இந்தியப் பொருளாதாரம் PYQ – மக்கள்தொகை
← திரும்பச் செல்ல
எவரெட் எஸ். லீ (A Theory of Migration, 1966) – "தள்ளு–இழு" (Push–Pull) காரணிகள், குறுக்கிடும் தடைகள், தனிநபர் காரணிகள் என்ற நான்கு அடிப்படைகள்.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – மக்கள்தொகை – 26 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
VAS AHGS 2020 · Group 1 2021
மக்கள் அடர்த்தி என்பதுCorrect Answer: A [ஒரு சதுர கி.மீ.-க்கு வாழும் நபர்களின் எண்ணிக்கை]
விளக்கம்:
மக்கள் அடர்த்தி = மொத்த மக்கள்தொகை ÷ நிலப்பரப்பு (சதுர கி.மீ.). 2011-இல் இந்தியாவின் அடர்த்தி 382. Group 1 2021 தேர்வில் இதே வினா ("மக்கட் தொகை செறிவு") 1 / 10 / 100 / 200 சதுர கி.மீ. என்ற விருப்பங்களுடன் கேட்கப்பட்டது; அங்கும் விடை "ஒரு சதுர கி.மீ.".
2.
ADGS 2021
இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சிக்கான காரணம் / காரணங்கள் எவை?I. இறப்பு விகிதம் குறைதல்
II. குறைந்த கல்வியறிவு
III. காலந்தாழ்ந்த திருமணம்
Correct Answer: B [I, II மட்டும்]
விளக்கம்:
மருத்துவ வசதி பெருகியதால் இறப்பு விகிதம் குறைந்தது; கல்வியறிவின்மை குடும்பக் கட்டுப்பாட்டு விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஆனால் காலந்தாழ்ந்த திருமணம் பிறப்பைக் குறைக்கும் ; இளவயதுத் திருமணமே வளர்ச்சிக்குக் காரணம். எனவே III தவறு.
3.
AHGS 2021
பின்தங்கிய நாடுகளில் காணப்படும் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்த கருத்துகளைக் கவனிக்கவும் :(1) அதிக நுகர்வுச் செலவால் சேமிப்பு குறைகிறது
(2) இயற்கை வளங்கள் அழிந்து போகும் அளவிற்குப் பயன்படுத்தப்படுகின்றன
(3) அதிக உற்பத்தித் திறன், சேமிப்பை ஊக்குவிக்கிறது
குறியீடுகளைப் பயன்படுத்திச் சரியான விடை காண் :
Correct Answer: C [(1), (2)]
விளக்கம்:
பின்தங்கிய நாடுகளில் மக்கள்தொகைப் பெருக்கம் நுகர்வை உயர்த்திச் சேமிப்பு, முதலீட்டைக் குறைக்கிறது; வளங்கள் மீது அழுத்தம் கூடுகிறது. உற்பத்தித் திறனையும் சேமிப்பையும் அது ஊக்குவிப்பதில்லை; எனவே (3) தவறு.
4.
Group 1 2021
அதிக மக்கள்தொகை கொண்ட இந்திய மாநிலம்Correct Answer: C [உத்தரப் பிரதேசம்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பில் உத்தரப் பிரதேசம் சுமார் 19.98 கோடி மக்களுடன் முதலிடம்; அடுத்து மகாராஷ்டிரம், பீகார்.
5.
Asst. Training Officer (Textile) 2023
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலம் எது?Correct Answer: D [சிக்கிம்]
விளக்கம்:
2011 கணக்கெடுப்பில் சிக்கிமின் மக்கள்தொகை சுமார் 6.1 இலட்சம்; மாநிலங்களில் மிகக் குறைவு.
6.
Group 4 2022 · CBT 2022
பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.(i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்சம் மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
(iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள்தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை
Correct Answer: D [(iv) மட்டும்]
விளக்கம்:
பிறப்பு விகிதம் (Crude Birth Rate) = ஓர் ஆண்டில் 1000 மக்களுக்கு நிகழும் உயிருள்ள பிறப்புகள். இறப்பு விகிதமும் அதேபோல 1000 மக்களுக்குக் கணக்கிடப்படுகிறது.
7.
CEGS 2022
"காணாமல் போன பெண்கள்" (Missing Women) என்பது?Correct Answer: C [அதிகப்படியான பெண் இறப்பை அளவிடுதல்]
விளக்கம்:
அமர்த்தியா சென் (1990) அறிமுகப்படுத்திய கருத்து: இயல்பான பாலின விகிதம் இருந்திருந்தால் இருக்க வேண்டிய பெண்களுக்கும் உண்மையில் உள்ள பெண்களுக்கும் இடையிலான இடைவெளி; அதாவது அதிகப்படியான பெண் இறப்பை அளவிடுதல்.
