இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தொழில் வளர்ச்சி (பகுதி 2)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – தொழில் வளர்ச்சி (பகுதி 2) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
முத்ரா கடன் பிரிவையும் அதன் உச்ச வரம்பையும் பொருத்துக:
a. சிசு 1. ₹20 இலட்சம்
b. கிஷோர் 2. ₹5 இலட்சம்
c. தருண் 3. ₹10 இலட்சம்
d. தருண் பிளஸ் 4. ₹50,000

Correct Answer: C [4 2 3 1]

விளக்கம்:

சிசு ₹50,000 வரை; கிஷோர் ₹5 இலட்சம் வரை; தருண் ₹10 இலட்சம் வரை; தருண் பிளஸ் ₹20 இலட்சம் வரை.

2.  
1.4.2025 முதலான MSME வரம்புகள் (முதலீடு / விற்றுமுதல்) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. குறு நிறுவனம்: ₹2.5 கோடி / ₹10 கோடி.
  2. சிறு நிறுவனம்: ₹10 கோடி / ₹50 கோடி.
  3. நடுத்தர நிறுவனம்: ₹125 கோடி / ₹500 கோடி.

Correct Answer: D [1, 3 மட்டும்]

விளக்கம்:

2025 வரம்பு: குறு 2.5/10, சிறு 25/100, நடுத்தர 125/500 (₹ கோடி). “10/50” என்பது 2020 சிறு நிறுவன வரம்பு.

3.  
திட்டத்தையும் தொடக்க நாளையும் பொருத்துக:
a. டிஜிட்டல் இந்தியா 1. 16.1.2016
b. ஸ்டார்ட்அப் இந்தியா 2. 1.7.2015
c. ஸ்டாண்ட்-அப் இந்தியா 3. 13.10.2021
d. PM கதிசக்தி 4. 5.4.2016

Correct Answer: B [2 1 4 3]

விளக்கம்:

டிஜிட்டல் இந்தியா 1.7.2015; ஸ்டார்ட்அப் இந்தியா 16.1.2016; ஸ்டாண்ட்-அப் இந்தியா 5.4.2016; PM கதிசக்தி 13.10.2021.

4.  
உற்பத்தி இணைந்த ஊக்கத்தொகைத் (PLI) திட்டங்கள் எத்தனை துறைகளுக்கு?

Correct Answer: A [14]

விளக்கம்:

14 துறைகள், ₹1.97 இலட்சம் கோடி. 8 = பழைய வரிசையின் மையத் தொழில்கள் (இன்று 9); 25% = தேசிய உற்பத்திக் கொள்கையின் GDP இலக்கு.

5.  
நிகழ்வையும் ஆண்டையும் பொருத்துக:
a. காண்ட்லா EPZ 1. 1984
b. சென்னை EPZ (MEPZ) 2. 2015
c. SEZ கொள்கை 3. 2000
d. வட்டிச் சமநிலைத் திட்டம் 4. 1965

Correct Answer: D [4 1 3 2]

விளக்கம்:

காண்ட்லா EPZ 1965; சென்னை EPZ (MEPZ) 1984; SEZ கொள்கை 2000; வட்டிச் சமநிலைத் திட்டம் 2015.

6.  
ஒரு பட்டியலிட்ட இந்திய நிறுவனத்தில் வெளிநாட்டவர் முதலீடு FDI எனக் கருதப்படக் குறைந்தபட்சம் எத்தனை விழுக்காடு பங்கு தேவை?

Correct Answer: B [10%]

விளக்கம்:

10% அல்லது அதற்கு மேல் = FDI; குறைவு = FPI.

7.  
சிறப்புப் பெயரையும் நகரத்தையும் பொருத்துக:
a. ஆசியாவின் டெட்ராய்ட் 1. சிவகாசி
b. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் 2. தூத்துக்குடி
c. குட்டி ஜப்பான் 3. சென்னை
d. தமிழகத்தின் நுழைவாயில் 4. கோயம்புத்தூர்

Correct Answer: D [3 4 1 2]

விளக்கம்:

ஆசியாவின் டெட்ராய்ட் – சென்னை; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்; குட்டி ஜப்பான் – சிவகாசி; தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி.

