இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு – 14 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
PTGS 2021 · VAS AHGS 2020 · Combined Research Assistant 2023
மக்கள்தொகை காரணமாக நிலத்தில் உண்மையில் தேவைப்படுவதைவிட அதிகமான நபர்கள் வேலை செய்வது ________ ஆகும்.

Correct Answer: A [மறைமுக வேலையின்மை]

விளக்கம்:

மறைமுக வேலையின்மையில் கூடுதல் தொழிலாளர்களை நீக்கினாலும் மொத்த உற்பத்தி குறையாது; அவர்களின் இறுதிநிலை உற்பத்தித் திறன் பூஜ்யம் . இந்தியாவில் இது அதிகம் காணப்படும் துறை வேளாண்மை (VAS AHGS 2020).

2.  
CEGS 2024
தொழிற்சாலைகளில் தானியங்கித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது ஏற்படும் வேலையின்மைக்குப் பெயர்

Correct Answer: A [கட்டமைப்பு வேலையின்மை]

விளக்கம்:

தொழில்நுட்ப / கட்டமைப்பு மாற்றத்தால் தொழிலாளர் திறனும் தேவையும் பொருந்தாதபோது ஏற்படுவது கட்டமைப்பு வேலையின்மை (தொழில்நுட்ப வேலையின்மை இதன் ஒரு வடிவம்).

3.  
Fisheries Dept. 2023
பிறழ்ச்சி வேலையின்மை (Frictional Unemployment) என்பது இதன் விளைவு

Correct Answer: B [பொருளாதாரத்தில் தன்னார்வ வேலை மாற்ற இடைக்காலம்]

விளக்கம்:

ஒரு வேலையை விட்டு மற்றொரு வேலைக்கு மாறும் இடைக்காலத்தில் ஏற்படுவது பிறழ்ச்சி வேலையின்மை; இது தற்காலிகமானது. (மூலத்தில் விருப்பம் B தமிழில் "தன்னார்வ வேலையின்மையின் மாற்றம்" எனத் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தது; ஆங்கில வடிவத்தின்படி திருத்தப்பட்டது.)

4.  
EO Gr. I (HR&CE) 2024
முழு வேலைவாய்ப்பு நிலை எவ்வகை வேலையின்மையை உள்ளடக்கியது?

Correct Answer: D [பிறழ்ச்சி]

விளக்கம்:

முழு வேலைவாய்ப்பு நிலையிலும் வேலை மாறுவோரின் பிறழ்ச்சி வேலையின்மை (மற்றும் தன்னார்வ வேலையின்மை) இருக்கும்; எனவே அது முழு வேலைவாய்ப்புடன் இணக்கமானது.

5.  
JR 2023 · CBT 2023
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் வேலையின்மைக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுவது

Correct Answer: B [ஓகுனின் விதி]

விளக்கம்:

ஓகுன் விதி (ஆர்தர் ஓகுன்): வேலையின்மை உயரும்போது GDP அதன் உள்ளார்ந்த அளவைவிடக் குறைகிறது. பிலிப்ஸ் வளைகோடு – பணவீக்கம் × வேலையின்மை; கினி கெழு, லாரன்ஸ் வளைகோடு – வருமான ஏற்றத்தாழ்வு.

6.  
Road Inspector 2023
தற்கால வேலைவாய்ப்புப் போக்குகளாவன
(i) பகுதிநேர வேலைவாய்ப்பில் வளர்ச்சி
(ii) அதிகரிக்கும் சுயவேலைவாய்ப்பு
(iii) முழு வேலைவாய்ப்பு நிலை
(iv) நிறுவனங்கள் குறைவான நிரந்தர ஊழியர்களைப் பயன்படுத்தி, குறுகியகால ஒப்பந்தப் பணிகளை அதிகம் வழங்குதல்

Correct Answer: A [(i), (ii), (iv) மட்டும்]

விளக்கம்:

பகுதிநேர, சுயவேலை, ஒப்பந்த வேலைகள் பெருகுவது தற்காலப் போக்கு (வேலைச் சந்தை நெகிழ்வு). முழு வேலைவாய்ப்பு நிலை எட்டப்படவில்லை; எனவே (iii) தவறு.

7.  
Group 1B/1C 2024
இந்தியப் பதிவாளர் ஜெனரலின் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த வேளாண் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2001-இல் 234.1 மில்லியனிலிருந்து 2011-இல் ________ மில்லியனாக அதிகரித்துள்ளது.

Correct Answer: C [263.1]

விளக்கம்:

2011: சாகுபடியாளர்கள் 118.8 மில்லியன் + வேளாண் கூலித் தொழிலாளர்கள் 144.3 மில்லியன் = 263.1 மில்லியன் (2001: 127.3 + 106.8 = 234.1). 2011-இல் முதன்முறையாகக் கூலித் தொழிலாளர் எண்ணிக்கை சாகுபடியாளர்களை விஞ்சியது.

