இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம் – 27 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
CBT 2022
சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடு :
(1) பாலின விகிதம் – 1000 ஆண்களுக்குப் பெண்களின் எண்ணிக்கை
(2) IMR – ஒரு இலட்சம் பிரசவங்களுக்குத் தாய் இறப்பு
(3) MMR – ஒரு வயது நிறைவதற்குள் குழந்தை இறப்பு
(4) மக்கள் அடர்த்தி – ஒரு சதுர கி.மீ.-இல் வசிக்கும் மக்கள்தொகை

Correct Answer: B [(1), (4) சரி]

விளக்கம்:

(2), (3) வரையறைகள் இடம் மாறியுள்ளன: IMR – 1000 உயிருள்ள பிறப்புகளுக்கு ஒரு வயதுக்குள் இறக்கும் குழந்தைகள்; MMR – 1,00,000 உயிருள்ள பிறப்புகளுக்குத் தாய் இறப்பு (மேலுள்ள அட்டவணை).

2.  
ACF 2023
குழந்தை இறப்பு விகிதம் (IMR) எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Correct Answer: B [ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பிறந்த 1000 குழந்தைகளில் 1 வயதுக்குள் இறந்தவை]

விளக்கம்:

IMR = (ஓர் ஆண்டில் ஒரு வயதுக்குள் இறந்த குழந்தைகள் ÷ அதே ஆண்டின் உயிருள்ள பிறப்புகள்) × 1000. (குறிப்பு: TNPSC வினாவில் "Ratio" என அச்சாகியிருந்தது; சரியான சொல் "Rate".)

3.  
DEO 2023
மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) அளவிடுவது

Correct Answer: D [ஒரு பெண் தன் முழு இனப்பெருக்கக் காலத்தில் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை]

விளக்கம்:

A – பிறப்பு விகிதம்; B – இறப்பு விகிதம்; C – MMR; D – TFR. மாற்றீட்டு நிலை TFR = 2.1.

4.  
Group 2 2022
நிதி ஆயோக்கின் சுகாதாரக் குறியீட்டின்படி (2021) இந்தியாவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாநிலங்கள்

Correct Answer: B [கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா]

விளக்கம்:

நான்காம் சுற்று சுகாதாரக் குறியீடு (2019–20 தரவு, டிசம்பர் 2021 வெளியீடு) – பெரிய மாநிலங்களில் கேரளம், தமிழ்நாடு, தெலங்கானா முதல் மூன்று; உத்தரப் பிரதேசம் கடைசி.

5.  
VCGS 2022
பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜனா ஏழை, பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு இரண்டாம், மூன்றாம் நிலை மருத்துவமனைச் சிகிச்சைக்காக ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ________ சுகாதாரக் காப்பீடு வழங்குகிறது.

Correct Answer: C [₹5 இலட்சம்]

விளக்கம்:

ஆயுஷ்மான் பாரத் PM-JAY (23 செப்டம்பர் 2018, ராஞ்சி): ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 இலட்சம்; உலகின் மிகப்பெரிய அரசு நிதியிலான சுகாதார உறுதித் திட்டம்.

6.  
Group 1 2022
கீழ்க்காண்பவற்றுள் எது போஷன் 2.0 இயக்கத்தில் கவனிக்கப்படாதது?

Correct Answer: D [முதியோரின் ஊட்டச்சத்துக் குறைபாடு]

விளக்கம்:

சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 (2021): குழந்தைகள் (0–6), வளரிளம் பெண்கள் (14–18), கர்ப்பிணி / பாலூட்டும் தாய்மார் ஆகியோரின் ஊட்டச்சத்து; முதியோர் இதில் இல்லை.

7.  
DEO 2023
பின்வருவனவற்றுள் எது / எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
I. வாத்சல்யா இயக்கம் – திருநங்கைகளின் விரிவான மறுவாழ்வு
II. சக்தி இயக்கம் – பெண்களுக்கு வாழ்க்கைச் சுழற்சி முழுமைக்குமான குடிமக்கள் மைய ஆதரவு
III. போஷன் 2.0 இயக்கம் – குழந்தைகள், சிறுமிகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுச் சவால்களைக் கையாளுதல்
IV. SMILE திட்டம் – பிச்சை எடுப்பவர்களின் விரிவான மறுவாழ்வு

Correct Answer: C [II, III, IV மட்டும்]

விளக்கம்:

மிஷன் வாத்சல்யா – குழந்தைப் பாதுகாப்புச் சேவைகள் (பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்); எனவே I தவறு. SMILE (சமூக நீதி அமைச்சகம், 2022) – திருநங்கைகள், பிச்சை எடுப்போர் இருவரின் மறுவாழ்வுக்கும் துணைத் திட்டங்கள் கொண்டது.

8.  
Fisheries Dept. 2023
மகிளா கிசான் சஷக்திகரண் பரியோஜனா (MKSP) பற்றிய கூற்றுகளில் எவை சரியானவை?
(1) இது 2019-இல் தொடங்கப்பட்டது
(2) முறையான முதலீடுகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
(3) பெண்களை விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல்
(4) குடும்ப அளவில் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்

Correct Answer: A [2, 4 சரி]

விளக்கம்:

MKSP 2011-இல் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (NRLM) துணைத் திட்டமாகத் தொடக்கம் – வேளாண்மையில் பெண்களின் பங்கேற்பையும் உற்பத்தித் திறனையும் உயர்த்த முறையான முதலீடு, குடும்ப உணவு / ஊட்டச்சத்துப் பாதுகாப்பு. எனவே 1, 3 தவறு.

9.  
Group 2A Mains (Re-exam) 2026 · Bursar 2023
பொருத்துக :
(a) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் – 1. 1982
(b) சத்துணவுத் திட்டம் – 2. 2006
(c) தொடக்கக் கல்விக்கான ஊட்டச்சத்து ஆதரவுத் தேசியத் திட்டம் – 3. 1975
(d) உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயச் சட்டம் – 4. 1995

Correct Answer: C [3 1 4 2]

விளக்கம்:

ICDS – 2 அக்டோபர் 1975; தமிழ்நாடு சத்துணவுத் திட்டம் – 1 ஜூலை 1982 (எம்.ஜி.ஆர்.); NP-NSPE (மதிய உணவு) – 15 ஆகஸ்ட் 1995 (Bursar 2023 தேர்வில் இத்தேதி கேட்கப்பட்டது); FSSA – 2006.

10.  
Geology Service 2023
பின்வரும் திட்டங்களில் 0–6 வயதுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து, சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பானது எது?

Correct Answer: A [ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் (ICDS)]

விளக்கம்:

ICDS (1975) அங்கன்வாடி மையங்கள் மூலம் 0–6 வயதுக் குழந்தைகள், கர்ப்பிணி / பாலூட்டும் தாய்மாருக்குக் கூடுதல் ஊட்டச்சத்து, தடுப்பூசி, சுகாதாரப் பரிசோதனை, முன்பருவக் கல்வி வழங்குகிறது.

11.  
Group 1 2024
ஜனனி சுரக்ஷா யோஜனா தொடர்பான வாக்கியங்களைக் கருதிச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) மகப்பேறு இறப்பு விகிதம், குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது
(2) 100% மத்திய அரசு நிதியுதவி பெறுகிறது
(3) 100% மாநில அரசு நிதியுதவி பெறுகிறது

Correct Answer: A [(1), (2)]

விளக்கம்:

JSY (2005, தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ்) ஏழைக் கர்ப்பிணிகளிடையே மருத்துவமனைப் பிரசவத்தை (Institutional Delivery) ஊக்குவித்து தாய், பச்சிளங்குழந்தை இறப்பைக் குறைக்கும் 100% மத்திய நிதியுதவித் திட்டம்.

12.  
CTS (ITI Posts – Level II) 2025
________ மகப்பேறு, குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

Correct Answer: C [தேசிய ஊரக சுகாதார இயக்கம் 2005]

விளக்கம்:

NRHM (12 ஏப்ரல் 2005) – ஊரகச் சுகாதாரம், குறிப்பாக இனப்பெருக்க, தாய்–சேய் நலம் (RMNCH+A); ASHA பணியாளர், JSY இதன் கீழ். 2013 முதல் NUHM-உடன் சேர்ந்து தேசிய சுகாதார இயக்கம் (NHM).

13.  
Veterinary Asst. 2023
ASHA என்பதன் விரிவாக்கம்

Correct Answer: A [அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்]

விளக்கம்:

NRHM (2005) கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் (சுமார் 1000 மக்களுக்கு ஒருவர்) சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பெண் சுகாதார ஆர்வலர்.

14.  
JR 2023
காயகல்ப் விருது எந்தத் துறையுடன் தொடர்புடையது?

Correct Answer: B [பொதுச் சுகாதாரம்]

விளக்கம்:

காயகல்ப் (2015, சுகாதார அமைச்சகம், ஸ்வச் பாரத் இயக்கத்தின் ஒரு பகுதி) – தூய்மை, சுகாதாரம், தொற்றுக் கட்டுப்பாட்டில் சிறந்த அரசு மருத்துவமனைகள் / சுகாதார நிலையங்களுக்கு விருது.

15.  
CTS (ITI Posts) 2024
தேசியக் குடற்புழு நீக்க நாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?
I. இது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முன்முயற்சி
II. 1 முதல் 19 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்குமானது
III. இது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15-இல் செயல்படுத்தப்படுகிறது

Correct Answer: B [I, II]

விளக்கம்:

தேசியக் குடற்புழு நீக்க நாள் (2015 முதல்) ஆண்டுக்கு இருமுறை – 10 பிப்ரவரி, 10 ஆகஸ்ட் – 1–19 வயதுக் குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை. எனவே III தவறு.

16.  
Group 2/2A 2025
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
(1) NHS – தேசிய சுகாதார சேவை
(2) CBHI – சுகாதாரக் காப்பீட்டுக்கான மத்தியப் பணியகம்
(3) PHC – ஆரம்ப சுகாதார நிலையம்
(4) NRHM – தேசிய ரியல் சுகாதார இயக்கம்

Correct Answer: A [(1), (3) சரி]

விளக்கம்:

CBHI = Central Bureau of Health Intelligence (மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பணியகம், 1961); NRHM = National Rural Health Mission. எனவே (2), (4) தவறு.

17.  
Group 2A Mains 2025
சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் :
(1) PMSSY – பிரதமர் ஸ்வாஸ்த்ய சுரக்ஷா யோஜனா
(2) NTEP – தேசியப் புகையிலை ஒழிப்புத் திட்டம்
(3) NVBDCP – தேசியத் திசையன்வழி நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
(4) JSSK – ஜனனி சிக்ஷா சுரக்ஷா கார்யக்ரம் (தாய் கல்விப் பாதுகாப்புத் திட்டம்)

Correct Answer: C [(1), (3) சரி]

விளக்கம்:

NTEP = National Tuberculosis Elimination Programme (தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டம்); JSSK = Janani Shishu Suraksha Karyakram (தாய்–சேய் இலவசப் பிரசவ, சிகிச்சைத் திட்டம், 2011). PMSSY (2003) – AIIMS போன்ற நிறுவனங்கள் அமைத்தல்.

18.  
CTS (Non-Interview Posts) 2025
பின்வரும் சுகாதாரத் திட்டங்களைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக :
(1) தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்
(2) தேசிய யானைக்கால் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
(3) தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம்
(4) தேசியப் பெரியம்மை ஒழிப்புத் திட்டம்

Correct Answer: B [(3), (2), (1), (4)]

விளக்கம்:

குடும்பக் கட்டுப்பாடு (1952) → யானைக்கால் நோய்க் கட்டுப்பாடு (1955) → மலேரியா ஒழிப்பு (1958; முன்பு 1953 மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டம்) → பெரியம்மை ஒழிப்பு (1962).

19.  
Group 2A Mains (Re-exam) 2026
பொருத்துக :
(a) இரத்தசோகையற்ற இந்தியா – 1. 2021
(b) பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கம் – 2. 2017
(c) மனநலப் பாதுகாப்புச் சட்டம் – 3. 2018
(d) கருக்கலைப்பு (திருத்த) சட்டம் – 4. 2016

Correct Answer: C [3 4 2 1]

விளக்கம்:

இரத்தசோகையற்ற இந்தியா – 2018; PMSMA – 2016 (ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி கர்ப்பிணிகளுக்கு இலவசப் பரிசோதனை); மனநலப் பாதுகாப்புச் சட்டம் – 2017; MTP திருத்தச் சட்டம் – 2021 (பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானோர், சிறுமியர் போன்ற சிறப்புப் பிரிவுப் பெண்களுக்குக்…

20.  
Group 2A Mains (Re-exam) 2026
தேசியப் புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (NTCP) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i) இது பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது தொடங்கப்பட்டது
(ii) இத்திட்டம் மூன்றடுக்குக் கட்டமைப்பின் மூலம் செயல்படுத்தப்படுகிறது
(iii) இத்திட்டத்தின் கீழ் தேசியப் புகையிலை நிறுத்த உதவி அழைப்புச் சேவை நிறுவப்பட்டுள்ளது
(iv) "புகையிலையற்ற இளைஞர் பிரச்சாரம்" என்ற இளைஞர் மைய முயற்சி 2023-இல் தொடங்கப்பட்டது

Correct Answer: B [(ii), (iii), (iv) மட்டும்]

விளக்கம்:

NTCP 2007–08-இல் பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் தொடங்கப்பட்டது; எனவே (i) தவறு. தேசிய / மாநில / மாவட்ட அளவிலான மூன்றடுக்கு அமைப்பு; தேசியப் புகையிலை நிறுத்த அழைப்புச் சேவை (1800-11-2356) இதன் கீழ் இயங்குகிறது.

21.  
Group 2A Mains (Re-exam) 2026
நீடித்த வளர்ச்சி இலக்கு 2-இன் முக்கிய நோக்கங்கள் தொடர்பான சரியான கூற்று(களை)த் தேர்வு செய்யவும்.
(1) குழந்தைகளின் வளர்ச்சிக் குன்றல், மெலிவு, பெண்களின் இரத்தசோகை ஆகியவற்றில் கவனம் செலுத்தி அனைத்து வகை ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் நீக்குதல்
(2) அயல் விதைகள், பயிரிடப்படும் ஆக்கிரமிப்புத் தாவரங்கள், பண்ணை விலங்குகளின் மரபணுப் பன்முகத்தன்மையைப் பராமரித்தல்
(3) உணவு உற்பத்தியை உயர்த்த நவீன வேளாண் நடைமுறைகளை உறுதி செய்தல்

Correct Answer: C [(1) மட்டும் சரி]

விளக்கம்:

SDG 2 – பசியின்மை (Zero Hunger). இலக்கு 2.5 விதைகள், பயிரிடப்படும் தாவரங்கள், பண்ணை விலங்குகளின் மரபணுப் பன்முகத்தன்மையைப் பேசுகிறது; "அயல் / ஆக்கிரமிப்பு" அல்ல.

22.  
Group 2A Mains (Re-exam) 2026
தேசிய இணை மற்றும் சுகாதாரத் தொழில் வல்லுநர்கள் ஆணையச் சட்டம் பற்றிய கீழ்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Correct Answer: C [இணை, சுகாதாரத் தொழில் வல்லுநர்களின் கல்வி, சேவைத் தரநிலைகளை ஒழுங்குபடுத்துதல்]

விளக்கம்:

NCAHP சட்டம் 2021 இணை, சுகாதாரத் தொழில் வல்லுநர்களின் (ஆய்வக, கதிரியக்க, இயன்முறை போன்ற) கல்வி, சேவைத் தரநிலைகளை ஒழுங்குபடுத்தத் தேசிய ஆணையம் அமைக்கிறது.

23.  
Group 1 2024
AYUSH மருத்துவ முறைகளின் குடும்பத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட முறை எது?

Correct Answer: B [சோவா-ரிக்பா]

விளக்கம்:

AYUSH = ஆயுர்வேதம், யோகா–இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி; 2010-இல் இந்திய மருத்துவ மையக் குழுமச் சட்டத் திருத்தம் மூலம் இமயமலைப் பகுதியின் சோவா-ரிக்பா சேர்க்கப்பட்டது.

24.  
Group 1 2024
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருந்தியுள்ளன?
(1) AIIMS – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
(2) ICCW – குழந்தைகள் நலனுக்கான பன்னாட்டுக் குழுமம்
(3) NIPCCD – தேசியப் பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தை மேம்பாட்டு நிறுவனம்
(4) ICDS – குழந்தை மேம்பாட்டுச் சேவை நிறுவனம்

Correct Answer: B [(1), (3) சரி]

விளக்கம்:

ICCW = Indian Council for Child Welfare (1952); ICDS = Integrated Child Development Services (திட்டம்; நிறுவனம் அல்ல). எனவே (2), (4) தவறு.

25.  
Group 1 2024
1956-இல் அமைக்கப்பட்ட மத்தியச் சுகாதாரக் கல்விப் பணியகத்தின் முதன்மைக் கடமை

Correct Answer: D [பல்வேறு பிரிவுகள் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்]

விளக்கம்:

CHEB (தில்லி, 1956, சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்ககத்தின் கீழ்) நாட்டில் சுகாதாரக் கல்விச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, திட்டமிட்டு, மேம்படுத்தும் அமைப்பு.

26.  
Fisheries Dept. 2023
அமெரிக்காவின் ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிட்யூட் 7000-க்கும் மேற்பட்ட நகரங்களின் காற்றின் தரம், ஆரோக்கியம் குறித்து வெளியிட்ட அறிக்கையில் தில்லி ________-இல் முதலிடம் பெற்றது.

Correct Answer: A [PM 2.5]

விளக்கம்:

HEI "Air Quality and Health in Cities" (ஆகஸ்ட் 2022): 2019 தரவின்படி PM 2.5 சராசரி வெளிப்பாட்டில் தில்லி உலக அளவில் முதலிடம் (கொல்கத்தா இரண்டாமிடம்).

27.  
CTS (Non-Interview Posts) 2024 · CTS (Interview Posts-II) 2024 · Group 2/2A 2025
உடல்நலம் தொடர்பான சேவைச் செயலி எது?

Correct Answer: C [ஆரோக்ய சேது]

விளக்கம்:

ஆரோக்ய சேது (ஏப்ரல் 2020) – கோவிட்-19 தொடர்புத் தடமறிதல், சுகாதாரச் சேவைச் செயலி. இ-பாடசாலா – NCERT மின்னூல் தளம்; AMRUT – நகர்ப்புறக் கட்டமைப்பு இயக்கம்.

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0