திருக்குறள் – பாடத்திட்ட அதிகாரங்கள் – பயிற்சி 4 (ஊக்கம் உடைமை, வினை செயல்வகை, அவை அஞ்சாமை, நட்பாராய்தல், பண்புடைமை)
← திரும்பச் செல்ல
₹399 →
திருக்குறள் – பாடத்திட்ட அதிகாரங்கள் – பயிற்சி 4 (ஊக்கம் உடைமை, வினை செயல்வகை, அவை அஞ்சாமை, நட்பாராய்தல், பண்புடைமை) – 25 வினாக்கள், பாடம்: பொதுத் தமிழ். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கோடிட்ட இடத்தை நிரப்புக: "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் ______ தனையது உயர்வு."
Correct Answer: A [உள்ளத்]
விளக்கம்:
குறள் 595: மலர்த்தண்டின் நீளம் நீரின் அளவு; மனிதரின் உயர்வு உள்ளத்தின் (ஊக்கத்தின்) அளவு.
2.
"யானை வெரூஉம் புலிதாக் குறின்" என்ற தொடர் இடம்பெறும் அதிகாரம் எது?
Correct Answer: B [ஊக்கம் உடைமை]
விளக்கம்:
குறள் 599 – ஊக்கம் உடைமை அதிகாரம் (60).
3.
"உரமொருவற்கு உள்ள வெறுக்கை" – இக்குறளில் ஒருவருக்கு 'உரம்' (வலிமை) என வள்ளுவர் குறிப்பது எது?
Correct Answer: C [உள்ள ஊக்கம்]
விளக்கம்:
குறள் 600: மிகுந்த உள்ள ஊக்கமே ஒருவருக்கு உண்மையான வலிமை.
4.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்" – செல்வம் வழி கேட்டுக்கொண்டு யாரிடம் செல்லும்?
Correct Answer: D [அசைவிலா ஊக்கம் உடையானிடம்]
விளக்கம்:
குறள் 594: அசைவிலா ஊக்கம் உடையான் உழை (இடம்) ஆக்கம் செல்லும்.
5.
"நில்லாது நீங்கி விடும்" என்று குறள் 592 குறிப்பிடுவது எதனை?
Correct Answer: B [பொருளுடைமை]
விளக்கம்:
குறள் 592: உள்ளம் உடைமையே உடைமை; பொருளுடைமை நிலைக்காமல் நீங்கிவிடும்.
6.
"பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்" – இக்குறள் கூறும் ஐந்தில் இடம்பெறாதது எது?
Correct Answer: C [அமைச்சு]
விளக்கம்:
குறள் 675: பொருள், கருவி, காலம், வினை, இடம் – இவையே ஐந்து; அமைச்சு இல்லை.
7.
வினை, பகை ஆகிய இரண்டின் எச்சம் (மிச்சம்) எதைப் போலக் கேடு செய்யும் என்கிறார் வள்ளுவர்?
Correct Answer: D [தீயெச்சம்]
விளக்கம்:
குறள் 674: "தீயெச்சம் போலத் தெறும்" – அணையாது எஞ்சிய நெருப்பு போல.
8.
"வினையான் வினையாக்கிக் கோடல்" எதைப் போன்றது என்று குறள் 678 கூறுகிறது?
Correct Answer: A [யானையால் யானை பிடித்தல்]
விளக்கம்:
குறள் 678: "நனைகவுள் யானையால் யானையாத் தற்று."
9.
"தூங்குக தூங்கிச் செயற்பால" என்று தொடங்கும் குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Correct Answer: B [வினை செயல்வகை]
விளக்கம்:
குறள் 672 – வினை செயல்வகை அதிகாரம் (68).
10.
நண்பர்க்கு நல்லது செய்வதைவிட விரைந்து செய்ய வேண்டியதாகக் குறள் 679 கூறுவது எது?
Correct Answer: A [பகைவரைத் தம்மோடு சேர்த்துக்கொள்ளுதல்]
விளக்கம்:
குறள் 679: "ஒட்டாரை ஒட்டிக் கொளல்" – பகைவரை நட்பாக்கிக் கொள்ளுதல்.
11.
"பகையகத்துச் சாவார் எளியர்" – அப்படியானால் அரியவர் (மிகச் சிலர்) யார்?
Correct Answer: D [அவையகத்து அஞ்சாதவர்]
விளக்கம்:
குறள் 723: "அரியர் அவையகத்து அஞ்சா தவர்."
12.
கோடிட்ட இடத்தை நிரப்புக: "கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற ______ வார்."
Correct Answer: A [செலச்சொல்லு]
விளக்கம்:
குறள் 722: கற்றவர் முன் கற்றதை மனத்தில் பதியச் சொல்பவரே சிறந்த கற்றவர்.
13.
அவையகத்து அஞ்சுபவன் கற்ற நூல் எதற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது?
Correct Answer: C [பகையகத்துப் பேடி கை ஒள்வாள்]
விளக்கம்:
குறள் 727: "பகையகத்துப் பேடிகை ஒள்வாள்."
14.
