வினாடி வினா
← திரும்பச் செல்ல
ஊட்டச்சத்துக் குறைவின் விளைவுகள்: இரத்த சோகை, குறைவான எடை. [Asst. Training Officer (Textile) 2023]
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
2019-ஆம் ஆண்டில் மனித உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழ்நாடு எந்த இடத்தில் உள்ளது?
Correct Answer: A [முதலாம் இடம்]
Notes:
2019-இல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம். [ARGS 2020]
2.
உறுதிப்படக்கூறல் (உ) : ஒரு மாநிலத்தின் சுகாதார நிலை என்பது அதன் பயனுள்ள, திறமையான சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பைச் சார்ந்துள்ளது.
காரணம் (கா) : உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவச் சுற்றுலாவைத் தமிழ்நாடு ஈர்க்கிறது.
காரணம் (கா) : உலகம் முழுவதிலும் இருந்து மருத்துவச் சுற்றுலாவைத் தமிழ்நாடு ஈர்க்கிறது.
Correct Answer: B [(உ), (கா) - இரண்டும் சரி, இத்துடன் (கா) என்பது (உ)-வின் சரியான விளக்கம் அல்ல]
Notes:
சுகாதார நிலை உள்கட்டமைப்பைச் சார்ந்தது; மருத்துவச் சுற்றுலா உண்மை என்றாலும் அது விளக்கம் அல்ல. [PTGS 2021]
3.
கீழ்க்காண்பவற்றைப் பொருத்துக :
சுகாதாரத் திட்டங்கள் – குறிக்கோள்கள்
(a) தமிழ்நாடு சுகாதார அமைப்பு மறுகட்டமைப்புத் திட்டம் – 1. நவீன மற்றும் உயர்தர சுகாதார வசதிகளை ஏழைகளுக்கு அளிக்க
(b) தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் – 2. நகர ஏழைகளின் ஆரோக்கியத்தை உயர்த்த
(c) முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் – 3. சமூக-பொருளாதார அடுக்கில் கீழே உள்ளவர்களின் ஆரோக்கியத்தை உயர்த்த
(d) தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் – 4. SDG-3-ஐ அடைய

Correct Answer: A [(a) 4 (b) 3 (c) 1 (d) 2]
Notes:
TNHSRP–SDG-3; TNHSP–பின்தங்கியோர்; CMCHIS–ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை; TNUHCP–நகர ஏழைகள். [Group 1 2022]
4.
மாவட்ட மனநலத் திட்டத்தின் குறிக்கோள்களாவன :
1. மாவட்ட சுகாதாரப் பாதுகாப்பு விநியோக அமைப்பில் தடுப்பு, நலமேம்பாடு மற்றும் நீண்டகால பராமரிப்பு உள்ளிட்ட மனநலச் சேவைகளை வழங்குதல்
2. மனநலப் பாதுகாப்புக்கான உள்கட்டமைப்பு, உபகரணங்கள் மற்றும் மனித வளம் ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனத் திறனை அதிகரித்தல்
3. வீடுதோறும் மனநலச் சேவைகளை எளிதாக்குதல்
4. மனநலச் சேவைகளை வழங்குவதில் சமூக விழிப்புணர்வையும் பங்கேற்பையும் ஊக்குவித்தல்

Correct Answer: C [1, 2, 4 மட்டும்]
Notes:
மாவட்ட மனநலத் திட்ட நோக்கங்கள்: மாவட்ட அளவிலான சேவை, நிறுவனத் திறன், சமூக விழிப்புணர்வு. [Group 1 2022]
5.
இந்தியாவில் _____ மாநிலம் முதலில் மகளிர் உயிர்த் தொழில்நுட்பப் பூங்காவைத் தொடங்கியது.
Correct Answer: A [தமிழ்நாடு]
Notes:
இந்தியாவின் முதல் மகளிர் உயிர்த் தொழில்நுட்பப் பூங்கா தமிழ்நாட்டின் சிறுசேரியில் அமைந்தது. [Jailor 2022]
6.
வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைக் கொள்கைக் குறிப்பு 2021-2022-இன்படி, தாய்–சேய் நலம், சுகாதார முயற்சிகள் மற்றும் சேவைகள், பிற தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் ஆகியவற்றின் மீதான கவனத்தை இழக்காமல், கோவிட்-19 சவால்களை மாநில அரசு திறம்பட எதிர்கொண்டது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவர்–நோயாளி விகிதம் மிக அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவர்–நோயாளி விகிதம் மிக அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
Correct Answer: D [(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-க்கு சரியான விளக்கம் அல்ல]
Notes:
கோவிட் காலத்திலும் தாய்–சேய் நலச் சேவை தொடர்ந்தது; மருத்துவர் விகிதம் உண்மை ஆனால் விளக்கம் அல்ல. [Group 4 2022]
7.
கருத்து [A] : இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது.
காரணம் [R] : மருத்துவ வசதிகள் அதிகரித்தல், சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தைக் குறைக்கின்றன.
காரணம் [R] : மருத்துவ வசதிகள் அதிகரித்தல், சிறந்த கவனிப்பு ஆகியவை இறப்பு விகிதத்தைக் குறைக்கின்றன.
Correct Answer: C [[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் ஆகும்]
Notes:
மருத்துவ வசதி, பராமரிப்பு மேம்பாட்டால் இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது. [Executive Officer Gr. III (HR&CE) 2022]
8.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
அமைப்புகளின் பெயர்கள் – அமைவிடம்
(a) அரசு மருத்துவக் கல்லூரி – 1. தென் சென்னை
(b) புற்றுநோய்க்கான சிறப்பு மையம், அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை – 2. கே.கே. நகர், சென்னை
(c) மறுவாழ்வு மருத்துவ நிறுவனத்தில் உள்ள சிறப்பு மையம் – 3. காஞ்சிபுரம்
(d) பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை – 4. திருவள்ளூர்

Correct Answer: C [(a) 4 (b) 3 (c) 2 (d) 1]
Notes:
திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி; காஞ்சிபுரம் புற்றுநோய் மையம்; கே.கே. நகர் மறுவாழ்வு மையம்; தென் சென்னை பல்நோக்கு மருத்துவமனை. [SD 2022]
9.
நிதி ஆயோக் 2018 – அறிக்கையின்படி தமிழ்நாடு பின்வரும் எதில் மூன்றாம் இடத்தில் உள்ளது?
Correct Answer: B [ஆரோக்கியக் குறியீடு]
Notes:
நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2018-இல் தமிழ்நாடு மூன்றாம் இடம் (கேரளா முதல், பஞ்சாப் இரண்டாம்). [SD 2022]
10.
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
திட்டங்கள் – ஆண்டு
(a) தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் – 1. 1992
(b) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் – 2. 2019
(c) தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் – 3. 1939
(d) தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் – 4. 2005
திட்டங்கள் – ஆண்டு
(a) தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் – 1. 1992
(b) தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் – 2. 2019
(c) தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் – 3. 1939
(d) தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் – 4. 2005
Correct Answer: D [(a) 4 (b) 1 (c) 2 (d) 3]
Notes:
NRHM 2005; NACP 1992; NMC சட்டம் 2019; தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் 1939. [Veterinary Assistant 2023]
11.
தமிழ்நாட்டின் DANIDA – TNAHCP முயற்சி பின்வரும் எந்தத் துறையுடன் தொடர்புடையது?
Correct Answer: A [ஆரோக்கியம்]
Notes:
DANIDA–TNAHCP என்பது டென்மார்க் உதவியுடனான தமிழ்நாடு சுகாதாரத் திட்டம். [Fisheries Inspector / SI 2023]
12.
