TNPSC Group 4 Syllabus 2026 · குரூப் 4 பாடத்திட்டம்
TNPSC குரூப் 4 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV) தேர்வின் முழுமையான அதிகாரப்பூர்வ பாடத்திட்டம் – அறிவிக்கை எண் 11/2026, இணைப்பு III-இல் உள்ளபடி, அலகு வாரியாக, கேள்வி எண்ணிக்கையுடன். ஒவ்வொரு அலகுக்கும் எங்கள் இலவச quiz, முந்தைய ஆண்டு வினா (PYQ), பாடநூல் இணைப்புகள் உள்ளன.
The complete official syllabus of the TNPSC Group 4 (CCSE-IV) examination as given in Annexure III of Notification No. 11/2026 – unit by unit, with the number of questions, and links to our free quizzes and books for each unit.
முக்கிய விவரங்கள் · Key details
| அறிவிக்கை · Notification | எண் 11/2026 (விளம்பர எண் 747), 06.10.2026 |
| விண்ணப்பக் கடைசி நாள் · Last date | 05.11.2026, இரவு 11.59 மணி |
| விண்ணப்பத் திருத்தச் சாளரம் · Correction window | 09.11.2026 – 11.11.2026 |
| தேர்வு நாள் · Exam date | 10.01.2027, காலை 9.30 – மதியம் 12.30 |
| தரம் · Standard | பத்தாம் வகுப்பு (SSLC) · Code 496 |
| தேர்வு முறை · Mode | OMR, கொள்குறி வகை (Objective) – ஒரே தாள் |
தேர்வு முறை · Scheme of examination
| பகுதி · Part | பாடம் · Subject | கேள்விகள் | மதிப்பெண்கள் |
|---|---|---|---|
| அ · A | தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு · Tamil Eligibility-cum-Scoring Test | 100 | 150 |
| ஆ · B | பொது அறிவு · General Studies | 75 | 150 |
| இ · C | திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் · Aptitude and Mental Ability | 25 | |
| மொத்தம் · Total (3 மணி நேரம்) | 200 | 300 | |
- அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண் 90.
- பகுதி அ-வில் குறைந்தது 40% (60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பகுதி ஆ, இ விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்; தரவரிசைக்கு அ + ஆ + இ மொத்த மதிப்பெண் எடுக்கப்படும்.
- பகுதி அ கேள்விகள் தமிழில் மட்டும்; பகுதி ஆ, இ கேள்விகள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்.
- ஆங்கிலம் மட்டும் படித்த மாற்றுத்திறனாளிகள் பகுதி அ-க்குப் பதிலாக General English (SSLC தரம்) எழுதலாம் – அதற்கும் குறைந்தது 60 மதிப்பெண்கள் தேவை.
- அலகு வாரியான கேள்வி எண்ணிக்கை தோராயமானது; தேவைப்பட்டால் தேர்வாணையம் சிறிதளவு மாற்றலாம்.
அலகு I: இலக்கணம் 25 கேள்விகள்
எழுத்து: பிரித்து எழுதுதல் – சேர்த்து எழுதுதல் – சந்திப்பிழை – குறில், நெடில் வேறுபாடு – லகர, ளகர, ழகர வேறுபாடு – னகர, ணகர வேறுபாடு – ரகர, றகர வேறுபாடு – இனவெழுத்துகள் அறிதல் – சுட்டு எழுத்துகள் – வினா எழுத்துகள் – ஒருமைப் பன்மை அறிதல்.
சொல்: வேர்ச்சொல் அறிதல் – வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் – அயற்சொல் – தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் – வினைச்சொல் – எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் – இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு II: சொல்லகராதி 15 கேள்விகள்
(i) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல் – ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்; ஒருபொருள் பன்மொழி – இருபொருள் குறிக்கும் சொற்கள் – பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு – சொல்லும் பொருளும் அறிதல் – ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
(ii) கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் – (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) – வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் (முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் – (எ.கா.) ஊடகம் – தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) – சமூகம் – மக்கள் குழு (மக்கள் குழு, கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக – (எ.கா.) புதுச்சேரி – புதுவை, மன்னார்குடி – மன்னை, மயிலாப்பூர் – மயிலை; பிழை திருத்துக (எ.கா.) ஒரு – ஓர்; பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் – (எ.கா.) வெத்தில – வெற்றிலை, நாக்காலி – நாற்காலி;
(iii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் – (எ.கா.) நேத்து மழ பேஞ்சுது – நேற்று மழை பெய்தது; சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல்: மற்றும், அல்லது, ஆல், பிறகு, வரை, இதுவுமல்ல, இருப்பினும், எனினும், இதனால்; அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் – (எனவே, ஏனெனில், ஆகையால், அதுபோல, அதனால், வரை, பின்பு) – (எ.கா.) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் – மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம்; பொருள் தரும் ஓர் எழுத்து – (எ.கா.) ஆ – பசு, ஈ – கொடு, தை – மாதம், தீ – நெருப்பு; பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக – (எ.கா.) கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு III: எழுதும் திறன் 15 கேள்விகள்
(i) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் – தொடர் வகைகள் – செய்வினை, செயப்பாட்டு வினை – தன்வினை, பிறவினை – ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
(ii) மரபுத் தமிழ்: திணை மரபு – உயர்திணை: அம்மா வந்தது – அம்மா வந்தாள்; அஃறிணை: மாடுகள் நனைந்தது – மாடுகள் நனைந்தன; பால் மரபு: ஆண்பால்: அவன் வந்தது – அவன் வந்தான்; பெண்பால்: அவள் வந்தது – அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் – அவர்கள் வந்தனர்; ஒன்றன் பால்: அது வந்தன – அது வந்தது; பலவின் பால்: பறவைகள் பறந்தனர் – பறவைகள் பறந்தன; காலம்: நேற்று மழை பெய்யும் – நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் – நேற்று வந்தேன்; இளமைப் பெயர்: பசு – கன்று; ஆடு – குட்டி; ஒலிமரபு: நாய் கத்தியது – நாய் குரைத்தது; வினைமரபு: கூடைமுடை, சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் – ஆட்டு மந்தை; நிறுத்தல் குறியீடுகள்: கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி, வினாக்குறி அமையும் இடங்கள்.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு IV: கலைச் சொற்கள் 10 கேள்விகள்
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல், கல்வி, மருத்துவம், மேலாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் (உதாரணம்: search engine – தேடு பொறி, வலசை – Migration, ஒவ்வாமை – Allergy, மரபணு – Gene, கடல் மைல் – Nautical Mile).
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் 15 கேள்விகள்
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் – செய்தித்தாள் – தலையங்கம் – முகப்புச் செய்திகள் – அரசு சார்ந்த செய்திகள் – கட்டுரைகள் – இவற்றை வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் – உவமைத் தொடரின் பொருளறிதல் – மரபுத் தொடரின் பொருளறிதல் – பழமொழிகள் பொருளறிதல் – ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு 5 கேள்விகள்
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் – பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் (சான்று: pendrive, printer, computer, keyboard) – ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் – கடிதங்கள் – மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம்
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 15 கேள்விகள்
திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்): ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைக்கோடல், வினை செயல்வகை, அவையஞ்சாமை, கண்ணோட்டம், அன்புடைமை, கல்வி, நடுநிலைமை, கூடா ஒழுக்கம், கல்லாமை, செங்கோன்மை, பண்புடைமை, நட்பாராய்தல், புறங்கூறாமை, அருளுடைமை – மேற்கோள்கள்.
அறநூல் தொடர்பான செய்திகள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னாநாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்.
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் – தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்.
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள்: பாவேந்தர், டி.கே.சிதம்பரனாதர், தவத்திரு குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாரா பாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்.
குறிப்பு: அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான (SSLC) பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது.
பயிற்சி: இலவச பொதுத் தமிழ் quiz · பொதுத் தமிழ் முழுமையான கையேடு (குரூப் 2 · 2A · 4) · பொதுத் தமிழ் PYQ புத்தகம் · தமிழ்ச் சமூகம் & திருக்குறள் PYQ
அலகு I: பொது அறிவியல் 5 கேள்விகள்
பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள்; சுற்றுப்புறச் சூழல் அறிவியல்; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.
English
Nature of Universe – Measurement of physical quantities – General scientific laws in motion – force, pressure and energy – Everyday application of the basic principles of mechanics, electricity, magnetism, light, sound, heat and nuclear physics in our daily life; Elements and compounds, acids, bases, salts, petroleum products, fertilizers, pesticides, metallurgy and food adulterants; main concepts of life science, classification of living organisms, evolution, genetics, physiology, nutrition, health and hygiene, human diseases; Environmental science; Latest inventions in science and technology; Current affairs.
பயிற்சி: அறிவியல் quiz · அலகு I பாடநூல் · அறிவியல் PYQ
அலகு II: புவியியல் 5 கேள்விகள்
புவி அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்; போக்குவரத்து – தகவல் தொடர்பு; தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்; பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
English
Earth location – Physical features – Monsoon, rainfall, weather and climate – Water resources – Rivers – Soil, Minerals and Natural resources – Forest and Wildlife – Agriculture pattern; Transport – Communication; Population density and distribution in Tamil Nadu and India; Calamities – Disaster management – Environment – Climate change; Geographical landmarks; Current affairs.
பயிற்சி: புவியியல் quiz · அலகு II பாடநூல் · புவியியல் PYQ
அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் 10 கேள்விகள்
சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு; தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், தந்தை பெரியார், ஜவஹர்லால் நேரு, ரவீந்திரநாத் தாகூர், காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலெட்சுமி அம்மையார், மூவலூர் இராமாமிர்தம் மற்றும் பல தேசத் தலைவர்கள்; தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள்; இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.
English
Indus Valley Civilization – Guptas, Delhi Sultans, Mughals and Marathas – South Indian History; National Renaissance – Early uprising against British Rule – Indian National Congress – Emergence of Leaders – B.R. Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O. Chidambaranar, Thanthai Periyar, Jawaharlal Nehru, Rabindranath Tagore, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Rajaji, Subhash Chandra Bose, Muthulakshmi Ammaiyar, Muvalur Ramamirtham and other National Leaders; Different modes of agitation of Tamil Nadu and movements; Characteristics of Indian Culture, Unity in Diversity – Race, Language, Custom; India as a secular state.
பயிற்சி: வரலாறு quiz · தேசிய இயக்கம் quiz · அலகு III பாடநூல் · இந்திய வரலாறு PYQ · தேசிய இயக்கம் PYQ
அலகு IV: இந்திய ஆட்சியியல் 15 கேள்விகள்
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்; தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியியல் முறைகளும்; நடப்பு நிகழ்வுகள்.
English
Constitution of India – Preamble to the Constitution – Salient features of the Constitution – Union, State and Union Territory; Citizenship, Fundamental Rights, Fundamental Duties, Directive Principles of State Policy; Union Executive, Union Legislature – State Executive, State Legislature – Local Governments, Panchayat Raj; Spirit of federalism: Centre – State relationships; Election – Judiciary in India – Rule of Law; Corruption in public life – Anti-Corruption measures – Lokpal and Lokayukta – Right to Information – Empowerment of Women – Consumer Protection Forums – Human Rights Charter; Political parties and political system in Tamil Nadu and India; Current affairs.
பயிற்சி: ஆட்சியியல் quiz · அலகு IV பாடநூல் · ஆட்சியியல் PYQ
அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் 20 கேள்விகள்
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை; சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்; தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்; நலன்சார் அரசுத் திட்டங்கள்; தற்போதைய சமூக பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.
English
Nature of Indian economy – Five-year plan models – an assessment – Planning Commission and Niti Aayog; Sources of revenue – Reserve Bank of India – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax; Economic trends – Employment generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in Agriculture; Industrial growth – Rural Welfare oriented programmes – Social problems – Population, Education, Health, Employment, Poverty; Social Justice and Social Harmony as the cornerstones of socio-economic development; Education and Health systems in Tamil Nadu; Geography of Tamil Nadu and its impact on economic growth; Welfare schemes of Government; Current socio-economic issues; Current affairs.
பயிற்சி: பொருளாதாரம் quiz · தமிழகப் பொருளாதாரம் quiz · அலகு V (பகுதி 1) பாடநூல் · அலகு V (பகுதி 2) பாடநூல் · பொருளாதாரம் PYQ · தமிழ்நாடு நிர்வாகம் PYQ
அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் 20 கேள்விகள்
தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்; திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு; தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.
English
History of Tamil Society, related archaeological discoveries – Tamil Literature from Sangam age till contemporary times; Thirukkural – Significance as a Secular Literature – Relevance to everyday life – Impact of Thirukkural on Humanity – Thirukkural and Universal Values – Relevance to Socio-politico-economic affairs – Philosophical content in Thirukkural; Role of Tamil Nadu in freedom struggle – Early agitations against British Rule – Role of women in freedom struggle; Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu.
பயிற்சி: தமிழக வரலாறு quiz · அலகு VI பாடநூல் · தமிழ்ச் சமூகம் & திருக்குறள் PYQ
அலகு I: திறனறிவு 15 கேள்விகள்
சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM); விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
English
Simplification – Percentage – Highest Common Factor (HCF) – Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion – Simple interest – Compound interest – Area – Volume – Time and Work.
