இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை, வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் (பகுதி 1)

← திரும்பச் செல்ல

இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை, வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் (பகுதி 1) – 22 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.

தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
PLFS 2025-இன்படி இந்தியத் தொழிலாளரில் வேளாண்மையில் உள்ளோர் பங்கு ஏறத்தாழ எவ்வளவு?

Correct Answer: B [43.0%]

விளக்கம்:

43.0% (முந்தைய எண் 46.1%, 2023-24): பத்தில் நான்கு பேருக்கு மேல் வேலைவாய்ப்பு; ஆனால் மொத்த மதிப்புக் கூட்டலில் ஆறில் ஒரு பங்கு (சுமார் 17%) மட்டும்.

2.  
வங்காளத்தில் நிலையான தீர்வையை (1793) அறிமுகப்படுத்தியவர் யார்?

Correct Answer: C [காரன்வாலிஸ்]

விளக்கம்:

தலைமை ஆளுநர் காரன்வாலிஸ், 22.3.1793.

3.  
இரயத்துவாரி முறை முதன்முதலில் எங்கு அறிமுகமானது?

Correct Answer: D [பாராமஹால்]

விளக்கம்:

அலெக்சாண்டர் ரீட், 1792, பாராமஹால் (இன்றைய சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதி).

4.  
ஒன்பதாம் அட்டவணையை அரசியலமைப்பில் சேர்த்த திருத்தம் எது?

Correct Answer: A [முதல் திருத்தம் (1951)]

விளக்கம்:

நிலச் சீர்திருத்தச் சட்டங்களை நீதிமன்றச் சவாலிலிருந்து காக்க.

5.  
வினோபா பாவே பூமிதான இயக்கத்தைத் தொடங்கிய இடம் எது?

Correct Answer: C [போச்சம்பள்ளி]

விளக்கம்:

18.4.1951, போச்சம்பள்ளி (தெலங்கானா); முதல் நிலக்கொடை வி. ராமச்சந்திர ரெட்டி. மங்ரோத் = முதல் கிராமதானம் (1952).

6.  
“இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை” எனப்படுபவர் யார்?

Correct Answer: D [எம்.எஸ். சுவாமிநாதன்]

விளக்கம்:

குரியன் = வெண்மைப் புரட்சி; சுப்பிரமணியம் = அன்றைய ஒன்றிய வேளாண் அமைச்சர்.

7.  
“பசுமைப் புரட்சி” என்ற சொல்லை 1968-இல் முதலில் பயன்படுத்தியவர் யார்?

Correct Answer: B [வில்லியம் காட்]

விளக்கம்:

USAID நிர்வாகி வில்லியம் காட், 8.3.1968.

8.  
வெண்மைப் புரட்சி எதனுடன் தொடர்புடையது?

Correct Answer: A [பால்]

விளக்கம்:

வர்கீஸ் குரியன்; ஆபரேஷன் ஃப்ளட் 1970.

9.  
இந்தியாவின் முதல் முழு இயற்கை வேளாண் மாநிலம் எது?

Correct Answer: D [சிக்கிம்]

விளக்கம்:

சிக்கிம், 2016.

10.  
குறைந்தபட்ச ஆதரவு விலையைப் பரிந்துரைக்கும் அமைப்பு எது?

Correct Answer: C [வேளாண் செலவு, விலை ஆணையம் (CACP)]

விளக்கம்:

பரிந்துரை CACP; ஒப்புதல் ஒன்றிய அமைச்சரவை.

11.  
தமிழ்நாட்டில் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: B [1999]

விளக்கம்:

14.11.1999; 2016 = e-NAM.

12.  
உழவர் கடன் அட்டை (KCC) அறிமுகமான ஆண்டு எது?

Correct Answer: D [1998]

விளக்கம்:

ஆகஸ்ட் 1998 (1998-99 வரவு செலவுத் திட்டம்); RBI, NABARD.

13.  
சொட்டு நீர்ப் பாசனம் முதலில் அறிமுகமான நாடு எது?

Correct Answer: A [இஸ்ரேல்]

விளக்கம்:

ஏறத்தாழ 70% நீர் சேமிப்பு.

14.  
நில உடைமை வகையையும் அளவையும் பொருத்துக:
a. குறு 1. 2–4 ha
b. சிறு 2. 1 ha-க்குக் கீழ்
c. நடுத்தர-சிறு 3. 10 ha-க்கு மேல்
d. பெரு 4. 1–2 ha

Correct Answer: C [2 4 1 3]

விளக்கம்:

குறு – 1 ha-க்குக் கீழ்; சிறு – 1–2 ha; நடுத்தர-சிறு – 2–4 ha; பெரு – 10 ha-க்கு மேல் ➜ 2 4 1 3.