8.  
Group 1 2024
தேசிய இளைஞர் கொள்கை 2014-இன்படி இளைஞர்களுக்கான வயதுப் பிரிவு எது?

Correct Answer: D [15–29 வயது]

விளக்கம்:

தேசிய இளைஞர் கொள்கை 2014: 15–29 வயது (முந்தைய 2003 கொள்கையில் 13–35 வயது).

9.  
Reporter 2022
பின்வருவனவற்றுள் எது வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் இல்லை?

Correct Answer: D [ஜன் தன் யோஜனா]

விளக்கம்:

PMJDY (2014) நிதி உள்ளடக்கத் திட்டம் – அனைவருக்கும் வங்கிக் கணக்கு. REGP (1995, KVIC), PMRY (1993), NFFWP (2004) ஆகியவை வேலைவாய்ப்புத் திட்டங்கள்; 2008-இல் REGP, PMRY இணைந்து PMEGP ஆனது.

10.  
Group 1B/1C 2024
இந்திய அரசால் தொடங்கப்பட்ட "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு" (ODOP) திட்டத்தின் அடிப்படை நோக்கம்

Correct Answer: C [கிராமப்புறக் கைவினைஞர்கள், தொழில்முனைவோர் வேலைவாய்ப்பு, வருமானம் அதிகரித்தல்]

விளக்கம்:

ODOP ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனித்துவப் பொருளைத் தேர்ந்து அதன் உற்பத்தி, சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கிறது; உள்ளூர்க் கைவினைஞர், சிறு தொழில்முனைவோரின் வேலைவாய்ப்பு, வருமானம் உயர்வே நோக்கம்.

11.  
Asst. Public Prosecutor Gr. II 2026
சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம் / நோக்கங்கள்
(i) பெருமளவிலான தொழில்துறை உற்பத்தியை ஊக்குவித்தல்
(ii) கைவினைஞர்களுக்கு நிதி உதவி வழங்குதல்
(iii) திறன் மேம்பாடு, பயிற்சியை ஊக்குவித்தல்

Correct Answer: B [(ii), (iii) மட்டும்]

விளக்கம்:

PM விஸ்வகர்மா (17 செப்டம்பர் 2023, MSME அமைச்சகம்): 18 பாரம்பரியத் தொழில் கைவினைஞர்களுக்குத் திறன் பயிற்சி, கருவிகள் ஊக்கத்தொகை, பிணையமில்லாக் கடன் (₹1 இலட்சம் + ₹2 இலட்சம்). பெருமளவு தொழில் உற்பத்தி இதன் நோக்கமல்ல.

12.  
Asst. Public Prosecutor Gr. II 2026
கலைஞர் கைவினைத் திட்டம் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
I. இத்திட்டம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது
II. இத்திட்டம் பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தைப் பின்பற்றுகிறது
III. இத்திட்டத்தின் கீழ் பயனடைய குறைந்தபட்ச வயது 35
IV. கடன் தொகையில் அதிகபட்ச மானியம் ₹50,000 (25%)

Correct Answer: B [I, III, IV மட்டும்]

விளக்கம்:

தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைத் திட்டம் (2024) MSME துறை மூலம் செயல்படுகிறது; 35 வயதுக்கு மேற்பட்ட, பட்டியலிடப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் குறைந்தது 5 ஆண்டு அனுபவமுள்ள கைவினைஞர்களுக்குக் கடன் தொகையில் 25% (அதிகபட்சம் ₹50,000) மானியம், திறன் பயிற்சி (TN…

13.  
Asst. Public Prosecutor Gr. II 2026
"கலைஞர் கைவினைத் திட்டம்" பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

Correct Answer: B [இது நிதி உதவி மற்றும் திறன் மேம்பாட்டைக் கைவினைக் கலைஞர்களின் வளர்ச்சிக்காக வழங்குகிறது]

விளக்கம்:

கலைஞர் கைவினைத் திட்டம் – கைவினைக் கலைஞர்களுக்குக் கடன் மானியம் (கடன் தொகையில் 25%, அதிகபட்சம் ₹50,000), திறன் பயிற்சி வழங்கும் தமிழ்நாடு MSME துறைத் திட்டம்; 35 வயதுக்கு மேற்பட்ட, பட்டியலிடப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் அனுபவமுள்ள கைவினைஞர்களுக்கானது.

14.  
CTS (Interview Posts) 2026
பின்வருவனவற்றில் எது தெருவோர வியாபாரிகள் தொடர்பான திட்டம்?

Correct Answer: A [ஸ்வநிதி திட்டம்]

விளக்கம்:

PM SVANidhi (ஜூன் 2020, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம்): தெருவோர வியாபாரிகளுக்குப் பிணையமில்லா நடைமுறை மூலதனக் கடன் (தொடக்கத்தில் ₹10,000 → ₹20,000 → ₹50,000 என மூன்று தவணைகள்).

? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0