இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை, வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் (பகுதி 2)
← திரும்பச் செல்ல
AGRISNET தமிழ்நாடு வேளாண் துறையின் தளம்.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் பாடநூல் வினாக்கள் – நிலச் சீர்திருத்தங்கள், வேளாண்மை, வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பம் (பகுதி 2) – 22 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
திட்டத்தையும் தொடங்கிய ஆண்டையும் பொருத்துக:
| a. IADP | 1. 1966-67 |
| b. IAAP | 2. 1960 |
| c. HYVP | 3. 1964 |
| d. சுவாமிநாதனுக்குப் பாரத ரத்னா | 4. 2024 |
Correct Answer: B [2 3 1 4]
விளக்கம்:
IADP 1960; IAAP 1964; HYVP 1966-67; சுவாமிநாதனுக்குப் பாரத ரத்னா அறிவிப்பு 9.2.2024.
2.
புரட்சியையும் துறையையும் பொருத்துக:
| a. நீலப் புரட்சி | 1. தேன் |
| b. இனிப்புப் புரட்சி | 2. எண்ணெய் வித்து |
| c. மஞ்சள் புரட்சி | 3. மீன் |
| d. வெண்மைப் புரட்சி | 4. பால் |
Correct Answer: A [3 1 2 4]
விளக்கம்:
நீலம் – மீன்; இனிப்பு – தேன்; மஞ்சள் – எண்ணெய் வித்து; வெண்மை – பால்.
3.
ஆபரேஷன் ஃப்ளட் தொடங்கிய ஆண்டு எது?
Correct Answer: D [1970]
விளக்கம்:
1965 = NDDB அமைப்பு; ஆபரேஷன் ஃப்ளட் மூன்று கட்டங்கள், 1970 முதல் 1996 வரை.
4.
அமைப்பையும் தொடக்கத்தையும் பொருத்துக:
| a. e-NAM | 1. மார்ச் 2000 |
| b. AGMARKNET | 2. 1985 |
| c. கிசான் ரத் செயலி | 3. 14.4.2016 |
| d. “CACP” என்ற பெயர் | 4. 17.4.2020 |
Correct Answer: C [3 1 4 2]
விளக்கம்:
e-NAM 14.4.2016; AGMARKNET மார்ச் 2000; கிசான் ரத் 17.4.2020; CACP பெயர் 1985 (1965-இல் வேளாண் விலைகள் ஆணையம்).
5.
கரும்புக்கு ஒன்றிய அரசு ஆண்டுதோறும் அறிவிக்கும் விலை எது?
Correct Answer: B [நியாயமான, ஈட்டம் தரும் விலை (FRP)]
விளக்கம்:
2026-27 FRP குவிண்டாலுக்கு ₹365 (10.25% சர்க்கரை மீட்பு).
6.
PMFBY-இல் காரீஃப் பயிருக்கு உழவர் செலுத்தும் அதிகபட்சக் கட்டண விகிதம் எது?
Correct Answer: D [2%]
விளக்கம்:
ராபி 1.5%; வணிக, தோட்டக்கலைப் பயிர் 5%.
7.
அமைப்பு / திட்டத்தையும் தொடக்க ஆண்டையும் பொருத்துக:
| a. வட்டார ஊரக வங்கிகள் | 1. 2016 |
| b. விரிவான பயிர்க் காப்பீட்டுத் திட்டம் | 2. 1975 |
| c. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் | 3. 1985 |
| d. PMFBY | 4. 1999-2000 |
Correct Answer: A [2 3 4 1]
விளக்கம்:
RRB 1975 ➜ CCIS 1985 ➜ NAIS 1999-2000 ➜ PMFBY 2016.
8.
தமிழ்நாட்டில் அதிகப் பாசனப் பரப்பைத் தரும் ஆதாரம் எது?
Correct Answer: C [கிணறுகள்]
விளக்கம்:
கிணறுகள் 62%, கால்வாய் 24%, ஏரிகள் 14%.
9.
நிறுவனத்தையும் தொடக்க ஆண்டையும் பொருத்துக:
| a. ICAR | 1. 1972 |
| b. ICRISAT | 2. 1929 |
| c. DARE | 3. 1974 |
| d. முதல் வேளாண் அறிவியல் நிலையம் | 4. 1973 |
Correct Answer: B [2 1 4 3]
விளக்கம்:
ICAR 1929; ICRISAT 1972; DARE 1973; முதல் வேளாண் அறிவியல் நிலையம் 1974 (புதுச்சேரி).
