இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை
← திரும்பச் செல்ல
2015 முதல் (2011 PPP) அதீத வறுமைக் கோடு நாள் $1.90. பின்னர் 2022-இல் $2.15 (2017 PPP), 2025-இல் $3.00 (2021 PPP) எனப் புதுப்பிக்கப்பட்டது. வினா 2017 நிலையைக் கேட்பதால் விடை $1.90.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – வறுமை – 16 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
ACF 2023 · CEGS 2022 · Reporter 2022 · Group 1B/1C 2024 · Asst. Public Prosecutor Gr. II 2025
பின்வரும் பரிமாணங்களில் எவை பல பரிமாண வறுமைக் குறியீட்டில் (MPI) பயன்படுத்தப்படுகின்றன?(i) சுகாதாரம்
(ii) கல்வி
(iii) வாழ்க்கைத் தரம்
(iv) வருமான நிலைகள்
Correct Answer: B [(i), (ii), (iii) மட்டும்]
விளக்கம்:
MPI 2010 மனித வளர்ச்சி அறிக்கையில் (UNDP) ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி முன்முயற்சியுடன் (OPHI) இணைந்து அறிமுகம். மூன்று பரிமாணங்கள்: சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத் தரம் ; வருமானம் இதில் இல்லை.
2.
JR 2023
________ என்ற கருத்து நீண்ட ஆயுள், அறிவு, கண்ணியமான வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் உள்ள இழப்பில் கவனம் செலுத்துகிறது.Correct Answer: B [மனித வறுமைக் குறியீடு (HPI)]
விளக்கம்:
HPI 1997 மனித வளர்ச்சி அறிக்கையில் அறிமுகம்; HDI-யின் அதே மூன்று பரிமாணங்களில் உள்ள இழப்பை (deprivation) அளக்கிறது. 2010-இல் HPI-க்குப் பதிலாக MPI வந்தது.
3.
JSO 2023
சி. ரங்கராஜன் குழு நிர்ணயித்த வறுமைக் கோடுCorrect Answer: C [நாள் ஒன்றுக்கு கிராமம் ₹32, நகரம் ₹47]
விளக்கம்:
ரங்கராஜன் குழு (அறிக்கை 2014): 2011–12-இல் மாதம் தனிநபர் நுகர்வு கிராமம் ₹972 (நாள் ₹32), நகரம் ₹1407 (நாள் ₹47). டெண்டுல்கர் குழு: ₹27 / ₹33. (மூலத்தில் விருப்பம் B தமிழில் "₹30 / ₹50" என அச்சுப் பிழை; ஆங்கில வடிவம் பின்பற்றப்பட்டது.)
4.
CTS (Non-Interview Posts) 2024
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.(1) டெண்டுல்கர் குழு
(2) வி.எம். தண்டேகர் – என். ராத் ஆய்வு
(3) லக்டவாலா குழு
(4) சி. ரங்கராஜன் குழு
Correct Answer: C [(2), (3), (1), (4)]
விளக்கம்:
தண்டேகர் – ராத் (1971) → லக்டவாலா (1989) → டெண்டுல்கர் (2005) → ரங்கராஜன் (2012). மேலுள்ள அட்டவணை காண்க.
5.
Group 1B/1C 2024
1979 திட்டக் குழு பணிக்குழு மேற்கொண்ட நகர்ப்புற வறுமை மதிப்பீட்டின்படி, ஒரு மாதத்துக்கான தனிநபர் குறைந்தபட்ச நுகர்வுச் செலவு எவ்வளவு?Correct Answer: A [₹56.7]
விளக்கம்:
ஒய்.கே. அலக் தலைமையிலான 1979 பணிக்குழு 1973-74 விலையில் மாதத் தனிநபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் வறுமைக் கோட்டை ஊரகத்துக்கு ₹49.09, நகர்ப்புறத்துக்கு ₹56.64 என நிர்ணயித்தது (நிதி ஆயோக் ஆய்வுக் கட்டுரை, 2016). ₹56.64 ≈ ₹56.7.
