இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஊரக நலன்சார் திட்டங்கள் (பகுதி 1)
← திரும்பச் செல்ல
சமவெளி ₹1.20 இலட்சம்; வடகிழக்கு, மலை ₹1.30 இலட்சம்; IAY-இல் ₹70,000; ₹3.50 இலட்சம் = தமிழ்நாட்டுக் கலைஞரின் கனவு இல்லம்.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – ஊரக நலன்சார் திட்டங்கள் (பகுதி 1) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஊரகப் பகுதிக்கான அடிப்படை அலகு எது?
Correct Answer: B [வருவாய் கிராமம்]
விளக்கம்:
பாடநூல்: மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி ஊரகப் பகுதிகளுக்கு அடிப்படை அலகு வருவாய் கிராமம்.
2.
“ஓர் இந்திய உழவன் கடனிலே பிறந்து கடனிலே வாழ்ந்து கடனிலேயே இறக்கிறான்” என்று கூறியவர் யார்?
Correct Answer: C [சர் மால்கம் டார்லிங்]
விளக்கம்:
சர் மால்கம் டார்லிங் (1925). காந்தி: “இந்தியா கிராமங்களில் வாழ்கிறது”; ஸ்லேட்டர்: சில தென்னிந்தியக் கிராமங்கள்; சூமாக்கர்: சிறியது அழகு.
3.
சமூக மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது?
Correct Answer: D [1952]
விளக்கம்:
அக்டோபர் 1952-இல் 55 திட்டப் பகுதிகளில். 1957 = பல்வந்த்ராய் மேத்தா குழு; 1959 = இராஜஸ்தானில் பஞ்சாயத்து ராஜ்; 1978 = IRDP முன்னோட்டம்.
4.
VB-G RAM G சட்டம் ஒரு ஊரகக் குடும்பத்துக்கு ஒரு நிதியாண்டில் எத்தனை நாள் வேலைக்குக் குறையாமல் உறுதி அளிக்கிறது?
Correct Answer: A [125]
விளக்கம்:
VB-G RAM G (1.7.2026 முதல்): 125 நாள். MGNREGA: 100 நாள்.
5.
தீனதயாள் உபாத்யாயா ஊரகத் திறன் திட்டம் (DDU-GKY) எந்த வயதினருக்கானது?
Correct Answer: C [15–35 வயது]
விளக்கம்:
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 15–35 வயது ஊரக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் இணைந்த திறன் பயிற்சி (25.9.2014).
6.
பிரதமர் கிராமச் சாலைத் திட்டம் (PMGSY) தொடங்கப்பட்ட நாள் எது?
Correct Answer: D [25 டிசம்பர் 2000]
விளக்கம்:
PMGSY 25.12.2000. 2.10.2014 = தூய்மை இந்தியா; 1.4.2016 = PMAY-G; ஆகஸ்ட் 2019 = ஜல் ஜீவன்.
7.
தேசிய சமூக உதவித் திட்டம் (NSAP) தொடங்கிய நாள் எது?
Correct Answer: B [15 ஆகஸ்ட் 1995]
விளக்கம்:
NSAP 15.8.1995. 2.10.1993 = EAS; 1.4.2000 = அன்னபூர்ணா; ஆகஸ்ட் 2019 = ஜல் ஜீவன்.
8.
அன்னபூர்ணா திட்டத்தில் தகுதியான மூத்த குடிமக்களுக்கு மாதம் எவ்வளவு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது?
Correct Answer: A [10 கிலோ]
விளக்கம்:
அன்னபூர்ணா (1.4.2000): முதியோர் ஓய்வூதியத்துக்குத் தகுதி இருந்தும் சேர்க்கப்படாதோருக்கு மாதம் 10 கிலோ.
9.
நபார்டு நிறுவப்பட்ட நாள் எது?
Correct Answer: D [12 ஜூலை 1982]
விளக்கம்:
நபார்டு 12.7.1982. 1.7.1963 = ARDC; 1.4.1935 = RBI; 2.4.1990 = SIDBI.
10.
தேசியப் பஞ்சாயத்து ராஜ் நாள் எது?
Correct Answer: C [ஏப்ரல் 24]
விளக்கம்:
73-ஆவது திருத்தம் 24.4.1993-இல் நடைமுறைக்கு வந்த நாள். நவம்பர் 1 = தமிழ்நாட்டு உள்ளாட்சிகள் நாள்.
11.
பஞ்சாயத்து ராஜை முதலில் செயல்படுத்திய மாநிலம் எது?
Correct Answer: B [இராஜஸ்தான்]
விளக்கம்:
இராஜஸ்தான், 1959 (பாடநூல்: நாகவுர், 2.10.1959, நேரு தொடங்கி வைத்தார்).
12.
தமிழ்நாட்டில் உள்ளாட்சிகள் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
Correct Answer: D [நவம்பர் 1]
விளக்கம்:
அரசாணை 632, 26.10.2007: நவம்பர் 1. ஏப்ரல் 24 = தேசியப் பஞ்சாயத்து ராஜ் நாள்; மார்ச் 22 = உலகத் தண்ணீர் நாள்.
13.