10.
கூற்று (A): 2024-25-இல் இந்தியாவின் தோட்டக்கலை உற்பத்தி உணவு தானிய உற்பத்தியைவிட அதிகம்.
காரணம் (R): உணவு தானியங்களைவிடத் தோட்டக்கலைப் பயிர்கள் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகின்றன.
கூற்று–காரண வினாக்களுக்கான தேர்வுகள்
(A) கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
(B) கூற்றும் காரணமும் சரி; ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல
(C) கூற்று சரி; காரணம் தவறு
(D) கூற்று தவறு; காரணம் சரி
Options for Assertion–Reason questions
(A) Both A and R are true; R is the correct explanation of A
(B) Both A and R are true; R is not the correct explanation of A
(C) A is true; R is false
(D) A is false; R is true
Correct Answer: C []
விளக்கம்:
தோட்டக்கலை 370.74 MT (இறுதி), தானியம் 357.73 MT: கூற்று சரி. ஆனால் தானியங்களின் பரப்பே மிக அதிகம்; தோட்டக்கலையின் ஹெக்டேர் விளைச்சல் அதிகம்.
11.
ஜமீன்தாரி முறை பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- ஜமீன்தார் நிலத்தின் உரிமையாளர் ஆக்கப்பட்டார்.
- ஜமீன்தார் அரசுக்குச் செலுத்தும் தொகை நிலையாக நிர்ணயிக்கப்பட்டது.
- உழவர் ஜமீன்தாருக்குச் செலுத்தும் குத்தகையும் நிலையாக நிர்ணயிக்கப்பட்டது.
Correct Answer: D [1, 2 மட்டும்]
விளக்கம்:
ஜமீன்தார் உரிமையாளர் ஆனார்; அரசுக்குச் செலுத்தும் தொகை நிலையானது; ஆனால் உழவரிடம் வாங்கும் குத்தகைக்கு வரம்பில்லை, அதுவே சுரண்டலுக்குக் காரணம்.
12.
கூற்று (A): இரயத்துவாரி முறையில் அரசுக்கும் உழவருக்கும் இடையே இடைத்தரகர் இல்லை.
காரணம் (R): இரயத்துவாரி முறையில் உழவர் (இரயத்) அரசுக்கு நேரடியாக நில வரி செலுத்தினார்.
Correct Answer: A []
விளக்கம்:
நேரடி வரிச் செலுத்தலே இடைத்தரகர் இல்லாமைக்குக் காரணம்.
13.
அரசியலமைப்பு முதல் திருத்தம் (1951) பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இது சொத்துரிமையை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கியது.
- இது உறுப்பு 31A-ஐச் சேர்த்தது.
- இது உறுப்பு 31B-ஐயும் ஒன்பதாம் அட்டவணையையும் சேர்த்தது.
Correct Answer: B [2, 3 மட்டும்]
விளக்கம்:
சொத்துரிமையை அடிப்படை உரிமைகளிலிருந்து நீக்கியது 44-ஆவது திருத்தம் (1978).
14.
தமிழ்நாட்டு நில உச்சவரம்பு பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- ஐவர் குடும்பத்துக்கு இன்றைய உச்சவரம்பு 30 நிலைத்தர ஏக்கர்.
- ஐவருக்கு மேல் ஒவ்வொரு கூடுதல் உறுப்பினருக்கும் 5 நிலைத்தர ஏக்கர் கூடுதலாக அனுமதி.
- 1970 சட்டம் உச்சவரம்பைக் குறைத்தது.
Correct Answer: C [2, 3 மட்டும்]
விளக்கம்:
ஐவர் குடும்பத்துக்கு 15 நிலைத்தர ஏக்கர் (1970 குறைப்புச் சட்டம், 15.2.1970 முதல்); 30 என்பது பெருங்குடும்பத்துக்கான அதிகபட்சம்.
15.
கூற்று (A): நில ஒருங்கிணைப்பு நில உடைமையாளர் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
காரணம் (R): நில ஒருங்கிணைப்பு ஒருவரின் சிதறிய துண்டுகளை ஒன்றாக்கி ஒரே தொகுப்பாகத் தருகிறது.