6.
Group 1 2024
தண்டேகர் – ராத் ஆய்வு குறிப்பிடும் வறுமை அளவு குறித்து கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?Correct Answer: A [கிராமம் 40%, நகரம் 50%]
விளக்கம்:
தண்டேகர் – ராத் (Poverty in India, 1971) கிராமத்தில் நாள் 2250 கலோரி என்ற அடிப்படையில் 1960–61-இல் கிராம மக்களில் சுமார் 40%, நகர மக்களில் சுமார் 50% வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்ததாகக் கணித்தனர்.
7.
Reporter 2022
இந்தியாவில் வறுமை பற்றிய புள்ளிவிவரங்களைத் திரட்டும் நிறுவனம் எது?Correct Answer: B [தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO)]
விளக்கம்:
NSSO நுகர்வுச் செலவு மாதிரி ஆய்வுகள் மூலம் தரவு திரட்டுகிறது; அதைக் கொண்டு திட்டக்குழு (இப்போது நிதி ஆயோக்) வறுமையை மதிப்பிட்டது. 2019 முதல் NSSO, CSO இணைந்து தேசியப் புள்ளியியல் அலுவலகம் (NSO) ஆனது.
8.
SD 2022
பின்வருவனவற்றில் வறுமையின் பொருளாதாரப் பிரச்சினைகள் எவை?I. அதிகரிக்கும் வேலையின்மை
II. தொழில்நுட்ப வளர்ச்சி
III. மூலதனப் பற்றாக்குறை
IV. போதிய பொருளாதார வளர்ச்சியின்மை
Correct Answer: C [I, III, IV]
விளக்கம்:
வேலையின்மை, மூலதனப் பற்றாக்குறை, போதிய வளர்ச்சியின்மை ஆகியவை வறுமைக்கான பொருளாதாரக் காரணங்கள். தொழில்நுட்ப வளர்ச்சி வறுமையைக் குறைக்க உதவும்; பிரச்சினை அல்ல.
9.
EO (HR&CE) 2022
வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏன் குறுகிய அளவில் மட்டும் வெற்றி பெற்றன?Correct Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
விளக்கம்:
திட்டங்கள் பல இருந்தும் கூலி வேலைவாய்ப்புத் திட்டங்களின் குறைபாடு, உத்தியிலுள்ள வரம்புகள், நிர்வாகத் திறனின்மை, கசிவு போன்ற காரணங்களால் வெற்றி வரம்புக்குட்பட்டது.
10.
ACF 2023
பின்வருவனவற்றுள் எவை வறுமை ஒழிப்புத் திட்டங்களுடன் தொடர்புடையவை?(i) நேரு ரோஜ்கர் யோஜனா
(ii) தேசிய சமூக உதவித் திட்டம்
(iii) ஜவஹர் கிராம் சம்ரிதி யோஜனா
(iv) ஸ்வர்ண ஜெயந்தி சஹாரி ரோஜ்கர் யோஜனா
Correct Answer: D [(i), (ii), (iii), (iv) சரி]
விளக்கம்:
நேரு ரோஜ்கர் யோஜனா (1989, நகர்ப்புறம்), NSAP (1995, ஓய்வூதியம்), JGSY (1999, ஊரகக் கட்டமைப்பு), SJSRY (1997, நகர்ப்புற சுயவேலை) – அனைத்தும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.
11.
Group 2A Mains 2025
பின்வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்களைக் காலவரிசைப்படி ஒழுங்குபடுத்தவும்.(1) சம்பூர்ண கிராமீன் ரோஜ்கர் யோஜனா
(2) ஸ்வர்ணஜெயந்தி கிராம் ஸ்வரோஜ்கர் யோஜனா
(3) ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
(4) வேலைக்கு உணவுத் திட்டம்
Correct Answer: B [(4), (3), (2), (1)]
விளக்கம்:
வேலைக்கு உணவு (1977) → IRDP (1978; நாடு முழுவதும் 1980) → SGSY (1999) → SGRY (2001).
