இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – சமூகப் பிரச்சனைகள் (பகுதி 1)
← திரும்பச் செல்ல
தேசிய MPI: 3 சம எடைப் பரிமாணங்கள், 12 குறிகாட்டிகள்; தரவு தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS), NSSO நுகர்வுக் கணக்கெடுப்பு அல்ல. 15.1.2024 கட்டுரை: 2013-14 முதல் 2022-23 வரை 24.82 கோடி பேர் மீட்பு. கூற்று 2 தவறு.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – சமூகப் பிரச்சனைகள் (பகுதி 1) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
“An Essay on the Principle of Population” (1798) என்ற நூலை எழுதியவர் யார்?
Correct Answer: B [தாமஸ் இராபர்ட் மால்தஸ்]
விளக்கம்:
மால்தஸ் (1798): மக்கள்தொகை பெருக்கல் விகிதத்தில், உணவு கூட்டல் விகிதத்தில். கேனன் = உகந்த மக்கள்தொகை; லீ = இடப்பெயர்வுக் கோட்பாடு (1966).
2.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027-இன் குறிப்பு நாள் (பனி மூடிய பகுதிகள் தவிர) எது?
Correct Answer: C [1 மார்ச் 2027]
விளக்கம்:
குறிப்பு நாள் 1.3.2027 நள்ளிரவு 00:00. பனி மூடிய பகுதிகள் 1.10.2026; முதல் கட்டத் தொடக்கம் 1.4.2026; அரசிதழ் அறிவிப்பு 16.6.2025.
3.
குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கிய அரசமைப்பு உறுப்பு எது?
Correct Answer: D [உறுப்பு 21A]
விளக்கம்:
86-ஆவது திருத்தம் (2002) உறுப்பு 21A-ஐச் சேர்த்தது: 6–14 வயதினருக்கு இலவச, கட்டாயக் கல்வி. 45 = 6 வயது வரை ECCE (வழிகாட்டு நெறிமுறை); 51A(k) = பெற்றோர் கடமை.
4.
SRS 2023-இன்படி இந்தியாவின் சிசு இறப்பு வீதம் (IMR) என்ன?
Correct Answer: A [25]
விளக்கம்:
SRS 2023: 1000 உயிருள்ள பிறப்புக்கு 25. 2013-இல் 40; 2011-இல் 44.
5.
பிரதமரின் பாதுகாப்பான தாய்மை இயக்கத்தின் (PMSMA) கீழ் ஒவ்வொரு மாதமும் எந்த நாளில் கருவுற்ற பெண்களுக்குப் பரிசோதனை நடைபெறுகிறது?
Correct Answer: C [9-ஆம் நாள்]
விளக்கம்:
PMSMA (9.6.2016): ஒவ்வொரு மாதமும் 9-ஆம் நாள் அரசு நலவாழ்வு நிலையங்களில் மகப்பேற்றுக்கு முந்தைய பரிசோதனை.
6.
2011-12-க்கான வறுமைக் கோட்டை ஊரகத்தில் மாதம் ₹972, நகர்ப்புறத்தில் ₹1,407 எனப் பரிந்துரைத்த குழு எது?
Correct Answer: D [ரங்கராஜன் குழு]
விளக்கம்:
ரங்கராஜன் குழு (அறிக்கை 30.6.2014): ₹972 / ₹1,407; வறுமை 29.5%. டெண்டுல்கர் முறையில் 2011-12 கோடுகள் ₹816 / ₹1,000 (21.9%).
7.
PLFS ஆண்டறிக்கை 2025-இன்படி 15 வயதுக்கு மேற்பட்டோரின் வேலையின்மை வீதம் (வழக்கமான நிலை) என்ன?
Correct Answer: B [3.1%]
விளக்கம்:
PLFS 2025 (வெளியீடு 27.3.2026): 3.1%. 9.9% = இளைஞர் (15–29); 4.8% = நகரம்; 6.0% = 2017-18.
8.
தொழிலாளரின் இறுதிநிலை உற்பத்தித்திறன் சுழியமாக இருக்கும் வேலையின்மை எது?
