இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – பொருளாதார அமைப்பும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் (பகுதி 2)
← திரும்பச் செல்ல
முழுவதும் மாநில நிதி (₹75 கோடி 2021-22, ₹25 கோடி 2022-23); காரணம் சரி.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – பொருளாதார அமைப்பும் வேலைவாய்ப்பு உருவாக்கமும் (பகுதி 2) – 20 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
கூலி வேலைத் திட்டத்தையும் தொடக்க ஆண்டையும் பொருத்துக:
| a. CSRE | 1. 1993 |
| b. RLEGP | 2. 1983 |
| c. EAS | 3. 2004 |
| d. NFFWP | 4. 1971 |
Correct Answer: C [4 2 1 3]
விளக்கம்:
CSRE 1971; RLEGP 1983; EAS 1993; NFFWP 2004.
2.
முத்ரா கடன் பிரிவையும் கடன் வரம்பையும் பொருத்துக:
| a. சிசு | 1. ₹50,000–₹5 இலட்சம் |
| b. கிஷோர் | 2. ₹10–20 இலட்சம் |
| c. தருண் | 3. ₹50,000 வரை |
| d. தருண் பிளஸ் | 4. ₹5–10 இலட்சம் |
Correct Answer: D [3 1 4 2]
விளக்கம்:
சிசு ₹50,000 வரை; கிஷோர் ₹50,000–₹5 இலட்சம்; தருண் ₹5–10 இலட்சம்; தருண் பிளஸ் ₹10–20 இலட்சம்.
3.
VB-G RAM G சட்டத்தின்கீழ் 1.7.2026 முதல் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நாள் கூலி எவ்வளவு?
Correct Answer: B [₹345]
விளக்கம்:
S.O. 3518(E), 30.6.2026; ₹319 = MGNREGA 2024-25; ₹300 = இடைக்கால அடிப்படைக் கூலி; ₹409 = அரியானா.
4.
VB-G RAM G சட்டம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- விதைப்பு, அறுவடைக் காலங்களில் மொத்தம் 60 நாள் பணிகள் நிறுத்தப்படும்; அக்காலத்தை மாநில அரசு அறிவிக்கும்.
- நிர்வாகச் செலவு வரம்பு 6%-இலிருந்து 9%-ஆக உயர்ந்தது.
- பொது மாநிலங்களுக்கு ஒன்றியம் : மாநிலம் நிதிப் பங்கு 90 : 10.
Correct Answer: A [1, 2 மட்டும்]
விளக்கம்:
பொது மாநிலங்களுக்கு 60 : 40; 90 : 10 என்பது வடகிழக்கு, இமயமலை மாநிலங்களுக்கு மட்டும்.
5.
தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தில் (NSDC) இந்திய அரசின் பங்கு எவ்வளவு?
Correct Answer: D [49%]
விளக்கம்:
அரசு 49%, தனியார் 51%: இலாப நோக்கற்ற அரசு–தனியார் கூட்டு.
6.
திட்டத்தையும் தொடக்க நாளையும் பொருத்துக:
| a. NRLM | 1. 15.7.2015 |
| b. DDU-GKY | 2. 3.6.2011 |
| c. திறன் இந்தியா | 3. 17.9.2023 |
| d. PM விஸ்வகர்மா | 4. 25.9.2014 |
Correct Answer: C [2 4 1 3]
விளக்கம்:
NRLM 3.6.2011; DDU-GKY 25.9.2014; திறன் இந்தியா 15.7.2015; PM விஸ்வகர்மா 17.9.2023.
7.
NEEDS திட்டத்தில் சேர குறைந்தபட்சக் கல்வித் தகுதி எது?
Correct Answer: B [மேல்நிலை (+2) தேர்ச்சி]
விளக்கம்:
8-ஆம் வகுப்பு = UYEGP. NEEDS: 21–45 வயது, முதல் தலைமுறை, உற்பத்தி / சேவை.
8.
தமிழ்நாட்டுத் திட்டத்தையும் மானிய உச்சத்தையும் பொருத்துக:
| a. UYEGP | 1. ₹1.5 கோடி |
| b. NEEDS | 2. ₹50,000 |
| c. அண்ணல் அம்பேத்கர் திட்டம் | 3. ₹75 இலட்சம் |
| d. கலைஞர் கைவினைத் திட்டம் | 4. ₹3.75 இலட்சம் |
Correct Answer: D [4 3 1 2]
விளக்கம்:
UYEGP ₹3.75 இலட்சம்; NEEDS ₹75 இலட்சம்; AABCS ₹1.5 கோடி; கலைஞர் கைவினை ₹50,000.
9.
2001, 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- உழவர் எண்ணிக்கை 2001-ஐவிட 2011-இல் குறைந்தது.
- வேளாண் கூலியாளர் எண்ணிக்கை 2001-ஐவிட 2011-இல் குறைந்தது.
- ஆண்டில் 6 மாதத்துக்குக் குறைவாக வேலை செய்தவர் குறுப் பணியாளர்.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
உழவர் 12.73 ➜ 11.88 கோடி (குறைவு); வேளாண் கூலியாளர் 10.68 ➜ 14.43 கோடி (உயர்வு); குறுப் பணியாளர் = 6 மாதத்துக்குக் குறைவு.
10.
PLFS 2025 வேலை நிலைப் பகிர்வு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- பாதிக்கு மேற்பட்ட பணியாளர் சுயவேலையில் உள்ளனர்.
- வழக்கமான ஊதிய / சம்பள வேலை தற்காலிகக் கூலி வேலையைவிட அதிகம்.
- தற்காலிகக் கூலித் தொழிலாளரே மிகப் பெரிய பிரிவு.
