வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’ தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
(1) இந்தத் திட்டம் தமிழ்நாட்டால் தொடங்கப்பட்டது.
(2) மாநிலத்திலுள்ள அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் இது செயல்படுத்தப்படும்.
(3) இந்தத் திட்டம் இந்தியாவில் ஒரு முன்னோடித் திட்டம்; மற்றவர்கள் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாகும்.
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டைப் பயன்படுத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

Correct Answer: C [(1) மற்றும் (3) மட்டும்]

Notes:

காலை உணவுத் திட்டம் 2022இல் தமிழ்நாடு தொடங்கிய இந்தியாவின் முன்னோடித் திட்டம். [Group 2A Mains 2025]

2.  
2022-23 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் திட்டங்களின் அம்சங்களில் பின்வருவனவற்றில் எவை உண்மை?
(1) முதலமைச்சரின் தரிசு நில மேம்பாட்டு இயக்கம் நீர்ப்பாசனம் சார்ந்த பயிர்களை இலக்காகக் கொண்டது
(2) ஒருங்கிணைந்த பண்ணை முறை பயிர் சாகுபடியுடன் கால்நடை வளர்ப்பையும் ஊக்குவிக்கிறது
(3) நெல் ஜெயராமன் இயக்கம் மூலமாக பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்தல்

Correct Answer: C [(2) மற்றும் (3) மட்டும்]

Notes:

ஒருங்கிணைந்த பண்ணையம் கால்நடையுடன் பயிர்ச் சாகுபடி; நெல் ஜெயராமன் இயக்கம் பாரம்பரிய நெல் பாதுகாப்பு. [Group 2A Mains 2025]

3.  
தமிழ்நாட்டில் முதல்வர் டாஷ்போர்டின் முதன்மைப் பங்கு என்ன?
(i) சுற்றுலாத் துறையின் புள்ளி விவரங்களைத் தருவது
(ii) அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது
(iii) சுகாதாரச் சேவைகளை நிர்வகிப்பது

Correct Answer: B [(ii) மட்டும்]

Notes:

CM Dashboard அரசுத் துறைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் தளம். [Group 2A Mains 2025]

4.  
அத்திக்கடவு–அவிநாசி திட்டம் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுகளுள் எவை சரியானவை?
(i) கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இத்திட்டத்தால் பலனடைகின்றன.
(ii) ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் அணையிலிருந்து 1.5 டி.எம்.சி உபரி நீரை இத்திட்டத்திற்காக எடுக்க உத்தேசிக்கப்பட்டது.
(iii) இத்திட்டம் ₹2,456.41 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு, மேற்குறிப்பிட்ட மாவட்டங்களின் 28,464 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன நீர் வழங்குகிறது.

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

அத்திக்கடவு–அவிநாசி: கோவை, திருப்பூர், ஈரோடு; காளிங்கராயன் பகுதியிலிருந்து 1.5 TMC உபரிநீர். [Group 2A Mains 2025]

5.  
தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டுள்ள ‘நீங்கள் நலமா’ என்னும் திட்டமானது

Correct Answer: D [இவை அனைத்தும்]

Notes:

நீங்கள் நலமா (2024) பயனாளிகளின் கருத்தறிந்து திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யும் மின்னாளுகைத் திட்டம். [Group 2A Mains 2025]

6.  
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) நமக்கு நாமே திட்டம் – பயணிகள் நிழற்குடைகள்
(2) தோழி – மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,000
(3) நம்ம ஊரு சூப்பர் – அங்கன்வாடி மையங்கள்
(4) புதுமைப் பெண் திட்டம் – பெண்களுக்கான விடுதித் திட்டம்

Correct Answer: B [(2) மற்றும் (4)]

Notes:

தோழி – பணிபுரியும் மகளிர் விடுதி; புதுமைப் பெண் – மாணவியருக்கு மாதம் ₹1,000. [Group 2A Mains Re-Exam 2026]

7.  
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தொடர்பான சரியான கூற்றுகளைக் கண்டறிக.
(i) இத்திட்டத்தில் பலனடைவதற்கு வருவாய் வரம்பு மற்றும் கல்வித் தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.
(ii) பட்டம்/பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படுவதுடன் அதில் ரூபாய் 30,000 வங்கிக் கணக்கிலும் ரூபாய் 20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும் வழங்கப்படுகிறது.
(iii) இவ்வாறு பட்டம்/பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு 8 கிராம் 22 காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது.

