வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
“பாவலரேறு பெருஞ்சித்திரனார்” எழுதாத நூல் எது?

Correct Answer: D [குறிஞ்சித் திட்டு]

Notes:

‘குறிஞ்சித்திட்டு’ பாரதிதாசன் இயற்றியது.

2.  
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

Correct Answer: C [கல்லக்குடி மாகாவியம்]

Notes:

‘கல்லக்குடி மாகாவியம்’ பெருஞ்சித்திரனாரின் நூல் அன்று.

3.  
‘நூறாசிரியம்’ என்னும் கவிதை நூலின் ஆசிரியர்

Correct Answer: C [கவிஞர் பெருஞ்சித்திரனார்]

Notes:

‘நூறாசிரியம்’ பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய கவிதை நூல்.

4.  
பொருத்துக :
(a) மதுரகவி – 1. நால்வகைக் கவிகளையும் பாட வல்லவர்
(b) வித்தாரக்கவி – 2. பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்
(c) பாவலரேறு – 3. தொடர்நிலைச் செய்யுளும், தூய காப்பியங்களும் இயற்றுபவர்
(d) ஆசுகவி – 4. ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்

Correct Answer: B [4 3 1 2]

Notes:

மதுரகவி – ஓசை நலம் சிறக்கப் பாடுபவர்; வித்தாரக்கவி – தொடர்நிலைச் செய்யுளும் காப்பியங்களும் இயற்றுபவர்; பாவலரேறு – நால்வகைக் கவிகளையும் பாட வல்லவர்; ஆசுகவி – பாடு…

5.  
பாவலரேறு என அழைக்கப்படுபவர்

Correct Answer: B [பெருஞ்சித்திரனார்]

Notes:

‘பாவலரேறு’ என அழைக்கப்படுபவர் பெருஞ்சித்திரனார் (இயற்பெயர் துரை.

6.  
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்

Correct Answer: C [பாரதிதாசன்]

Notes:

‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர் பாரதிதாசன் (குடும்ப விளக்கு).

7.  
“நீலவான் மறைக்கும் ஆல்தான்
ஒற்றைக்கால் நெடிய பந்தல்” — என்ற வரிகளில்
“ஒற்றைக்கால் நெடிய பந்தல்” எனக் குறிக்கப்பெறுவது எது?

Correct Answer: C [ஆல மரம்]

Notes:

நீல வானத்தையே மறைக்கும் அளவு விரிந்த ஆலமரம், ஒற்றை அடிமரத்தைக் காலாகக் கொண்ட நெடிய பந்தலாக உருவகிக்கப்படுகிறது.

8.  
பாரதிதாசன் ‘குடும்பவிளக்கு’ என்னும் நூலில் எப்பகுதியில் ‘விருந்தோம்பல்’ எனும் தலைப்பில் கவிதை படைத்துள்ளார்?

Correct Answer: D [இரண்டாம் பகுதி]

Notes:

‘குடும்ப விளக்கு’ ஐந்து பகுதிகளைக் கொண்டது.

9.  
‘பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்

Correct Answer: C [பாரதிதாசன்]

Notes:

இவ்வடிகளைப் பாடியவர் பாரதிதாசன்.

10.  
பாரதிதாசன் எழுதிய ‘பிசிராந்தையார்’ என்னும் நூல்

Correct Answer: D [நாடகம்]

Notes:

‘பிசிராந்தையார்’ பாரதிதாசன் எழுதிய நாடக நூல்.

11.  
“உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு” என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப் பெற்றவர் – யார்?

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்ற கொள்கையோடு வாழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

12.  
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - இது யார் கூற்று?

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை’ என்பது பாரதிதாசன் கூற்று.

13.  
‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே’ - என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் யார்?

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

‘தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’ என்று தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் பாரதிதாசன்.

14.  
செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண ஆர்வம் கொண்ட கவிஞர்

Correct Answer: B [பாரதிதாசனார்]

Notes:

செந்தமிழைச் செழுந்தமிழாகக் காண ஆர்வம் கொண்டவர் பாரதிதாசன்.

