இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
← திரும்பச் செல்ல
CERC – Consumer Education and Research Centre, அகமதாபாத் (1978) – நுகர்வோர் உரிமைகளுக்காகச் செயல்படும் அமைப்பு.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி – 22 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
JR 2023
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் தேசியச் சராசரி எழுத்தறிவு விகிதம்Correct Answer: A [74.04%]
விளக்கம்:
2011 தற்காலிகக் கணக்கெடுப்பு எண்: 74.04% (ஆண் 82.14%, பெண் 65.46%). அதிகம் – கேரளம்; குறைவு – பீகார் (61.8%).
2.
EO Gr. III (HR&CE) 2022
2011 கணக்கெடுப்பின்படி மாநிலங்களின் எழுத்தறிவு விகிதங்களைப் பொருத்துக :(a) கேரளம் – 1. 93.99%
(b) தமிழ்நாடு – 2. 75.36%
(c) கர்நாடகம் – 3. 67.02%
(d) ஆந்திரப் பிரதேசம் – 4. 80.09%
Correct Answer: B [1 4 2 3]
விளக்கம்:
கேரளம் சுமார் 94%, தமிழ்நாடு 80.09%, கர்நாடகம் 75.36%, (பிரிக்கப்படாத) ஆந்திரப் பிரதேசம் 67.02%. (குறிப்பு: TNPSC வினாவில் கேரளம் 93.99% என உள்ளது; 2011 தற்காலிக எண் 93.91%.)
3.
DPGS 2022
கல்வித் திட்டமிடலில் திறன் வளர்ப்பைக் (Capacity Building) கையாளும் நிறுவனம் எது?Correct Answer: D [NUEPA]
விளக்கம்:
தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் (NUEPA; இப்போது NIEPA, புது தில்லி) கல்வித் திட்டமிடல், நிர்வாகத் துறையில் ஆய்வும் திறன் வளர்ப்பும் மேற்கொள்கிறது.
4.
EO Gr. III (HR&CE) 2022
பள்ளிக் கல்வித் தரக் குறியீட்டை (SEQI) அறிமுகப்படுத்திய அமைப்பு எது?Correct Answer: B [நிதி ஆயோக்]
விளக்கம்:
SEQI 2019-இல் நிதி ஆயோக் வெளியிட்டது (2016–17 தரவு). பிரதம் அமைப்பு வெளியிடுவது ASER அறிக்கை.
5.
Asst. Public Prosecutor Gr. II 2025
செயல்திறன் தரக் குறியீடு (PGI) எதைக் காட்டுகிறது?Correct Answer: D [பள்ளிக் கல்வியின் நிலை]
விளக்கம்:
மத்தியக் கல்வி அமைச்சகத்தின் PGI மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வி அமைப்பை மதிப்பிடுகிறது.
6.
Group 1 2022
தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) ஒட்டுமொத்தத் தரவரிசையில் முதலிடம் பெற்ற நிறுவனம் எது?Correct Answer: A [IIT, சென்னை]
விளக்கம்:
NIRF (மத்தியக் கல்வி அமைச்சகம், 2016 முதல்) ஒட்டுமொத்தப் பிரிவில் IIT சென்னை 2019 முதல் 2025 வரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முதலிடம் பெற்றுள்ளது (NIRF 2025, 4 செப்டம்பர் 2025 – PIB). பல்கலைக்கழகப் பிரிவில் IISc பெங்களூரு முதலிடம்.
7.
Group 1 2022
மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2022-இல் சேர்க்கப்பட்ட சரத்து / சரத்துகள் எவை?1. கதி சக்தி விஸ்வவித்யாலயா நிறுவுதல்
2. இயற்பியல் அறிவியல் தொடர்பான துறைகளில் உயர்தரக் கற்பித்தல், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு
3. மாநிலப் பல்கலைக்கழகங்களை மத்தியப் பல்கலைக்கழகங்களாகத் தரம் உயர்த்துதல்
4. போக்குவரத்து, தொழில்நுட்பம், மேலாண்மை தொடர்பான துறைகளில் உயர்தரக் கற்பித்தல், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு
Correct Answer: D [1, 4]
விளக்கம்:
இச்சட்டம் வதோதராவிலுள்ள தேசிய இரயில் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) "கதி சக்தி விஸ்வவித்யாலயா" என்ற மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றியது; போக்குவரத்து, தொழில்நுட்பம், மேலாண்மைத் துறைகளில் கல்வி, ஆராய்ச்சி அதன் நோக்கம்.
8.
DEO 2023
"பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ" (பெண் குழந்தையைக் காப்போம், படிக்க வைப்போம்) திட்டத்தின் நோக்கங்களில் எது உண்மையல்ல?(i) பாலினச் சார்பான, பாலினத் தேர்வு அழிப்பைத் தடுத்தல்
(ii) பெண் குழந்தையின் உயிர்வாழ்வை உறுதி செய்தல்
(iii) பெண் குழந்தையின் கல்வி, பங்கேற்பை உறுதி செய்தல்
(iv) பெண்களுக்குச் சுயவேலைவாய்ப்பு மட்டும் வழங்குதல்
Correct Answer: D [(iv) மட்டும்]
விளக்கம்:
BBBP 22 ஜனவரி 2015 அன்று ஹரியானாவின் பானிபட்டில் தொடக்கம்; குழந்தை பாலின விகிதம் (CSR) சரிவைத் தடுப்பதே முக்கிய நோக்கம். (i), (ii), (iii) அதன் மூன்று நோக்கங்கள்; சுயவேலைவாய்ப்பு அதன் நோக்கமல்ல.
9.
EO Gr. I (HR&CE) 2024
பொருத்துக :(a) பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ – 1. மனித வணிகக் கடத்தல் தடுப்பு
(b) RGSEAG (சப்லா) – 2. பாலின விகித முன்னேற்றம், பெண் கல்வி உறுதி
(c) IGMSY – 3. வளரிளம் பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றம்
(d) உஜ்ஜவாலா – 4. கர்ப்பிணி, பாலூட்டும் பெண்களுக்குப் பண ஊக்கத்தொகை
Correct Answer: C [2 3 4 1]
விளக்கம்:
RGSEAG – ராஜீவ் காந்தி வளரிளம் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம் (சப்லா, 2010); IGMSY – இந்திரா காந்தி மாத்ரித்வ சஹ்யோக் யோஜனா (2010; இப்போது PMMVY); உஜ்ஜவாலா (2007) – கடத்தல் தடுப்பு, மீட்பு, மறுவாழ்வு.
10.
Group 1 2024
பொருத்துக :(a) PM e-வித்யா – 1. அடிப்படைக் கருத்துகள், பயன்பாட்டு வினாக்கள், உயர்நிலைச் சிந்தனை சோதனை
(b) PM போஷன் சக்தி நிர்மாண் – 2. தன்னார்வலர்கள் பள்ளிகளுக்குச் சொத்துகள் / பொருள்கள் / உபகரணங்கள் வழங்குதல்
(c) வித்யாஞ்சலி 2.0 – 3. டிஜிட்டல் கல்வி மூலம் ஒருங்கிணைந்த பன்முறைக் கல்வி அணுகல்
(d) SAFAL – 4. பள்ளியில் கூடுதல் ஊட்டச்சத்து வழங்குதல்
Correct Answer: C [3 4 2 1]
விளக்கம்:
PM e-Vidya (2020) – டிஜிட்டல் / இணைய / தொலைக்காட்சிக் கல்வி; PM POSHAN (2021) – மதிய உணவுத் திட்டத்தின் புதிய பெயர்; வித்யாஞ்சலி – பள்ளிகளுக்குத் தன்னார்வப் பங்களிப்பு; SAFAL (CBSE) – கற்றல் விளைவுகளுக்கான கட்டமைப்பு மதிப்பீடு.
11.
