இந்தியப் பொருளாதாரம் PYQ – அரசின் வருவாய் ஆதாரங்கள்
← திரும்பச் செல்ல
"ஒரு நாடு ஏழையாக இருப்பதற்குக் காரணம் அது ஏழையாக இருப்பதே" என்ற வறுமையின் நச்சுச் சுழலை (vicious circle of poverty) விளக்கிய நர்க்ஸ், அச்சுழலை உடைக்க மூலதன ஆக்கம் அதிகரிக்க வேண்டும் எனவும், அதுவே வளர்ச்சியின் மையம் எனவும் வலியுறுத்தினார் (சமச்சீர் வளர்ச்சிக்…
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – அரசின் வருவாய் ஆதாரங்கள் – 15 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
GSASO 2020
பாதுகாப்புச் செலவு, பொதுக் கடனுக்கான வட்டி செலுத்துதல் ஆகியவைCorrect Answer: B [வளர்ச்சி சாராச் செலவு]
விளக்கம்:
பொருளாதார, சமூகச் சேவைகளுக்கான (கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில்) செலவு வளர்ச்சிச் செலவு. பாதுகாப்பு, வட்டி, ஓய்வூதியம், நிர்வாகச் செலவு ஆகியவை வளர்ச்சி சாராச் செலவுகள்.
2.
Group 1 2021
ஒன்றிய அரசின் நேர்முக வரி வருவாயுடன் தொடர்பில்லாதது எது?Correct Answer: C [பண்டங்கள், சேவைகள் மீதான வரி]
விளக்கம்:
பண்டங்கள், சேவைகள் மீதான வரிகள் (GST, சுங்க வரி, உற்பத்தி வரி) மறைமுக வரிகள் – அவற்றின் சுமை விலை வழியாக நுகர்வோருக்கு மாறுகிறது. வருமானம், சொத்து, லாபம் மீதான வரிகள் நேர்முக வரிகள்.
3.
Library Service 2023 · Group 1B/1C 2024
தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரிCorrect Answer: C [நேர்முக வரி]
விளக்கம்:
வருமான வரியின் சுமையை அதைச் செலுத்துபவரே தாங்குகிறார்; பிறருக்கு மாற்ற இயலாது – எனவே நேர்முக வரி. இந்தியாவில் வருமான வரி வருமானம் உயர உயர வீதமும் உயரும் "ஏறுவீத வரி".
4.
CEGS 2022
வரி வருவாய்களில் அடங்குவன1. வருமானம், செலவு மீதான வரிகள்
2. சொத்து மீதான வரிகள்
3. பண்டங்கள் மீதான வரிகள்
4. வட்டி வரவுகள், ஈவுத்தொகை
Correct Answer: B [1, 2, 3]
விளக்கம்:
வட்டி வரவுகள், ஈவுத்தொகை / லாபம் ஆகியவை வரி சாரா வருவாய். வருமானம், செலவு, சொத்து, பண்டங்கள் மீதான வரிகள் வரி வருவாய்.
5.
Combined Research Assistant 2023
ஒன்றிய அரசின் வரி வருவாயில் அடங்குவன :(i) தனிநபர் வருமான வரி
(ii) நிறுவன வரி
(iii) பண்டங்கள், சேவைகள் மீதான வரிகள்
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
மூன்றும் ஒன்றிய வரி வருவாயின் கூறுகள்: தனிநபர் வருமான வரி, நிறுவன வரி (நேர்முகம்); CGST, IGST, சுங்க வரி, உற்பத்தி வரி (மறைமுகம்).
6.
Mass Interviewer 2023
வரி சாரா வருவாயின் ஆதாரங்கள்Correct Answer: A [வணிக வருவாய்கள், பொது நிர்வாக வருவாய்கள்]
விளக்கம்:
பொதுத்துறை நிறுவனங்களின் லாபம், அஞ்சல், ரயில்வே போன்ற சேவைக் கட்டணங்கள் (வணிக வருவாய்); கட்டணங்கள், உரிமக் கட்டணம், அபராதங்கள் (நிர்வாக வருவாய்) ஆகியவை வரி சாரா வருவாய். மற்ற விருப்பங்கள் அனைத்தும் வரிகள்.
7.
Health Officer 2023 · Fisheries Dept. 2023
அரசின் வருவாய் ஆதாரங்கள் :(i) வரி வருவாய்
(ii) வரி சாரா வருவாய்
(iii) பொதுத்துறை நிறுவனங்களின் உபரி
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
மூன்றும் அரசின் வருவாய் ஆதாரங்கள்; பொதுத்துறை நிறுவனங்களின் உபரி (ஈவுத்தொகை / லாபம்) வரி சாரா வருவாயின் முக்கியக் கூறு.
8.
