TNPSC Group 4

TNPSC குரூப் 4 2026 – 6574 காலிப்பணியிடங்கள், தேர்வுத் தேதி, தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை

புதுப்பிக்கப்பட்டது: 25-10-2026 · Shanmugam IAS Academy

TNPSC குரூப் 4 (Combined Civil Services Examination–IV, Group IV Services) 2026 அறிவிக்கை எண் 11/2026 (விளம்பர எண் 747, நாள் 06-10-2026) வெளியாகியுள்ளது. மொத்தம் 6574 காலிப்பணியிடங்கள் (46 பதவிகள்). எழுத்துத் தேர்வு 10-01-2027 (ஞாயிறு) காலை 9.30 – 12.30. இணையவழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 05-11-2026 (இரவு 11.59).

இந்தப் பக்கம் TNPSC அதிகாரப்பூர்வ அறிவிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது; ஒவ்வொரு புதிய அறிவிப்புக்கும் புதுப்பிக்கப்படும். ஐயம் ஏற்பட்டால் அறிவிக்கையின் ஆங்கிலப் பதிப்பே இறுதியானது. இறுதி முடிவுகளுக்கு tnpsc.gov.in பார்க்கவும்.

முக்கியத் தேதிகள் (Important Dates)

நிகழ்வுதேதி
அறிவிக்கை (11/2026, விளம்பர எண் 747)06-10-2026
இணையவழி விண்ணப்பம் தொடக்கம்06-10-2026
விண்ணப்பக் கடைசி நாள்05-11-2026 (இரவு 11.59)
திருத்தச் சாளரம் (Application Correction Window)09-11-2026 (நள்ளிரவு 12.01) – 11-11-2026 (இரவு 11.59)
ஹால் டிக்கெட்tnpscexams.in-இல் பதிவிறக்கம் (தபாலில் வராது)
எழுத்துத் தேர்வு10-01-2027, காலை 9.30 – 12.30
உத்தேச விடைக்குறிப்பு (Tentative key)தேர்வுக்குப் பின் 6 வேலை நாட்களுக்குள் tnpsc.gov.in-இல்

காலிப்பணியிடங்கள் (Vacancies) – 6574

முக்கியப் பதவிகள் வாரியான சுருக்கம் (அறிவிக்கையின் பதவிக் குறியீடுகள் அடிப்படையில் கூட்டப்பட்டது):

பதவிபதவிக் குறியீடு (Post Code)காலியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO)2025291
இளநிலை உதவியாளர் (Junior Assistant) – Security, Non-Security, Accounts உட்பட அனைத்துத் துறை / நிறுவனங்கள்2400, 2600, 4600, 3842, 3840, 3512, 3851, 3521, 3788, 3816, 3520, 3321, 38483737
தட்டச்சர் (Typist)2200, 4200, 3834, 3846, 3844, 3852, 38171572
சுருக்கெழுத்துத் தட்டச்சர் நிலை III (Steno Typist Grade III)2300, 4300, 3837, 3838, 3847, 3672, 3845376
Bill Collector2500, 321497
Tax Collector3854107
வருவாய் உதவியாளர் (Revenue Assistant)384396
Personal Clerk384160
இளநிலை நிர்வாக உதவியாளர் (Junior Administrative Assistant, Computer Operator உட்பட)3835, 383655
செயல் அலுவலர் நிலை IV (Executive Officer Grade IV) – இந்து சமய அறநிலையத் துறை165546
வனக் காவலர் (Forest Watcher)331940
பிற பதவிகள் (Shorthand Typist, Junior Assistant cum Typist, Junior Inspector of Co-operative Societies, Record Clerk, Laboratory Assistant, Senior Laboratory Assistant, Sales Assistant, Telephone Operator, Forest Guard with Driving Licence)3804, 3853, 3822, 1095, 3839, 3746, 3103, 3806, 331897
மொத்தம் (46 பதவிகள்)6574

அதிக இடங்கள் உள்ள தனிப் பதவி: இளநிலை உதவியாளர் (Non Security), தமிழ்நாடு அமைச்சுப் பணி (Post Code 2600) – 2610. அறிவிக்கப்பட்ட காலியிட எண்ணிக்கை தற்காலிகமானது; கலந்தாய்வு தொடங்கும் முன் மாறலாம். துறை / அலகு வாரியான பகிர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வித் தகுதி (Educational Qualification)

