இந்தியப் பொருளாதாரம் PYQ – வேளாண்மை
← திரும்பச் செல்ல
ICRISAT – International Crops Research Institute for the Semi-Arid Tropics (1972), பதான்செரு, ஹைதராபாத். கம்பு, சோளம், கொண்டைக்கடலை, துவரை, நிலக்கடலை முதலிய வறண்ட நிலப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்கிறது.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – வேளாண்மை – 21 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
Combined Research Assistant 2023
ஃபோர்டு அறக்கட்டளையின் பரிந்துரையின் அடிப்படையில் இந்திய அரசு 1960-இல் தீவிர வேளாண் மாவட்டத் திட்டத்தை (IADP) அறிமுகப்படுத்தி 7 மாநிலங்களிலிருந்து 7 மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்தது. பின்வரும் மாநிலங்களுள் அரிசி உற்பத்திக்குத் தேர்ந்தெடுக்கப்படாத மாநிலம் எது?Correct Answer: B [உத்தரப் பிரதேசம்]
விளக்கம்:
IADP மாவட்டங்கள்: அரிசி – தஞ்சாவூர் (தமிழ்நாடு), மேற்குக் கோதாவரி (ஆந்திரம்), சாகாபாத் (பீகார்), ராய்ப்பூர் (மத்தியப் பிரதேசம்); கோதுமை – லூதியானா (பஞ்சாப்), அலிகார் (உத்தரப் பிரதேசம்); சிறுதானியம் – பாலி (ராஜஸ்தான்).
2.
Group 1 2022
சரியானவை எவை?(i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்
(ii) MSP – அதிகபட்ச ஆதரவு விலை
(iii) PDS – பொது விநியோக முறை
(iv) IPM – ஒருங்கிணைந்த பூச்சிக்கொல்லி மேலாண்மை
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
MSP = Minimum Support Price (குறைந்தபட்ச ஆதரவு விலை); IPM = Integrated Pest Management (ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை – பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைக் குறைக்கும் முறை). எனவே (i), (iii) மட்டும் சரி.
3.
Reporter 2022
பின்வருவனவற்றுள் தவறாக இணைக்கப்பட்டவை எவை?1. CACP – வேளாண் செலவு, விலை ஆணையம்
2. ICDS – ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிச் சேவைகள்
3. NFSA – தேசிய உணவுப் பாதுகாப்புச் சங்கம்
4. MDM – மதிய நாள் இயக்கம்
Correct Answer: D [3, 4 மட்டும்]
விளக்கம்:
NFSA = National Food Security Act , 2013 (தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்); MDM = Mid Day Meal (மதிய உணவுத் திட்டம் – தற்போது PM POSHAN). CACP (1965), ICDS (1975) சரியான விரிவாக்கங்கள்.
4.
ACF 2023
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?(i) NPF – தேசிய வருங்கால வைப்பு நிதி
(ii) DARE – வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறை
(iii) NCIP – நிகர நுகர்வோர் குறியீட்டு விலை
(iv) WBCIS – உலக வங்கி பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
Correct Answer: B [(i), (iii), (iv)]
விளக்கம்:
வேளாண் சூழலில்: NPF – National Policy for Farmers (விவசாயிகளுக்கான தேசியக் கொள்கை, 2007); NCIP – National Crop Insurance Programme (தேசியப் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்); WBCIS – Weather Based Crop Insurance Scheme (வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத்…
5.
ACF 2023
பிரதம மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனாவின் (PMKSY) முக்கிய நோக்கம்Correct Answer: A ["ஒரு துளிக்கு அதிகப் பயிர்"]
விளக்கம்:
PMKSY (2015–16): "ஹர் கேத் கோ பானி" (ஒவ்வொரு வயலுக்கும் நீர்), "Per Drop More Crop" (நுண்ணீர்ப் பாசனம் – சொட்டு, தெளிப்பு நீர்ப்பாசனம்) ஆகியவை முதன்மை நோக்கங்கள். பயிர்க் காப்பீடு – PMFBY; கடன் – KCC.
