வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத்திட்டத்தின்கீழ் 2018 முதல் உயர்த்தப்பட்டுள்ள உதவித் தொகை ரூபாய் _____.

Correct Answer: A [18,000/-]

Notes:

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி 2018 முதல் ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. [Group 1/1A 2025]

2.  
பின்வருவனவற்றைச் சரியாகப் பொருத்துக :
திட்டம் – பயனாளிகள்
(a) கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – 1. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்
(b) தமிழ்ப் புதல்வன் – 2. அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு வரை படித்த கல்லூரி மாணவிகள்
(c) விடியல் பயணம் – 3. பெண் குடும்பத் தலைவி
(d) புதுமைப் பெண் திட்டம் – 4. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்
(a) (b) (c) (d)

Correct Answer: A [3 4 1 2]

Notes:

மகளிர் உரிமை–குடும்பத் தலைவி, புதல்வன்–மாணவர், விடியல்–இலவசப் பயணம், புதுமைப் பெண்–மாணவி. [Group 1/1A 2025]

3.  
தமிழக முதலமைச்சரின் சூரிய ஒளியில் இயங்கும் பசுமை வீடுகள் திட்டம் யாருடைய நலனுக்காகத் தொடங்கப்பட்டது?

Correct Answer: A [கிராமப்புற ஏழை மக்களுக்காக]

Notes:

சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டம் கிராமப்புற ஏழை மக்களுக்காக 2011-12-ல் தொடங்கப்பட்டது. [Group 1/1A 2025]

4.  
கீழ்க்காண்பவற்றைச் சரியாகப் பொருத்துக.
(a) சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு நிதியுதவி – 1. 18 முதல் 21 வயது வரையிலானவர்கள்
(b) ஆதரவற்ற மற்றும் அனாதைச் சிறுமிகளைப் பராமரித்தல் – 2. ஆதரவற்ற, அனாதை மற்றும் தனித்த குழந்தைகளுக்குப் பராமரிப்பு வழங்குதல்
(c) வளர்ப்புப் பராமரிப்புச் சேவைகள் திட்டம் – 3. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்
(d) சிறுவர்களுக்கான மாநிலப் பின்பராமரிப்பு இல்லம் – 4. 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகள்
(a) (b) (c) (d)

Correct Answer: C [3 4 2 1]

Notes:

பின்பராமரிப்பு இல்லம் 18–21 வயதினருக்கு; வளர்ப்புப் பராமரிப்பு ஆதரவற்ற குழந்தைகளுக்கு. [Group 4 2025]

5.  
தமிழ்நாட்டில், விடியல் பயணம் திட்டம் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

Correct Answer: A [மே, 2021]

Notes:

பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் (விடியல் பயணம்) மே 2021-ல் அறிமுகமானது. [Group 4 2025]

6.  
பின்வருவனவற்றில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தோடு தொடர்புடைய உண்மையான கூற்று(கள்) எது/யாவை?
(i) ஆகஸ்ட் 2022-இல் தொடங்கப்பட்டது.
(ii) இத்திட்டமானது ஒவ்வொரு மாணவருக்கும் சரிவிகித ஆற்றல், புரதம், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கிடைப்பதை உறுதிசெய்கிறது.
(iii) இந்தக் காலை உணவுத் திட்டம் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

Correct Answer: D [(ii) மற்றும் (iii) மட்டும்]

Notes:

காலை உணவுத் திட்டம் 15 செப்டம்பர் 2022-ல் தொடங்கியது; தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கானது. [CTS (ITI Posts) 2025]

7.  
கூற்று [A] : தமிழ்நாட்டில் புதுமைப் பெண் திட்டம், பொருளாதார ரீதியாக நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களிடையே உயர் கல்வியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காரணம் [R] : இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

Correct Answer: C [[A] என்பது உண்மை ஆனால் [R] என்பது தவறு]

Notes:

புதுமைப் பெண் திட்டம் கிராமப்புறத்துக்கு மட்டுமல்ல; அனைத்து அரசுப் பள்ளி மாணவிகளுக்கும் உண்டு. [CTS (ITI Posts) 2025]

8.  
"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் குறித்த சரியான கூற்று(களை)க் கண்டறிக.
(i) அணுக இயலாத மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தொலைபேசி வழியாகச் சேவை வழங்கல்.
(ii) இயன்முறை மருத்துவம் மற்றும் நோய்த்தணிப்புப் பராமரிப்பை நேரில் வழங்குதல்.
(iii) இத்திட்டத்திற்காக 2024-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் முகமைகளுக்கிடையிலான பணிக்குழு (UNIATF) விருது பெறப்பட்டுள்ளது.

