இந்தியப் பொருளாதாரம் PYQ – ஒன்றிய – மாநில நிதிப் பகிர்வு
← திரும்பச் செல்ல
கூட்டாட்சி நாட்டில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே வரி விதிப்பு அதிகாரம், வருவாய்ப் பகிர்வு, மானியங்கள், கடன் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கும் முறையே கூட்டாட்சி நிதி (அரசியலமைப்புப் பகுதி XII, விதிகள் 264–293).
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – ஒன்றிய – மாநில நிதிப் பகிர்வு – 10 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
VAS AHGS 2020
ஒன்றிய அரசின் அனைத்து வரி வருவாயும் ஒன்றியம் – மாநிலங்களுக்கிடையே பகிர்ந்துகொள்ளத்தக்கதாக ஆன ஆண்டுCorrect Answer: A [2000]
விளக்கம்:
பத்தாவது நிதி ஆணையத்தின் "மாற்றுப் பகிர்வு முறை" பரிந்துரைப்படி 80-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2000 விதி 270-ஐத் திருத்தியது; அதன்படி ஒன்றிய வரிகளின் மொத்தத் தொகுப்பும் (divisible pool) பகிர்வுக்குரியதானது (கூடுதல் வரிகள் – cess, surcharge –…
2.
AGGS 2021
இந்தியாவில் ஒன்றிய, மாநில அரசுகள் வசூலிக்கும் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன :1. சுங்க வரி
2. வேளாண் நிலத்தின் வாரிசுரிமை மீதான தீர்வை
3. உற்பத்தி வரி (Excise duty)
4. வேளாண் நிலத்தின் மீதான சொத்துத் தீர்வை (Estate duty)
இவற்றுள் ஒன்றிய அரசு வசூலிப்பவை எவை?
Correct Answer: C [1, 3]
விளக்கம்:
ஒன்றியப் பட்டியல்: சுங்க வரி (பதிவு 83), உற்பத்தி வரி (பதிவு 84 – மனிதர் அருந்தும் மது முதலியன நீங்கலாக), வேளாண் நிலம் அல்லாத சொத்துகள் மீதான வாரிசுரிமை, சொத்துத் தீர்வை (பதிவுகள் 87, 88).
3.
Group 4 2022
சரியான இணைகளைத் தேர்ந்தெடு :1. ஒன்றியம் விதித்து வசூலித்து, மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வரிகள் – விதி 269
2. ஒன்றியம் விதித்து, மாநிலங்கள் வசூலித்துப் பயன்படுத்தும் தீர்வைகள் – விதி 268
3. ஒன்றியம் விதித்து வசூலித்து, ஒன்றியம் – மாநிலங்களுக்கிடையே பகிரப்படும் வரிகள் – விதி 267
Correct Answer: C [1, 2 மட்டும்]
விளக்கம்:
விதி 267 – இந்திய / மாநில எதிர்பாராச் செலவு நிதியம் (Contingency Fund). பகிர்வுக்குரிய வரிகள் விதி 270-இல் கூறப்பட்டுள்ளன. எனவே 1, 2 மட்டும் சரி.
4.
CAGS 2022
பின்வரும் வரிகளில் ஒன்றிய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுபவை எவை?(i) விற்பனை வரி
(ii) முத்திரைத் தீர்வை
(iii) மருத்துவ, கழிப்பறைப் பொருள்கள் மீதான உற்பத்தி வரி
(iv) இறக்குமதி வரி
Correct Answer: D [(ii), (iii)]
விளக்கம்:
விதி 268 (மூலவடிவம்): ஒன்றியப் பட்டியலில் உள்ள முத்திரைத் தீர்வைகள், மருத்துவ – கழிப்பறைப் பொருள்கள் மீதான உற்பத்தி வரிகள் ஒன்றியத்தால் விதிக்கப்பட்டு மாநிலங்களால் வசூலிக்கப்படுகின்றன.
5.