12.
CTS (Non-Interview Posts) 2025
பின்வரும் நலத்திட்டங்களை அவற்றின் நோக்கத்துடன் பொருத்தவும் :(a) ICDS – 1. நகர்ப்புற வறுமையைக் குறைத்தல்
(b) NULM – 2. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் சத்துணவு
(c) HRIDAY – 3. முதியோர், விதவையர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம்
(d) NSAP – 4. பாரம்பரிய நகரங்களைப் பாதுகாத்துப் புத்துயிரூட்டல்
Correct Answer: C [2 1 4 3]
விளக்கம்:
ICDS (1975) – குழந்தைகள், கர்ப்பிணி / பாலூட்டும் தாய்மார் நலன்; NULM (2013) – நகர்ப்புற வறுமை ஒழிப்பு; HRIDAY (2015) – பாரம்பரிய நகர மேம்பாடு; NSAP (1995) – சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம்.
13.
CTS (Interview Posts) 2026
பொருத்துக :(a) ஆயுஷ்மான் பாரத் யோஜனா – 1. வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பப் பெண்களுக்கு 5 கோடி LPG இணைப்புகள்
(b) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா – 2. சுகாதாரக் காப்பீட்டுக்கான இலவச அணுகல்
(c) ஸ்டாண்ட்-அப் இந்தியா – 3. மலிவான நிதிச் சேவைகளுக்கான அணுகலை விரிவாக்குதல்
(d) பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா – 4. பெண்கள், SC, ST தொழில்முனைவை ஆதரித்தல்
Correct Answer: B [2 1 4 3]
விளக்கம்:
ஆயுஷ்மான் பாரத் PM-JAY (2018) – குடும்பத்துக்கு ஆண்டுக்கு ₹5 இலட்சம் மருத்துவக் காப்பீடு; PMUY (2016) – தொடக்க இலக்கு 5 கோடி LPG இணைப்புகள்; ஸ்டாண்ட்-அப் இந்தியா (2016) – SC/ST, பெண் தொழில்முனைவோருக்கு ₹10 இலட்சம் – ₹1 கோடி கடன்; PMJDY (2014) – நிதி உள்ளடக்கம்.
14.
CTS (Interview Posts) 2026
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) எந்த மாநிலத்தில் முறையாகத் தொடங்கப்பட்டது?Correct Answer: B [உத்தரப் பிரதேசம்]
விளக்கம்:
PMUY 1 மே 2016 அன்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியாவில் பிரதமரால் தொடங்கப்பட்டது (பெட்ரோலிய அமைச்சகம்).
15.
CBT 2022
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 எப்போது நடைமுறைக்கு வந்தது?Correct Answer: D [05 ஜூலை 2013]
விளக்கம்:
சட்டப் பிரிவு 1(3): "5 ஜூலை 2013 முதல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்" (அன்றைய அவசரச் சட்டத் தேதி); அரசிதழ் அறிவிப்பு 10 செப்டம்பர் 2013. கிராம மக்களில் 75%, நகர மக்களில் 50% வரை உள்ளடக்கம்; முன்னுரிமைக் குடும்பத்துக்கு நபருக்கு மாதம் 5 கிலோ தானியம்.
16.
Research Asst. (Animal Husbandry) 2023
உலக வங்கி (2017) வழிகாட்டுதலின்படி அதீத வறுமைக் கோடுCorrect Answer: D [நாள் ஒன்றுக்கு $1.90]
விளக்கம்:
2015 முதல் (2011 PPP) அதீத வறுமைக் கோடு நாள் $1.90. பின்னர் 2022-இல் $2.15 (2017 PPP), 2025-இல் $3.00 (2021 PPP) எனப் புதுப்பிக்கப்பட்டது. வினா 2017 நிலையைக் கேட்பதால் விடை $1.90.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
