TNPSC Mains விடையை நாங்கள் எப்படி மதிப்பிடுகிறோம்?
ஒவ்வொரு விடையும் கீழே உள்ள 5 அம்சங்களில் மதிப்பிடப்படுகிறது. எல்லா மாணவர்களுக்கும் – கோவை, மதுரை, ஆன்லைன் – ஒரே அளவுகோல். உங்கள் மதிப்பெண் தாளில் ஒவ்வொரு அம்சத்துக்கும் தனி மதிப்பெண்ணும் ஒருவரி ஆலோசனையும் இருக்கும்.
| அம்சம் | என்ன பார்க்கிறோம் | பங்கு |
|---|---|---|
| 1. உள்ளடக்கம் Content | வினா கேட்ட எல்லாப் பகுதிகளுக்கும் விடை உள்ளதா; உண்மைகள், சட்டப்பிரிவுகள், ஆண்டுகள் சரியா; பல கோணங்கள் உள்ளனவா. | 40% |
| 2. அமைப்பு Structure | முன்னுரை – உடல் – முடிவுரை; தலைப்புகள், புள்ளிகள்; சொல் வரம்புக்குள். | 20% |
| 3. தமிழ்நாட்டு எடுத்துக்காட்டு, தரவு TN examples & data | தமிழ்நாட்டுத் திட்டம், அறிக்கை, புள்ளிவிவரம், ஆளுமை, திருக்குறள் போன்றவற்றைப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்களா. | 20% |
| 4. வரைபடம் / அட்டவணை Diagram / flowchart | தேவையான இடத்தில் எளிய வரைபடம், அட்டவணை, flowchart. | 10% |
| 5. மொழியும் தெளிவும் Language & presentation | பிழையற்ற, எளிய மொழி; தெளிவான கையெழுத்து; முக்கியச் சொற்களுக்கு அடிக்கோடு. | 10% |
சொல் வரம்பும் நேரமும் (குரூப் 2 Paper II)
- 10 மதிப்பெண் வினா – சுமார் 100 சொற்கள் – 7 நிமிடம்.
- 15 மதிப்பெண் வினா – சுமார் 200 சொற்கள் – 12 நிமிடம்.
- Paper II மொத்தம் 300 மதிப்பெண், 3 மணி நேரம்; அலகு II (தமிழ்ச் சமூகம் – பண்பாடு, பாரம்பரியம்) வினாக்களுக்குத் தமிழிலோ ஆங்கிலத்திலோ விடை எழுதலாம்.
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups

