வினாடி வினா

← திரும்பச் செல்ல
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி

Correct Answer: B [555 / ச.கி.மீ]

Notes:

2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் அடர்த்தி சதுர கி.மீ.க்கு 555. [PTGS 2021, DPGS 2022, Reporter 2022, Bursar 2023, Group 2/2A 2024, Special Competitive Exam 2025]

2.  
2019ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளியிட்ட இந்தியாவின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறியீட்டில் தமிழ்நாடு பெற்றுள்ள இடம்

Correct Answer: C [மூன்றாவது]

Notes:

SDG இந்தியக் குறியீடு 2019இல் தமிழ்நாடு மூன்றாம் இடம் பெற்றது. [Group 1 2021, Executive Officer Gr. III (HR&CE) 2022]

3.  
இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022இன்படி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் அதிக அளவில் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம்

Correct Answer: C [மகாபலிபுரம் (மாமல்லபுரம்)]

Notes:

இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022இன்படி வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் பார்த்தது மாமல்லபுரம். [Group 1 2022]

4.  
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி _____, _____ மற்றும் _____ ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

Correct Answer: B [கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா]

Notes:

நிதி ஆயோக் சுகாதாரக் குறியீடு 2021: கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா முதல் மூன்று. [Group 2 2022]

5.  
தேசிய மாதிரி ஆய்வின் (NSS) 66வது சுற்றின்படி (2009-10), இந்தியாவின் மொத்தத் தொழிலாளர் சக்தியில் தமிழ்நாட்டின் பங்கு

Correct Answer: B [7.74 சதவீதம்]

Notes:

NSS 66வது சுற்றின்படி (2009-10) இந்தியத் தொழிலாளர் வளத்தில் தமிழ்நாட்டின் பங்கு 7.74%. [PSY 2022]

6.  
2019ஆம் ஆண்டு நல்லாளுகைக் குறியீட்டில் (Good Governance Index) தமிழ்நாட்டின் மதிப்பெண் என்ன?

Correct Answer: B [5.62]

Notes:

நல்லாளுகைக் குறியீடு 2019இல் தமிழ்நாடு 5.62 புள்ளிகளுடன் பெரிய மாநிலங்களில் முதலிடம். [PSY 2022]

7.  
தமிழ்நாடு மனித வளர்ச்சி அறிக்கையின்படி (2013–14), பல்பரிமாண வறுமைக் குறியீடு மிக அதிகமாக உள்ள மாவட்டம் _____

Correct Answer: D [தருமபுரி]

Notes:

தமிழ்நாடு மனித வளர்ச்சி அறிக்கைப்படி பல்பரிமாண வறுமைக் குறியீடு அதிகமுள்ள மாவட்டம் தருமபுரி. [Executive Officer Gr. III (HR&CE) 2022]

8.  
31 மார்ச் 2013 நிலவரப்படி தமிழ்நாட்டில் உள்ள 13.89 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வங்கிக் கடன் தொகை _____ ஆகும்.

Correct Answer: C [ரூ. 18,245 கோடி]

Notes:

31.3.2013 நிலவரப்படி 13.89 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு ₹18,245 கோடி வங்கிக் கடன். [Executive Officer Gr. III (HR&CE) 2022]

9.  
ஜனவரி 2020 நிலவரப்படி இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு _____ ஆகும்.

Correct Answer: B [17.00%]

Notes:

2020 ஜனவரி நிலவரப்படி இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 17%. [CBT 2022]

10.  
2017-18ஆம் ஆண்டில், உற்பத்தித் திறனில் தமிழ்நாடு தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள பயிர்கள்

Correct Answer: A [மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை மற்றும் பருத்தி]

Notes:

2017-18இல் மக்காச்சோளம், கம்பு, நிலக்கடலை, பருத்தி உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடம். [VCGS 2022]

11.  
2013-14ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த இணையப் பயனாளர்களில் தமிழ்நாட்டின் பங்கு _____

Correct Answer: A [9.9 சதவீதம்]

Notes:

2013-14இல் இந்திய இணையப் பயனாளர்களில் தமிழ்நாட்டின் பங்கு 9.9%. [VCGS 2022]

12.  
MSME கொள்கைக் குறிப்பு 2017-18இன்படி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான முதலீட்டு முன்மொழிவுகளில் தமிழ்நாட்டின் தரவரிசை என்ன?

Correct Answer: A [I]

Notes:

MSME கொள்கைக் குறிப்பின்படி 2017-18இல் முதலீட்டு முன்மொழிவுகளில் தமிழ்நாடு முதலிடம். [Bursar 2023]

13.  
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச் சின்னங்களின் தொகுப்பில் இடம்பெறாதது எது?

Correct Answer: D [ஆயி மண்டபம்]

Notes:

ஆயி மண்டபம் புதுச்சேரியில் உள்ளது; மாமல்லபுரச் சின்னங்களில் இல்லை. [Bursar 2023]

14.  
தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மிகக் குறைந்த பாலின விகிதம் கொண்டுள்ளது?

Correct Answer: D [தருமபுரி]

Notes:

2011இல் குறைந்த பாலின விகிதம் தருமபுரி (946); அதிகம் நீலகிரி (1,042). [Group 3A 2023]

15.  
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் _____ மாவட்டத்தில் மக்கள்தொகை அதிகமாக உள்ளது.

Correct Answer: C [சென்னை]

Notes:

2011இல் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் சென்னை (சுமார் 46.46 லட்சம்). [AJ 2023]

16.  
44வது சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் _____ 2022இல் நடந்தது.

Correct Answer: A [ஜூலை 28லிருந்து ஆகஸ்ட் 10 வரை]

Notes:

44வது சதுரங்க ஒலிம்பியாட்: 2022 ஜூலை 28 – ஆகஸ்ட் 10, மாமல்லபுரம். [Asst. Training Officer (Textile) 2023, Junior Technical Asst. (Textile) 2023]

17.  
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் பாலின விகிதம் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

Correct Answer: C [நீலகிரி]

Notes:

2011இல் அதிகபட்சப் பாலின விகிதம் நீலகிரி (1,042). [Asst. Training Officer (Textile) 2023]

? இந்த 601 வினாக்களுக்கும் முழு விளக்கம், அட்டவணைகளுடன் PDF புத்தகம் – ₹149: www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-tamil-nadu-administration-pyq

மேலும் வினாடி வினாக்கள்
› TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் மனித வள மேம்பாட்டுக் குறியீடுகள் › TN நிர்வாகம் PYQ – சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம் › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 1: வினா 1–23) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 2: வினா 24–46) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 3: வினா 47–69) › TN நிர்வாகம் PYQ – தமிழ்நாட்டின் நலத்திட்டங்கள் (பகுதி 4: வினா 70–91)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0