6.
Asst. Public Prosecutor Gr. II 2026
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) நோக்கங்கள் எவை?(i) விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடும் நிதி உதவியும் வழங்குதல்
(ii) விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மையில் ஈடுபட அவர்களின் வருமானத்தை நிலைப்படுத்துதல்
(iii) வேளாண் துறைக்குக் கடன் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்தல்
Correct Answer: B [(ii), (iii) மட்டும்]
விளக்கம்:
PMFBY (2016) நோக்கங்கள்: இயற்கைப் பேரிடர், பூச்சி, நோயால் பயிர் இழப்புக்கு நிதி ஆதரவு; வருமான நிலைப்படுத்தல்; நவீன வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல்; வேளாண் கடன் ஓட்டத்தை உறுதிசெய்தல். இது பயிர்க் காப்பீடு; ஆயுள் காப்பீடு அல்ல.
7.
CTS (Interview Posts-II) 2024
விவசாய நிலத்தின் அளவு மற்றும் தமிழ்நாடு விவசாயத்தில் அதன் பங்கு ஆகியவற்றுடன் பொருத்துக :(a) குறு விவசாயம் – 1. 77.18%
(b) சிறு விவசாயம் – 2. 14.55%
(c) நடுத்தர விவசாயம் – 3. 1.85%
(d) பெரு விவசாயம் – 4. 0.21%
Correct Answer: D [1 2 3 4]
விளக்கம்:
வேளாண் கணக்கெடுப்பு வகைப்பாடு: குறு – 1 ஹெக்டேருக்குக் குறைவு; சிறு – 1 – 2 ஹெக்டேர்; சிறு – நடுத்தர – 2 – 4; நடுத்தர – 4 – 10; பெரிய – 10 ஹெக்டேருக்கு மேல்.
8.
GSCE 2021
"உழவர் கடன் அட்டை" (Kisan Credit Card – KCC) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுCorrect Answer: B [1998–99]
விளக்கம்:
1998–99 ஒன்றிய வரவு–செலவுத் திட்ட அறிவிப்பின்படி, ஆர்.வி. குப்தா குழுப் பரிந்துரையின் அடிப்படையில் NABARD வகுத்த KCC திட்டம் ஆகஸ்ட் 1998-இல் தொடங்கப்பட்டது. பயிர்க் கடனை எளிதாகவும் சரியான நேரத்திலும் பெற உதவுகிறது.
9.
Group 1 2021
குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்த நிதி ஆயோக் மதிப்பீட்டு அறிக்கையின்படி கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை?(a) MSP விதைப்புப் பருவத்துக்கு முன்பே அறிவிக்கப்படுகிறது.
(b) விவசாயிகளுக்கு உத்தரவாத விலை அளித்து விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து காப்பதே MSP-யின் நோக்கம்.
(c) உலகமயமாக்கலால் வேளாண் பொருள்களில் கட்டற்ற வணிகம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகளைத் தேவையற்ற விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து காப்பது முக்கியமல்ல.
Correct Answer: B [(a), (b) மட்டும்]
விளக்கம்:
MSP-ஐ ஒன்றிய அரசு (CCEA) CACP பரிந்துரையின்படி விதைப்புப் பருவத்துக்கு முன் அறிவிக்கிறது. நிதி ஆயோக் மதிப்பீட்டு அறிக்கை (2016): உலகமயமாக்கல், கட்டற்ற வணிகம் காரணமாக விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து விவசாயிகளைக் காப்பது மேலும் முக்கியமாகியுள்ளது . எனவே (c) தவறு.
10.
CTS (Non-Interview Posts) 2025
குறைந்தபட்ச ஆதரவு விலை எந்த அமைப்பின் பரிந்துரையின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது?Correct Answer: B [வேளாண் செலவு, விலை ஆணையம் (CACP)]
விளக்கம்:
CACP (1965) உற்பத்திச் செலவு, தேவை–அளிப்பு, சந்தை விலைப் போக்கு முதலியவற்றை ஆராய்ந்து 22 கட்டாயப் பயிர்களுக்கு MSP பரிந்துரைக்கிறது; பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) இறுதி முடிவெடுத்து அறிவிக்கிறது.
