (பேரினம் போல)
கூற்று [A] : சமூகநீதி என்பது, நீதிபெறும் ஓர் ஒருங்கிணைந்த பொதுவானதோர் வகைப்பாட்டு வடிவத்தின் அங்கமாகும்
காரணம் [R] : ஏனெனில், நீதி என்பது, பொதுமைப்படுத்தப்பட்ட வகைப்பாட்டியலாகும் (பேரினம் போல)
Correct Answer: A [[A] மற்றும் [R] என்ற இரண்டும் சரி, [R] என்பது [A] க்கு சரியான விளக்கமாகும்]
Notes:
நீதி பேரினம் (Genus); சமூக நீதி அதன் ஒருங்கிணைந்த உட்பிரிவு. [CTS (Interview Posts) 2025]
16.
சமூக நீதி மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பின்வரும் நிகழ்வுகளை கால வரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.
(1) ஐக்கிய நாடுகள், "சமூக நீதி" என்ற வார்த்தையை அதிகாரப்பூர்வமான உரைகளில் பயன்படுத்துகிறது.
(2) சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.) நிறுவப்படுதல்
(3) போப் பதினொன்றாம் பயஸின் "குவாட்ராஜெசிமோ அன்னோ" சுற்றறிக்கை வெளியீடு
(4) சமூக முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பிரகடனம் ஏற்கப்படுதல்.

Correct Answer: A [(2), (3), (1), (4)]
Notes:
ILO 1919, Quadragesimo Anno 1931, சமூக முன்னேற்றப் பிரகடனம் 1969. [CTS (ITI Posts) 2025]
17.
சரியான கூற்றுகளைக் கண்டறிக :
சமூக நீதியானது நீதிமன்றங்கள் மூலம் சட்டத்தின் வழியாக கீழ்க்கண்டவற்றை அடைய வழிவகை செய்கிறது.
(i) பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்கு
(ii) உழைக்கும் மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கு
(iii) சட்டமியற்றும் அதிகாரத்தை பகிர்ந்தும் ஒப்படைக்கவும் செய்தல்.
(iv) சமூகத்தின் நலிந்த பிரிவினரின் நலன்களைப் பாதுகாத்தல்.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iv) மட்டும்]
Notes:
சமூக நீதி: ஏற்றத்தாழ்வு நீக்கம், கண்ணியமான வாழ்க்கைத் தரம், நலிந்தோர் நலன் காப்பு. [CTS (ITI Posts) 2025]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0