Group 2/2A 2024
பொருத்துக :(a) வரி வருவாய் – 1. வட்டி வரவுகள்
(b) வரி சாரா வருவாய் – 2. நிகரச் சந்தைக் கடன்கள்
(c) மூலதன வரவுகள் – 3. வருமானம், செலவு மீதான வரிகள்
Correct Answer: A [3 1 2]
விளக்கம்:
வருமானம், செலவு மீதான வரிகள் – வரி வருவாய்; வட்டி வரவுகள் – வரி சாரா வருவாய்; நிகரச் சந்தைக் கடன்கள் – மூலதன வரவுகள் (கடன் வரவு; அரசின் பொறுப்பை உருவாக்குவது).
9.
CEGS 2024
இந்திய அரசின் வரவு–செலவுத் திட்டத்தில் (Budget at a Glance) முன்வைக்கப்படும் வரிசையில் பின்வருவனவற்றை ஒழுங்குபடுத்துக :1. மூலதன வரவுகள்
2. மொத்த வரவுகள்
3. வருவாய் வரவுகள்
4. மொத்தச் செலவு
Correct Answer: D [3, 1, 2, 4]
விளக்கம்:
"Budget at a Glance" அட்டவணையில் முதலில் வருவாய் வரவுகள் (வரி, வரி சாரா), அடுத்து மூலதன வரவுகள், பின் மொத்த வரவுகள், அதன் பின் மொத்தச் செலவு (வருவாய்ச் செலவு, மூலதனச் செலவு) என்ற வரிசையில் தரப்படுகின்றன.
10.
AAO & AHO 2024
இந்தியாவில் உள்ள வரிகள்Correct Answer: C [(A), (B) இரண்டும்]
விளக்கம்:
நேர்முக வரிகள் (வருமான வரி, நிறுவன வரி – CBDT நிர்வாகம்), மறைமுக வரிகள் (GST, சுங்க வரி – CBIC நிர்வாகம்) இரண்டும் இந்திய வரி அமைப்பில் உள்ளன.
11.
DPGS 2022
"விவாத் சே விஸ்வாஸ்" (Vivad se Vishwas) திட்டம் எதனுடன் தொடர்புடையது?Correct Answer: A [நேர்முக வரி]
விளக்கம்:
நேர்முக வரி விவாத் சே விஸ்வாஸ் சட்டம், 2020: நிலுவையிலுள்ள வருமான வரி வழக்குகளில் வரியைச் செலுத்தினால் வட்டி, அபராதம் தள்ளுபடி செய்யப்படும் தீர்வுத் திட்டம்.
12.
EO Gr. III (HR&CE) 2022
₹1,05,000 கோடி முதலீட்டு விலக்கல் (disinvestment) வரவு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதியாண்டுCorrect Answer: C [2019–20]
விளக்கம்:
2019–20 (ஜூலை 2019) ஒன்றிய வரவு–செலவுத் திட்டத்தில் முதலீட்டு விலக்கல் இலக்கு ₹1,05,000 கோடி என நிர்ணயிக்கப்பட்டது. (2018–19 இலக்கு ₹80,000 கோடி; 2020–21 இலக்கு ₹2,10,000 கோடி.)
13.
Veterinary Asst. 2023
வரவு–செலவுத் திட்டத்துக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையை (Economic Survey) தயாரிக்கும் குழுவின் தலைவர்Correct Answer: C [தலைமைப் பொருளாதார ஆலோசகர்]
விளக்கம்:
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறையின் பொருளாதாரப் பிரிவு, தலைமைப் பொருளாதார ஆலோசகர் (CEA) தலைமையில் ஆய்வறிக்கையைத் தயாரிக்கிறது; நிதி அமைச்சர் அதை வரவு–செலவுத் திட்டத்துக்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
14.
Group 3A 2023
1947-இல் முதல் ஒன்றிய வரவு–செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தவர்Correct Answer: C [ஆர்.கே. சண்முகம் செட்டி]
விளக்கம்:
விடுதலை இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி (கோயம்புத்தூர்) 26 நவம்பர் 1947 அன்று முதல் வரவு–செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். குடியரசு இந்தியாவின் முதல் வரவு–செலவுத் திட்டம் (1950) – ஜான் மத்தாய்.
15.
Group 1 & 1A 2025
ராக்னர் நர்க்ஸ் கருத்துப்படி வளர்ச்சியின் தொடக்கப் புள்ளியும் அதன் தொடர்ச்சியும் ______ இல் அடங்கியுள்ளன.Correct Answer: B [மூலதன ஆக்க வீதத்தை அதிகரித்தல்]
விளக்கம்:
"ஒரு நாடு ஏழையாக இருப்பதற்குக் காரணம் அது ஏழையாக இருப்பதே" என்ற வறுமையின் நச்சுச் சுழலை (vicious circle of poverty) விளக்கிய நர்க்ஸ், அச்சுழலை உடைக்க மூலதன ஆக்கம் அதிகரிக்க வேண்டும் எனவும், அதுவே வளர்ச்சியின் மையம் எனவும் வலியுறுத்தினார் (சமச்சீர் வளர்ச்சிக்…
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
