இந்தியப் பொருளாதாரம் PYQ – வங்கித் துறை, நிதி நிறுவனங்கள்
← திரும்பச் செல்ல
NPCI International – பிரான்ஸின் லைரா (Lyra) நிறுவன ஒப்பந்தத்தின்படி UPI-ஐ ஏற்ற முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ்; பிப்ரவரி 2024-இல் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தில் UPI வழிப் பணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது. UPI-ஐ உருவாக்கியது NPCI (2016).
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – வங்கித் துறை, நிதி நிறுவனங்கள் – 15 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
PTGS 2021
முத்ரா (MUDRA) திட்டத்தின் கீழ் கடன் பெறுவோர்Correct Answer: D [நுண் தொழில் நிறுவனங்கள்]
விளக்கம்:
MUDRA – Micro Units Development & Refinance Agency (8 ஏப்ரல் 2015).
2.
Special Competitive Exam 2025
முத்ரா வங்கியின் முதன்மை நோக்கங்கள் :(i) அனைத்து நுண்நிதி நிறுவனங்களையும் (MFIs) பதிவு செய்தல்
(ii) இந்திய வேளாண் துறையை முன்னேற்றுதல்
(iii) நுண்நிதி அமைப்பில் நிலைத்தன்மையை ஏற்படுத்துதல்
Correct Answer: C [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
நுண்நிதி நிறுவனங்களைப் பதிவு செய்து தர மதிப்பீடு செய்தல், ஒழுங்குமுறையின் வழியாக நுண்நிதி அமைப்புக்கு நிலைத்தன்மை கொண்டுவருதல், நுண் தொழில்களுக்கு மறுநிதி வழங்குதல் ஆகியவை MUDRA-வின் நோக்கங்கள். வேளாண் கடனுக்கான உச்ச நிறுவனம் NABARD.
3.
PTGS 2021
வளர்ச்சி நிதி நிறுவனங்கள் (Development Financial Institutions) எவை?1. IFCI
2. ICICI
3. IDBI
4. UTI
Correct Answer: D [1, 2, 3, 4]
விளக்கம்:
தொழில் வளர்ச்சிக்கு நீண்டகால நிதி வழங்க அமைக்கப்பட்ட நிறுவனங்கள் IFCI (1948), ICICI (1955), IDBI (1964), UTI (1964).
4.
GSCE 2021 · Road Inspector 2023
சுய உதவிக் குழு – வங்கி இணைப்புத் திட்டம் (SHG-Bank Linkage Programme) தொடங்கப்பட்ட ஆண்டுCorrect Answer: B [1992]
விளக்கம்:
NABARD 1992-இல் முன்னோடித் திட்டமாக SHG – வங்கி இணைப்புத் திட்டத்தைத் தொடங்கியது; இது உலகின் மிகப் பெரிய நுண்நிதித் திட்டங்களில் ஒன்று. (Road Inspector 2023 வினாவில் விருப்பங்கள் 1996 / 2006 / 1992 / 2002; விடை 1992.)
5.
Library Service 2023
நுண்நிதி (Micro finance) என்பது ______ குறிக்கிறது.Correct Answer: B [குறைந்த வருமானப் பிரிவினருக்கு நிதிச் சேவைகள் வழங்குதல்]
விளக்கம்:
வங்கிச் சேவை கிடைக்காத ஏழை, குறைந்த வருமானக் குடும்பங்களுக்குச் சிறு கடன், சேமிப்பு, காப்பீடு போன்ற நிதிச் சேவைகளை வழங்குவதே நுண்நிதி. SHG – வங்கி இணைப்பு, நுண்நிதி நிறுவனங்கள் (MFIs) இதன் முக்கிய வழிகள்.
6.
CEGS 2022
நபார்டு (NABARD) தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுCorrect Answer: A [1982]
விளக்கம்:
சிவராமன் குழுப் (CRAFICARD) பரிந்துரையின்படி, NABARD சட்டம் 1981-இன் கீழ் 12 ஜூலை 1982 அன்று NABARD அமைக்கப்பட்டது. RBI-யின் வேளாண் கடன் துறை, ARDC ஆகியவை இதில் இணைக்கப்பட்டன; தலைமையகம் மும்பை.
7.
JR 2023
கிராமப்புறக் கடனுக்கான உச்ச வங்கிCorrect Answer: A [நபார்டு]
விளக்கம்:
ஊரக, வேளாண் கடனுக்கான உச்ச வளர்ச்சி வங்கி NABARD. மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் முதலியவற்றுக்கு மறுநிதி வழங்கி, அவற்றை மேற்பார்வை செய்கிறது.
8.
