வாராந்திரத் தேர்வு 1 – குரூப் 4 / குரூப் 2 (பொதுத் தமிழ் 20 + பொது அறிவு 30)
Weekly Test 1 – TNPSC Group 4 / Group 2 (General Tamil 20 + General Studies 30)
வினாக்கள்50 · 1 மதிப்பெண் வீதம் · எதிர்மறை மதிப்பெண் இல்லை
நேரம்45 நிமிடம்
திறந்திருக்கும் நேரம்02-11-2026, 6:00 AM – 08-11-2026, 9:00 PM
எழுதியவர்கள்11
தேர்வு நேரம் முடிந்தது · Closed
இந்தத் தேர்வை எழுதியிருந்தால், உங்கள் எண்ணைக் கொடுத்து மதிப்பெண்ணையும் தரவரிசையையும் பார்க்கலாம்.
உங்கள் எண் எங்கள் ஆலோசகர் தொடர்புக்கும் தேர்வு முடிவுக்கும் மட்டும்; வேறு யாருக்கும் பகிரப்படாது. தரவரிசையில் எண் மறைக்கப்படும்.
விடைகள் + விளக்கம் · Answers
1. சந்திப்பிழை நீக்குக: கதையை படித்தேன்
(A) கதையைப் படித்தேன்
(B) கதை படித்தேன்
(C) கதையில் படித்தேன்
(D) கதையால் படித்தேன்
இரண்டாம் வேற்றுமை உருபு ஐ வெளிப்படையாக வரும்போது (விரி) அதன் பின் வல்லினம் மிகும் – கதையைப் படித்தேன்.
2. ஒருமை பன்மை பிழை : குழந்தைகள் _____ இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்
(A) தாம்
(B) தன்னால்
(C) தமக்கு
(D) தம்மால்
‘குழந்தைகள்’ பன்மை; எனவே பன்மைச் சொல்லான ‘தம்மால்’ வர வேண்டும் (‘தன்னால்’ ஒருமைக்கு உரியது).
3. ‘பூட்டுங்கதவுகள்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(A) பூட்டு + கதவுகள்
(B) பூட்டின் + கதவுகள்
(C) பூட்டும் + கதவுகள்
(D) பூட்டிய + கதவுகள்
பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்; ‘பூட்டும்’ என்னும் பெயரெச்சத்தின் மகர ஈறு ஙகரமாகத் திரிந்தது.
4. மரூஉப் பெயர் – பொருத்தமான இணையைத் தேர்க.
(A) கோயம்புத்தூர் – புத்தூர்
(B) திருநெல்வேலி – வேலி
(C) நாகூர் – நாகை
(D) புதுச்சேரி – புதுவை
புதுச்சேரி என்பது வழக்கில் ‘புதுவை’ என மருவி வழங்குகிறது.
5. ஒருபொருள் தரும் பல சொற்கள் – “வயல்”
(A) பகல், பழனம்
(B) செய், நெல்
(C) கழனி, பழனம்
(D) நீர்நிலை, கேணி
கழனி, பழனம், செய் ஆகியவை ‘வயல்’ என்னும் பொருள் தருவன; பகல், நெல், நீர்நிலை, கேணி ஆகியவை வயலைக் குறிக்கா.
6. ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ – இதற்குப் பொருத்தமான பழமொழியைக் கண்டறிக.
(A) பாம்பு அறியும் பாம்பின் கால்
(B) முள்ளினால் முள்களையும் ஆறு
(C) ஞாயிறைக் கைமறைப்பார் இல்
(D) ஆற்று உணா வேண்டுவது இல்
‘பாம்பு அறியும் பாம்பின் கால்’ – பாம்பின் காலைப் பாம்பே அறியும்; அதுபோலக் கற்றவரின் பெருமையைக் கற்றவரே அறிவர்.
7. ‘கிளை’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) உறவினர்
(B) தாவர உறுப்பு
(C) வளர்
(D) பகைவர்
கிளை என்பது உறவினர் (சுற்றம்) எனவும் பொருள்படும். அப்பொருளில் அதன் எதிர்ச்சொல் பகைவர். கிளை என்பதற்கு மரக்கிளை என்னும் பொருளும் உண்டு.
8. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க (குடி)
(A) தண்ணீர் _____
(B) தோசை _____
(C) கடலை மிட்டாய் _____
(D) சோறு _____
‘தண்ணீர் குடி’ – நீர்ம உணவுக்கு உரிய மரபு வினை ‘குடி’. சோறு உண், தோசை தின் என உணவின் தன்மைக்கு ஏற்ப வினைச்சொல் மாறும்.
9. ‘செல்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்க.
(A) சென்று
(B) சென்ற
(C) சென்றவன்
(D) சென்றான்
சென்று = செல் + ற் + உ; ல் ன் ஆகத் திரிந்தது. வினையைக் கொண்டு முடியும் வினையெச்சம் (சென்று வந்தான்).
10. இப்ப ஒசரமா வளந்துட்டான் – இத்தொடருக்கு மிகவும் பொருத்தமான எழுத்து வழக்கைக் கண்டறிக.