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
சுயவேலை 56.2%, வழக்கமான ஊதியம் 23.6%, தற்காலிகக் கூலி 20.2%.
11.
கூற்று (A): வேலை செய்யும் உரிமையை (உறுப்பு 41) நீதிமன்றத்தில் நேரடியாகக் கோர முடியாது.
காரணம் (R): உறுப்பு 41 அரசு நெறிமுறைக் கோட்பாடுகளில் (பகுதி IV) உள்ளது.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true
Correct Answer: A []
விளக்கம்:
நெறிமுறைக் கோட்பாடுகள் நீதிமன்றத்தில் கோர முடியாதவை (உறுப்பு 37); அதனால்தான் 41 நேரடி உரிமை அல்ல.
12.
கூற்று (A): முழு வேலைவாய்ப்பு நிலையிலும் சிறிதளவு வேலையின்மை இருக்கும்.
காரணம் (R): வேலை மாறுவோர் இடைக்காலத்தில் வேலையின்றி இருப்பர்.
Correct Answer: A []
விளக்கம்:
இடைமாற்ற (frictional) வேலையின்மையே காரணம்; பெவரிட்ஜ் 3% என்ற அளவைக் குறிப்பிட்டார்.
13.
வேலைவாய்ப்பு அளவீடு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- PLFS 2011-இல் தொடங்கப்பட்டது.
- NSSO, CSO ஆகியவை இணைந்து 2019-இல் தேசியப் புள்ளியியல் அலுவலகம் உருவானது.
- 2025 முதல் PLFS மாதாந்திர மதிப்பீடுகளையும் தருகிறது.
Correct Answer: B [2, 3 மட்டும்]
விளக்கம்:
NSO = NSSO + CSO இணைப்பு (2019); PLFS 2017-இல் தொடக்கம்; 2025 முதல் மாதாந்திர, காலாண்டு மதிப்பீடுகள்.
14.
கூற்று (A): “வழங்கல் தன் தேவையைத் தானே உருவாக்கும்” என்பதால் தன்விருப்பமற்ற வேலையின்மை நீடிக்காது என்றனர் தொன்மைப் பொருளியலார்.
காரணம் (R): கீன்ஸின் கருத்தில் வேலைவாய்ப்பின் அளவை நிர்ணயிப்பது பயன்தரும் தேவை.
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் சரியான கூற்றுகள்; ஆனால் R கீன்ஸின் மறுப்பு, A-க்கு விளக்கம் அல்ல.
15.
SGRY பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- EAS, JGSY ஆகியவை இணைந்து உருவானது.
- கூலியின் ஒரு பகுதி உணவு தானியமாக வழங்கப்பட்டது.
- ஒன்றியம் : மாநிலம் நிதிப் பங்கு 75 : 25.
Correct Answer: C [1, 2, 3]
விளக்கம்:
கூலியின் ஒரு பகுதி தானியம் (நாளுக்குக் குறைந்தது 5 கிலோ), குறைந்தது 25% பணம்; ஒன்றியம் : மாநிலம் 75 : 25.
16.
IRDP பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- 2.10.1980 முதல் நாட்டின் எல்லா வட்டாரங்களிலும் செயல்பட்டது.
- 1.4.1999-இல் NRLM-இல் இணைக்கப்பட்டது.
- மானியமும் வங்கிக் கடனும் சேர்த்து வருமானம் தரும் சொத்தை வழங்கியது.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
IRDP 1.4.1999-இல் SGSY-இல் இணைந்தது; NRLM-இல் அல்ல.
17.
கூற்று (A): VB-G RAM G-இன் கீழ் நெறி ஒதுக்கீட்டுக்கு மேலான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும்.
காரணம் (R): MGNREGA தேவை அடிப்படையிலான சட்டமாக இருந்தது.
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் சரி; A பிரிவு 4(5)-இன் விளைவு. R பழைய சட்டத்தின் தன்மை; A-க்கு விளக்கம் அல்ல.
18.
PM விஸ்வகர்மா பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- 18 மரபுத் தொழில்களை உள்ளடக்கும்.
- குறைந்தபட்ச வயது 35.
- பிணையில்லாக் கடனுக்கு வட்டி 5%.
Correct Answer: C [1, 3 மட்டும்]
விளக்கம்:
18 மரபுத் தொழில்கள், 18 வயது; கடன் ₹1 இலட்சம் + ₹2 இலட்சம் 5% வட்டியில். 25 தொழில், 35 வயது = கலைஞர் கைவினைத் திட்டம்.
19.
பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கார் யோஜனா (PM-VBRY) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இது உற்பத்தி இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் (PLI) மறுபெயர்.
- முதன்முறை EPFO பதிவு பெற்ற பணியாளருக்கு ₹15,000 வரை ஊக்கத்தொகை.
- 1.8.2025 முதல் 31.7.2027 வரை உருவாகும் வேலைகளுக்குப் பொருந்தும்.
Correct Answer: A [2, 3 மட்டும்]
விளக்கம்:
இது வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (EPFO வழி); PLI என்பது உற்பத்தி இணைந்த ஊக்கத்தொகை.
20.
கூற்று (A): தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் ஒன்றிய–மாநில நிதிப் பகிர்வில் நடைபெறுகிறது.
காரணம் (R): இத்திட்டம் நகர்ப்புற ஏழைகளுக்குப் பொதுச் சொத்துகளை உருவாக்கும் கூலி வேலை தருகிறது.
Correct Answer: D []
விளக்கம்:
முழுவதும் மாநில நிதி (₹75 கோடி 2021-22, ₹25 கோடி 2022-23); காரணம் சரி.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