கற்றறிந்தும் நல்லார் அவைக்கு அஞ்சுவோர் யாரைவிடக் கடையர் (கீழானவர்) என்கிறார் வள்ளுவர்?
Correct Answer: B [கல்லாதவரை]
விளக்கம்:
குறள் 729: "கல்லா தவரின் கடையென்ப."
15.
'அவை அஞ்சாமை' அதிகாரம் இடம்பெறும் பால், இயல் எது?
Correct Answer: D [பொருட்பால் – அமைச்சியல்]
விளக்கம்:
அவை அஞ்சாமை (73) – பொருட்பால், அமைச்சியல்; குறள்கள் 721–730.
16.
"கேட்டினும் உண்டோர் உறுதி" – கேடு (துன்பம்) எதனை அளக்கும் கோலாக அமைகிறது?
Correct Answer: B [கிளைஞரை (உறவு, நண்பர்)]
விளக்கம்:
குறள் 796: "கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்."
17.
நட்புக் கொள்ளும் முன் அறிய வேண்டியவையாகக் குறள் 793 கூறாதது எது?
Correct Answer: C [செல்வம்]
விளக்கம்:
குறள் 793: குணம், குடிமை, குற்றம், குன்றா இனம் – செல்வம் கூறப்படவில்லை.
18.
"ஊதியம் என்பது ஒருவற்கு" – ஒருவருக்கு உண்மையான ஊதியம் (இலாபம்) எது?
Correct Answer: D [பேதையார் கேண்மையை விட்டு விலகுதல்]
விளக்கம்:
குறள் 797: "பேதையார் கேண்மை ஒரீஇ விடல்."
19.
"கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை" என்று தொடங்கும் குறள் இடம்பெறும் அதிகாரம் எது?
Correct Answer: A [நட்பாராய்தல்]
விளக்கம்:
குறள் 799 – நட்பாராய்தல் அதிகாரம் (80).
20.
கோடிட்ட இடத்தை நிரப்புக: "அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு ______ கொளல்."
Correct Answer: C [ஆய்ந்து]
விளக்கம்:
குறள் 795: இடித்துரைத்துத் திருத்த வல்லாரின் நட்பை ஆய்ந்து கொள்ள வேண்டும்.
21.
அரம்போலும் கூர்மை உடையவராயினும் மக்கட்பண்பு இல்லாதவர் எதற்கு ஒப்பாவர்?
Correct Answer: A [மரம்]
விளக்கம்:
குறள் 997: "மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்."
22.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வத்திற்கு வள்ளுவர் கூறும் உவமை எது?
Correct Answer: D [கலத்தின் தீமையால் திரிந்த நல்ல பால்]
விளக்கம்:
குறள் 1000: "நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று."
23.
நகல்வல்லர் அல்லார்க்கு (மகிழ்ந்து பழகத் தெரியாதவர்க்கு) இப்பெரிய உலகம் பகலிலும் எவ்வாறு தோன்றும்?
Correct Answer: B [இருளாக]
விளக்கம்:
குறள் 999: "பகலும்பாற் பட்டன்று இருள்."
24.
"பண்புடைமை என்னும் வழக்கு" எந்த இரண்டும் சேர்ந்தது எனக் குறள் 992 கூறுகிறது?
Correct Answer: C [அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல்]
விளக்கம்:
குறள் 992: "அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்."
25.
"மண்புக்கு மாய்வது மன்" – யார் இல்லையெனில் உலகம் மண்ணுக்குள் புதைந்து அழியும்?
Correct Answer: A [பண்புடையார்]
விளக்கம்:
குறள் 996: "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்." ➤ 20 அதிகாரங்களும் எளிய பொருளுடன்: https://www.shanmugamiasacademy.in/thirukkural-tnpsc
📘 பொதுத் தமிழ் — முழுமையான கையேடு (TNPSC குரூப் 2 · 2A · 4)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். TNPSC பொதுத் தமிழ் பாடத்திட்டத்தின் ஏழு அலகுகளும் 2,993 வினா–விடைகளுடன் ஒரே நூலில்.
புத்தகத்தைப் பெற – ₹199 மேலும் வினாடி வினாக்கள்
› திருக்குறள் – பாடத்திட்ட அதிகாரங்கள் – பயிற்சி 3 (கல்வி, கல்லாமை, பெரியாரைத் துணைக்கோடல், செங்கோன்மை, கண்ணோட்டம்)
› திருக்குறள் – பாடத்திட்ட அதிகாரங்கள் – பயிற்சி 2 (பொறையுடைமை, புறங்கூறாமை, ஈகை, அருளுடைமை, கூடா ஒழுக்கம்)
› திருக்குறள் – பாடத்திட்ட அதிகாரங்கள் – பயிற்சி 1 (அறன் வலியுறுத்தல், அன்புடைமை, விருந்தோம்பல், நடுவு நிலைமை, ஒழுக்கம் உடைமை)
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 4
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 3 (2)
› பொதுத் தமிழ் வழிகாட்டிப் பயிற்சி – அலகு VII – தமிழ் அறிஞர்கள், தமிழ்த்தொண்டு, சான்றோர் – பகுதி 2 (2)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
