இந்தியப் பொருளாதாரம் PYQ – நிலச் சீர்திருத்தம்
← திரும்பச் செல்ல
கேரளம் (கேரள நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963; 1969 திருத்தம்), மேற்கு வங்கம் (ஆபரேஷன் பர்கா, 1978), ஜம்மு–காஷ்மீர் ஆகியவை நிலச் சீர்திருத்தத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள். எனவே [R] தவறு.
₹299 →
இந்தியப் பொருளாதாரம் PYQ – நிலச் சீர்திருத்தம் – 16 வினாக்கள், பாடம்: பொருளாதாரம். ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் ஒரு வரி விளக்கமும் உண்டு; "Show Answer" அழுத்திப் பாருங்கள். TNPSC குரூப் 1, 2, 2A, 4, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி, கோயம்புத்தூர்.
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
AGGS 2021
பின்வரும் கூற்றுகளைக் கவனி :1. ஜமீன்தாரி முறையில் நிலத்தை உழுபவரே அரசுக்கு வரி செலுத்துபவர்.
2. ஜமீன்தாரி முறை கார்ன்வாலிஸால் 1893-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. ஜமீன்தார்கள் நிலத்தின் உரிமையாளர்களாக ஏற்கப்பட்டனர்.
4. ஜமீன்தாரி முறை வங்காளம், பீகார், ஒடிசா, வாரணாசியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
Correct Answer: B [3, 4]
விளக்கம்:
ஜமீன்தாரி (நிரந்தரக் குடியிருப்பு) 1793-இல் கார்ன்வாலிஸால் அறிமுகம்; ஜமீன்தாரே நிலவரி செலுத்துபவர்; உழவர் ஜமீன்தாருக்குக் குத்தகை செலுத்தும் குத்தகைதாரர். எனவே 1, 2 தவறு; 3, 4 சரி.
2.
DPGS 2022
ஜமீன்தாரி முறையைத் தொடங்கியவர் யார்?Correct Answer: B [கார்ன்வாலிஸ் பிரபு]
விளக்கம்:
கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ் 1793-இல் வங்காளத்தில் நிரந்தரக் குடியிருப்பை (Permanent Settlement) அறிமுகப்படுத்தி ஜமீன்தாரி முறையை உருவாக்கினார்.
3.
Special Competitive Exam 2025
இந்தியாவின் நில உடைமை முறைகளில் "நிரந்தரக் குடியிருப்பு"ச் சட்டத்தை அறிமுகப்படுத்திய முறை எது?Correct Answer: C [நிலக்கிழார் – குத்தகைதாரர் முறை]
விளக்கம்:
நிரந்தரக் குடியிருப்பு = ஜமீன்தாரி = நிலக்கிழார் – குத்தகைதாரர் முறை. இரயத்துவாரி – சொந்தச் சாகுபடியாளர் முறை; மகல்வாரி – இனவாரி (கூட்டுக் கிராம) முறை.
4.
AAO & AHO 2024
சரியாகப் பொருந்திய இணைகளைத் தேர்ந்தெடு :1. ஜமீன்தாரி முறை – நிலக்கிழார் முறை
2. மகல்வாரி முறை – சொந்தச் சாகுபடியாளர் முறை
3. இரயத்துவாரி முறை – இனவாரி (கூட்டு) முறை
4. நில உடைமை முறை – நிலங்களின் உரிமை, நிர்வாகம் பற்றிய முறை
Correct Answer: D [1, 4 சரி]
விளக்கம்:
இரயத்துவாரி – சொந்தச் சாகுபடியாளர் முறை; மகல்வாரி – இனவாரி (கூட்டு) முறை. எனவே 2, 3 தவறு; 1, 4 சரி.
5.
Group 1 2021
"பதிவுபெற்ற ஒவ்வொரு நில உடைமையாளரும் அதன் உரிமையாளர்" – இம்முறைCorrect Answer: A [இரயத்துவாரி முறை]
விளக்கம்:
இரயத்துவாரி முறையில் அரசு – இரயத் (விவசாயி) இடையே நேரடித் தொடர்பு; பதிவுபெற்ற ஒவ்வொரு இரயத்தும் நிலத்தின் உரிமையாளராகி நேரடியாக நிலவரி செலுத்தினார். தாமஸ் மன்றோ 1820-இல் மெட்ராஸ் மாகாணத்தில் விரிவுபடுத்தினார்.
6.
GSCE 2021 · DEO 2023
நில உரிமை பொதுவாகக் கிராம மக்களாலான கூட்டு அமைப்பிடம் இருந்த முறை எது?Correct Answer: B [மகல்வாரி முறை]
விளக்கம்:
"மகல்" = கிராமம் / எஸ்டேட். மகல்வாரி முறையில் நிலவரி செலுத்துவதில் முழுக் கிராமமும் ஒரு அலகாகக் கருதப்பட்டது; கிராமத் தலைவர் (லம்பர்தார்) வரி வசூலித்தார். (DEO 2023: "நிலவரியைப் பொறுத்து முழுக் கிராமமும் ஒரு அலகு – மகல்வாரி" – இதே கருத்து.)
