இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – வருவாய் ஆதாரங்கள், நிதிக் கொள்கை, சரக்கு மற்றும் சேவை வரி (பகுதி 2)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – வருவாய் ஆதாரங்கள், நிதிக் கொள்கை, சரக்கு மற்றும் சேவை வரி (பகுதி 2) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
ஒரு மசோதா பண மசோதாவா என்பதை முடிவு செய்பவர் யார்?

Correct Answer: C [மக்களவைத் தலைவர்]

விளக்கம்:

உறுப்பு 110(3): மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது.

2.  
FRBM சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் எது?

Correct Answer: D [5.7.2004]

விளக்கம்:

26.8.2003 = சட்டம் (ஒப்புதல்); 5.7.2004 = நடைமுறை.

3.  
2026-27 வரவு செலவு மதிப்பீட்டில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை இலக்கு (GDP-யில் விழுக்காடு) எவ்வளவு?

Correct Answer: B [4.3%]

விளக்கம்:

2025-26 திருத்திய மதிப்பீடு 4.4%.

4.  
பொருளாதார மந்தநிலையில் பொருத்தமான நிதிக் கொள்கை எது?

Correct Answer: A [பொதுச் செலவை உயர்த்தி வரியைக் குறைத்தல்]

விளக்கம்:

மந்தத்தில் விரிவாக்கக் கொள்கை; ரெப்போ வீதம் பணவியல் கருவி.

5.  
“வறுமையின் நச்சுச் சுழல்” கருத்தை முன்வைத்தவர் யார்?

Correct Answer: D [ராக்னர் நர்க்ஸ்]

விளக்கம்:

“ஒரு நாடு ஏழை, ஏனெனில் அது ஏழை.”

6.  
GST மன்றம் பற்றிக் கூறும் அரசியலமைப்பு உறுப்பு எது?

Correct Answer: C [279A]

விளக்கம்:

246A = GST சட்டமியற்றும் அதிகாரம்; 269A = IGST.

7.  
பின்வருவனவற்றில் GST-க்கு வெளியே உள்ளது எது?

Correct Answer: B [பெட்ரோல்]

விளக்கம்:

புகையிலை GST-க்கு உள்ளே (40%).

8.  
பொருள் விற்பனையாளருக்கான இணக்க வரித் திட்ட (Composition scheme) ஆண்டு விற்பனை வரம்பு எவ்வளவு?

Correct Answer: D [₹1.5 கோடி]

விளக்கம்:

₹75 லட்சம் = சிறப்புப் பிரிவு மாநிலங்கள்; ₹40 லட்சம் = பதிவு வரம்பு.

9.  
கூற்று (A): முதலீட்டு விலக்கல் ஒரு மூலதன வரவு ஆகும்.
காரணம் (R): அது அரசின் சொத்துகளைக் குறைக்கிறது.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true

Correct Answer: A []

விளக்கம்:

பொறுப்பை உருவாக்கும் அல்லது சொத்தைக் குறைக்கும் வரவு = மூலதன வரவு.

10.  
கூற்று (A): இந்திய வருமான வரி வளர்வீத வரி ஆகும்.
காரணம் (R): அது செலுத்தும் திறன் (Ability to pay) கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.

Correct Answer: A []

விளக்கம்:

செல்வந்தர் அதிக வீதம் செலுத்துவதே செலுத்தும் திறன் கோட்பாடு.

11.  
பொதுச் செலவுக் கோட்பாடுகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. பீகாக்–வைஸ்மேன் கருதுகோள் 1961-இல் வெளியானது.
  2. நெருக்கடியில் உயர்ந்த செலவு, நெருக்கடிக்குப் பின்னும் பழைய அளவுக்குத் திரும்பாது (இடப்பெயர்ச்சி விளைவு).
  3. வாக்னர் ஒரு பிரெஞ்சுப் பொருளியலாளர்.

Correct Answer: A [1, 2 மட்டும்]

விளக்கம்:

அடால்ஃப் வாக்னர் ஜெர்மானியர்.

12.  
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
  1. 2017 முதல் ஒன்றிய வரவு செலவுத் திட்டம் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படுகிறது.
  2. இரயில்வே வரவு செலவுத் திட்டம் 2017-இல் பொதுத் திட்டத்துடன் இணைக்கப்பட்டது.
  3. மாநிலங்களவை பண மசோதாவை நிராகரிக்கலாம்.