11.
CTS (ITI Posts) 2025
2024-ஆம் ஆண்டு இந்திய விவசாயிகளின் போராட்டங்களின் முக்கியக் கோரிக்கை எது?Correct Answer: B [குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம்]
விளக்கம்:
பிப்ரவரி 2024 "டெல்லி சலோ" போராட்டத்தில் விவசாய அமைப்புகள் MSP-க்குச் சட்டப்பூர்வ உத்தரவாதம் (சுவாமிநாதன் ஆணையப் பரிந்துரைப்படி) என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்தன.
12.
CTS (Interview Posts) 2025
பிரதம மந்திரி தன்–தான்யா கிருஷி யோஜனா பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மை?(i) 100 பஞ்சாயத்துகளை உள்ளடக்குகிறது
(ii) வேளாண் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்
(iii) நிலைத்த (sustainable) வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றச் செய்தல்
Correct Answer: B [(ii), (iii) மட்டும்]
விளக்கம்:
2025–26 ஒன்றிய வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட 100 மாவட்டங்களை (பஞ்சாயத்துகள் அல்ல) உள்ளடக்குகிறது: உற்பத்தித் திறன் உயர்வு, பயிர்ப் பல்வகைமை, நிலைத்த வேளாண் நடைமுறைகள், அறுவடைக்குப் பிந்தைய சேமிப்பு, பாசனம்,…
13.
AHGS 2021
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?Correct Answer: D [பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் – சுற்றுச்சூழல்]
விளக்கம்:
PMFBY (2016) – பயிர்க் காப்பீடு (வேளாண்மை). தூய்மை இந்தியா (2014) – நகர்ப்புறம், கிராமப்புறம் இரண்டும்; AMRUT (2015) – நகர்ப்புற உள்கட்டமைப்பு; NEEDS – தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் – தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (MSME).
14.
Group 1 2021 · Library Service 2023
பின்வரும் வேளாண் முறைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்தது எது?Correct Answer: A [இயற்கை (அங்கக) வேளாண்மை]
விளக்கம்:
இயற்கை வேளாண்மை வேதி உரம், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, தொழு உரம், பசுந்தாள் உரம், உயிர் உரம், உயிரியல் பூச்சிக் கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இடப்பெயர்வு வேளாண்மை காடழிப்புக்கு வழிவகுக்கும்; HYV சாகுபடி அதிக உரம், நீரைச் சார்ந்தது.
15.
Group 2A Mains (Re-exam) 2026
மரபுவழி (வழக்கமான – Conventional) வேளாண்மை பற்றிய உண்மைக் கூற்றுகள் எவை?(1) பெரும்பாலும் போட்டி, லாபத்தை மையமாகக் கொண்டது
(2) இயற்கையுடன் இணைந்து உணவு உற்பத்தி செய்வதை மையமாகக் கொண்டது
(3) செயற்கை (வேதி) இடுபொருள்களையும் வெளிச் சார்பையும் நம்பியுள்ளது
(4) பயிர்ப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது
Correct Answer: A [(1), (3) மட்டும்]
விளக்கம்:
வழக்கமான (வேதி) வேளாண்மை ஒற்றைப் பயிர்ச் சாகுபடி, செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மூலம் அதிக லாபம் ஈட்டுவதை நோக்குகிறது. இயற்கையுடன் இணைந்த உற்பத்தி, பயிர்ப் பன்முகத்தன்மை ஆகியவை இயற்கை வேளாண்மையின் பண்புகள்.
16.