15.  
“தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும்” – யார் யாரைப் பாடிய வரிகள்?

Correct Answer: B [பாரதிதாசன் – பெரியாரை]

Notes:

‘தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும்’ என்று தந்தை பெரியாரைப் போற்றிப் பாடியவர் பாரதிதாசன்.

16.  
பாவேந்தர் பாரதிதாசனால் எழுதப்பட்ட “சாகித்திய அகாதெமிப்” பரிசு பெற்ற நாடக நூல் எது?

Correct Answer: D [பிசிராந்தையார்]

Notes:

பாரதிதாசனின் ‘பிசிராந்தையார்’ நாடக நூலுக்கு 1969இல் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

17.  
“கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!”
என்று தமிழ்க் காதல் கொண்டு வாழ்ந்தவர் யார்?

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

‘கன்னல் பொருள் தரும் தமிழே நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி’ என்று தமிழைப் பூக்காடாகவும் தம்மைத் தும்பியாகவும் உருவகித்துப் பாடியவர் பாரதிதாசன் (இயற்பெயர் கனக…

18.  
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
– எனப் பாடியவர்.

Correct Answer: A [பாரதிதாசன்]

Notes:

இவ்வடிகளைப் பாடியவர் பாரதிதாசன்.

19.  
‘குயில்’ என்ற இதழை நடத்தியவர்

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

‘குயில்’ என்ற இதழை நடத்தியவர் பாரதிதாசன்.

20.  
பாரதிதாசனார் எச்சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்

Correct Answer: A [புரட்சிக் கவிஞர்]

Notes:

பாரதிதாசன் ‘புரட்சிக் கவிஞர்’, ‘பாவேந்தர்’ எனப் போற்றப்படுகிறார்.

21.  
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்

Correct Answer: C [பாரதிதாசன்]

Notes:

‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர் பாரதிதாசன்.

22.  
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது

Correct Answer: B [“தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”]

Notes:

‘தேனொக்கும் செந்தமிழே! நீ கனி!

23.  
“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்

Correct Answer: C [பாவேந்தர் பாரதிதாசன்]

Notes:

‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற பாடலைப் பாடியவர் பாரதிதாசன்.

24.  
பட்டியல் I உடன் பட்டியல் II ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் I (சிறப்பு அடைமொழிப் பெயர்) – பட்டியல் II (பெயர்)
(a) தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் – 1. புதுமைப்பித்தன்
(b) தமிழ்நாட்டின் மாப்பசான் – 2. அநுத்தமா
(c) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் – 3. பாரதிதாசன்
(d) தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் – 4. கல்கி

Correct Answer: B [3 1 4 2]

Notes:

தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் – பாரதிதாசன்; தமிழ்நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன் (சிறுகதை); தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் – கல்கி (வரலாற்றுப் புதினம்)…

25.  
திருக்குறளின் பெருமைகளைப் போற்றி ‘இணையில்லை முப்பாலுக்(கு) இந்நிலத்தே’ எனப் புகழ்ந்து பாடியவர்

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

திருக்குறளை ‘இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே’ என்று போற்றியவர் பாரதிதாசன்.

26.  
பொருத்துக :
(a) தமிழியக்கம் – 1. பாரதியார்
(b) சீட்டுக்கவி – 2. தோலா மொழித்தேவர்
(c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – 3. பாரதிதாசன்
(d) சூளாமணி – 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Correct Answer: C [3 1 4 2]

Notes:

தமிழியக்கம் – பாரதிதாசன்; சீட்டுக்கவி – பாரதியார் (எட்டயபுர மன்னருக்கு எழுதியது); சேக்கிழார் பிள்ளைத்தமிழ் – மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை; சூளாமணி…

27.  
பாரதிதாசன் நூல்களில் பொருந்தாத நூல்

Correct Answer: D [கள்ளோ காவியமோ]

Notes:

‘கள்ளோ காவியமோ’ டாக்டர் மு. வரதராசனார் எழுதிய புதினம்.

28.  
‘குறிஞ்சித் திட்டு’ எனும் நூலை இயற்றியவர்

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘குறிஞ்சித் திட்டு’ பாரதிதாசன் இயற்றிய நூல்.

29.  
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே” – எனப் பாடியவர்

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘சங்கே முழங்கு’ என்ற பாடலில் தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தி இவ்வடிகளைப் பாடியவர் பாரதிதாசன்.

30.  
பொருந்தாத இணையினைக் காண்க

Correct Answer: D [“அழுது அடியடைந்த அன்பர்” – திருமூலர்]

Notes:

‘அழுது அடியடைந்த அன்பர்’ எனப் போற்றப்படுபவர் மாணிக்கவாசகர்; திருமூலர் அல்லர்.

31.  
“இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘இருட்டறையில் உள்ளதடா உலகம் – சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே’ என்று சாதி வேற்றுமையைச் சாடியவர் பாரதிதாசன்.

32.  
பொருந்தாத இணையைக் கண்டறிக :

Correct Answer: A [பொதுவுடைமை – புதுமைப்பித்தன்]

Notes:

புதுமைப்பித்தன் சிறுகதை மன்னர்; பொதுவுடைமைக் கவிஞர் அல்லர்.

33.  
கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

Correct Answer: C [தேன் மழை]

Notes:

‘தேன் மழை’ உவமைக் கவிஞர் சுரதா எழுதிய நூல்.

34.  
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
– எனத் தமிழின் பழஞ் சிறப்பினைப் பெருமிதம் பொங்கப்பாடிய கவிஞர்

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

தமிழ் நிலவு, கதிரவன், விண், விண்மீன்கள், மங்குல் (முகில்), கடல் ஆகியவற்றோடு பிறந்த தொன்மையானது எனப் பெருமிதத்துடன் பாடியவர் பாரதிதாசன்.

35.  
‘மணிமேகலை வெண்பா’வின் ஆசிரியர் யார்?

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘மணிமேகலை வெண்பா’ பாரதிதாசன் இயற்றிய நூல்.

36.  
“எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்” எனப் பொதுவுடைமையை விரும்பியவர்

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்’ என்று பொதுவுடைமைச் சமுதாயத்தை விரும்பிப் பாடியவர் பாரதிதாசன்.

37.  
தொடரும் - தொடர்பும்.
தொடர் – சான்றோர்
(a) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே – (1) திருமூலர்
(b) உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – (2) பாரதிதாசன்
(c) தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் – (3) திருவள்ளுவர்
(d) உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – (4) கவிமணி

Correct Answer: A [(2) (1) (4) (3)]

Notes:

உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே – பாரதிதாசன்; உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர் (திருமந்திரம்); தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தேறும் சிலப்பதிகாரம்…

38.  
தொடரும் - தொடர்பும்.
தொடர் – சான்றோர்
(a) புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் – (1) பாரதிதாசன்
(b) தமிழ் நாட்டின் இரசூல் கம்சதோவ் – (2) சீத்தலைச் சாத்தனார்
(c) என் கடன் பணி செய்து கிடப்பதே – (3) ஔவையார்
(d) அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி – (4) திருநாவுக்கரசர்

Correct Answer: B [(2) (1) (4) (3)]

Notes:

புரைதீர் நல்லறம் போற்றிக் கேண்மின் – சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை); தமிழ்நாட்டின் இரசூல் கம்சதோவ் – பாரதிதாசன்; என் கடன் பணி செய்து கிடப்பதே – திருநாவுக்கரசர்…

39.  
“வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே” – பாடியவர் யார்?

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

‘வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே’ என்று திருவள்ளுவரைப் போற்றியவர் பாரதிதாசன்.