Correct Answer: B [(ii) மற்றும் (iii) மட்டும்]

Notes:

மக்களைத் தேடி மருத்துவம் வீடு தேடி நேரடிச் சேவை; 2024-ல் ஐ.நா. UNIATF விருது பெற்றது. [CTS (ITI Posts) 2025]

9.  
பெண்களின் நலனுக்காகத் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தியது. பின்வருவனவற்றில் எந்தக் காரணம்/காரணங்கள் இத்திட்டத்திற்கான நியாயமான விளக்கம்?
(i) உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2023-இன்படி ஆண்டு வருமானத்தில் பாலின வேறுபாடு
(ii) பெண்களின் ஏழ்மையான சமூக நிலையை மாற்ற
(iii) கிராமப்புறப் பெண்களின் மேம்பாடு
(iv) பெண்களின் எண்ணற்ற மணிநேர அமைதியான உழைப்பை அங்கீகரித்தல்

Correct Answer: D [(i) மற்றும் (iv) மட்டும்]

Notes:

மகளிர் உரிமைத் தொகை வருமானப் பாலின இடைவெளியையும் பெண்களின் ஊதியமில்லா உழைப்பையும் அங்கீகரிக்கிறது. [Group 2/2A 2025]

10.  
கூற்று [A] : தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது.
காரணம் [R] : தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கிராம வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் என்ற முதன்மைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Correct Answer: B [[A] மற்றும் [R] இரண்டுமே சரி மற்றும் [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கம்]

Notes:

THAI திட்டம் அடிப்படை வசதிகள் வழங்கியதால் கிராமப்புற வாழ்க்கைத் தரம் மேம்பட்டது. [Group 2/2A 2025]

11.  
பின்வருவனவற்றை அவற்றின் திட்டங்களுடன் பொருத்தவும் :
(a) மதி பஜார் – 1. சுத்தமான எரிசக்தி
(b) பசுமை வீடுகள் திட்டம் – 2. திறன் மேம்பாடு
(c) நான் முதல்வன் – 3. வறுமை ஒழிப்பு
(d) அஜீவிகா – 4. சுய உதவிக் குழு
(a) (b) (c) (d)

Correct Answer: B [4 1 2 3]

Notes:

மதி பஜார்–சுய உதவிக் குழு, பசுமை வீடு–தூய ஆற்றல், நான் முதல்வன்–திறன், அஜீவிகா–வறுமை ஒழிப்பு. [Group 2/2A 2025]

12.  
நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், விபத்து நடைபெற்ற முதல் 48 மணி நேரத்திற்குள் பணமில்லா சிகிச்சைக்கான உச்சவரம்பு ஒரு நபருக்கு ரூ. _____ ஆகும்.

Correct Answer: B [2.00 லட்சம்]

Notes:

நம்மைக் காக்கும் 48 உச்சவரம்பு ரூ.2 லட்சம் (ரூ.1 லட்சத்திலிருந்து உயர்வு, நவம்பர் 2024 அறிவிப்பு). [Group 2/2A 2025]

13.  
கூற்று [A] : தமிழ்நாட்டின் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம், மக்களின் வீட்டு வாசல்படியில் சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.
காரணம் [R] : இந்தத் திட்டம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு மருத்துவ வசதியை அணுகுவதற்கான மேம்பாட்டினை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Correct Answer: A [[A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A]-க்குச் சரியான விளக்கம்]

Notes:

மருத்துவ அணுகலை மேம்படுத்தவே மக்களைத் தேடி மருத்துவம் வீடு தேடிச் சேவை வழங்குகிறது. [CTS (ITI Posts) 2025]

14.  
தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பின்வருவனவற்றில் எது இலக்கு வைக்கப்பட்ட குழு அல்ல? கண்டறிக.

Correct Answer: D [நடுத்தர வருமானக் குடும்பங்கள்]

Notes:

தாயுமானவர் திட்டம் மிக வறியோருக்கானது; நடுத்தர வருமானக் குடும்பங்கள் இலக்கல்ல. [CTS (ITI Posts) 2025]

15.  
பொருத்துக.
உதவித் திட்டம் – பெயர்
(a) விதவை மறுமண உதவித் திட்டம் – 1. அன்னை தெரசா
(b) ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம் – 2. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
(c) ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம் – 3. ஈ.வெ.ரா. மணியம்மையார்
(d) கலப்புத் திருமண உதவித் திட்டம் – 4. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார்
(a) (b) (c) (d)