Mass Interviewer 2023
கீழ்க்குறிப்பிட்டவற்றுள் மறுநிதி (Refinance) நிறுவனம் எது?Correct Answer: C [தேசிய வேளாண், ஊரக வளர்ச்சி வங்கி]
விளக்கம்:
NABARD நேரடியாக விவசாயிகளுக்குக் கடன் தருவதில்லை; வேளாண், ஊரகக் கடன் வழங்கும் கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், வணிக வங்கிகளுக்கு மறுநிதி வழங்குகிறது. LIC – காப்பீடு; UTI – முதலீடு; SFC – தொழில்களுக்கு நேரடிக் கடன்.
9.
AJ 2023
கீழ்க்காண்பவற்றுள் நபார்டின் (NABARD) கீழ் இடம்பெறாத வங்கிகள்Correct Answer: C [ஏற்றுமதி மேம்பாட்டு வங்கிகள்]
விளக்கம்:
மாநிலக் கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மையக் கூட்டுறவு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள் ஆகியவற்றை NABARD மேற்பார்வை செய்து மறுநிதி வழங்குகிறது. ஏற்றுமதி நிதிக்கு EXIM வங்கி (1982) உள்ளது.
10.
CBT 2022
பட்டியல் I-ஐப் பட்டியல் II-உடன் பொருத்துக :(a) NABARD – 1. தொழில் நிதி (கடன்)
(b) HDFC – 2. நுண்நிதி (கடன்)
(c) IDBI – 3. வீட்டு வசதி நிதி (கடன்)
(d) SHG – 4. வேளாண் நிதி (கடன்)
Correct Answer: D [4 3 1 2]
விளக்கம்:
NABARD – வேளாண், ஊரக நிதி; HDFC (1977) – வீட்டு வசதிக் கடன்; IDBI – தொழில் நிதி; சுய உதவிக் குழுக்கள் – நுண்நிதி. எனவே 4, 3, 1, 2.
11.
Group 1 2021
ஜனவரி 2019-இல் மூன்று வங்கிகளை ஒருங்கிணைக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. கீழ்க்கண்டவற்றுள் இந்த இணைப்பில் இடம்பெறாத வங்கி எது?Correct Answer: D [லட்சுமி விலாஸ் வங்கி]
விளக்கம்:
தேனா வங்கி, விஜயா வங்கி இரண்டும் பரோடா வங்கியுடன் இணைக்கப்பட்டன (நடைமுறைக்கு வந்தது 1 ஏப்ரல் 2019). லட்சுமி விலாஸ் வங்கி (தனியார் வங்கி) நவம்பர் 2020-இல் DBS வங்கி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
12.
CEGS 2022
1843-ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் நவீன வங்கிCorrect Answer: D [மெட்ராஸ் வங்கி]
விளக்கம்:
மூன்று மாகாண (Presidency) வங்கிகள்: வங்காள வங்கி (1806), பம்பாய் வங்கி (1840), மெட்ராஸ் வங்கி (1843). இம்மூன்றும் 1921-இல் இணைந்து இம்பீரியல் வங்கி ஆனது; அதுவே 1955-இல் பாரத ஸ்டேட் வங்கியானது.
13.
Reporter 2022
கீழ்க்கண்டவற்றுள் ஒன்றிய அரசின் கீழ் வரும் துறை எது?Correct Answer: A [வங்கித் துறை]
விளக்கம்:
ஏழாவது அட்டவணையில் "வங்கித் துறை" ஒன்றியப் பட்டியலில் (பதிவு 45) உள்ளது. வேளாண்மை, சிறைச்சாலைகள், பொதுச் சுகாதாரம் ஆகியவை மாநிலப் பட்டியலில் உள்ளன.
14.
Mass Interviewer 2023
வங்கிச் சேவையில் மேலும் மேலும் மக்களை இணைக்க இந்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம்Correct Answer: D [பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா]
விளக்கம்:
நிதி உள்ளடக்கத்துக்கான தேசிய இயக்கமான பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா 28 ஆகஸ்ட் 2014 அன்று தொடங்கப்பட்டது: குறைந்தபட்ச இருப்பு இல்லாத வங்கிக் கணக்கு, RuPay அட்டை, விபத்துக் காப்பீடு, மிகைப்பற்று (overdraft) வசதி.
15.
CTS (Non-Interview Posts) 2024
ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை இடைமுகம் (UPI) அமைப்பை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது?Correct Answer: C [பிரான்ஸ்]
விளக்கம்:
NPCI International – பிரான்ஸின் லைரா (Lyra) நிறுவன ஒப்பந்தத்தின்படி UPI-ஐ ஏற்ற முதல் ஐரோப்பிய நாடு பிரான்ஸ்; பிப்ரவரி 2024-இல் பாரிஸ் ஈஃபிள் கோபுரத்தில் UPI வழிப் பணம் செலுத்தும் வசதி தொடங்கப்பட்டது. UPI-ஐ உருவாக்கியது NPCI (2016).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