CTS (Interview Posts) 2025
காலவரிசைப்படுத்துக :(1) மதிய உணவுத் திட்டம்
(2) தேசியக் குழந்தைகள் கொள்கை
(3) தேசியக் குழந்தைத் தொழிலாளர் கொள்கை
(4) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் (ICDS)
Correct Answer: C [(2), (4), (3), (1)]
விளக்கம்:
தேசியக் குழந்தைகள் கொள்கை (1974) → ICDS (1975) → தேசியக் குழந்தைத் தொழிலாளர் கொள்கை (ஆகஸ்ட் 1987; ACF 2023 தேர்வில் இந்த ஆண்டு தனியாகக் கேட்கப்பட்டது) → தேசிய மதிய உணவுத் திட்டம் (1995).
12.
Group 2A Mains (Re-exam) 2026
சமக்ர சிக்ஷா உள்ளடக்கிய முந்தைய மூன்று திட்டங்கள்Correct Answer: C [சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக்ஷா அபியான், ஆசிரியர் கல்வி]
விளக்கம்:
சமக்ர சிக்ஷா (2018–19) முன்பருவம் முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒரே ஒருங்கிணைந்த திட்டம்: SSA (2001), RMSA (2009), ஆசிரியர் கல்வி (CSSTE) இணைக்கப்பட்டன.
13.
Asst. Public Prosecutor Gr. II 2026
தேசியக் கல்விக் கொள்கை 2020 குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு முக்கியமான அடிப்படைக் கட்டமாகக் (Foundational Stage) கருதும் வயதுCorrect Answer: B [3–8 வயது]
விளக்கம்:
NEP 2020-இன் 5+3+3+4 அமைப்பு: அடிப்படை (3–8 வயது; 3 ஆண்டு முன்பருவம் + 1, 2 வகுப்புகள்), ஆயத்தம் (8–11), நடுநிலை (11–14), இடைநிலை (14–18).
14.
Group 2A Mains (Re-exam) 2026
பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள் :கூற்று [A] : நமது சமூக மற்றும் தொழில்நுட்பத் திறன்களில் பெரும்பகுதி கவனமாக வழங்கப்பெறும் அறிவுறுத்தல்கள் மூலம் பெறப்படுகிறது.
காரணம் [R] : கல்வியை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் 2025-26 ஆம் ஆண்டில் ₹1.29 இலட்சம் கோடி நிதியை ஒதுக்குகிறது.
Correct Answer: D [[A], [R] இரண்டும் சரி; ஆனால் [R], [A]-க்குச் சரியான விளக்கம் அல்ல]
விளக்கம்:
[A] – திறன்கள் பெரும்பாலும் திட்டமிட்ட கற்பித்தல் (கல்வி, பயிற்சி) மூலமே பெறப்படுகின்றன – சரி. [R] – 2025-26 வரவு–செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சகத்துக்கு ₹1,28,650 கோடி (≈ ₹1.29 இலட்சம் கோடி) ஒதுக்கப்பட்டது (PIB) – சரி.
15.
Group 2A Mains (Re-exam) 2026
கல்வித் துறை குறித்த 2025–26 மத்திய நிதிநிலை அறிக்கை பற்றிய கூற்றுகளில் எவை உண்மை?(i) மாணவர்களிடையே புத்தாக்கம், தொழில்முனைவை வளர்க்க அடுத்த ஐந்தாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் நிறுவப்படும்
(ii) பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து அரசு இடைநிலைப் பள்ளிகளும் அகண்ட அலைவரிசை இணைப்பு பெறும்
(iii) கல்விக்கான செயற்கை நுண்ணறிவில் (AI) சிறப்பு மையம் நிறுவப்படும்
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
2025–26 நிதிநிலை அறிக்கையில் மூன்று அறிவிப்புகளும் இடம்பெற்றன (AI சிறப்பு மையத்துக்கு ₹500 கோடி). வினாவில் "Bharat Project" என்பது பாரத்நெட் திட்டம்.
16.
Group 2A Mains (Re-exam) 2026
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :(1) தேசிய எழுத்தறிவு இயக்கம் – 1989-இல் தொடக்கம்
(2) எர்ணாகுளம் எழுத்தறிவுப் பிரச்சாரத்தின் வெற்றி – 1990
(3) புதிதாக எழுத்தறிவு பெற்றோருக்கான தொடர் கல்வி – 1995-இல் ஒப்புதல்
(4) தேசிய வயதுவந்தோர் கல்வித் திட்டம் – 1976
Correct Answer: B [(2), (3) சரி]
விளக்கம்:
NLM 5 மே 1988-இல் தொடக்கம்; NAEP 2 அக்டோபர் 1978-இல் தொடக்கம் – எனவே (1), (4) தவறு. எர்ணாகுளம் 1990-இல் முழு எழுத்தறிவு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது; புதிதாக எழுத்தறிவு பெற்றோருக்கான தொடர் கல்வித் திட்டம் 1995-இல் ஒப்புதல் பெற்றது.
17.
Asst. Public Prosecutor Gr. II 2025
பின்வருவனவற்றில் எது தவறு?(1) SCERT – மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
(2) NCERT – தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
(3) NCFTE – கற்பித்தல் மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு
(4) NETF – தேசியக் கல்வித் தொழில்நுட்ப மன்றம்
Correct Answer: B [(3) மட்டும்]
விளக்கம்:
NCFTE = National Curriculum Framework for Teacher Education (ஆசிரியர் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு, 2009). NETF – NEP 2020 பரிந்துரைத்த தேசியக் கல்வித் தொழில்நுட்ப மன்றம்.
18.
Group 2A Mains (Re-exam) 2026
பின்வருவனவற்றில் எவை தவறாகப் பொருந்தியுள்ளன?(1) NEET – தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு
(2) NEP – தேசியக் கல்விக் கொள்கை
(3) NCF – தேசியக் கவுன்சில் கட்டமைப்பு
(4) NCTE – ஆசிரியர் கல்விக்கான தேசிய ஆணையம்
Correct Answer: D [(3), (4) தவறு]
விளக்கம்:
NCF = National Curriculum Framework (தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு); NCTE = National Council for Teacher Education (ஆசிரியர் கல்விக்கான தேசியக் குழுமம்; NCTE சட்டம் 1993; 1 ஜூலை 1995 முதல் சட்டப்பூர்வ அமைப்பு – கல்வி அமைச்சகம்).
19.
Group 2A Mains (Re-exam) 2026
பின்வருவனவற்றில் எவை சரியாகப் பொருந்துகின்றன?(1) IPEC – குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான பன்னாட்டுத் திட்டம்
(2) EFA – கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி
(3) CRC – குழந்தைகள் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை
(4) ICC – குழந்தைகளுக்கான உட்குழு
Correct Answer: A [(1), (3)]
விளக்கம்:
IPEC – பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் (ILO) திட்டம் (1992); CRC – ஐ.நா. உடன்படிக்கை (1989). EFA = Education for All (அனைவருக்கும் கல்வி); ICC = Internal Complaints Committee (பணியிடப் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் 2013).
20.
Special Competitive Exam 2025
"ஸ்ரேஷ்டா" (SHRESHTA) திட்டத்தை அறிமுகப்படுத்திய ஒன்றிய அமைச்சகம் எது?Correct Answer: A [சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்]
விளக்கம்:
SHRESHTA – இலக்குப் பகுதிகளின் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்: பட்டியல் சாதி மாணவர்களுக்குச் சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளில் 9, 11-ஆம் வகுப்புச் சேர்க்கை (2022).
21.
AAO & AHO 2024
கல்வி என்பது ஒருCorrect Answer: D [இரண்டும்]
விளக்கம்:
கல்வி தற்போதைய மனநிறைவைத் தருவதால் நுகர்வுப் பண்டம்; எதிர்கால உற்பத்தித் திறனையும் வருமானத்தையும் உயர்த்துவதால் மனித மூலதனத்தில் முதலீடு.
22.
DEO 2023
CERC-இன் விரிவாக்கம் என்ன?Correct Answer: B [நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்]
விளக்கம்:
CERC – Consumer Education and Research Centre, அகமதாபாத் (1978) – நுகர்வோர் உரிமைகளுக்காகச் செயல்படும் அமைப்பு.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
