வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவின் _____ பெரிய மின்னணு வன்பொருள் உற்பத்தி மையமாக சென்னை விளங்குகிறது.

Correct Answer: B [இரண்டாவது]

Notes:

மின்னணு வன்பொருள் உற்பத்தியில் சென்னை இந்தியாவின் இரண்டாவது பெரிய மையம். [Mass Interviewer 2023]

2.  
கீழ்க்கண்ட தொடர்களிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடர்த்தி குறைவாக உள்ள மாவட்டம் எது?
(i) திருச்சிராப்பள்ளி
(ii) நீலகிரி
(iii) பெரம்பலூர்

Correct Answer: B [(ii) மட்டும்]

Notes:

தமிழ்நாட்டில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாவட்டம் நீலகிரி (2011). [Hostel Supdt. cum PTO 2024]

3.  
வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் மாவட்டம் _____

Correct Answer: C [சென்னை]

Notes:

தமிழ்நாட்டில் அதிகம் வெளிநாட்டுக்குப் புலம்பெயர்ந்தோர் கொண்ட மாவட்டம் சென்னை. [Combined Accounts Service 2024]

4.  
கீழ்க்காணும் தமிழக மாவட்டங்களைக் கருத்தில் கொள்க:
(1) கன்னியாகுமரி
(2) வேலூர்
(3) அரியலூர்
(4) கோயம்புத்தூர்
(5) தூத்துக்குடி
குழந்தை வளர்ச்சிக் குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தெரிவு செய்க.

Correct Answer: D [(1), (4) மற்றும் (5) மட்டும்]

Notes:

குழந்தை வளர்ச்சிக் குறியீட்டில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர், தூத்துக்குடி முதல் மூன்று. [Group 1 2024]

5.  
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மக்கள்தொகை அடர்த்தியில் தமிழ்நாடு எந்தத் தரவரிசையில் உள்ளது?

Correct Answer: B [12வது]

Notes:

2011இல் மக்கள் அடர்த்தியில் தமிழ்நாடு (555) மாநிலங்கள்–யூனியன் பிரதேசங்களில் 12வது இடம். [Asst. Public Prosecutor Gr. II 2025]

6.  
குழந்தை வளர்ச்சிக் குறியீடு (CDI) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) 'குழந்தைகளைக் காப்போம்' பிரச்சாரத்தால் CDI உருவாக்கப்பட்டது.
(ii) CDI-ஐ அளவிடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மூன்று குறிகாட்டிகள் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி ஆகும்.
(iii) HDI கணக்கிடப்படும் அதே வழியில் CDI கணக்கிடப்படுகிறது.

Correct Answer: D [(i), (ii) மற்றும் (iii)]

Notes:

CDI-ஐ 'Save the Children' உருவாக்கியது; சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி அடிப்படையில் HDI போலக் கணக்கிடப்படுகிறது. [Group 1/1A 2025]

7.  
நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இந்தியக் குறியீடு 2023-24-இன்படி, தமிழ்நாடு இந்தியாவில் _____ இடத்தில் உள்ளது.

Correct Answer: B [2]

Notes:

SDG இந்தியக் குறியீடு 2023-24-இல் 78 மதிப்பெண்ணுடன் தமிழ்நாடு இரண்டாம் இடம். [CTS (Interview Posts) 2025]

8.  
இந்தியாவின் எந்தப் பகுதி 'இந்தியாவின் சுகாதாரத் தலைநகரம்', 'இந்தியாவின் வங்கித் தலைநகரம்', 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று குறிப்பிடப்படுகிறது?

Correct Answer: D [சென்னை]

Notes:

மருத்துவம், வங்கி, வாகன உற்பத்தி சிறப்பால் சென்னை இப்பெயர்களால் அழைக்கப்படுகிறது. [CTS (Interview Posts) 2025]

9.  
இந்தியாவின் நூல் கிண்ணம் (Yarn Bowl) என்று அழைக்கப்படும் மாநிலத்தின் பெயரைக் குறிப்பிடுக.

Correct Answer: A [தமிழ்நாடு]

Notes:

நூற்பாலைகள் மிகுந்த தமிழ்நாடு 'இந்தியாவின் நூல் கிண்ணம்' என அழைக்கப்படுகிறது. [CTS (Non-Interview Posts) 2025]

10.  
பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
(2) மதுரை – தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம்
(3) நாமக்கல் – தமிழகத்தின் நெற்களஞ்சியம்
(4) தஞ்சாவூர் – முட்டை நகரம்

Correct Answer: D [(3) மற்றும் (4)]

Notes:

தஞ்சாவூர் நெற்களஞ்சியம்; நாமக்கல் முட்டை நகரம் — (3), (4) தவறான இணைகள். [Group 2/2A 2025]

11.  
நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இந்தியக் குறியீடு 2023-24-இன்படி, தமிழ்நாடு தேசிய மதிப்பெண்ணை விட எத்தனை புள்ளிகள் முன்னிலையில் உள்ளது?

Correct Answer: B [7]

Notes:

SDG குறியீடு 2023-24: தமிழ்நாடு 78, இந்தியா 71 — வேறுபாடு 7 புள்ளிகள். [Asst. Public Prosecutor Gr. II 2026]

12.  
நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) இந்தியக் குறியீடு 2023-24-இன்படி தமிழ்நாடு எந்த வகைப்பாட்டில் பொருந்துகிறது?

Correct Answer: C [முன்னணி செயல்திறன் நிலை]

Notes:

65–99 மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு (78) 'முன்னணி செயல்திறன்' (Front Runner) வகை. [CTS (Interview Posts) 2026]

13.  
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவு விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு மாவட்டங்களைத் தரவரிசைப்படுத்துக.
(1) நீலகிரி
(2) சென்னை
(3) தூத்துக்குடி
(4) கன்னியாகுமரி

Correct Answer: C [(4), (2), (3), (1)]

Notes:

2011 எழுத்தறிவு வரிசை: கன்னியாகுமரி, சென்னை, தூத்துக்குடி, நீலகிரி. [Group 2A Mains Re-Exam 2026]

14.  
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை முக்கியமாக எவ்வாறு தீர்க்கப்படுகிறது?

Correct Answer: B [குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக அமல்படுத்துதல்]

Notes:

குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களைக் கடுமையாக அமல்படுத்துவதே குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பின் முதன்மை வழி. [Group 2A Mains (Revoked) 2026]

15.  
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் எத்தனை மாவட்டங்களில் 1%க்கும் குறைவாக பழங்குடி மக்கள் (ST) இருக்கின்றனர்?

Correct Answer: D [20]

Notes:

2011-இல் தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 20-இல் பழங்குடியினர் 1%-க்கும் குறைவு. [Group 2A Mains (Revoked) 2026]

16.  
தமிழ்நாட்டின் குறைந்த மக்கள் தொகை கொண்ட முதல் 4 மாவட்டங்களை வரிசைப்படுத்துக.
1. நீலகிரி
2. அரியலூர்
3. பெரம்பலூர்
4. கரூர்

Correct Answer: A [3, 1, 2, 4]

Notes:

2011-இல் மிகக் குறைந்த மக்கள்தொகை: பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், கரூர் வரிசையில். [Group 2A Mains (Revoked) 2026]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0