EO Gr. IV (HR&CE) 2022
பின்வருவனவற்றுள் இந்தியாவில் அதிகமானோர் ஈடுபடும் தொழில் எது?Correct Answer: C [வேளாண்மை]
விளக்கம்:
இந்தியாவில் வேலைசெய்வோரில் பெரும்பகுதியினர் இன்றும் வேளாண்மை, அதைச் சார்ந்த தொழில்களிலேயே ஈடுபட்டுள்ளனர் (காலமுறைத் தொழிலாளர் கணக்கெடுப்பு – PLFS 2023–24: சுமார் 46%; PLFS ஆண்டறிக்கை 2025 (ஜனவரி – டிசம்பர் 2025): 43.0%).
17.
CEGS 2024
"வேளாண்மையின் வணிகமயமாக்கல்" என ஏன் அழைக்கப்படுகிறது?Correct Answer: C [சந்தையில் விற்பனைக்காக]
விளக்கம்:
குடும்பத் தேவைக்கு மட்டும் விளைவிக்கும் தன்னிறைவு (வாழ்வாதார) வேளாண்மைக்கு மாறாக, சந்தையில் விற்று லாபம் ஈட்டுவதற்காகப் பயிர் (பணப் பயிர்கள் உட்பட) விளைவிப்பதே வேளாண் வணிகமயமாக்கல்.
18.
CTS (ITI Posts) 2025
பின்வருவனவற்றுள் வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிப்பவை எவை?(i) அதிக விளைச்சல் தரும் விதைகளைப் பயன்படுத்துதல்
(ii) உறுதியான பாசன வசதியுடன் தீவிர சாகுபடி
(iii) இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகளைப் பாதுகாத்தல்
Correct Answer: C [(i), (ii) மட்டும்]
விளக்கம்:
உற்பத்தித் திறன் = ஒரு ஹெக்டேருக்கான விளைச்சல். HYV விதைகள், உறுதியான பாசனத்துடன் தீவிர சாகுபடி ஆகியவை விளைச்சலை உயர்த்துகின்றன. இடைத்தரகர் சுரண்டலைத் தடுப்பது (ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்) விவசாயியின் வருமானத்தை உயர்த்தும்; உற்பத்தித் திறனை நேரடியாக அல்ல.
19.
CTS (Interview Posts-II) 2024
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் (Regulated markets) பற்றிய சரியான கூற்றுகள் எவை?(i) வேளாண் பொருள்களை விற்கும்போது இடைத்தரகர்களால் விவசாயிகள் சுரண்டப்படுவதைத் தடுத்தல்
(ii) எளிதில் அழுகும் பழம், காய்கறிகளை விற்பனை செய்தல்
(iii) விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலையைப் பெற்றுத் தருதல்
Correct Answer: B [(i), (iii) மட்டும்]
விளக்கம்:
வேளாண் விளைபொருள் சந்தைச் சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முறையான எடை, வெளிப்படையான ஏலம், உடனடிப் பணம், இடைத்தரகர் சுரண்டல் தடுப்பு, நியாயமான விலை ஆகியவற்றை உறுதிசெய்கின்றன. அழுகும் பொருள் விற்பனை அவற்றின் தனி நோக்கம் அல்ல.
20.
JR 2023
10,000 ஹெக்டேருக்கு மேற்பட்ட பயிரிடத்தக்கக் கட்டளைப் பரப்புக்கு (CCA) பாசன வசதி வழங்கும் திட்டம்Correct Answer: A [பெரிய நீர்ப்பாசனத் திட்டம்]
விளக்கம்:
திட்டக் குழு வகைப்பாடு: பெரிய திட்டம் – CCA 10,000 ஹெக்டேருக்கு மேல்; நடுத்தரம் – 2,000 முதல் 10,000 ஹெக்டேர்; சிறியது – 2,000 ஹெக்டேர் வரை.
21.
CEGS 2024
ICRISAT எதனுடன் தொடர்புடையது?Correct Answer: B [வறண்ட நில வேளாண்மை]
விளக்கம்:
ICRISAT – International Crops Research Institute for the Semi-Arid Tropics (1972), பதான்செரு, ஹைதராபாத். கம்பு, சோளம், கொண்டைக்கடலை, துவரை, நிலக்கடலை முதலிய வறண்ட நிலப் பயிர்கள் குறித்து ஆய்வு செய்கிறது.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