8.
EO Gr. IV (HR&CE) 2022
முக்கிய நகர்ப்புற ஒருங்கிணைப்பு உள்ள மாவட்டங்கள்Correct Answer: A [கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி]
விளக்கம்:
நகர்ப்புற ஒருங்கிணைப்பு (Urban Agglomeration) – ஒரு நகரமும் அதைச் சுற்றி வளர்ந்த தொடர் நகர்ப்பகுதிகளும் சேர்ந்த பெருநகர்ப் பரப்பு. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டின் பெரிய நகர்ப்புற ஒருங்கிணைப்புகள் கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி.
9.
JSO 2023
"காணாமல் போன பெண்கள்" என்ற நிலை உருவாவதற்குக் காரணம்Correct Answer: A [மகன் / ஆண் குழந்தைக்கான விருப்பம்]
விளக்கம்:
ஆண் குழந்தை விருப்பம் → பாலினத் தேர்வுக் கருக்கலைப்பு, பெண் குழந்தைகள் மீதான உணவு, மருத்துவப் புறக்கணிப்பு → அதிகப்படியான பெண் இறப்பு. இதுவே "காணாமல் போன பெண்கள்" நிலைக்கு அடிப்படைக் காரணம்.
10.
JSO 2023
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் பாலின விகிதம்Correct Answer: C [940]
விளக்கம்:
2011 தற்காலிகக் கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 940 பெண்கள்; இறுதி எண் 943 (PIB, 30.04.2013); 2001-இல் 933. 943 விருப்பங்களில் இல்லாததால் விடை 940. அதிக பாலின விகிதம்: கேரளம் (1084); தமிழ்நாடு 996.
11.
FA 2022
இரண்டாம் வகை (Class II) நகர்ப்புறக் குடியிருப்புகளின் மக்கள்தொகை அளவுCorrect Answer: B [50,000 – 99,999]
விளக்கம்:
கணக்கெடுப்பு வகைப்பாடு: Class I – 1,00,000 மற்றும் அதற்கு மேல்; Class II – 50,000–99,999; Class III – 20,000–49,999; Class IV – 10,000–19,999; Class V – 5,000–9,999; Class VI – 5,000-க்குக் கீழ்.
12.
FA 2022
மக்கள்தொகையின் உகந்த அளவுக் கோட்பாட்டை (Optimum Theory) முன்வைத்தவர் யார்?Correct Answer: A [எட்வின் கேனன்]
விளக்கம்:
எட்வின் கேனன் உகந்த மக்கள்தொகைக் கோட்பாட்டை முன்வைத்தார்: கிடைக்கும் வளங்களுடன் தலா வருமானம் அதிகபட்சமாக இருக்கும் மக்கள்தொகையே உகந்த அளவு. மால்தஸ் – மக்கள்தொகை பெருக்கல் விகிதத்திலும் உணவு கூட்டல் விகிதத்திலும் பெருகும் என்ற கோட்பாடு.
13.
JR 2023 · CBT 2023
"குறைந்த மக்கள்தொகை" (Under-population) குறித்துச் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு :வாக்கியம் I : கிடைக்கும் வளங்கள் தாங்கக்கூடிய அளவிலேயே மக்கள்தொகை இருப்பது
வாக்கியம் II : கிடைக்கும் வளங்களைவிட மக்கள்தொகை மிகுதியாக இருப்பது
வாக்கியம் III : ஒரு நாட்டின் கிடைக்கும் வளங்களைவிட மக்கள்தொகை குறைவாக இருப்பது
Correct Answer: D [III சரி; I, II தவறு]
விளக்கம்:
I – உகந்த மக்கள்தொகை (Optimum); II – மிகை மக்கள்தொகை (Over-population); III – குறைந்த மக்கள்தொகை (Under-population). CBT 2023 தேர்விலும் இதே கருத்து கேட்கப்பட்டது.
14.
Reporter 2022
பரப்பளவில் இரண்டாவது பெரிய இந்திய மாநிலம் ________.Correct Answer: D [மத்தியப் பிரதேசம்]
விளக்கம்:
பரப்பளவில் இராஜஸ்தான் முதலிடம் (3.42 இலட்சம் ச.கி.மீ.); மத்தியப் பிரதேசம் இரண்டாமிடம் (3.08 இலட்சம் ச.கி.மீ.); மகாராஷ்டிரம் மூன்றாமிடம்.
15.
