வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
1820களில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குப் பொதுவாகத் தடை செய்யப்பட்டவை
(a) குடைப் பயன்பாடு
(b) காலணி அணிவது
(c) தங்க நகை அணிவது
(d) தலைப்பாகை அணிவது

Correct Answer: A [(a), (b), (c)]

Notes:

1820களில் கீழ்நிலைச் சாதியினர் குடை, காலணி, தங்க அணிகலன் பயன்படுத்தத் தடை இருந்தது. [Group 1 2021]

2.  
கீழ்க்காணும் எந்த நிகழ்வு, வகுப்புவாரி இடஒதுக்கீடு வேண்டி தந்தை பெரியாரைக் கிளர்ச்சி செய்யத் தூண்டியது?

Correct Answer: D [தொழிற்சார் கல்வியில் வகுப்புவாரியான இடப்பங்கீடு செல்லாது என உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அறிவித்தது]

Notes:

செண்பகம் துரைராஜன் தீர்ப்பு (1951) வகுப்புவாரி இடஒதுக்கீட்டைச் செல்லாததாக்கியதே பெரியார் போராட்டத்துக்குக் காரணம். [Group 1 2021]

3.  
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளில் சேர _____ இட ஒதுக்கீடு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

Correct Answer: C [7.5%]

Notes:

அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழில்படிப்புச் சேர்க்கையில் 7.5% கிடைமட்ட இடஒதுக்கீடு. [Jailor 2022]

4.  
சாதியக் கட்டமைப்பின் கூறுகளில் இல்லாதது எது?

Correct Answer: C [பிற அடுக்குகளுடன் தடையற்ற நகர்வை அனுமதிக்கிறது]

Notes:

சாதி அமைப்பு மூடிய அமைப்பு; அடுக்குகளுக்கு இடையே சுதந்திர நகர்வை அனுமதிக்காது. [Bursar 2023]

5.  
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு சதவீதம் _____ ஆகும்.

Correct Answer: D [3.5]

Notes:

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு (2007). [District Educational Officer 2023]

6.  
கீழ்க்கண்ட தீர்ப்பினை உரிய வழக்குடன் பொருத்துக:
“சாதி முழுவதுமாகச் சமூக மற்றும் கல்வி நிலைகளில் பிற்பட்டிருந்தால், அரசியலமைப்புச் சட்டத்தின் 15(4) பிரிவின் பொருள் வரம்பிற்குட்பட்டு அச்சாதி கல்வி மற்றும் சமூக நிலையில் பிற்பட்டுள்ளதெனக் கருதி அதற்கு இட ஒதுக்கீடு செய்யலாம்.”

Correct Answer: C [P. இராஜேந்திரன் Vs தமிழ்நாடு அரசு]

Notes:

பி. இராஜேந்திரன் வழக்கு (1968): பின்தங்கிய சாதி முழுவதையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாகக் கருதலாம். [Asst. Conservator of Forests 2023]

7.  
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசியல் சட்டப்பிரிவு _____இன் கீழ் நிரந்தர அமைப்பாக்கப்பட்டது.

Correct Answer: B [16 (4)]

Notes:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சரத்து 16(4)இன் கீழ் நிரந்தர அமைப்பாக உருவானது. [AJ 2023]

8.  
கூற்று [A] : குறைந்தபட்சக் கல்வித் தகுதியுடைய பிராமணர் அல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் மற்றும் அனைத்து அரசுப் பணிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்
காரணம் [R] : வகுப்புவாத பிரதிநிதித்துவ ஆணை 1921இல் நிறைவேற்றப்பட்டது.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டும் சரி; மேலும் [R] என்பது [A]-விற்குச் சரியான விளக்கம்]

Notes:

நீதிக்கட்சி அரசின் 1921 வகுப்புவாரி அரசாணை பிராமணரல்லாதோருக்கு அரசுப் பணி வாய்ப்பளித்தது. [Geology Service 2023]

9.  
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குப் பின்வருவனவற்றுள் எது காரணம் அல்ல?

Correct Answer: C [சுதந்திரத்திற்கான உரிமை]

Notes:

SC/ST இடஒதுக்கீடு சமத்துவம், மாண்பு, வாழ்வாதார உரிமைகளை அடிப்படையாகக் கொண்டது. [Geology Service 2023]

10.  
இந்திய அரசு 1979ஆம் ஆண்டு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமித்தது. அதன் தலைவர்

Correct Answer: B [பி.பி. மண்டல்]

Notes:

இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பி.பி. மண்டல் (1979). [Group 1B/1C 2024]

11.  
மண்டல் கமிஷன் பற்றிய பின்வரும் கூற்றுகளில் உண்மையானவை எவை?
(i) மண்டல் கமிஷன் அல்லது மூன்றாவது சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினர் கமிஷன் 1979இல் நிறுவப்பட்டது
(ii) நாட்டின் மக்கள்தொகையில் 72% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை உள்ளடக்கியதாக ஆணையம் தெரிவித்துள்ளது
(iii) இந்த ஆணையம் இந்துக்கள் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் அடையாளம் கண்டுள்ளது.

Correct Answer: D [(iii) மட்டும்]

Notes:

மண்டல் ஆணையம் இந்துக்கள் அல்லாதோரிடையேயும் பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டது; OBC சுமார் 52%. [Group 1B/1C 2024]

12.  
_____ என்பது பள்ளி, பல்கலைக்கழகம் மற்றும் அரசு வேலைகளில் பாகுபாட்டுக்கு உள்ளான, பின்தங்கிய வகுப்பினருக்குக் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒதுக்குவதற்கான ஒரு செயல்.

Correct Answer: C [இட ஒதுக்கீடு]

Notes:

பின்தங்கியோருக்குக் கல்வி, பணிகளில் இடங்களை ஒதுக்குவதே இடஒதுக்கீடு. [Asst. Public Prosecutor Gr. II 2025]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0