7.
CTS (Interview Posts) 2025
பின்வருவனவற்றுள் மகல்வாரி முறையின் கூறுகள் எவை?(1) கூட்டுக் கிராம முறை
(2) சொத்துரிமை சமுதாய அடிப்படையிலானது
(3) கிராமத் தலைவர் நிலவரியை வசூலிப்பார்
(4) அரசுக்கும் உண்மையான விவசாயிக்கும் இடையிலான இடைத்தரகர்
Correct Answer: A [(1), (2), (3)]
விளக்கம்:
மகல்வாரி – கூட்டுக் கிராம உரிமை, கிராமத் தலைவர் வழி வரி வசூல். அரசுக்கும் விவசாயிக்கும் இடையிலான இடைத்தரகர் (ஜமீன்தார்) ஜமீன்தாரி முறையின் பண்பு.
8.
Group 1 & 1A 2025
கீழ்க்கண்டவற்றைக் காலவரிசைப்படுத்துக :(1) மகல்வாரி முறை
(2) இரயத்துவாரி முறை
(3) ஜமீன்தாரி முறை
(4) கிராமதான இயக்கம்
Correct Answer: C [(3), (2), (1), (4)]
விளக்கம்:
ஜமீன்தாரி (1793) → இரயத்துவாரி (மெட்ராஸ் 1820) → மகல்வாரி (1822 / 1833) → வினோபா பாவேயின் பூமிதானம் (1951) / கிராமதானம் (1952) இயக்கம்.
9.
CAGS 2022
இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தத்தின் பகுதியாகச் சேர்க்கப்பட்டவைCorrect Answer: D [மேற்கூறிய அனைத்தும்]
விளக்கம்:
விடுதலைக்குப் பின் நிலச் சீர்திருத்தம்: இடைத்தரகர் ஒழிப்பு, குத்தகைச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு – மறுபகிர்வு, நில ஒருங்கிணைப்பு – கூட்டுறவுப் பண்ணை (வேளாண் மறுசீரமைப்பு).
10.
Bursar 2023 · ACF 2023
நிலச் சீர்திருத்த நோக்கங்களை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் :(i) இடைத்தரகர் ஒழிப்பு
(ii) நிலக்கிழார் – குத்தகைதாரர் உறவை ஒழுங்குபடுத்துதல், நில உச்சவரம்பு மூலம் மறுபகிர்வு
(iii) சிதறிய நிலங்களை ஒருங்கிணைத்தல்
(iv) நிலப் பதிவேடுகளைப் புதுப்பித்தல், கணினிமயமாக்கல்
Correct Answer: D [(i), (ii), (iii), (iv)]
விளக்கம்:
நான்குமே நிலச் சீர்திருத்தத் திட்டக் கூறுகள்; நிலப் பதிவேடு கணினிமயமாக்கல் – தேசிய நிலப் பதிவேடு நவீனமயமாக்கல் திட்டம் (NLRMP 2008; தற்போது DILRMP).
11.
AHGS 2021 · PSY 2022
குத்தகைச் சீர்திருத்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை(1) வாடகை (குத்தகை) ஒழுங்குமுறை
(2) குத்தகைக் காலப் பாதுகாப்பு
(3) குத்தகைதாரர்களுக்கு உரிமை வழங்குதல்
(4) நில உடைமை உச்சவரம்பு
Correct Answer: D [(1), (2), (3) மட்டும்]
விளக்கம்:
குத்தகைச் சீர்திருத்தத்தின் மூன்று கூறுகள்: நியாயமான வாடகை நிர்ணயம், குத்தகைக் கால உறுதி (வெளியேற்றத் தடுப்பு), குத்தகைதாரர் நிலத்தை வாங்கும் / உரிமை பெறும் உரிமை. நில உச்சவரம்பு தனியான நிலச் சீர்திருத்தக் கூறு.
12.
FA 2022
சமூக நீதி நோக்கிலும் வேளாண் உற்பத்தித் திறனை உயர்த்தும் நோக்கிலும் நில உடைமையை மறுபகிர்வு செய்யும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது ______Correct Answer: C [நிலச் சீர்திருத்தம்]
விளக்கம்:
நிலச் சீர்திருத்தத்தின் இரு நோக்கங்கள்: (1) சமூக நீதி – உழுபவருக்கு நிலம், சுரண்டல் ஒழிப்பு; (2) வேளாண் உற்பத்தித் திறன் உயர்வு.
13.