Bursar 2023
2001 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தியான சதுர கி.மீ.-க்கு 13 நபர்கள் கொண்ட மாநிலம் எது?Correct Answer: A [அருணாச்சலப் பிரதேசம்]
விளக்கம்:
அருணாச்சலப் பிரதேசம் 2001-இல் 13, 2011-இல் 17 அடர்த்தியுடன் இரண்டு கணக்கெடுப்பிலும் குறைந்த அடர்த்தி கொண்ட மாநிலம்.
16.
DEO 2023 · Library Service 2023
2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் அடர்த்தியை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக.(1) பீகார்
(2) மேற்கு வங்கம்
(3) கேரளம்
(4) உத்தரப் பிரதேசம்
Correct Answer: D [(1), (2), (3), (4)]
விளக்கம்:
2011 அடர்த்தி: பீகார் 1106 > மேற்கு வங்கம் 1028 > கேரளம் 860 > உத்தரப் பிரதேசம் 829. Library Service 2023 தேர்வில் "அதிக அடர்த்தி கொண்ட மாநிலம்" என்று கேட்கப்பட்டது; விடை பீகார்.
17.
CTS (ITI Posts) 2024
சரியாகப் பொருந்தியுள்ளவற்றைத் தேர்ந்தெடுக்கவும் :(1) மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்ட மாநிலம் – ஜம்மு-காஷ்மீர்
(2) அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் – மகாராஷ்டிரம்
(3) குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் – பீகார்
(4) மிகுந்த நகரமயமாக்கப்பட்ட மாநிலம் – கோவா
Correct Answer: D [(3), (4) சரி]
விளக்கம்:
2011: குறைந்த அடர்த்தி – அருணாச்சலப் பிரதேசம்; அதிக மக்கள்தொகை – உத்தரப் பிரதேசம்; குறைந்த எழுத்தறிவு – பீகார் (61.8%); அதிக நகரமயம் – கோவா (62.2%). எனவே (3), (4) மட்டும் சரி. (Veterinary Asst.
18.
Asst. Public Prosecutor Gr. II 2025
தவறான பொருத்தத்தைக் கண்டறிக :(1) 2011-இல் இந்திய மக்கள்தொகை – 121.09 கோடி
(2) 2001–2011 சராசரி ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் – 1.64%
(3) 1951-இல் இந்திய மக்கள்தொகை – 28.83 கோடி
(4) 2001-இல் இந்திய மக்கள்தொகை – 120 கோடி
Correct Answer: A [(3), (4)]
விளக்கம்:
1951 மக்கள்தொகை 36.1 கோடி; 2001 மக்கள்தொகை 102.87 கோடி. எனவே (3), (4) தவறு. (1), (2) சரி (மேலுள்ள அட்டவணை காண்க).
19.
Road Inspector 2023 · CTS (ITI Posts) 2024
பொருத்துக :(a) பெரும் பிரிவினை ஆண்டு – 1. 2011
(b) சிறு பிளவு ஆண்டு – 2. 1961
(c) மக்கள்தொகை வெடிப்பு ஆண்டு – 3. 1951
(d) மக்கள்தொகை மாற்றம் – 4. 1921
Correct Answer: D [4 3 2 1]
விளக்கம்:
1921 – பெரும் பிரிவினை; 1951 – சிறு பிளவு; 1961 – மக்கள்தொகை வெடிப்பு. இந்த மூன்று இணைகளுடன் பொருந்தும் ஒரே விருப்பம் D. CTS (ITI Posts) 2024 தேர்வில் "1951 = ?" என்று கேட்கப்பட்டது; விடை சிறு பிளவு ஆண்டு.
20.
CTS (Non-Interview Posts) 2025
மக்கள்தொகை மாற்றத்தின் (Demographic Transition) பின்வரும் கட்டங்களைக் காலவரிசைப்படுத்தவும்.(1) குறைந்த பிறப்பு விகிதம், குறைந்த இறப்பு விகிதம்
(2) அதிக பிறப்பு விகிதம், அதிக இறப்பு விகிதம்
(3) அதிக பிறப்பு விகிதம், குறைந்த இறப்பு விகிதம்
Correct Answer: C [(2), (3), (1)]
விளக்கம்:
முதல் கட்டம்: உயர் பிறப்பு–உயர் இறப்பு (மெதுவான வளர்ச்சி). இரண்டாம் கட்டம்: இறப்பு குறைகிறது, பிறப்பு உயர்வாகவே உள்ளது (மக்கள்தொகை வெடிப்பு). இறுதிக் கட்டம்: இரண்டும் குறைவு (நிலைத்த மக்கள்தொகை).
21.
CTS (Interview Posts) 2024
அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் அதிக பிறப்பு விகிதமும் குறைந்து வரும் இறப்பு விகிதமும் சேர்ந்தால் ஏற்படும் விளைவுCorrect Answer: D [சார்ந்திருப்போர் சுமை அதிகரிப்பு]
விளக்கம்:
அதிக பிறப்பு → 0–14 வயதுக் குழந்தைகள் அதிகரிப்பு; குறையும் இறப்பு → முதியோர் அதிகரிப்பு. உழைக்கும் வயதினரைச் சார்ந்திருப்போர் விகிதம் (Dependency Ratio) உயர்கிறது.
22.
Group 1 2021
கீழ்க்கண்ட கூற்றுகளைக் கருதவும் :(1) 1950-களில் இந்தியா குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது
(2) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் புதிய மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படையில் அமைக்கப்பட்டது
(3) தேசிய நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தவுடன் குடும்பக் கட்டுப்பாட்டில் கட்டாயம் கைவிடப்பட்டது
(4) திட்டமிடலும் செயல்படுத்தலும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டன
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
Correct Answer: B [1, 3 மட்டும் சரி]
விளக்கம்:
இந்தியா 1952-இல் தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கிய முதல் நாடு. அதன் அணுகுமுறை புதிய மால்தூசியக் (Neo-Malthusian) கொள்கை; மார்க்சியம் அல்ல.
23.
CTS (Non-Interview Posts) 2024
தேசிய மக்கள்தொகைக் கொள்கை 2000 குறித்துப் பின்வருவனவற்றில் எவை உண்மை?1. கொள்கையின் உடனடி நோக்கம் சுகாதார உள்கட்டமைப்பு, சுகாதாரப் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது
2. நடுத்தரகால நோக்கம் 2010-க்குள் கருவுறுதல் விகிதத்தை மாற்றீட்டு நிலைக்குக் குறைப்பது
3. நீண்டகால நோக்கம் 2050-க்குள் நிலையான மக்கள்தொகையை அடைவது
Correct Answer: C [1, 2 உண்மை]
விளக்கம்:
NPP 2000: உடனடி நோக்கம் – கருத்தடை, சுகாதார உள்கட்டமைப்பு, பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்தல்; நடுத்தரகாலம் – 2010-க்குள் மொத்தக் கருவுறுதல் விகிதத்தை (TFR) மாற்றீட்டு நிலைக்கு (2.1) கொண்டுவருதல்; நீண்டகாலம் – 2045 -க்குள் நிலையான மக்கள்தொகை. எனவே 3 தவறு.
24.
Group 1B/1C 2024
எண்கணித அதிகரிப்பு முறையில் (Arithmetical Increase Method) மக்கள்தொகையை முன்னறிவிக்கப் பயன்படும் வெளிப்பாடு எது?Correct Answer: C [P₀ + n·X]
விளக்கம்:
எண்கணித முறை: ஒவ்வொரு பத்தாண்டிலும் சராசரி அதிகரிப்பு X மாறாது; Pₙ = P₀ + n·X. விருப்பம் B – அதிகரிப்பு அதிகரிப்பு முறை (Incremental Increase); D – வடிவியல் (Geometric) முறை.
25.
Group 2/2A 2025
கூற்று [A] : இடப்பெயர்வு என்பது பிராந்தியங்கள், பிரதேசங்களுக்கு இடையே மக்கள் இடம்பெயர்தல் ஆகும்.காரணம் [R] : இடப்பெயர்வு வெளிப்புறமாகவோ சர்வதேசமாகவோ இருக்கலாம்.
Correct Answer: C [[A], [R] இரண்டும் சரி]
விளக்கம்:
இடப்பெயர்வு உள்நாட்டு (Internal) அல்லது வெளிநாட்டு / சர்வதேச (External / International) வகையாக இருக்கலாம். இரண்டு கூற்றுகளும் சரி.
26.
CTS (Interview Posts) 2026
"புலம்பெயரும் முடிவும் செயல்முறையும் பிறப்பிடம், சேருமிடம், குறுக்கிடும் தடைகள், தனிநபர் காரணிகள் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகின்றன" – இக்கோட்பாட்டைக் கூறியவர் யார்?Correct Answer: C [எவரெட் லீ]
விளக்கம்:
எவரெட் எஸ். லீ (A Theory of Migration, 1966) – "தள்ளு–இழு" (Push–Pull) காரணிகள், குறுக்கிடும் தடைகள், தனிநபர் காரணிகள் என்ற நான்கு அடிப்படைகள்.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
