இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தொழில் வளர்ச்சி (பகுதி 1)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தொழில் வளர்ச்சி (பகுதி 1) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
இந்தியாவின் முதல் சணல் ஆலை (1855) அமைந்த இடம் எது?

Correct Answer: B [ரிஷ்ரா]

விளக்கம்:

ரிஷ்ரா (மேற்கு வங்கம்), ஜார்ஜ் ஆக்லாண்ட். செராம்பூர் = முதல் காகித ஆலை (1812); குல்டி = வங்காள இரும்புத் தொழில் (1870); உத்தர்பாரா = இந்துஸ்தான் மோட்டார்ஸ் (1948).

2.  
கல்வி, மருத்துவம் ஆகியவை பொருளாதாரத்தின் எந்தத் துறையைச் சேர்ந்தவை?

Correct Answer: C [மூன்றாம் துறை (பணிகள்)]

விளக்கம்:

சமுதாய, சமூக, தனிப்பட்ட பணிகள் மூன்றாம் துறை. கூட்டுத் துறை என்பது உரிமை அடிப்படையிலான வகை (அரசு + தனியார்).

3.  
விடுதலை இந்தியாவின் முதல் தொழிற்கொள்கைத் தீர்மானம் அறிவிக்கப்பட்ட நாள் எது?

Correct Answer: D [6 ஏப்ரல் 1948]

விளக்கம்:

6.4.1948; நோக்கம் கலப்புப் பொருளாதாரம். 30.4.1956 இரண்டாவது தீர்மானம்; 24.7.1991 புதிய தொழிற்கொள்கை.

4.  
புதிய தொழிற்கொள்கை அறிவிக்கப்பட்ட நாள் எது?

Correct Answer: A [24 ஜூலை 1991]

விளக்கம்:

24.7.1991 (பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ்; நிதி அமைச்சர் மன்மோகன் சிங்). 1.1.1995 = WTO தொடக்கம்.

5.  
“உலகமயமாதல்” என்ற சொல்லை உருவாக்கியவர் எனப் பாடநூல் குறிப்பிடுபவர் யார்?

Correct Answer: C [தியோடோர் லெவிட்]

விளக்கம்:

பேராசிரியர் தியோடோர் லெவிட் (10 சமூக அறிவியல், பொருளியல் அலகு 2).

6.  
இந்திய உருக்கு ஆணையம் (SAIL) நிறுவப்பட்ட நாள் எது?

Correct Answer: D [24 ஜனவரி 1973]

விளக்கம்:

24.1.1973 (sail.co.in). மார்ச் 1982 = சேலம் உருக்காலையில் வணிக உற்பத்தி தொடங்கிய மாதம்; SAIL நிறுவன நாள் அல்ல.

7.  
முத்ரா (MUDRA) தொடங்கப்பட்ட நாள் எது?

Correct Answer: B [8 ஏப்ரல் 2015]

விளக்கம்:

8.4.2015. 1.7.2015 டிஜிட்டல் இந்தியா; 16.1.2016 ஸ்டார்ட்அப் இந்தியா; 5.4.2016 ஸ்டாண்ட்-அப் இந்தியா.

8.  
முதலீடும் விற்றுமுதலும் சேர்ந்த கூட்டு MSME அளவுகோல் முதன்முதலில் நடைமுறைக்கு வந்த நாள் எது?

Correct Answer: A [1 ஜூலை 2020]

விளக்கம்:

1.7.2020 (உத்யம் பதிவும் அன்று முதல்). 1.4.2025 முதல் அதே அளவுகோலில் வரம்புகள் மட்டும் உயர்ந்தன.

9.  
“மேக் இன் இந்தியா” திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?

Correct Answer: D [25 செப்டம்பர் 2014]

விளக்கம்:

25.9.2014; சின்னம் சக்கரங்களால் ஆன சிங்கம்.

10.  
ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (1965) எங்கு அமைந்தது?

Correct Answer: C [காண்ட்லா]

விளக்கம்:

காண்ட்லா (குஜராத்), 1965. சூரத், கொச்சி, நொய்டா பின்னர் வந்தவை.

11.  
சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: B [2005]

விளக்கம்:

SEZ சட்டம் 2005; விதிகள் 10.2.2006 முதல். 2000 = SEZ கொள்கை (ஏப்ரல்); 1985 = மூவாண்டு ஏற்றுமதி–இறக்குமதிக் கொள்கை.

12.  
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) நிறுவப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: D [1971]

விளக்கம்:

SIPCOT 1971; TIDCO, TANSI 1965; SIDCO 1970; TIIC 1949.

13.  
நிகழ்வையும் ஆண்டையும் பொருத்துக:
a. செராம்பூர் காகித ஆலை 1. 1870
b. போர்ட்டோ நோவோ இரும்பு முயற்சி 2. 1812
c. வங்காள இரும்புத் தொழில் கம்பெனி 3. 1889
d. டிக்பாய் எண்ணெய்க் கிணறு 4. 1830

Correct Answer: A [2 4 1 3]

விளக்கம்:

செராம்பூர் காகித ஆலை 1812; போர்ட்டோ நோவோ இரும்பு முயற்சி 1830; வங்காள இரும்புத் தொழில் 1870; டிக்பாய் எண்ணெய்க் கிணறு 1889.

14.  
தொழிலக வகைப்பாடு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. சிமெண்ட், எஃகு ஆகியவை அடிப்படைப் பண்டத் தொழில்கள்.
  2. அரசும் தனியாரும் இணைந்து நடத்துவது கூட்டுத் துறை.
  3. காகிதத் தொழில் கனிமம் சார்ந்த தொழில்.

Correct Answer: C [1, 2 மட்டும்]

விளக்கம்:

சிமெண்ட், எஃகு = அடிப்படைப் பண்டத் தொழில்கள்; கூட்டுத் துறை = அரசு + தனியார். காகிதம் வனவளம் சார்ந்த தொழில், கனிமம் சார்ந்தது அல்ல.

15.  
சட்டத்தையும் ஆண்டையும் பொருத்துக:
a. MRTP சட்டம் 1. 1951
b. FERA2. 1999
c. தொழில்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டம் 3. 1969
d. FEMA4. 1973

Correct Answer: B [3 4 1 2]

விளக்கம்:

MRTP 1969; FERA 1973; தொழில்கள் (மேம்பாடு, ஒழுங்குமுறை) சட்டம் 1951; FEMA 1999.

16.  
1956 தொழிற்கொள்கைத் தீர்மானத்தின் அட்டவணை A-இல் இடம்பெற்ற தொழில்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Correct Answer: D [17]

விளக்கம்:

அட்டவணை A 17 (அரசின் தனிப் பொறுப்பு); அட்டவணை B 12. 18 = 1991-இல் உரிமம் தொடர்ந்த தொழில்கள்; 8 = 1991-இல் பொதுத்துறைக்கு ஒதுக்கியவை.

17.  
DPIIT ஆண்டறிக்கை 2024-25-இன்படி பொதுத்துறைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள தொழில்கள் எவை?

Correct Answer: B [அணு ஆற்றல், இரயில் இயக்கம்]

விளக்கம்:

1991-இல் 8; பின்னர் படிப்படியாகக் குறைந்து (ஆண்டறிக்கை 2024-25) 2: அணு ஆற்றல், இரயில் இயக்கம் மட்டும் (DPIIT ஆண்டறிக்கை 2024-25).

18.  
நிகழ்வையும் ஆண்டையும் பொருத்துக:
a. போட்டிச் சட்டம் 1. 2003
b. இந்தியப் போட்டி ஆணையம் அமைப்பு 2. 2009
c. MRTP சட்டம் நீக்கம் 3. 2017
d. FIPB கலைப்பு 4. 2002

Correct Answer: C [4 1 2 3]

விளக்கம்:

போட்டிச் சட்டம் 2002; போட்டி ஆணையம் (CCI) 2003; MRTP சட்டம் நீக்கம் 2009; FIPB கலைப்பு 2017.

19.  
உருக்காலையையும் அது அமைய உதவிய நாட்டையும் / உரிமையையும் பொருத்துக:
a. பிலாய் 1. தனியார் துறை
b. ரூர்கேலா 2. சோவியத் ஒன்றியம்
c. துர்காபூர் 3. இங்கிலாந்து
d. TISCO4. ஜெர்மனி

Correct Answer: D [2 4 3 1]

விளக்கம்:

பிலாய் – சோவியத் ஒன்றியம்; ரூர்கேலா – ஜெர்மனி; துர்காபூர் – இங்கிலாந்து; TISCO (1907) – தனியார் துறை.

20.  
பொதுத்துறை நிறுவனங்களுக்கான “மகாரத்னா” தகுதி அறிமுகமான ஆண்டு எது?

Correct Answer: A [2009]

விளக்கம்:

மகாரத்னா 2009; நவரத்னா, மினிரத்னா 1997; DIPAM 2016.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0