Correct Answer: D [(ii) மற்றும் (iii) மட்டும்]

Notes:

தர்மாம்பாள் விதவை மறுமணத் திட்டம்: பட்டதாரிகளுக்கு ₹50,000 + 8 கிராம் தங்கம்; வருமான வரம்பு இல்லை. [Group 2A Mains Re-Exam 2026]

8.  
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கவனித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) கஸ்தூரிபா காந்தி பெண் குழந்தைகள் கல்வி நிலையங்கள் சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளன.
(ii) “எமிஸ்” (EMIS) என்பது தமிழக அரசு ஊழியர்களின் குறைதீர்க்கும் இணையதளமாகும்.
(iii) முதலமைச்சரின் “ஊட்டச்சத்து மிக்க காய்கறித் தோட்டத் திட்டம்” “இல்லத்தரசிகளை” நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
(iv) ஊட்டச்சத்து மிக்க காய்கறித் தோட்டத் திட்டம் நகர்ப்புறப் பகுதிகளுக்கானது மட்டுமாகும்.

Correct Answer: C [(iii) மற்றும் (iv) மட்டும் சரி]

Notes:

ஊட்டச்சத்து மிக்க காய்கறித் தோட்டத் திட்டம் நகர்ப்புற இல்லத்தரசிகளுக்கானது; EMIS கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு. [Group 2A Mains Re-Exam 2026]

9.  
வெற்றி நிச்சயம் திட்டம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?
(i) வேலையற்ற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
(ii) இத்திட்டம் 18-35 வயதுடைய அனைத்து மாணவர்களையும் இலக்காகக் கொண்டுள்ளது.
(iii) இத்திட்டத்தில் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களும் பயனடைவார்கள்.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii) அனைத்தும்]

Notes:

வெற்றி நிச்சயம்: 18–35 வயது வேலையில்லா இளைஞர், இடைநின்றவர் உட்படத் திறன் பயிற்சி. [Group 2A Mains Re-Exam 2026]

10.  
தமிழ்நாட்டின் எத்தனை கடலோர மாவட்டங்கள் TN-SHORE (நெய்தல் மீட்சி இயக்கம்) திட்டத்தில் ஈடுபட்டுள்ளன?

Correct Answer: A [14]

Notes:

TN-SHORE (நெய்தல் மீட்சி இயக்கம்) 14 கடலோர மாவட்டங்களில் செயல்படுகிறது. [Group 2A Mains Re-Exam 2026]

11.  
பின்வரும் திட்டங்களில் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(i) கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – 2023
(ii) முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் – 2025
(iii) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – 2021

Correct Answer: D [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

மகளிர் உரிமைத் தொகை 2023; தாயுமானவர் 2025; காலை உணவுத் திட்டம் 2022. [Group 2A Mains Re-Exam 2026]

12.  
தமிழக அரசின் தொட்டில் குழந்தைத் திட்டத்தின் நோக்கம்

Correct Answer: B [பெண் சிசுக்கொலை என்ற தீமையை ஒழிக்க]

Notes:

தொட்டில் குழந்தைத் திட்டம் (1992, சேலம்) பெண் சிசுக்கொலையை ஒழிக்கும் நோக்கமுடையது. [Group 2A Mains Re-Exam 2026]

13.  
தமிழ்நாடு அரசின் ‘மக்களுடன் முதல்வர்’ எனும் திட்டம் _____ உறுதி செய்கிறது.

Correct Answer: D [மக்களின் குறை தீர்ப்பை]

Notes:

மக்களுடன் முதல்வர் (2023) பொதுமக்கள் குறைகளை விரைந்து தீர்க்கும் திட்டம். [Group 2A Mains Re-Exam 2026]

14.  
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்:
கூற்று [A] : அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காரணம் [R] : இது நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்குத் தங்குமிடங்களை உருவாக்கி வசதிகளை மேம்படுத்தக் கூடிய திட்டமாகும்.

Correct Answer: A [கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு]

Notes:

அயோத்திதாசப் பண்டிதர் திட்டம் ஆதிதிராவிடர் குடியிருப்புகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துகிறது. [Group 2A Mains Re-Exam 2026]

15.  
கலைஞர் கைவினைத் திட்டத்தின் நோக்கங்கள் எவை?
(i) மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைக் கலைஞர்களுக்கும் நிதி உதவி வழங்குதல்
(ii) புதிய தொழில்துறை அலகுகளைத் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழில் அலகுகளை விரிவுபடுத்துவதற்கும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல்
(iii) 50% மானியம் அதிகபட்சம் ரூ. 50,000 வரை வழங்குதல்

Correct Answer: C [(i) மற்றும் (ii) மட்டும்]

Notes:

கலைஞர் கைவினைத் திட்டம்: நிதி உதவி, திறன் பயிற்சி; மானியம் 25% (அதிகபட்சம் ₹50,000). [Group 2A Mains Re-Exam 2026]

16.  
“இல்லம் தேடிக் கல்வி” பற்றிய சரியான கூற்றுகளைக் கண்டறிக.
(i) இல்லம் தேடிக் கல்வி 2022இல் தமிழக அரசால் நீட்டிக்கப்பட்டது
(ii) வீடுகளுக்கே சென்று கல்வி வழங்குதல்
(iii) இல்லம் தேடிக் கல்வி ஒரு வருடத்திற்கு மட்டும் வழங்கப்பட்டது

Correct Answer: B [(i) மற்றும் (ii)]

Notes:

இல்லம் தேடிக் கல்வி (2021) வீட்டருகே கல்வி வழங்கும் திட்டம்; 2022இல் நீட்டிக்கப்பட்டது. [Group 2A Mains (Revoked) 2026]

17.  
கீழ்க்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
(i) “மக்களுடன் முதல்வர்” திட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
(ii) இத்திட்டம் “திராவிட மாதிரி நிர்வாகத்தின்” திட்டங்களில் ஒன்றாகும்.
(iii) இத்திட்டம் பெண்கள் முன்னேற்றத்திற்கானதாகும்.
(iv) இத்திட்டம் பொதுமக்களின் மனுக்கள் மீதான விரைவான நடவடிக்கைக்கானதாகும்.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iv) மட்டும் சரி]

Notes:

மக்களுடன் முதல்வர் கோவையில் தொடங்கப்பட்ட, மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணும் திட்டம். [Group 2A Mains (Revoked) 2026]

18.  
கூற்று [A] : மாநில அரசு “அரண் இல்லம்” என்ற பெயரில் திருநங்கையர்களுக்கான பாதுகாப்பான இல்லத்தை வழங்கும் தனித்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
காரணம் [R] : தமிழகத்தில் திருநங்கையர்கள் பாதுகாப்பு, அவர்களது மனநலம் மற்றும் வேலை வாய்ப்பு சவால்களைச் சரிசெய்து சமாளிக்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கின்றது.

Correct Answer: A [[A] மற்றும் [R] இரண்டும் உண்மை; மேலும் [R], [A]-வைச் சரியாக விளக்குகிறது]

Notes:

அரண் இல்லம் திருநங்கையருக்குப் பாதுகாப்பான தங்குமிடம், ஆலோசனை, தொழில் பயிற்சி வழங்குகிறது. [Group 2A Mains (Revoked) 2026]

19.  
பின்வருவனவற்றைப் பொருத்துக.
(a) கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – 1. செப்டம்பர் 5, 2022
(b) மகளிர் விடியல் பயணத் திட்டம் – 2. செப்டம்பர் 15, 2022
(c) முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – 3. மே, 2021
(d) புதுமைப் பெண் திட்டம் – 4. செப்டம்பர் 15, 2023

Correct Answer: C [4 3 2 1]

Notes:

மகளிர் உரிமைத் தொகை 15.9.2023; விடியல் பயணம் மே 2021; காலை உணவு 15.9.2022; புதுமைப் பெண் 5.9.2022. [Group 2A Mains (Revoked) 2026]

20.  
கூற்று [A] : தாயுமானவர் திட்டம் என்பது மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் நலனுக்காகக் குடும்ப அட்டை உணவுப் பொருள்களை வீட்டிற்கு நேரடியாக வழங்குவது ஆகும்.
காரணம் [R] : ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையில் வழங்கல் நடைபெறும்.

Correct Answer: C [[A] சரியான கூற்று; [R] தவறான விளக்கம்]

Notes:

தாயுமானவர் திட்டம் (2025): மூத்தோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் இரண்டாம் சனி, ஞாயிறு வீட்டிலேயே ரேஷன். [Group 2A Mains (Revoked) 2026]

21.  
திட்டங்களின் பலன்கள், அவை எந்த மக்களுக்காக வடிவமைக்கப்பட்டனவோ அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கம் கொண்ட திட்டம் எது?

Correct Answer: C [நீங்கள் நலமா]

Notes:

நீங்கள் நலமா திட்டம் பலன்கள் உரிய பயனாளிகளைச் சென்றடைவதை உறுதி செய்கிறது. [Group 2A Mains (Revoked) 2026]

22.  
‘வெற்றி நிச்சயம்’ போன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் வழங்குவது

Correct Answer: B [வேலையில்லாத இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளைப் பெறுதல்]

Notes:

வெற்றி நிச்சயம் வேலையில்லா இளைஞர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு தருகிறது. [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0