Correct Answer: A [மறைமுக வேலையின்மை]
விளக்கம்:
மறைமுக வேலையின்மையில் தேவைக்கு அதிகமானோர் ஒரே வேலையில்; சிலரை நீக்கினாலும் உற்பத்தி குறையாது.
9.
தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் அமைக்கப்பட்ட நாள் எது?
Correct Answer: D [15.04.2008]
விளக்கம்:
தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் 15.04.2008. 10.1.2020 = திருநங்கையர் சட்டம் 2019 நடைமுறை; 2014 = NALSA தீர்ப்பு ஆண்டு; 12.2.2022 = SMILE.
10.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அந்த்யோதயா அன்ன யோஜனா குடும்பத்துக்கு மாதம் எவ்வளவு உணவு தானியம்?
Correct Answer: C [35 கிலோ]
விளக்கம்:
AAY: குடும்பத்துக்கு மாதம் 35 கிலோ; முன்னுரிமைக் குடும்பம்: நபருக்கு மாதம் 5 கிலோ. 10 கிலோ = அன்னபூர்ணா (அத்தியாயம் 9).
11.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைகள் (ICDS) தொடங்கப்பட்ட நாள் எது?
Correct Answer: B [2.10.1975]
விளக்கம்:
ICDS 2.10.1975. 15.8.1995 = தேசிய மதிய உணவுத் திட்டம் (NP-NSPE); 1.7.1982 = தமிழ்நாடு சத்துணவுத் திட்டம்; 8.3.2018 = போஷன் அபியான்.
12.
தமிழ்நாட்டில் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
Correct Answer: D [05.08.2021]
விளக்கம்:
மக்களைத் தேடி மருத்துவம் 05.08.2021. 29.09.2021 = வருமுன் காப்போம் மீண்டும்; 27.10.2021 = இல்லம் தேடிக் கல்வி; 15.09.2022 = காலை உணவுத் திட்டம்.
13.
நிகழ்வையும் ஆண்டையும் பொருத்துக:
| a. தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் | 1. 30.4.2025 |
| b. கரண் சிங் மக்கள்தொகைக் கொள்கை அறிக்கை | 2. 15.2.2000 |
| c. தேசிய மக்கள்தொகைக் கொள்கை | 3. 1952 |
| d. கணக்கெடுப்பில் சாதிக் கணக்கு முடிவு | 4. 16.4.1976 |
Correct Answer: A [3 4 2 1]
விளக்கம்:
தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் 1952; கரண் சிங் மக்கள்தொகைக் கொள்கை அறிக்கை 16.4.1976; NPP 2000 15.2.2000; கணக்கெடுப்பில் சாதி சேர்க்க அமைச்சரவைக் குழு முடிவு 30.4.2025.
14.
“கணக்கெடுப்பு நகரம்” (Census town) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- மக்கள்தொகை குறைந்தது 5,000 இருக்க வேண்டும்.
- பெண் முதன்மைத் தொழிலாளரில் குறைந்தது 75% வேளாண் சாரா வேலையில் இருக்க வேண்டும்.
- அடர்த்தி சதுர கி.மீ.க்குக் குறைந்தது 400 இருக்க வேண்டும்.
Correct Answer: C [1, 3 மட்டும்]
விளக்கம்:
மூன்று நிபந்தனைகள்: மக்கள்தொகை குறைந்தது 5,000; ஆண் முதன்மைத் தொழிலாளரில் குறைந்தது 75% வேளாண் சாரா வேலையில்; அடர்த்தி குறைந்தது 400. கூற்று 2 தவறு: பெண் அல்ல, ஆண் தொழிலாளர்.
15.
கல்விக் குழு / கொள்கையையும் ஆண்டையும் பொருத்துக:
| a. இராதாகிருஷ்ணன் குழு | 1. 1968 |
| b. முதலியார் குழு | 2. 1948 |
| c. முதல் தேசியக் கல்விக் கொள்கை | 3. 1993 |
| d. யஷ்பால் குழு | 4. 1952 |
Correct Answer: B [2 4 1 3]
விளக்கம்:
இராதாகிருஷ்ணன் குழு 1948; முதலியார் குழு 1952; முதல் NPE 1968; யஷ்பால் குழு 1993.
16.