8.  
தமிழ்நாடு தொழில் கொள்கை 2014-இன்படி, மொத்தத் தொழில் உற்பத்தியில் (Gross Industrial Output) தமிழ்நாட்டின் இடம் எது?

Correct Answer: A [மூன்றாம் இடம்]

விளக்கம்:

தொழிற்சாலை எண்ணிக்கை, தொழிலாளர் எண்ணிக்கை: முதலிடம்; மொத்தத் தொழில் உற்பத்தி, நிகர மதிப்புக் கூட்டல்: மூன்றாம் இடம்.

9.  
கூற்று (A): இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் கனரக, மூலதனப் பண்டத் தொழில்களுக்கு முன்னுரிமை தந்தது.
காரணம் (R): சி.என். வகீல், பி.ஆர். பிரம்மானந்தா முன்வைத்த கூலிப் பண்ட மாதிரியே இரண்டாம் திட்டத்தின் அடிப்படை.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true

Correct Answer: C []

விளக்கம்:

இரண்டாம் திட்டத்தின் அடிப்படை மகலனோபிஸ் மாதிரி; கூலிப் பண்ட மாதிரி அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்டது. கூற்று சரி; காரணம் தவறு.

10.  
1956 தொழிற்கொள்கைத் தீர்மானம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அதன் இலக்கு சமதர்ம சமுதாய அமைப்பு.
  2. அட்டவணை B தொழில்கள் உடனடியாக அரசின் தனிப் பொறுப்பாக்கப்பட்டன.
  3. அது “இந்தியாவின் பொருளாதார அரசியலமைப்பு” எனவும் அழைக்கப்படுகிறது.

Correct Answer: B [1, 3 மட்டும்]

விளக்கம்:

அட்டவணை B தொழில்கள் படிப்படியாகவே அரசுக்குச் சொந்தமாகும்; தனியாரும் துணையாக இயங்கலாம்.

11.  
கூற்று (A): 1948 தொழிற்கொள்கை இந்தியாவில் கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தியது.
காரணம் (R): அது தொழில்களை நான்கு பிரிவுகளாக்கி, அரசுக்கும் தனியார், கூட்டுறவுத் துறைகளுக்கும் இடம் தந்தது.

Correct Answer: A []

விளக்கம்:

அரசும் தனியாரும் இணைந்து இயங்குவதே கலப்புப் பொருளாதாரம்; நான்கு பிரிவுப் பகிர்வே அதை நடைமுறையாக்கியது. இரண்டும் சரி; காரணம் சரியான விளக்கம்.

12.  
1991 சீர்திருத்தங்கள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. ரிசர்வ் வங்கியின் சட்டப்படியான நீர்மை விகிதம் (SLR) உயர்த்தப்பட்டது.
  2. 18 தொழில்கள் தவிர ஏனையவற்றுக்குத் தொழில் உரிமம் நீக்கப்பட்டது.
  3. பொதுத்துறைக்கு ஒதுக்கிய தொழில்கள் 17-இலிருந்து 8-ஆகக் குறைக்கப்பட்டன.

Correct Answer: B [2, 3 மட்டும்]

விளக்கம்:

நரசிம்மம் குழுப் பரிந்துரைப்படி SLR 38.5%-இலிருந்து 25%-ஆகக் குறைக்கப்பட்டது; ஒரு பாடநூல் “அதிகரிக்கப்பட்டது” என்பது பிழை.

13.  
முதலீட்டு விலக்கல் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது முதலீட்டு விலக்கல்.
  2. உத்திசார் விற்பனையில் பங்குகளுடன் மேலாண்மைக் கட்டுப்பாடும் வாங்குபவருக்கு மாறும்.
  3. ஏர் இந்தியா ஜனவரி 2022-இல் உத்திசார் விற்பனை மூலம் தனியாருக்கு மாறியது.

Correct Answer: A [1, 2, 3]

விளக்கம்:

மூன்றும் சரி: பங்கு விற்றல் = முதலீட்டு விலக்கல்; மேலாண்மைக் கட்டுப்பாடும் மாறினால் உத்திசார் விற்பனை; ஏர் இந்தியா டாடா குழுமத்துக்கு, ஜனவரி 2022.