அறிஞரையும் அவர் தொடர்பான செய்தியையும் பொருத்துக:
| a. மால்கம் டார்லிங் | 1. PURA |
| b. கில்பர்ட் ஸ்லேட்டர் | 2. உழவனின் கடன் சுமை |
| c. ஈ.எஃப். சூமாக்கர் | 3. சில தென்னிந்தியக் கிராமங்கள் |
| d. அப்துல் கலாம் | 4. இரட்டை நஞ்சாக்கல் |
Correct Answer: A [2 3 4 1]
விளக்கம்:
டார்லிங் – கடன் (1925); ஸ்லேட்டர் – சில தென்னிந்தியக் கிராமங்கள் (1918); சூமாக்கர் – இரட்டை நஞ்சாக்கல்; கலாம் – PURA.
14.
ஊரக வேலையின்மை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- ஒருபோக உழவர் ஆண்டுக்கு 5 முதல் 7 மாதங்கள் வேலையின்றி இருப்பது பருவகால வேலையின்மை.
- தேவைக்கு அதிகமானோர் ஒரே வேலையில் இருப்பது வெளிப்படையான வேலையின்மை.
- மறைமுக வேலையின்மையில் சிலரை நீக்கினாலும் மொத்த உற்பத்தி குறையாது.
Correct Answer: C [1, 3 மட்டும்]
விளக்கம்:
பருவகால வேலையின்மை ஒருபோக உழவருக்கு 5–7 மாதம்; மறைமுக வேலையின்மையில் சிலரை நீக்கினாலும் உற்பத்தி குறையாது. கூற்று 2 தவறு: அது வெளிப்படையான வேலையின்மை அல்ல, மறைமுகம்.
15.
திட்டத்தையும் தொடங்கிய ஆண்டையும் பொருத்துக:
| a. DPAP | 1. 1993 |
| b. JRY | 2. 1999 |
| c. EAS | 3. 1973-74 |
| d. SGSY | 4. 1989 |
Correct Answer: B [3 4 1 2]
விளக்கம்:
DPAP 1973-74; JRY 1989; EAS 2.10.1993; SGSY 1.4.1999.
16.
பொன்விழா ஊரகச் சுயவேலைத் திட்டத்தில் (SGSY) இணைக்கப்படாத திட்டம் எது?
Correct Answer: D [ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம்]
விளக்கம்:
SGSY = IRDP, TRYSEM, DWCRA, SITRA, GKY, MWS. JRY ஏப்ரல் 1999-இல் JGSY ஆனது.
17.
MGNREGA (30.06.2026 வரை நடைமுறையில் இருந்தது) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- வேலை கேட்ட 15 நாளுக்குள் வேலை தரப்படாவிட்டால் வேலையின்மைப் படி உண்டு.
- கூலிக்கும் பொருள் செலவுக்கும் இடையிலான விகிதம் 60:40.
- பணிகளை ஒப்பந்தக்காரர்கள் வழியே செயல்படுத்த வேண்டும்.
Correct Answer: B [1, 2 மட்டும்]
விளக்கம்:
MGNREGA-வில் 15 நாளுக்குள் வேலை இல்லையேல் வேலையின்மைப் படி; கூலி:பொருள் 60:40; ஒப்பந்தக்காரர்களுக்குத் தடை. 01.07.2026 முதல் VB-G RAM G சட்டம்.
18.
திட்டத்தையும் அதன் முதன்மைக் கவனத்தையும் பொருத்துக:
| a. MKSP | 1. சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள் |
| b. DDU-GKY | 2. வேளாண்மையில் பெண்கள் |
| c. RSETI | 3. ₹1 இலட்சம் ஆண்டு வருமானம் |
| d. லட்சாதிபதி சகோதரி | 4. இளைஞர் திறன் பயிற்சி |
Correct Answer: C [2 4 1 3]
விளக்கம்:
MKSP = மகளிர் உழவர்; DDU-GKY = 15–35 வயது இளைஞர் திறன்; RSETI = சுயதொழில் பயிற்சி; லட்சாதிபதி சகோதரி = ₹1 இலட்சம் ஆண்டு வருமானம்.
19.
திட்டத்தையும் அதன் அமைச்சகத்தையும் பொருத்துக:
| a. ஜல் ஜீவன் இயக்கம் | 1. பஞ்சாயத்து ராஜ் |
| b. SVAMITVA | 2. மின்சாரம் |
| c. PM-JANMAN | 3. ஜல் சக்தி |
| d. DDUGJY | 4. பழங்குடியினர் நலம் |
Correct Answer: D [3 1 4 2]
விளக்கம்:
ஜல் ஜீவன் – ஜல் சக்தி; SVAMITVA – பஞ்சாயத்து ராஜ்; PM-JANMAN – பழங்குடியினர் நலம்; DDUGJY – மின்சாரம்.
20.
PMAY-G-இல் சமவெளிப் பகுதியில் ஒரு வீட்டுக்கான உதவித் தொகை எவ்வளவு?
Correct Answer: A [₹1.20 இலட்சம்]
விளக்கம்:
சமவெளி ₹1.20 இலட்சம்; வடகிழக்கு, மலை ₹1.30 இலட்சம்; IAY-இல் ₹70,000; ₹3.50 இலட்சம் = தமிழ்நாட்டுக் கலைஞரின் கனவு இல்லம்.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