Correct Answer: C [1, 2 மட்டும்]

விளக்கம்:

மாநிலங்களவை பண மசோதாவை நிராகரிக்கவோ திருத்தவோ இயலாது; பரிந்துரை மட்டும்.

13.  
கூற்று (A): பணம் அச்சிடுவதன் மூலம் செய்யப்படும் பற்றாக்குறை நிதியாக்கம் பணவீக்கத்தை உண்டாக்கலாம்.
காரணம் (R): அது உற்பத்திக்கு இணையான உயர்வின்றிப் பண அளிப்பை உயர்த்துகிறது.

Correct Answer: A []

விளக்கம்:

அதிகப் பணம், அதே அளவு பொருள் ➜ விலை உயர்வு.

14.  
வருவாய்ச் செலவு ₹100, மூலதனச் செலவு ₹25, வருவாய் வரவு ₹80, கடன் அல்லாத மூலதன வரவு ₹5, வட்டிச் செலுத்தல் ₹10 (கோடி) எனில் முதன்மைப் பற்றாக்குறை எவ்வளவு?

Correct Answer: B [₹30 கோடி]

விளக்கம்:

நிதிப் பற்றாக்குறை = 125 − 85 = 40; முதன்மை = 40 − 10 = 30; வருவாய்ப் பற்றாக்குறை = 20.

15.  
பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
  1. ரெப்போ வீதம் நிதிக் கொள்கைக் கருவி.
  2. பொதுக் கடன் நிதிக் கொள்கைக் கருவி.
  3. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தச் சுருக்க நிதிக் கொள்கை பயன்படும்.

Correct Answer: B [2, 3 மட்டும்]

விளக்கம்:

ரெப்போ வீதம் பணவியல் கொள்கைக் கருவி.

16.  
கூற்று (A): இந்தியாவில் நிதிக் கொள்கையைச் செயல்படுத்துவது இந்திய ரிசர்வ் வங்கி.
காரணம் (R): ரெப்போ வீதத்தை முடிவு செய்வது ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு.

Correct Answer: D []

விளக்கம்:

நிதிக் கொள்கை = அரசு; கூற்று தவறு; காரணம் சரி.

17.  
GST மன்றம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. முடிவுக்கு வாக்களிப்போரின் எடையிட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு தேவை.
  2. ஒன்றிய அரசின் வாக்குக்கு மூன்றில் ஒரு பங்கு எடை.
  3. நிறைவெண் மொத்த உறுப்பினரில் மூன்றில் ஒரு பங்கு.

Correct Answer: C [1, 2 மட்டும்]

விளக்கம்:

நிறைவெண் = மொத்த உறுப்பினரில் பாதி.

18.  
பொருத்துக:
a. 1.7.20171. GST மன்றத்தின் 56-ஆவது கூட்டம்
b. 101-ஆவது திருத்தம் 2. 2016
c. GSTAT3. 24.9.2025
d. 3.9.20254. GST நடைமுறை

Correct Answer: C [4 2 3 1]

விளக்கம்:

GST நடைமுறை 1.7.2017; 101-ஆவது திருத்தம் 2016; GSTAT 24.9.2025; 56-ஆவது கூட்டம் 3.9.2025.

19.  
22.9.2025-க்குப் பின் தமிழ்நாட்டுக்குள் ₹100 மதிப்புள்ள குளியல் சோப்புக் கட்டி வாங்கினால் செலுத்தும் GST:

Correct Answer: B [CGST ₹2.50 + SGST ₹2.50]

விளக்கம்:

5% = 2.5% + 2.5%; மாநிலத்துக்குள் IGST இல்லை.

20.  
கூற்று (A): GST அடுக்கு வரி விளைவை (Cascading effect) நீக்குகிறது.
காரணம் (R): உள்ளீட்டு வரி வரவு (Input tax credit) மூலம் உள்ளீடுகளுக்குச் செலுத்திய வரியைக் கழித்துக்கொள்ளலாம்.

Correct Answer: A []

விளக்கம்:

வரி மீது வரி இல்லை; ஒவ்வொரு நிலையிலும் மதிப்புக் கூட்டலுக்கு மட்டும் வரி.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0