14.  
கூற்று (A): TISCO ஒரு பொதுத்துறை நிறுவனம்.
காரணம் (R): 1956 தொழிற்கொள்கையின் அட்டவணை A-இல் இரும்பு எஃகு இடம்பெற்றது.

Correct Answer: D []

விளக்கம்:

TISCO 1907-இல் தனியாரால் தொடங்கப்பட்டது; இன்றும் தனியார் நிறுவனம். இரும்பு எஃகு அட்டவணை A-இல் இருந்தது உண்மை; ஆனால் ஏற்கெனவே இருந்த தனியார் அலகுகள் தொடர்ந்தன. கூற்று தவறு; காரணம் சரி.

15.  
கூற்று (A): MSME-களுக்கான இணையவழி உத்யம் பதிவு 1.7.2020 முதல் நடைமுறையில் உள்ளது.
காரணம் (R): குறு, சிறு, நடுத்தர நிறுவன மேம்பாட்டுச் சட்டம் 2006-இல் இயற்றப்பட்டது.

Correct Answer: B []

விளக்கம்:

இரண்டும் சரி. உத்யம் பதிவு 2020 புதிய வரையறையுடன் வந்தது; 2006 சட்டம் அதற்குக் காரணம் அல்ல.

16.  
தொழில் குறியீடுகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. தொழில் உற்பத்திக் குறியீட்டை (IIP) புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிடுகிறது.
  2. IIP-இன் இன்றைய அடிப்படை ஆண்டு 2022-23.
  3. புதிய மையத் தொழில்கள் குறியீட்டில் இரும்புத் தாதும் அடங்கும்.

Correct Answer: A [1, 2, 3]

விளக்கம்:

மூன்றும் சரி: IIP-ஐ MoSPI வெளியிடுகிறது; அடிப்படை ஆண்டு 2022-23 (1.6.2026 முதல்); 20.7.2026 முதல் மையத் தொழில்கள் 9, இரும்புத் தாது புதிதாகச் சேர்ந்தது.

17.  
கூற்று (A): தற்சார்பு இந்தியா திட்டம் 12.5.2020 அன்று அறிவிக்கப்பட்டது.
காரணம் (R): அத்திட்டம் ஒன்பது தூண்களின் மேல் அமைந்தது.

Correct Answer: C []

விளக்கம்:

தூண்கள் ஐந்து: பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு முறை, துடிப்பான மக்கள்தொகை, தேவை. கூற்று சரி; காரணம் தவறு.

18.  
கூற்று (A): சுங்க நோக்கில் SEZ ஒரு “அயல்நாட்டுப் பகுதி” போலக் கருதப்படுகிறது.
காரணம் (R): வருவாய் சமத்துவமின்மையைக் குறைப்பதே SEZ சட்டத்தின் முதன்மை நோக்கம்.

Correct Answer: C []

விளக்கம்:

SEZ சட்டத்தின் ஐந்து நோக்கங்கள்: கூடுதல் பொருளாதார நடவடிக்கை, ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு. வருவாய் சமத்துவம் அவற்றில் இல்லை. கூற்று சரி; காரணம் தவறு.

19.  
தமிழ்நாட்டுத் தொழில் முகமைகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. TIIC 1949-இல் நிறுவனச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது.
  2. TIDCO 1949-இல் நிறுவப்பட்டது.
  3. TANSIDCO 1970-இல் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.

Correct Answer: A [1, 3 மட்டும்]

விளக்கம்:

TIDCO 1965-இல் நிறுவப்பட்டது; 1949 TIIC-இன் ஆண்டு.

20.  
கூற்று (A): ஓசூர் தமிழ்நாட்டின் வெற்றிகரமான வாகன, மின்னணுத் தொழில் தொகுப்பு.
காரணம் (R): ஓசூர் தொகுப்பு அரசு முயற்சி எதுவும் இன்றித் தனியாரால் மட்டும் தானே உருவானது.

Correct Answer: C []

விளக்கம்:

பாடநூல்: ஓசூர் “முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்ட” வெற்றிகரமான தொகுப்பு (விரிவாக்கப்பட்ட தொழிற்பேட்டைகள்). கூற்று சரி; காரணம் தவறு.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0