PTGS 2021
ஒன்றிய – மாநில உறவுகளைச் சீர்திருத்த முக்கியப் பரிந்துரைகளை வழங்கியவை(i) சர்க்காரியா ஆணையம்
(ii) பூஞ்சி ஆணையம்
(iii) ராஜமன்னார் குழு
(iv) ராயல் ஆணையம்
Correct Answer: D [(i), (ii), (iii)]
விளக்கம்:
ராஜமன்னார் குழு (1969) – தமிழ்நாடு அரசு அமைத்தது; சர்க்காரியா ஆணையம் (1983, அறிக்கை 1988) – ஒன்றிய அரசு; பூஞ்சி ஆணையம் (2007, அறிக்கை 2010) – ஒன்றிய அரசு. "ராயல் ஆணையம்" என்பது பிரிட்டிஷ் கால ஆணையங்களின் பொதுப் பெயர் (எ.கா. வேளாண்மை பற்றிய ராயல் ஆணையம் 1926).
6.
CBT 2022
கீழ்க்கண்டவற்றுள் மாநில அரசின் வரி வருவாய் ஆதாரம் அல்லாதது எது?Correct Answer: D [நிறுவன வரி]
விளக்கம்:
நிறுவன வரி ஒன்றியப் பட்டியல் (பதிவு 85). நில வருவாய் (பதிவு 45), வாகன வரி (பதிவு 57), கேளிக்கை வரி (பதிவு 62 – உள்ளாட்சி அமைப்புகள் விதிப்பது தவிர பிற GST-இல் இணைந்தது) மாநிலப் பட்டியல்.
7.
Group 4 2024
தவறான இணைகளைக் கண்டுபிடி :(i) வேளாண் வருமான வரி – மாநிலம்
(ii) நிலம், கட்டடங்கள் மீதான வரி – மாநிலம்
(iii) மின்சார நுகர்வு / விற்பனை மீதான வரி – ஒன்றியம்
(iv) நில வருவாய் – ஒன்றியம்
Correct Answer: C [(iii), (iv)]
விளக்கம்:
மாநிலப் பட்டியல் வரிகள்: நில வருவாய் (பதிவு 45), வேளாண் வருமான வரி (46), நிலம் – கட்டடங்கள் மீதான வரி (49), மின்சார நுகர்வு / விற்பனை மீதான வரி (53). எனவே (iii), (iv) தவறான இணைகள்.
8.
Bursar 2023 · CESGS 2023
கீழ்க்கண்டவற்றுள் ஒன்றியப் பட்டியலில் இடம்பெறாதது எது?Correct Answer: C [தலைவரி]
விளக்கம்:
தலைவரி (Capitation tax) மாநிலப் பட்டியலில் (பதிவு 61) உள்ளது. நிறுவன வரி (85), வேளாண் வருமானம் அல்லாத வருமான வரி (82), சுங்க வரி (83) ஒன்றியப் பட்டியல்.
9.
Asst. Public Prosecutor Gr. II 2025
மாநிலப் பட்டியலில் உள்ள இனத்தைக் கண்டறிகCorrect Answer: B [நீர்ப்பாசனம்]
விளக்கம்:
நீர்ப்பாசனம், கால்வாய்கள் உள்ளிட்ட "நீர்" மாநிலப் பட்டியல் பதிவு 17-இல் உள்ளது (ஒன்றியப் பட்டியல் பதிவு 56-க்கு உட்பட்டு). வங்கி (45), பாதுகாப்பு (1), வெளியுறவு (10) ஒன்றியப் பட்டியல்.
10.
FA 2022
கூட்டாட்சி நிதி (Federal Finance) எதனுடன் தொடர்புடையது?Correct Answer: D [ஒன்றிய – மாநில நிதி உறவுகள்]
விளக்கம்:
கூட்டாட்சி நாட்டில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே வரி விதிப்பு அதிகாரம், வருவாய்ப் பகிர்வு, மானியங்கள், கடன் ஆகியவற்றைப் பகிர்ந்தளிக்கும் முறையே கூட்டாட்சி நிதி (அரசியலமைப்புப் பகுதி XII, விதிகள் 264–293).
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