15.  
வேளாண் கணக்கெடுப்பு 2015-16 பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. மொத்த நில உடைமைகளில் குறு நிலங்கள் ஏறத்தாழ 68.5%.
  2. சராசரி நில உடைமை அளவு 1.08 ha.
  3. சராசரி நில உடைமை அளவு 1970-71 முதல் உயர்ந்து வருகிறது.

Correct Answer: B [1, 2 மட்டும்]

விளக்கம்:

குறு நிலங்கள் 68.5%; சராசரி 1.08 ha; சராசரி 1970-71-இல் 2.28 ha-இலிருந்து தொடர்ந்து குறைந்துள்ளது.

16.  
நிலையான தீர்வையில் வசூலான வருவாயில் அரசுக்குரிய பங்கு எவ்வளவு?

Correct Answer: D [10/11]

விளக்கம்:

அரசுக்கு 10/11; ஜமீன்தாருக்கு 1/11 மட்டும்.

17.  
நில வருவாய் முறையையும் அதனுடன் தொடர்புடையவரையும் பொருத்துக:
a. ஜமீன்தாரி 1. ஹோல்ட் மெக்கன்சி
b. இரயத்துவாரி 2. வில்லியம் பெண்டிங்
c. மகல்வாரி 3. காரன்வாலிஸ்
d. மகல்வாரித் திருத்தம் (1833) 4. தாமஸ் மன்றோ

Correct Answer: B [3 4 1 2]

விளக்கம்:

ஜமீன்தாரி – காரன்வாலிஸ்; இரயத்துவாரி – மன்றோ; மகல்வாரி – ஹோல்ட் மெக்கன்சி (1822); மகல்வாரித் திருத்தம் – பெண்டிங் (1833).

18.  
நிகழ்வையும் ஆண்டையும் பொருத்துக:
a. நிலையான தீர்வை 1. 1820
b. பாராமஹாலில் இரயத்துவாரி 2. 1793
c. சென்னை மாகாணம் முழுமைக்கும் இரயத்துவாரி 3. 1822
d. மகல்வாரி 4. 1792

Correct Answer: C [2 4 1 3]

விளக்கம்:

நிலையான தீர்வை 1793; பாராமஹால் இரயத்துவாரி 1792; சென்னை மாகாணம் முழுமைக்கும் இரயத்துவாரி 1820; மகல்வாரி 1822.

19.  
மகல்வாரி முறை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
  1. மகல்வாரி முறை வங்காளத்தில் பரவலாக இருந்தது.
  2. தீர்வை கிராமம் (மகால்) முழுமைக்கும் கூட்டாக நிர்ணயிக்கப்பட்டது.
  3. கிராமத் தலைவர் (லம்பர்தார்) வரி வசூலித்தார்.

Correct Answer: D [2, 3 மட்டும்]

விளக்கம்:

மகல்வாரி வடமேற்கு மாகாணம், பஞ்சாப், மத்திய மாகாணத்தில்; வங்காளத்தில் நிலையான தீர்வை.

20.  
சென்னை மாகாண ஜமீன் ஒழிப்புச் சட்டம் (Act XXVI) இயற்றப்பட்ட ஆண்டு எது?

Correct Answer: A [1948]

விளக்கம்:

1938 = பிரகாசம் குழு அறிக்கை; 1955 = குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம்; 1961 = உச்சவரம்புச் சட்டம்.

21.  
திட்டத்தையும் அதன் பணியையும் பொருத்துக:
a. ULPIN1. நிலப் பதிவேடுகள் கணினிமயம்
b. SVAMITVA2. ஜமீன் ஒழிப்புப் பரிந்துரை (1938)
c. DILRMP3. 14 இலக்க நில அடையாள எண்
d. பிரகாசம் குழு 4. ட்ரோன் அளவை, ஊரகச் சொத்து அட்டை

Correct Answer: C [3 4 1 2]

விளக்கம்:

ULPIN 14 இலக்க நில அடையாள எண்; SVAMITVA ட்ரோன் அளவையால் ஊரகக் குடியிருப்புச் சொத்து அட்டை; DILRMP நிலப் பதிவேடு கணினிமயம்; பிரகாசம் குழு ஜமீன் ஒழிப்புப் பரிந்துரை.

22.  
1972 தேசிய வழிகாட்டுதல்படி இரு போகப் பாசன நிலத்துக்கான உச்சவரம்பு எவ்வளவு?

Correct Answer: D [10–18 ஏக்கர்]

விளக்கம்:

ஒரு போகப் பாசனம் 27; பிற நிலம் 54 ஏக்கர்.

? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy

📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0