தேசியக் கல்விக் கொள்கை 2020 பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- பள்ளிக் கல்வியில் 2030-க்குள் 100% மொத்தச் சேர்க்கை விகிதம் இலக்கு.
- உயர்கல்வியில் 2035-க்குள் 75% மொத்தச் சேர்க்கை விகிதம் இலக்கு.
- தாய்மொழி / வட்டார மொழி குறைந்தது வகுப்பு 5 வரை பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.
Correct Answer: D [1, 3 மட்டும்]
விளக்கம்:
NEP 2020: 2030-க்குள் பள்ளிக் கல்வியில் 100% GER; பயிற்று மொழி தாய்மொழி / வட்டார மொழி குறைந்தது வகுப்பு 5 வரை. உயர்கல்வி GER இலக்கு 2035-க்குள் 50% (75% அல்ல); எனவே கூற்று 2 தவறு.
17.
திட்டத்தையும் அதன் பயனாளிகளையும் பொருத்துக:
| a. RBSK | 1. 10–19 வயது இளம்பருவத்தினர் |
| b. RKSK | 2. 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் |
| c. JSY | 3. பிறப்பு முதல் 18 வயது, 4D பரிசோதனை |
| d. ஆயுஷ்மான் வய வந்தனா | 4. ஏழைக் கருவுற்ற பெண்களின் மருத்துவமனை மகப்பேறு |
Correct Answer: B [3 1 4 2]
விளக்கம்:
RBSK = பிறப்பு முதல் 18 வயது, 4D; RKSK = 10–19 வயது இளம்பருவத்தினர்; JSY = ஏழைக் கருவுற்ற பெண்களின் மருத்துவமனை மகப்பேறு; PM-JAY 70+ விரிவாக்கம் = வருமானம் பாராமல் 70 வயதுக்கு மேற்பட்டோர்.
18.
தேசிய நலவாழ்வுக் கணக்குகள் 2022-23 பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- அரசு நலவாழ்வுச் செலவு GDP-இல் 1.43%.
- மொத்த நலவாழ்வுச் செலவில் மக்களின் சொந்தப் பைச் செலவு 43.4%.
- 2013-14 உடன் ஒப்பிட, மொத்தச் செலவில் அரசின் பங்கு குறைந்துள்ளது.
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
அரசுச் செலவு GDP-இல் 1.43%; சொந்தப் பைச் செலவு 43.4%; மொத்தச் செலவில் அரசின் பங்கு 28.6% (2013-14) ➜ 43.7% ஆக உயர்ந்தது; எனவே கூற்று 3 தவறு.
19.
வறுமை மதிப்பீட்டுக் குழுவையும் அதன் அறிக்கை ஆண்டையும் பொருத்துக:
| a. அலக் பணிக்குழு | 1. 2009 |
| b. லக்டவாலா வல்லுநர் குழு | 2. 2014 |
| c. டெண்டுல்கர் வல்லுநர் குழு | 3. 1979 |
| d. ரங்கராஜன் வல்லுநர் குழு | 4. 1993 |
Correct Answer: D [3 4 1 2]
விளக்கம்:
அலக் பணிக்குழு 1979; லக்டவாலா 1993; டெண்டுல்கர் 2009; ரங்கராஜன் 2014.
20.
NITI Aayog-இன் தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இது நலவாழ்வு, கல்வி, வாழ்க்கைத் தரம் என்ற மூன்று பரிமாணங்களையும் 12 குறிகாட்டிகளையும் கொண்டது.
- இது NSSO நடத்தும் நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாகக் கொண்டது.
- 2013-14 முதல் 2022-23 வரை 24.82 கோடி பேர் பல பரிமாண வறுமையிலிருந்து மீண்டதாக ஜனவரி 2024 கட்டுரை கூறுகிறது.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
தேசிய MPI: 3 சம எடைப் பரிமாணங்கள், 12 குறிகாட்டிகள்; தரவு தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS), NSSO நுகர்வுக் கணக்கெடுப்பு அல்ல. 15.1.2024 கட்டுரை: 2013-14 முதல் 2022-23 வரை 24.82 கோடி பேர் மீட்பு. கூற்று 2 தவறு.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