Correct Answer: B [4 3 1 2]

Notes:

விதவை மறுமணம்–தர்மாம்பாள், விதவை மகள்–மணியம்மையார், அனாதை–தெரசா, கலப்புமணம்–முத்துலட்சுமி. [CTS (ITI Posts) 2025, Executive Officer Gr. I (HR&CE) 2024]

16.  
பின்வருவனவற்றுள் எது/எவை தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
I. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் திருமண உதவித் திட்டம் – சாதி மறுப்புத் திருமணம்
II. டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் – விதவை மகள் திருமணம்
III. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டம் – விதவை மறுமணம்
IV. அன்னை தெரசா நினைவுத் திருமண உதவித் திட்டம் – அனாதைப் பெண் திருமணம்

Correct Answer: B [II மற்றும் III மட்டும்]

Notes:

தர்மாம்பாள் விதவை மறுமணத்திற்கும் மணியம்மையார் விதவைகளின் மகள்களுக்கும் உரியவை. [Asst. Public Prosecutor Gr. II 2026]

17.  
‘கலைஞர் கைவினைத் திட்டம்’ பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Correct Answer: B [இது நிதி உதவி மற்றும் திறன் மேம்பாட்டைக் கைவினைக் கலைஞர்களின் வளர்ச்சிக்காக வழங்குகிறது]

Notes:

கலைஞர் கைவினைத் திட்டம் கைவினைக் கலைஞர்களுக்கு நிதி உதவியும் திறன் பயிற்சியும் வழங்குகிறது. [Asst. Public Prosecutor Gr. II 2026]

18.  
தமிழ்நாட்டில் NEEDS திட்டம் குறித்து பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இது ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்
(ii) சிறப்புப் பிரிவில் உள்ள ஆர்வலர்கள் 55 வயது வரை இருக்கலாம்.
(iii) திருப்பிச் செலுத்தும் காலம் முழுவதும் 2% வட்டி மானியத்தை வழங்குகிறது.
(iv) முதல் தலைமுறை தொழில்முனைவோருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திட்டம் இது.

Correct Answer: B [(ii) மற்றும் (iv) மட்டும்]

Notes:

NEEDS முதல் தலைமுறைத் தொழில்முனைவோருக்கானது; சிறப்புப் பிரிவினர் 55 வயது வரை விண்ணப்பிக்கலாம். [CTS (Interview Posts) 2026]

19.  
கீழ்க்காணும் திட்டங்களை அந்தந்த வருடத்துடன் பொருத்துக.
(a) நீங்கள் நலமா – 1. 2000
(b) மனுநீதி – 2. 2021
(c) குறள் முற்றோதல் – 3. 2024
(d) இல்லம் தேடிக் கல்வி – 4. 1969
(a) (b) (c) (d)

Correct Answer: C [3 4 1 2]

Notes:

நீங்கள் நலமா 2024, மனுநீதி 1969, குறள் முற்றோதல் 2000, இல்லம் தேடிக் கல்வி 2021. [Group 2A Mains 2025]

20.  
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிக்கு வழிகாட்ட அமைத்துள்ள தளம்

Correct Answer: B [‘இளைய’]

Notes:

‘இளைய’ (Ilaya) என்பது TNSDC உருவாக்கிய AI அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழிகாட்டும் வாட்ஸ்அப் தளம். [Group 2A Mains 2025, Group 2A Mains (Revoked) 2026]

21.  
பொருத்துக:
திட்டங்கள் – பயனாளிகள்
(a) நான் முதல்வன் – 1. பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்படுதல்
(b) புதுமைப் பெண் – 2. பெண்களுக்கு அதிகாரமளித்தல்
(c) விடியல் பயணம் – 3. மாணவிகளுக்குக் கல்வி உதவியளித்தல்
(d) மக்களுடன் முதல்வர் – 4. திறன் மேம்பாடு
(a) (b) (c) (d)

Correct Answer: B [4 3 2 1]

Notes:

நான் முதல்வன்–திறன், புதுமைப் பெண்–மாணவியர் கல்வி, விடியல் பயணம்–மகளிர், மக்களுடன் முதல்வர்–குறைதீர்ப்பு. [Group 2A Mains 2025]

22.  
கூற்று [A] : அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் மொழிபெயர்க்க ரூ. 5 கோடி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
காரணம் [R] : தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட உள்ளன.

Correct Answer: A [கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு]

Notes:

அம்பேத்கர் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்க ₹5 கோடி; பணி தகவல் தொழில்நுட்பத் துறையுடையது அல்ல. [Group 2A Mains 2025]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0