JR 2023
இந்தியாவில் நிலச் சீர்திருத்தத்தின் தேவை என்ன?(i) வேளாண் நிலங்கள் துண்டுகளாகப் பிரிக்கப்பட்டன
(ii) ஒருவருக்கான விதைப்புப் பரப்பு அதிகரித்து வருகிறது
(iii) உற்பத்தித் திறன் குறைந்தது
Correct Answer: B [(i), (iii) சரி; (ii) தவறு]
விளக்கம்:
மக்கள்தொகைப் பெருக்கத்தால் நிலம் துண்டாக்கப்பட்டு, ஒருவருக்கான நிலப் பரப்பு குறைந்து வருகிறது; சிறு, சிதறிய நிலங்களால் உற்பத்தித் திறன் குறைந்தது. எனவே (ii) தவறு.
14.
AJ 2023
தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு ஜமீன்தாரி முறையை ஒழிக்கப் பரிந்துரை செய்த குழுவின் பெயரைக் குறிப்பிடுக.Correct Answer: B [பிரகாசம் குழு]
விளக்கம்:
டி. பிரகாசம் தலைமையிலான குழு (1937 – 38) சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறையை ஒழிக்கப் பரிந்துரைத்தது; அதன் அடிப்படையில் "சென்னை எஸ்டேட்டுகள் (ஒழிப்பு, இரயத்துவாரியாக மாற்றம்) சட்டம், 1948" இயற்றப்பட்டது. ஜே.சி.
15.
Asst. Public Prosecutor Gr. II 2026
பொருத்துக :(a) உட்பிரிவு (Sub-division) – 1. நிலச் சீர்திருத்தத்தின் ஒரு கூறு
(b) சிதறல் (Fragmentation) – 2. 2 ஹெக்டேருக்குக் குறைவான நில உடைமைகள்
(c) சிறு, குறு நில உடைமைகள் – 3. பெரிய நில உடைமைகள் சிறியவையாகப் பிரிக்கப்படுதல்
(d) நில உடைமை ஒருங்கிணைப்பு – 4. ஒரு உரிமையாளருக்குப் பல இடங்களில் சிறு சிறு நிலங்கள் இருத்தல்
Correct Answer: C [3 4 2 1]
விளக்கம்:
உட்பிரிவு – வாரிசுரிமையால் பெரிய நிலம் சிறு பகுதிகளாகப் பிரிதல்; சிதறல் – ஒருவரின் நிலம் பல இடங்களில் துண்டுகளாக இருத்தல்; குறு (1 ஹெக்டேருக்குக் கீழ்), சிறு (1–2 ஹெக்டேர்) நில உடைமைகள்; நில ஒருங்கிணைப்பு – சிதறிய துண்டுகளை ஒரே தொகுப்பாக்குதல் (நிலச்…
16.
CTS (ITI Posts) 2024
கூற்று [A] : நிலச் சீர்திருத்தம் என்பது பெரும் நில உடைமையாளர்களிடமிருந்து உபரி நிலத்தைக் கையகப்படுத்தி நிலமற்றோருக்குப் பகிர்ந்தளிப்பதைக் குறிக்கிறது.காரணம் [R] : கேரளத்தில் நிலச் சீர்திருத்தம் வெற்றி பெறவில்லை.
Correct Answer: A [[A] சரி; ஆனால் [R] தவறு]
விளக்கம்:
கேரளம் (கேரள நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963; 1969 திருத்தம்), மேற்கு வங்கம் (ஆபரேஷன் பர்கா, 1978), ஜம்மு–காஷ்மீர் ஆகியவை நிலச் சீர்திருத்தத்தில் வெற்றி பெற்ற மாநிலங்கள். எனவே [R] தவறு.
? இந்த வினாக்களின் முழு விளக்கம், அட்டவணைகளுடன் – இந்தியப் பொருளாதாரம் PYQ நூல் (₹149): www.shanmugamiasacademy.in/study-materials/tnpsc-indian-economy-pyq
📘 இந்தியப் பொருளாதாரம் — முந்தைய ஆண்டு வினா – விடை – விளக்கம் (2020 – 2026)
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 474 வினாக்கள் தமிழ் + ஆங்கிலத்தில் · சரிபார்க்கப்பட்ட விடை + விளக்கம் · 46 அட்டவணைகள் & குறிப்புகள் · 25 பகுதிகள் · 2020 – 2026 TNPSC தேர்வுகள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – இதர வினாக்கள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – பன்னாட்டு அமைப்புகள்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – மனித வளர்ச்சிக் குறியீடு
› இந்தியப் பொருளாதாரம் PYQ – சுகாதாரம்
› இந்தியப் பொருளாதாரம் PYQ – கல்வி
› இந்தியப் பொருளாதாரம் PYQ – வேலைவாய்ப்பு
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
