வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஆங்கில மொழியியல் ஆய்வகங்கள் 6029 _____ களில் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

Correct Answer: C [உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி]

Notes:

6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டன. [Combined Engineering Subordinate Service 2023]

2.  
சரியான பதில்களைத் தேர்ந்தெடுக்கவும்.
பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி கீழ்க்கண்டவாறு நான்கு காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
1. ஆட்சியின் ஆரம்ப காலத்திலிருந்து 1813 வரை
2. 1813 முதல் 1853 வரை
3. 1854 முதல் 1920 வரை
4. 1921 முதல் 1947 வரை

Correct Answer: D [1, 2, 3 மற்றும் 4]

Notes:

ஆங்கிலேயர் காலக் கல்வி: 1813 வரை, 1813–53, 1854–1920, 1921–47 என நான்கு காலம். [Combined Engineering Subordinate Service 2023]

3.  
பின்வருவனவற்றுள் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் உயர் கல்விக்கான திட்டம் எது அல்ல?

Correct Answer: C [முது முனைவர் உதவித்தொகை]

Notes:

முது முனைவர் உதவித்தொகை ஆதிதிராவிடர் நலத்துறையின் உயர்கல்வித் திட்டம் அல்ல. [Combined Research Assistant 2023]

4.  
கல்வியில் சீர்திருத்தங்களுக்கான பின்வரும் நோக்கங்களைக் கோத்தாரி ஆணையம் (1964-66) பதிவு செய்தது.
(i) வேலைவாய்ப்பிற்கான கல்வி
(ii) சமூக மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை அடைதல்
(iii) நவீனமயமாக்கல் செயல்முறைகளைத் துரிதப்படுத்துதல்
(iv) சமூக, தார்மீக மற்றும் ஆன்மிக மதிப்பீடுகளை வளர்ப்பது
மேற்கண்டவற்றில் எவை சரியானவை?

Correct Answer: B [(ii), (iii), (iv)]

Notes:

கோத்தாரி ஆணையம்: தேசிய ஒருமைப்பாடு, நவீனமயமாக்கல், அற விழுமியங்கள் வளர்ப்பு. [Mass Interviewer 2023]

5.  
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

Correct Answer: B [தமிழ்நாடு]

Notes:

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில், சென்னையில் உள்ளது. [Asst. Training Officer (Textile) 2023]

6.  
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் நோக்கம்:

Correct Answer: A [பொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைப்பது]

Notes:

சமக்ர சிக்ஷா பொதுக் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைக்க நோக்குகிறது. [Group 4 2024]

7.  
கூற்று [A] : 2023ஆம் ஆண்டு திறனறித் தேர்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.
காரணம் [R] : அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி பயில ஊக்குவிக்க உருவாக்கப்பட்டது.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]-க்கு சரியான விளக்கம்]

Notes:

அரசுப் பள்ளி மாணவர்களை முதன்மை நிறுவனங்களில் பயில ஊக்குவிக்க 2023-இல் திறனறித் தேர்வுத் திட்டம். [Group 4 2024]

8.  
பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
(1) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(2) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(3) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
(4) பெரியார் பல்கலைக்கழகம்

Correct Answer: B [(2), (1), (4), (3)]

Notes:

பாரதிதாசன் 1982, மனோன்மணியம் சுந்தரனார் 1990, பெரியார் 1997, திருவள்ளுவர் 2002. [Group 2/2A 2024]

9.  
கீழ்க்கண்டவற்றில் 1968 ஜனவரி 23ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எது?

Correct Answer: C [இருமொழிக் கொள்கை]

Notes:

23.01.1968 சட்டப்பேரவைத் தீர்மானம் தமிழ், ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை ஏற்றது. [CTS (Non-Interview Posts) 2024]

10.  
நம்மாழ்வார் அவர்களின் இயற்கை விவசாயம் குறித்த ஆய்வு மையம் அமைந்திருக்கும் இடம்:
I. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
II. வாசனைப் பொருட்கள் மற்றும் சிறுதானியங்களுக்கான நிறுவனம்
III. பூச்சிக்கொல்லி மருந்துக்கான ஆய்வு மையம்
IV. இயற்கை மண்ணுக்கான ஆய்வு படிப்பகம்

Correct Answer: C [I மட்டும்]

Notes:

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் TNAU (கோயம்புத்தூர்) வளாகத்தில் உள்ளது. [Group 1B/1C 2024]

11.  
புகழ்பெற்ற வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரில் எந்த வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பெயரிடப்பட்டது?

Correct Answer: A [தஞ்சாவூர்]

Notes:

தஞ்சாவூர் (ஈச்சங்கோட்டை) வேளாண்மைக் கல்லூரிக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப்பட்டது. [Asst. Public Prosecutor Gr. II 2025]

12.  
பின்வருவனவற்றில் எண்ணும் எழுத்தும் பணியின் நோக்கங்கள் யாவை?
(i) 2025-க்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உறுதி செய்தல்
(ii) 8 வயதிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் புரிந்து கொண்டு படிக்க முடியும்
(iii) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தகுதியானவர்கள்

Correct Answer: D [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

'எண்ணும் எழுத்தும்': 2025-க்குள் 8 வயதுக் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு. [Special Competitive Exam 2025]

13.  
கூற்று [A] : கோவிட்-19 பெருந்தொற்றால் பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கற்றல் இடைவெளிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாட்டில் "இல்லம் தேடிக் கல்வி" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காரணம் [R] : இந்தத் திட்டத்தில், தன்னார்வலர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாற்றுவழிகள் கொண்ட கல்வியை வழங்குகிறார்கள்.

Correct Answer: A [[A] மற்றும் [R] இரண்டும் உண்மை, மற்றும் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம்]

Notes:

இல்லம் தேடிக் கல்வி (2021): கோவிட் கற்றல் இழப்பைக் குறைக்க தன்னார்வலர்கள் வீட்டருகே பாடம் நடத்துகின்றனர். [Group 4 2025]

14.  
2024 ஆம் ஆண்டிற்கான N.I.R.F. ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை கல்வி நிறுவனங்கள் முதல் 100 தரவரிசையில் இடம் பெற்றுள்ளன?

Correct Answer: A [18]

Notes:

NIRF 2024 ஒட்டுமொத்த முதல் 100-இல் தமிழ்நாட்டின் 18 நிறுவனங்கள்; சென்னை IIT முதலிடம். [Asst. Public Prosecutor Gr. II 2026]

15.  
"தமிழ்நாடு தொலைநோக்கு 2023" இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள கல்வி சார்ந்த இலக்குகளை அடைவதற்கு செயல்படுத்தப்பட்ட திட்டம் எது?

Correct Answer: A [கிராமங்களில் நூலகங்களைத் திறத்தல்]

Notes:

தொலைநோக்கு 2023 கல்வி இலக்குகளுக்காக கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன. [CTS (Interview Posts) 2026]

16.  
கூற்று [A] : நகர்ப்புற-கிராமப்புற கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வு, சமூக சமத்துவமின்மையை மோசமாக்குவதில் நீண்ட கால மற்றும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
காரணம் [R] : போதுமான கல்வி வளங்கள் இல்லாததால் கிராமப்புற மாணவர்கள் தங்கள் நகர்ப்புற சகாக்களுடன் போட்டியிடுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றனர்.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]-வின் சரியான விளக்கம்]

Notes:

கல்வி வளக் குறைவால் கிராம மாணவர்கள் பின்தங்குவதே நகர்–கிராம இடைவெளி சமூக ஏற்றத்தாழ்வுக்குக் காரணம். [CTS (Interview Posts) 2026]

17.  
2021-2022 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் உயர்கல்வி மொத்தச் சேர்க்கை விகிதம் _____ ஆக இருந்தது.

Correct Answer: C [47 சதவிகிதம்]

Notes:

AISHE 2021-22: தமிழ்நாட்டின் உயர்கல்வி GER 47%; இந்திய சராசரி 28.4%. [Group 2A Mains 2025]

18.  
iTNT ஹப் _____-இல் அமைந்துள்ளது.

Correct Answer: A [அண்ணா பல்கலைக்கழகம்]

Notes:

iTNT ஹப் (தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது. [Group 2A Mains 2025]

19.  
மாநில அரசின் எந்தத் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றம் பெற்றுள்ளது?

Correct Answer: B [மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம்]

Notes:

மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம் 2022-இல் உயர்கல்வி உறுதித் திட்டமாக (புதுமைப் பெண்) மாறியது. [Group 2A Mains Re-Exam 2026]

20.  
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மன்றம் – 1. 1983
(b) தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் – 2. 2010
(c) தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மன்றம் – 3. 1992
(d) தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் – 4. 1984

Correct Answer: A [(a) 4 (b) 3 (c) 2 (d) 1]

Notes:

அறிவியல் தொழில்நுட்ப மையம் 1983, TNSCST 1984, TANSCHE 1992-இல் அமைக்கப்பட்டன. [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0