இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
← திரும்பச் செல்ல
PQLI (மோரிஸ் டி. மோரிஸ், 1979: ஆயுள் எதிர்பார்ப்பு, குழந்தை இறப்பு, எழுத்தறிவு) → HDI (1990) → MDGs (2000, 8 இலக்குகள், 2015 வரை) → SDGs (2015, 17 இலக்குகள், 2030 வரை).
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு – 9 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ARGS 2020
மனித வளர்ச்சிக் குறியீட்டைப் பாகிஸ்தான் பொருளியலாளர் மகபூப்-உல்-ஹக்கும் இந்தியப் பொருளியலாளர் ________-உம் 1990-இல் உருவாக்கினர்.Correct Answer: A [டாக்டர் அமர்த்தியா சென்]
விளக்கம்:
UNDP-இன் முதல் மனித வளர்ச்சி அறிக்கை (1990) HDI-ஐ அறிமுகப்படுத்தியது; அமர்த்தியா சென் 1998-இல் பொருளாதார நோபல் பரிசு பெற்றார்.
2.
VAS AHGS 2020
மனித வளர்ச்சிக் குறியீடு மனித வளர்ச்சியின் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டுக் குறியீடு. அவைCorrect Answer: A [உடல்நலம், கல்வி, வருமானம்]
விளக்கம்:
குறிகாட்டிகள்: ஆயுள் எதிர்பார்ப்புக் குறியீடு, கல்விக் குறியீடு, தனிநபர் GNI குறியீடு (மேலுள்ள அட்டவணை). விருப்பம் B – பாலின சமத்துவமின்மைக் குறியீட்டின் (GII) பரிமாணங்கள்.
3.
Group 1 2022
பின்வருவனவற்றில் எந்தக் குறிகாட்டி மனித வளர்ச்சிக் குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுவதில்லை?Correct Answer: B [நுகர்வோர் விலைக் குறியீடு]
விளக்கம்:
CPI பணவீக்க அளவீடு; HDI-யில் இல்லை. இதே வகையில் பிற தேர்வுகளில் வந்த வடிவங்களை மேலுள்ள அட்டவணையில் காண்க.
4.
Library Service 2023
மனித வளர்ச்சிக் குறியீடு மனித வளர்ச்சியின் அடிப்படைப் பரிமாணங்களில் சராசரிச் சாதனையை அளவிடுகிறது :I. பிறப்பின்போது ஆயுள் எதிர்பார்ப்பால் அளவிடப்படும் நீண்ட ஆரோக்கிய வாழ்வு
II. ஆற்றல் தேவைகளால் அளவிடப்படும் உற்பத்தித் திறன்
III. வயதுவந்தோர் எழுத்தறிவு விகிதத்தால் அளவிடப்படும் அறிவு
IV. தனிநபர் GDP-யால் அளவிடப்படும் கண்ணியமான வாழ்க்கைத் தரம்
Correct Answer: C [I, III, IV]
விளக்கம்:
2010-க்கு முந்தைய HDI முறை: ஆயுள் எதிர்பார்ப்பு, வயதுவந்தோர் எழுத்தறிவு (மொத்தச் சேர்க்கை விகிதத்துடன்), தனிநபர் GDP (PPP). 2010 முதல் கல்விக்குச் சராசரி / எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகள், வருமானத்துக்குத் தனிநபர் GNI.
5.
Veterinary Asst. 2023
மனித வளர்ச்சிக் குறியீடு, அமர்த்தியா சென்னின் "திறன்கள் அணுகுமுறை" மூலம் ________-ஐப் புரிந்துகொள்ள உருவாக்கப்பட்டது.Correct Answer: B [மனித நல்வாழ்வு]
விளக்கம்:
சென்னின் கருத்துப்படி வளர்ச்சி என்பது வருமானப் பெருக்கம் மட்டுமல்ல; மக்கள் தாம் மதிக்கும் வாழ்க்கையை வாழும் திறன்கள், சுதந்திரங்களின் விரிவாக்கமே – அதாவது மனித நல்வாழ்வு.
6.
Jailor 2022
மனித வளர்ச்சி அறிக்கையின்படி (2020) இந்தியா ________-ஆம் இடத்தில் உள்ளது.Correct Answer: B [131]
விளக்கம்:
HDR 2020: 189 நாடுகளில் இந்தியா 131 (மதிப்பு 0.645); முதலிடம் நார்வே.
7.
Combined Research Assistant 2023
2021–2022 மனித வளர்ச்சி அறிக்கையின்படி இந்தியாவின் HDI ________, தரவரிசை ________.Correct Answer: A [0.633, 132]
விளக்கம்:
HDR 2021–22 (2021 தரவு): 191 நாடுகளில் இந்தியா 132, மதிப்பு 0.633 ("நடுத்தர மனித வளர்ச்சி" பிரிவு); முதலிடம் சுவிட்சர்லாந்து.
8.
Combined Accounts Service 2024
பரவலான மாறுபாடுகளைக் காட்டும் மாநிலங்களைச் சரியாகப் பொருத்துக :(a) ஒப்பீட்டளவில் குறைந்த வருமானத்துடன் உயர் மனித வளர்ச்சி – 1. ஹரியானா
(b) அதிக வருமானத்துடன் குறைந்த மனித வளர்ச்சி – 2. பீகார்
(c) வேகமான பொருளாதார வளர்ச்சி, மெதுவான மனித வளர்ச்சி – 3. கேரளம்
(d) ஒன்றையொன்று தாழ்த்தும் வளர்ச்சியும் மனித வளர்ச்சியும் – 4. இராஜஸ்தான்
Correct Answer: B [3 1 4 2]
விளக்கம்:
கேரளம் – குறைந்த தனிநபர் வருமானத்திலும் உயர் HDI ("கேரள மாதிரி"); பீகார் – வருமானம், மனித வளர்ச்சி இரண்டும் தாழ்வு. இவ்விரு உறுதியான இணைகளுடன் (a-3, d-2) பொருந்தும் ஒரே விருப்பம் B.
9.
CTS (Non-Interview Posts) 2025
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.(1) PQLI – உடல்சார் வாழ்க்கைத் தரக் குறியீடு
(2) MDGs – புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்குகள்
(3) HDI – மனித வளர்ச்சிக் குறியீடு
(4) SDGs – நீடித்த வளர்ச்சி இலக்குகள்
Correct Answer: C [(1), (3), (2), (4)]
விளக்கம்:
PQLI (மோரிஸ் டி. மோரிஸ், 1979: ஆயுள் எதிர்பார்ப்பு, குழந்தை இறப்பு, எழுத்தறிவு) → HDI (1990) → MDGs (2000, 8 இலக்குகள், 2015 வரை) → SDGs (2015, 17 இலக்குகள், 2030 வரை).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