Correct Answer: D []
விளக்கம்:
ஒருங்கிணைப்பு உடைமையாளரை மாற்றுவதில்லை; துண்டுகளை மட்டும் ஒன்றாக்குகிறது. கூற்று தவறு, காரணம் சரி.
16.
பசுமைப் புரட்சியின் விளைவுகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- கோதுமை உற்பத்தி மிகப் பெரிய அளவில் உயர்ந்தது.
- பருப்பு, எண்ணெய் வித்துகளும் தானியங்களுக்கு இணையாகப் பயன் பெற்றன.
- பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் அதிகம் பயன் பெற்றன.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
பயன் கோதுமைக்கும் பாசனப் பகுதிகளுக்கும் அதிகம்; பருப்பு, எண்ணெய் வித்துகள் பின்தங்கின.
17.
கூற்று (A): எம்.எஸ். சுவாமிநாதனுக்கு 2024-இல் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது.
காரணம் (R): அவர் 1988-இல் சென்னையில் MSSRF ஆய்வு அறக்கட்டளையை நிறுவினார்.
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் உண்மை; ஆனால் விருது பசுமைப் புரட்சிப் பங்களிப்புக்காக; அறக்கட்டளை நிறுவியது காரணம் அல்ல.
18.
“நித்தியப் பசுமைப் புரட்சி” பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- இக்கருத்தை முன்வைத்தவர் எம்.எஸ். சுவாமிநாதன்.
- சூழலுக்குக் கேடின்றி நீடித்த உற்பத்தி உயர்வே அதன் நோக்கம்.
- வேதி உரப் பயன்பாட்டைப் பெருக்குவதே அதன் மையம்.
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
சூழல் கெடாமல் நீடித்த உற்பத்தி உயர்வு; வேதி உரப் பெருக்கம் அதன் மையம் அல்ல.
19.
கூற்று (A): குறைந்தபட்ச ஆதரவு விலை விதைப்புக் காலத்துக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது.
காரணம் (R): எந்தப் பயிரை எவ்வளவு பயிரிடுவது என உழவர் முடிவெடுக்க முன்கூட்டிய விலை உத்தரவாதம் உதவுகிறது.
Correct Answer: A []
விளக்கம்:
முன்கூட்டிய அறிவிப்பின் நோக்கமே பயிர் முடிவுக்கு வழிகாட்டுதல்.
20.
PM தன்-தான்ய வேளாண் திட்டம் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட 100 மாவட்டங்களில் செயல்படுகிறது.
- 36 ஒன்றியத் திட்டங்களை ஒருங்கிணைக்கிறது.
- ஆண்டு ஒதுக்கீடு ₹24,000 கோடி.
Correct Answer: A [1, 2, 3]
விளக்கம்:
அமைச்சரவை ஒப்புதல் 16.7.2025; 11 துறைகளின் 36 திட்டங்கள்; 6 ஆண்டுகள்.
21.
கூற்று (A): உழவர் கடன் அட்டை வழி பெற்ற தொகையை உழவர் திருப்பிச் செலுத்த வேண்டும்.
காரணம் (R): PM-KISAN நிலம் உள்ள உழவர் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹6,000 நேரடி உதவி தருகிறது.
Correct Answer: B []
விளக்கம்:
இரண்டும் உண்மை; KCC கடன், PM-KISAN உதவி: இரண்டும் வேறு திட்டங்கள், ஒன்று மற்றதை விளக்காது.
22.
தமிழ்நாட்டின் டிஜிட்டல் வேளாண் முயற்சிகள் பற்றிய கூற்றுகளில் சரியானவை எவை?
- GRAINS என்பது 13 துறைகளின் பயன்களுக்கான ஒற்றை உழவர் பதிவேடு.
- AGRISNET ஒன்றிய அரசின் வேளாண் தகவல் தளம்.
- உழவன் கைப்பேசிச் செயலி 2018-இல் தொடங்கப்பட்டது.
Correct Answer: A [1, 3 மட்டும்]
விளக்கம்:
AGRISNET தமிழ்நாடு வேளாண் துறையின் தளம்.
? இந்த வினாக்களுக்கான முழு பாடமும் விளக்கமும் – இந்தியப் பொருளாதாரம் PDF பாடநூல் (₹299): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-gs-unit-5-indian-economy
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