தமிழ்நாடு சுகாதார அமைப்புச் சீரமைப்புத் திட்டத்திற்கு நிதியுதவி எதன் மூலம் கிடைக்கிறது?
Correct Answer: A [உலக வங்கி]
Notes:
தமிழ்நாடு சுகாதார அமைப்புச் சீரமைப்புத் திட்டம் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுகிறது. [CSSS 2023]
13.
மக்களைத் தேடி மருத்துவம் முதலில் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டது?
Correct Answer: C [கிருஷ்ணகிரி]
Notes:
மக்களைத் தேடி மருத்துவம் 2021 ஆகஸ்ட் 5 கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் தொடங்கியது. [Group 3A 2023]
14.
நிதி ஆயோக் (2018) அறிக்கையின்படி சுகாதாரக் குறியீட்டில் தமிழ்நாடு _____ இடத்தை வகிக்கிறது.
Correct Answer: D [3-வது]
Notes:
நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2018-இல் தமிழ்நாடு 3-வது இடம். [Group 3A 2023, Group 1B/1C 2024]
15.
NITI ஆயோக் சுகாதாரக் குறியீடு 2021-இன்படி அனைத்து இந்திய மாநிலங்களில் தமிழகம் _____ இடத்தில் உள்ளது.
Correct Answer: C [இரண்டாம்]
Notes:
நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2021 (2019-20 தரவு): கேரளா முதல், தமிழ்நாடு இரண்டாம் இடம். [Asst. Conservator of Forests 2023]
16.
2018-இல் தமிழகத்தின் குழந்தை இறப்பு விகிதம் (1000 உயிருடன் பிறப்புகளுக்கு) _____.
Correct Answer: A [15]
Notes:
SRS 2018: தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் 1000 பிறப்புக்கு 15 (இந்தியா 32). [Asst. Conservator of Forests 2023]
17.
தமிழ்நாட்டின் மூன்றடுக்கு உடல்நல அடிப்படைக் கட்டமைப்பில் அடங்கியுள்ளவை _____.
Correct Answer: A [மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்கள்]
Notes:
மூன்றடுக்கு சுகாதார அமைப்பு: மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சுகாதார நிலையங்கள். [Asst. Conservator of Forests 2023]
18.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct Answer: D [11 ஜனவரி 2012]
Notes:
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2012 ஜனவரி 11 அன்று தொடங்கப்பட்டது. [Combined Engineering Subordinate Service 2023]
19.
கீழ்க்காண்பவற்றுள் எது / எவை உண்மையானவை?
(i) 2005 இல் உலக வங்கி தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது
(ii) இத்திட்டத்தின் மொத்தச் செலவுத் தொகை ரூ.597.15 கோடி
(iii) உலக வங்கியின் ஈடுபாடு அதிகளவு பயனுள்ளதாக உள்ளது
(i) 2005 இல் உலக வங்கி தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது
(ii) இத்திட்டத்தின் மொத்தச் செலவுத் தொகை ரூ.597.15 கோடி
(iii) உலக வங்கியின் ஈடுபாடு அதிகளவு பயனுள்ளதாக உள்ளது
Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii) அனைத்தும்]
Notes:
TNHSP-க்கு உலக வங்கி 2005-இல் ஒப்புதல்; செலவு ₹597.15 கோடி; திட்டம் பயனளித்தது. [Junior Scientific Officer 2023]
20.
ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் குறைவினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
1. இரத்த சோகை
2. குறைவான எடை
3. போதுமான நுண்ணூட்டச்சத்து
1. இரத்த சோகை
2. குறைவான எடை
3. போதுமான நுண்ணூட்டச்சத்து
Correct Answer: C [1 மற்றும் 2 மட்டும்]
Notes:
ஊட்டச்சத்துக் குறைவின் விளைவுகள்: இரத்த சோகை, குறைவான எடை. [Asst. Training Officer (Textile) 2023]
? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq
மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள்
› TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69)
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0