40.  
பாவேந்தர் என அழைக்கப்படுபவர்

Correct Answer: D [பாரதிதாசன்]

Notes:

‘பாவேந்தர்’ என அழைக்கப்படுபவர் பாரதிதாசன்.

41.  
“இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர் என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால் துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில் தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்” – எனப் பாடியவர் யார்?

Correct Answer: B [பாரதிதாசன்]

Notes:

‘இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்’ என்ற நிலை வந்தால் துன்பம் நீங்கி வீரம் வரும் என்று பாடியவர் பாரதிதாசன்.

42.  
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியர்களை அவர்களின் இதழ்களுடன் பொருத்துக :
ஆசிரியர் – இதழ்
(a) திரு.வி.க. – 1. தீபம்
(b) பாரதியார் – 2. தேசபக்தன்
(c) பாரதிதாசன் – 3. விஜயா
(d) நா. பார்த்தசாரதி – 4. குயில்

Correct Answer: C [2 3 4 1]

Notes:

திரு.வி.க. – தேசபக்தன்; பாரதியார் – விஜயா; பாரதிதாசன் – குயில்; நா.

43.  
கீழ்க்கண்ட கூற்றுகளில் பாரதிதாசனிடம் தொடர்பில்லாத நூல் எது?

Correct Answer: C [மலரும் மாலையும்]

Notes:

‘மலரும் மாலையும்’ கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய நூல்.

44.  
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
புத்தகம் – ஆசிரியர்

Correct Answer: D [ஜானகிராமன் – அப்பாவின் சினேகிதர்]

Notes:

‘அப்பாவின் சினேகிதர்’ அசோகமித்திரன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு (சாகித்திய அகாதெமி விருது பெற்றது); தி.

45.  
‘இயேசு காவியம்’ என்ற நூலை எழுதிய ஆசிரியர் யார்?

Correct Answer: B [கவியரசு கண்ணதாசன்]

Notes:

‘இயேசு காவியம்’ கவியரசு கண்ணதாசன் எழுதிய நூல்.

46.  
“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என மணக்கொடை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்

Correct Answer: A [காயிதே மில்லத்]

Notes:

மணக்கொடை (வரதட்சணை) வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் காயிதே மில்லத் முகமது இசுமாயில்.

47.  
கீழ்க்கண்டவற்றில் வேலு நாச்சியார் பற்றிய தவறான கூற்று எது?
I. இவர் ராமநாதபுரம் இளவரசி ஆவார்
II. இவருடைய கணவர் முத்து வடுக உடைய தேவர்
III. 1780இல் ஹைதர் அலி சிவகங்கையின் மீது படை எடுத்து வேலுநாச்சியாரைத் தோற்கடித்தார்
IV. இவர் இரண்டாம் மைசூர் போரைப் பயன்படுத்தி சிவகங்கைக்குள் நுழைந்தார்

Correct Answer: C [(III) மட்டும்]

Notes:

1780இல் வேலுநாச்சியார் ஹைதர் அலியின் உதவியுடன் சிவகங்கையை மீட்டார்; ஹைதர் அலி அவரைத் தோற்கடிக்கவில்லை.

48.  
சிவகங்கை வேலுநாச்சியாரின் ‘உடையாள் படை’க்குத் தலைமையேற்றவரின் பெயரைக் குறிப்பிடுக.

Correct Answer: C [குயிலி]

Notes:

வேலுநாச்சியாரின் பெண்கள் படையான ‘உடையாள் படை’க்குத் தலைமை தாங்கியவர் குயிலி.

49.  
இராணி வேலுநாச்சியார் திண்டுக்கல் அருகே கோபால நாயக்கரின் பாதுகாப்பில் _____ என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார்.

Correct Answer: C [விருப்பாட்சி]

Notes:

கணவர் கொல்லப்பட்ட பின் வேலுநாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாட்சியில் பாளையக்காரர் கோபால நாயக்கரின் பாதுகாப்பில் வாழ்ந்தார்.

📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 ₹299 →
மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2 › TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1 › பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 2 (வினா 51–100)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0