பயிற்சி: திறனறிவு quiz · திறனறிவு பாடநூல்
அலகு II: காரணவியல் 10 கேள்விகள்
தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை.
English
Logical reasoning – Puzzles – Dice – Visual reasoning – Alpha numeric reasoning – Number series.
பயிற்சி: திறனறிவு quiz · திறனறிவு பாடநூல்
அலகு வாரியான கேள்வி எண்ணிக்கை · Questions per unit
| பகுதி அ · Part A | கேள்விகள் |
|---|---|
| அலகு I – இலக்கணம் Grammar | 25 |
| அலகு II – சொல்லகராதி Vocabulary | 15 |
| அலகு III – எழுதும் திறன் Writing skills | 15 |
| அலகு IV – கலைச் சொற்கள் Technical terms | 10 |
| அலகு V – வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் Reading comprehension | 15 |
| அலகு VI – எளிய மொழி பெயர்ப்பு Simple translation | 5 |
| அலகு VII – இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் Literature, Tamil scholars and their service | 15 |
| பகுதி ஆ · Part B | |
| அலகு I – பொது அறிவியல் General Science | 5 |
| அலகு II – புவியியல் Geography | 5 |
| அலகு III – இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் History, Culture of India and Indian National Movement | 10 |
| அலகு IV – இந்திய ஆட்சியியல் Indian Polity | 15 |
| அலகு V – இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் Indian Economy and Development Administration in Tamil Nadu | 20 |
| அலகு VI – தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் History, Culture, Heritage and Socio-Political Movements of Tamil Nadu | 20 |
| பகுதி இ · Part C | |
| அலகு I – திறனறிவு Aptitude | 15 |
| அலகு II – காரணவியல் Reasoning | 10 |
ஆதாரம்: TNPSC அறிவிக்கை எண் 11/2026 (06.10.2026), இணைப்பு III – பாடத்திட்டம். இறுதித் தகவல்களுக்கு tnpsc.gov.in தளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையைப் பார்க்கவும்; ஐயம் இருந்தால் ஆங்கிலப் பதிப்பே இறுதியானது.
மேலும்: குரூப் 4 பயிற்சி – கட்டணம், batch · தேர்வு அட்டவணை 2026–27 · TNPSC PYQ quiz · TNPSC குறிப்புகள் · தினசரி நடப்பு நிகழ்வுகள் · பாடநூல் முழுத் தொகுப்பு (9 நூல்கள்)
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் · FAQ
TNPSC குரூப் 4 தேர்வு எப்போது? / When is the TNPSC Group 4 exam?
அறிவிக்கை எண் 11/2026-இன்படி குரூப் 4 எழுத்துத் தேர்வு 10.01.2027 அன்று காலை 9.30 முதல் 12.30 வரை நடைபெறும். The written exam is on 10 January 2027, 9.30 a.m. to 12.30 p.m.
குரூப் 4 தேர்வில் எத்தனை கேள்விகள்? / How many questions are there?
ஒரே தாள் – 200 கேள்விகள், 300 மதிப்பெண்கள், 3 மணி நேரம்: பகுதி அ தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு 100, பகுதி ஆ பொது அறிவு 75, பகுதி இ திறனறிவு 25. One paper of 200 questions (300 marks) in 3 hours.
பகுதி அ-வில் குறைந்தபட்ச மதிப்பெண் என்ன? / What is the minimum mark in Part A?
பகுதி அ-வில் குறைந்தது 40% (60 மதிப்பெண்கள்) பெற்றால் மட்டுமே பகுதி ஆ, இ மதிப்பீடு செய்யப்படும்; தரவரிசைக்கு மூன்று பகுதிகளின் மொத்த மதிப்பெண் எடுக்கப்படும். Parts B and C are evaluated only if you score at least 60 of 150 in Part A.
பகுதி அ எந்த மொழியில் இருக்கும்? / In which language are the questions?
பகுதி அ கேள்விகள் தமிழில் மட்டும்; பகுதி ஆ, இ கேள்விகள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும். Part A is in Tamil only; Parts B and C are in Tamil and English.
அலகு வாரியான கேள்வி எண்ணிக்கை மாறுமா? / Can the unit-wise number of questions change?
அறிவிக்கையின்படி அலகு வாரியான கேள்வி எண்ணிக்கை தோராயமானது (indicative); தேவைப்பட்டால் தேர்வாணையம் சிறிதளவு கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குரூப் 4 – 10 ஜனவரி 2027. கோவை, மதுரை வகுப்பறை மற்றும் ஆன்லைன் பயிற்சியில் சேருங்கள்.

