வினாடி வினா

← திரும்பச் செல்ல
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள் YouTube WhatsApp சேனல் Telegram சேனல் Facebook பக்கம் Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
WhatsApp Telegram Facebook X
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.  
தமிழக அரசின் பரிசு பெற்ற நூலாகிய 'இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு' என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?

Correct Answer: A [மா சு அண்ணாமலை]

2.  
இந்திய விவசாய தொழிலாளர் கட்சியை தொடங்கியவர் யார்?

Correct Answer: D [எம் சிங்காரவேலர்]

3.  
எந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது?

Correct Answer: D [1895]

4.  
சோழர் காலத்துக் குடவோலை முறையை விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

Correct Answer: C [காஞ்சிபுரம்]

5.  
ஆங்கிலேய ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும் கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தவர் யார்?

Correct Answer: D [வைகுண்ட சுவாமிகள்]

6.  
கீழ்க்கண்டவற்றில் எது ஊமையன் கோட்டை என்று அழைக்கப்படுகிறது?

Correct Answer: B [திருமயம் கோட்டை]

7.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது
2. இந்த நாளிலேயே திருவள்ளுவர் ஆண்டு தொடங்குகிறது
3. கிமு 31 திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக கருதப்படுகிறது

Correct Answer: C [1, 3 மட்டும் சரி]

8.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. திருமயம் கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது
2. காஞ்சிபுரத்தில் உள்ள சதுரங்கபட்டினம் கோட்டை டேனியர்களால் கட்டப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

9.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமுக்கம் அரண்மனை திருமலை நாயக்கரின் கோடைகால இல்லமாக திகழ்ந்துள்ளது
2. ஊட்டியில் உள்ள பெர்ன்ஹில்ஸ் அரண்மனை/Fernhills Palace மைசூர் அரசர்களின் கோடைகாலத் அரண்மனையாக திகழ்ந்துள்ளது

Correct Answer: B [2 மட்டும் சரி]

10.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. காமராசருக்கு 1976ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது
2. சென்னையில் காமராசருக்கு மணிமண்டபம் 2.10.2000 இல் அமைக்கப்பட்டது
3. காமராசர் பல்கலைக்கழகம் மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது

Correct Answer: C [1, 3 மட்டும் சரி]

11.  
ஒண்டிவீரன் என்பவர் யாருடைய படை பிரிவுகளில் ஒன்றனுக்கு தலைமை ஏற்றிருந்தார்?

Correct Answer: D [பூலித்தேவர்]

12.  
யாருடைய தலைமையின் கீழ் திண்டுக்கல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது?

Correct Answer: B [கோபால நாயக்கர்]

13.  
யார் அனுப்பிவைத்த நல்லுறவு குழுவால் கோபாலநாயக்கர் ஈர்க்கப்பட்டார்?

Correct Answer: A [திப்பு சுல்தான்]

14.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. வேலு நாச்சியாரின் தோழியான குயிலி, உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமையேற்று வழிநடத்தினார்
2. உடையாள் தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு பிரிட்டிசாரின் ஆயுதக் கிடங்கில் இருந்த தளவாடங்களை அழித்தார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

15.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. மா பொ சிவஞானம் அவர்கள் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுகிறார்
2. இவர் 1972 முதல் 1978 வரை சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகித்துள்ளார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

16.  
தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர் யார்?

Correct Answer: D [மா பொ சிவஞானம்]

17.  
குமரிமாவட்ட போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர் யார்?

Correct Answer: D [மார்ஷல் நேசமணி]

18.  
மார்ஷல் நேசமணி கீழ்க்கண்ட எந்த இடத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றியுள்ளார்?

Correct Answer: A [நாகர்கோவில்]

19.  
உழுபவருக்கே நிலம் உரிமை இயக்கத்தை தொடங்கியவர் யார்?

Correct Answer: C [கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்]

20.  
இந்தியாவின் பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்களால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றவர் யார்?

Correct Answer: A [சின்னப்பிள்ளை]

21.  
ராஜ கம்பீர ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட அரசு எது?

Correct Answer: A [சம்புவராயர் அரசு]

22.  
நீரில் கிடைத்த வெற்றியின் நினைவாக எழுப்பிய தூண் என்று பொருள் தரக்கூடிய ஜெய ஜலஸ்தம்பம் யாரால் கட்டப்பட்டது?

Correct Answer: C [முதலாம் ராஜேந்திர சோழன்]

23.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. முதலாம் பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் சோழர் கால உள்ளாட்சி தேர்தல் முறையை அறிய முடிகிறது
2. உத்திரமேரூர் என்பது சோழர்களால் வழங்கப்பட்ட தேவதானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

Correct Answer: A [1 மட்டும் சரி]

24.  
மதுரையில் சுல்தான்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த அரசர் யார்?

Correct Answer: B [குமார கம்பண்ணா]

25.  
கரந்தைச் செப்பேடு எந்த அரசருடையது?

Correct Answer: B [முதலாம் ராஜேந்திர சோழன்]

26.  
பாண்டியரின் நேர்மையான நிர்வாகத்திற்கும் வெளி நாட்டு வணிகர்களை சிறந்த முறையில் நடத்தியதற்காகவும் பாராட்டிய வெளிநாட்டு பயணி யார்?

Correct Answer: C [மார்க்கோ போலோ]

27.  
அரிகேசரியை சமண மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

Correct Answer: D [திருஞானசம்பந்தர்]

28.  
ராஜா தேசிங்கு ஆளுநராக பொறுப்பு வகித்த இடம் எது?

Correct Answer: C [செஞ்சி]

29.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. சரஸ்வதி மகால் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது
2. மராத்தி மொழியில் அமைந்த ஆவணங்கள் மோடி எழுத்து வடிவில் எழுதப்பட்டன

Correct Answer: B [2 மட்டும் சரி]

30.  
பொது மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டு 1839 ஆம் ஆண்டு சென்னையில் யாருடைய சிலை நிறுவப்பட்டது?

Correct Answer: B [தாமஸ் மன்றோ]

31.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. தாமஸ் மன்றோ 1820ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண ஆளுநராக பொறுப்பேற்றார்
2. இவர் 1822 இல் ஜமீன்தாரி முறையை மெட்ராஸ் மாகாணத்தில் அறிமுகம் செய்தார்
3. இவர் கல்விக்கான செலவீனங்களை எதிர்காலத்திற்கான முதலீடாக கருதினார்

Correct Answer: A [1 மற்றும் 3]

32.  
தென்னிந்தியாவில் முதல் இருப்புப்பாதை எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

Correct Answer: D [1856]

33.  
பெண் தோட்டத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை 'கரும்புத் தோட்டத்திலே' என்ற பாடலின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?

Correct Answer: C [பாரதியார்]

34.  
வேலூர் புரட்சியை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் யார்?

Correct Answer: B [கில்லஸ்பி]

35.  
யார் முதலமைச்சராக இருந்தபொழுது சென்னை மவுண்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை சென்னை அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டது?

Correct Answer: D [ராஜாஜி]

36.  
கீழ்க்கண்ட எந்த அரசில் பாளையக்காரர் முறை பின்பற்றப்பட்டு வந்ததாக கருதப்படுகிறது?

Correct Answer: C [காகதியர்கள்]

37.  
தமிழ் ஆர்வலர்களால் தமிழை நேசிப்பவராகவும் வள்ளுவரின் குரளை மிகவும் விரும்புபவராகவும் பாராட்டப்படுபவர் யார்?

Correct Answer: A [பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்]

38.  
பொருத்துக:
a) சுயமரியாதை இயக்கம் — 1) 1944
b) ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் அமைச்சரவை — 2) 1925
c) திராவிடர் கழகம் — 3) 1949
d) திராவிட முன்னேற்றக் கழகம் — 4) 1937

Correct Answer: C [2 4 1 3]

39.  
பொருத்துக:
a) பி குமாரசாமி முதலமைச்சராதல் — 1) 1956
b) மாநில மறுசீரமைப்பு சட்டம் — 2) 1949
c) இந்தி எதிர்ப்புப் போராட்டம் — 3) 1969
d) சி என் அண்ணாதுரை காலமானார் — 4) 1965

Correct Answer: A [2 1 4 3]

40.  
பொருத்துக:
a) சி என் அண்ணாதுரை தலைமையில் திமுக அரசாங்கம் — 1) 1974
b) மு கருணாநிதி முதலமைச்சராதல் — 2) 1972
c) அஇஅதிமுக எம் ஜி ராமச்சந்திரனால் நிறுவப்படுதல் — 3) 1969
d) மாநில தன்னாட்சி தீர்மானம் நிறைவேற்றம் — 4) 1967

Correct Answer: B [4 3 2 1]

41.  
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. 1944ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது
2. இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானத்தை பெரியார் கொண்டு வந்தார்

Correct Answer: A [1 மட்டும் சரி]

42.  
சுயராஜ்ய தினம் கொண்டாடுவதற்காக 1908ஆம் ஆண்டு சென்னையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர் யார்?

Correct Answer: A [பாரதியார்]

43.  
பாரதியாரின் எந்த நூல் இந்தியத்தாய் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு உள்ளதை மறைமுகமாக வெளிப்படுத்தியது?

Correct Answer: B [பாஞ்சாலி சபதம்]

44.  
சென்னை மாகாணத்தில் யாருடைய தலைமையில் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டது?

Correct Answer: D [சுப்பராயலு]

45.  
யாருடனான பாரதியாரின் சந்திப்பு பெண்களுக்கான உரிமைகள் பற்றிய சிந்தனையை பாரதியாரிடம் ஏற்படுத்தியது?

Correct Answer: C [நிவேதிதா]

46.  
பாரதியாரின் ஆளுமையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இடம் எது?

Correct Answer: C [காசி]

47.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. பசும்பொன் முத்துராமலிங்கர் தோன்றி மறைந்த அக்டோபர் 30-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது
2. இந்திய அரசு 1995-ல் முத்துராமலிங்கரின் தபால் தலையை வெளியிட்டது

Correct Answer: C [இரண்டும் சரி]

48.  
'சிதம்பரனாரின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும், புரட்சி ஓங்கும், அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்' இது யாருடைய கூற்று?

Correct Answer: C [பின்ஹே]

49.  
இந்தியாவின் முதல் மாநகராட்சியாக சென்னை எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

Correct Answer: A [1688]

50.  
பழங்கால தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி எந்த நாட்டின் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளது?

Correct Answer: C [நியூசிலாந்து]

51.  
சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1. தமிழ் பல்கலை கழகம் தஞ்சாவூரில் 1981ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது
2. உ வே சா நூலகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1942ல் தொடங்கப்பட்டது

Correct Answer: A [1 மட்டும் சரி]

மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC சமச்சீர் பாடநூல் வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC மாதிரித் தேர்வு – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC மாதிரி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 2 › TNPSC பயிற்சி வினாக்கள் – தமிழக வரலாறு, பண்பாடு – தொகுப்பு 1 › செய்தித்தாள்கள், இதழ்கள் & ஆசிரியர்கள் – முந்தைய ஆண்டு வினாக்கள் (பகுதி 1)
மதிப்பெண்: 0 விடையளித்தவை: 0 / 0