  • VAO, பெரும்பாலான இளநிலை உதவியாளர், Bill Collector, Tax Collector, வருவாய் உதவியாளர், வனக் காவலர் போன்ற பதவிகளுக்கு: குறைந்தபட்சப் பொதுக் கல்வித் தகுதி – தமிழ்நாடு SSLC (10ஆம் வகுப்பு) தேர்ச்சி. தமிழ்நாடு திறந்தநிலைப் பள்ளி வாரியம் நடத்தும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சியும் SSLC-க்குச் சமமாகக் கருதப்படும்.
  • சில நிறுவனப் பதவிகளுக்குப் பட்டம் தேவை – எ.கா. இளநிலை உதவியாளர் (Accounts), Tamil Nadu Power Distribution Corporation (3848) – B.Com.; Sales Assistant (3806) – ஏதேனும் ஒரு பட்டம்; Steno Typist, CMDA (3672) – பட்டம் (10+2+3).
  • Laboratory Assistant, Senior Laboratory Assistant, Typist (3817), ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் (Forest Guard with Driving Licence) – மேல்நிலைக் கல்வி (+2) தேவை (ஆய்வகப் பதவிகளுக்கும் வனக் காப்பாளர் பதவிக்கும் குறிப்பிட்ட அறிவியல் பாடங்களுடன்).
  • தட்டச்சர் / சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிகளுக்கு: அரசுத் தொழில்நுட்பத் தேர்வில் தட்டச்சு (Steno-வுக்குச் சுருக்கெழுத்தும்) – ஒவ்வொரு பதவிக்கும் குறிப்பிட்ட நிலையில் (Grade) – தேர்ச்சி; இவற்றில் பெரும்பாலான பதவிகளுக்குக் கணினி அலுவலகத் தானியக்கச் சான்றிதழும் (Certificate Course in Computer on Office Automation) தேவை. சில பதவிகளுக்கு இந்தக் கணினிச் சான்றிதழை நியமனத்துக்குப் பின் தகுதிகாண் பருவத்துக்குள் / 2 ஆண்டுகளுக்குள் பெறலாம்.
  • அனைத்துத் தகுதிகளும் அறிவிக்கை நாளான 06-10-2026 அன்று பெற்றிருக்க வேண்டும். தமிழில் போதிய அறிவு கட்டாயம் (SSLC / HSC / பட்டத்தில் தமிழ் ஒரு மொழிப்பாடம், அல்லது தமிழ் வழிக் கல்வி, அல்லது TNPSC இரண்டாம் நிலை மொழித் தேர்வு – தமிழ்).
  • ஒவ்வொரு பதவிக்குமான முழுத் தகுதியை அறிவிக்கையின் பத்தி 4.2-இல் பார்க்கவும்.

வயது வரம்பு (01-07-2026 அன்று)

  • குறைந்தபட்ச வயது: 18 நிறைவடைந்திருக்க வேண்டும்; VAO, வனக் காப்பாளர், வனக் காவலர் – 21; செயல் அலுவலர் நிலை IV – 25.
  • பிற வகுப்பினர் (Others): பெரும்பாலான பதவிகளுக்கு அதிகபட்சம் 30 நிறைவடைந்திருக்கக் கூடாது; செயல் அலுவலர் நிலை IV – 35.
  • BC(OBCM), BCM, MBC/DC: பெரும்பாலான பதவிகளுக்கு அதிகபட்சம் 32; SC, SC(A), ST: 35. செயல் அலுவலர் நிலை IV – 37 / 40; VAO – இவ்வனைத்துப் பிரிவினருக்கும் 40; ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் – 33 / 35.
  • சில நிறுவனப் பதவிகளுக்கு இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேலும் அறிவிக்கையில் # குறியிட்ட இடங்களில், குறைந்தபட்சக் கல்வித் தகுதியை விட உயர்ந்த பொதுக் கல்வித் தகுதி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. "அதிகபட்ச வயது வரம்பு இல்லை" என்றால் 60 வயது நிறைவடையாமல் இருக்க வேண்டும்.
  • மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், ஆதரவற்ற விதவையருக்குக் கூடுதல் வயதுச் சலுகை உண்டு (ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் பதவிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க இயலாது).
  • பிற வகுப்பினரில் மத்திய / மாநில அரசுப் பணியில் 5 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றியவர்கள் வயது வரம்புக்குள் இருந்தாலும் விண்ணப்பிக்க இயலாது. இந்து சமய அறநிலையத் துறைப் பதவிகளுக்கு இந்து சமயத்தவர் மட்டும்; வக்ஃப் வாரியத் தட்டச்சர் (3846), சுருக்கெழுத்துத் தட்டச்சர் (3847) பதவிகளுக்கு இஸ்லாமியர் மட்டும்.
  • உங்கள் பதவிக்கான சரியான வரம்பை அறிவிக்கையின் பத்தி 4.1 அட்டவணையில் பார்க்கவும்.

தேர்வு முறை (Exam Pattern)

ஒரே நிலை எழுத்துத் தேர்வு (Single stage) – ஒரே தாள், OMR, கொள்குறி வகை (Objective), 3 மணி நேரம், SSLC தரம். நேர்முகத் தேர்வு இல்லை. தரவரிசை எழுத்துத் தேர்வின் மொத்த மதிப்பெண் அடிப்படையில்.

பகுதிபாடம்வினாக்கள்மதிப்பெண்
Aதமிழ்த் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (Tamil Eligibility-cum-Scoring Test)100150
Bபொது அறிவு (General Studies)75150 (B + C)
Cதிறனறிவு & மனத்திறன் (Aptitude and Mental Ability)25
மொத்தம்200300
  • குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்: 90 / 300 (அனைத்துப் பிரிவினருக்கும்).
  • பகுதி A-இல் குறைந்தது 40% (60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே பகுதி B, C திருத்தப்படும்; A + B + C மொத்த மதிப்பெண் தரவரிசைக்குக் கணக்கிடப்படும்.
  • பகுதி A வினாக்கள் தமிழில் மட்டும்; பகுதி B, C தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்.
  • வாரியம் / பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பாடம் மட்டும் படித்த மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் பகுதி A-க்குப் பதிலாகப் பொது ஆங்கிலம் (SSLC தரம், மொழிபெயர்ப்புப் பகுதி இல்லை) தேர்ந்தெடுக்கலாம்; அதிலும் குறைந்தது 60 மதிப்பெண் தேவை.

பாடத்திட்டம் – அலகு வாரியான வினா எண்ணிக்கை

வினா எண்ணிக்கை TNPSC கூறியபடி உத்தேசமானது; சிறிது மாறலாம். அலகு வாரியான முழுப் பாடத்திட்டம்: TNPSC குரூப் 4 பாடத்திட்டம்.

பகுதி A – பொதுத் தமிழ் (அலகு)உத்தேச வினாக்கள்
இலக்கணம்25
சொல்லகராதி15
எழுதும் திறன்15
கலைச் சொற்கள்10
வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்15
எளிய மொழி பெயர்ப்பு5
இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்15
அலகுபகுதி B – பொது அறிவுஉத்தேச வினாக்கள்
Iபொது அறிவியல்5
IIபுவியியல்5
IIIஇந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்10
IVஇந்திய ஆட்சியியல்15
Vஇந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்20
VIதமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்20
–பகுதி C – திறனறிவு (15) + காரணவியல் (10)25

தேர்ந்தெடுக்கும் முறை (Selection Process)

  1. எழுத்துத் தேர்வு – மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை. சம மதிப்பெண் எனில் உயர் கல்வித் தகுதி (தட்டச்சர் / Steno பதவிகளுக்கு முதலில் உயர் தொழில்நுட்பத் தகுதி), பின்னர் வயதில் மூத்தவர், பின்னர் முன்னதாக விண்ணப்பித்தவர் முன்னிலை பெறுவர்.
  2. இணையவழிச் சான்றிதழ் சரிபார்ப்பு (Onscreen Certificate Verification) – VAO, இளநிலை உதவியாளர், தட்டச்சர், Steno Typist பதவிகளுக்குப் பொதுப் பிரிவில் 1:3, இடஒதுக்கீட்டுப் பிரிவுகளில் 1:2; வனக் காப்பாளர், வனக் காவலர் பதவிகளுக்கு அனைத்துப் பிரிவிலும் 1:6 விகிதத்தில் அழைப்பு. சான்றிதழ்களைப் பதிவேற்ற 10 நாட்கள் (calendar days) வழங்கப்படும்.
  3. வனப் பதவிகள் மட்டும்: உடல் தகுதித் தேர்வு (Physical Standards Test) மற்றும் நடைத் தாங்குதிறன் தேர்வு (Endurance Test) – 1:3 விகிதம்; ஆண்கள் 25 கி.மீ., பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர் 16 கி.மீ. நடையை 4 மணி நேரத்தில் முடிக்க வேண்டும்; சென்னையில் மட்டும் நடைபெறும். குறைந்தபட்ச உயரம்: ஆண்கள் 163 செ.மீ. (ST – 152), பெண்கள் / மூன்றாம் பாலினத்தவர் 150 செ.மீ. (ST – 145).
  4. நேரடிச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (Counselling) – தரவரிசைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கட்டணம் (Fee)

  • ஒருமுறைப் பதிவு (OTR): ₹150 (பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் செல்லும்; ஏற்கனவே செல்லுபடியான OTR இருந்தால் மீண்டும் தேவையில்லை).
  • தேர்வுக் கட்டணம்: ₹100 – இணையவழியில் மட்டும் (Net Banking / Credit / Debit card / UPI); சேவைக் கட்டணம் தனி.
  • கட்டண விலக்கு: SC, SC(A), ST, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவையர் – முழு விலக்கு; BC(OBCM), BCM, MBC/DC – மூன்று இலவச வாய்ப்புகள்; முன்னாள் படைவீரர்கள் – இரண்டு இலவச வாய்ப்புகள்.
  • தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை (PSTM) 2010 சட்டம், 2026 திருத்தச் சட்டம் எண் 12-இன்படி பொருந்தும்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply)

  1. tnpscexams.in இணையதளத்தில் மட்டுமே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. முதலில் ஒருமுறைப் பதிவு (OTR) – ஆதார் இணைப்பு கட்டாயம்; செயலில் உள்ள மின்னஞ்சல், கைபேசி எண் தேவை.
  3. OTR பயனர் பெயர் / கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து குரூப் 4 தேர்வுக்கு "APPLY" – அறிவிக்கை நாளன்று அல்லது அதற்குப் பின் ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படம் (20–50 KB, பெயர் மற்றும் எடுத்த தேதி அச்சிட்டது), கையொப்பம் (10–20 KB) பதிவேற்றம்.
  4. இரண்டு தேர்வு மையங்களை விருப்பமாகத் தேர்வு செய்யலாம் (மாற்றுத்திறனாளிகள் ஒன்று மட்டும்). வனக் காப்பாளர் / வனக் காவலர் பதவிகளுக்கும் பரிசீலிக்க விரும்பினால் "All the Posts" தேர்வு செய்யவும்; இல்லையெனில் "Posts other than Forest Guard with Driving Licence / Forest Watcher".
  5. கட்டணம் செலுத்தி "SUBMIT" செய்த பின் Application Number வரும்; அதைக் குறித்து வைத்துக் கொள்ளவும். திருத்தம் தேவையெனில் 09-11-2026 – 11-11-2026 சாளரத்தில் மட்டும்.

உதவி: TNPSC கட்டணமில்லா எண் 1800 419 0958 (வேலை நாட்களில் காலை 10.00 – மாலை 5.45); OTR / விண்ணப்பம் தொடர்பாக helpdesk@tnpscexams.in.

உத்தேச விடைக்குறிப்பு (Answer Key)

தேர்வு நாள் (10-01-2027) மாலை எங்கள் ஆசிரியர்கள் தயாரிக்கும் விடைக்குறிப்பு விடைக்குறிப்புப் பக்கத்தில் வெளியாகும். TNPSC-இன் அதிகாரப்பூர்வ உத்தேச விடைக்குறிப்பு 6 வேலை நாட்களுக்குள் வரும்; அதை எதிர்த்து 7 நாட்களுக்குள் இணையவழியில் மட்டும் முறையிடலாம்.

தயாரிப்புக்கு உதவும் எங்கள் பக்கங்கள்

குரூப் 4 பயிற்சி பற்றிப் பேச வேண்டுமா?
மொபைல் எண்ணை மட்டும் கொடுங்கள் – எங்கள் ஆலோசகர் அழைப்பார் (கோவை / மதுரை / ஆன்லைன்).
உங்கள் எண் எங்கள் ஆலோசகர் தொடர்புக்கு மட்டும்; வேறு யாருக்கும் பகிரப்படாது.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)