(A) இப்பொழுது உயரமாக வளர்ந்திருக்கான்
(B) இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்
(C) இப்ப உயரமா வளர்ந்துவிட்டான்
(D) இப்ப உயரமா வளர்ந்திருக்கிறான்
இப்ப – இப்பொழுது, ஒசரமா – உயரமாக, வளந்துட்டான் – வளர்ந்துவிட்டான்.
11. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்”
(A) நன்றி என்பது யாது?
(B) நல்லொழுக்கம் நன்மை தருமா?
(C) நன்றிக்கு வித்தாவது எது?
(D) நல்லொழுக்கம் என்றால் துன்பமா?
விடை ‘நல்லொழுக்கம்’; ‘நன்றிக்கு வித்தாகும்’ என்னும் செய்தி மாறாமல் ‘எது’ என வினவ வேண்டும்.
12. ‘Merchant’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தருக.
(A) கடற்பயணம்
(B) பண்டம்
(C) வணிகர்
(D) நுகர்வோர்
Merchant = வணிகர். பண்டம் = Commodity, கடற்பயணம் = Voyage, நுகர்வோர் = Consumer.
13. குரங்கு – குறங்கு – ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிக.
(A) வானரம் – வளைவு
(B) விலங்கு – வானரம்
(C) வானரம் – தொடை
(D) விலங்கு – வளைவு
குரங்கு = வானரம்; குறங்கு = தொடை. ர – ற ஒலி வேறுபாட்டால் பொருள் மாறுகிறது.
14. சிலப்பதிகாரம் பெரும்பான்மையும் எவ்வகைப் பாவில் அமைந்துள்ளது?
(A) அகவற்பா
(B) வெண்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பா
சிலப்பதிகாரம் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் (அகவற்பா) அமைந்தது; இடையிடையே இசைப்பாடல்களும் வெண்பாக்களும் உண்டு.
15. பொருத்துக (ஓரெழுத்து ஒருமொழி – பொருள்): (a) ஊ (b) ஐ (c) நொ (d) தே — 1. தலைவன் 2. ஊன் 3. கடவுள் 4. துன்புறு
(A) 2143
(B) 1432
(C) 4321
(D) 3124
ஊ – ஊன் (இறைச்சி), ஐ – தலைவன், நொ – துன்புறு, தே – கடவுள்; எனவே 2 1 4 3.
16. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ – இக்குறளில் உள்ள ‘பற்றுக’ என்னும் சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்க.
(A) பற்றுக
(B) பற்றற்றான்
(C) பற்று
(D) பற்றி
பற்றுக = பற்று + க (வியங்கோள் வினைமுற்று); இதன் வேர்ச்சொல் ‘பற்று’ (பிடி).
17. பொருள்களை எண்ணும் இடங்களில் _____ வரும்.
(A) முற்றுப்புள்ளி (.)
(B) அரைப்புள்ளி (;)
(C) முக்காற் புள்ளி (:)
(D) காற்புள்ளி (,)
பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக எண்ணிக் கூறும் இடங்களில் காற்புள்ளி (,) இடப்படும். எ.கா. மா, பலா, வாழை என்பன முக்கனிகள்.
18. இரு பொருள் தருக – திங்கள்
(A) சூரியன், ஆண்டு
(B) நிலா, மாதம்
(C) விண்மீன், வாரம்
(D) கடல், நாள்
திங்கள் என்னும் சொல் நிலவையும் (‘திங்களைப் போற்றுதும்’) மாதத்தையும் (‘பன்னிரு திங்கள்’) குறிக்கும்.
19. சரியான தொடரைத் தேர்ந்தெடு.
(A) ஒரு ஊர்
(B) ஓர் ஊர்
(C) ஓர் பள்ளி
(D) ஒரு அணில்
உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன் ‘ஓர்’ வரும்; ‘ஊர்’ ஊகாரத்தில் தொடங்குவதால் ‘ஓர் ஊர்’ சரி.
20. இரு வினைகளின் பொருள் வேறுபாடு – இரத்தல் – இறத்தல்
(A) கற்பித்தல் – வழங்கல்
(B) மரணம் – கொடுத்தல்
(C) மரணம் – கையேந்துதல்
(D) கையேந்துதல் – மரணம்
இரத்தல் = பிறரிடம் கையேந்திப் பெறுதல் (யாசித்தல்); இறத்தல் = சாதல் (மரணம்).
21. பேசின் ஒப்பந்தம், இரண்டாம் பேஷ்வா பாஜிராவுக்கும் ________ க்கும் இடையே கையெழுத்தானது.
The Treaty of Bassein was signed between Peshwa Baji Rao II and ______.
(A) சிவாஜி / Shivaji
(B) சுமித் / Smith
(C) டல்ஹௌசி / Dalhousie
(D) வெல்லெஸ்லி / Wellesley
பேசின் உடன்படிக்கை (1802 டிசம்பர் 31) – பேஷ்வா இரண்டாம் பாஜிராவுக்கும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் இடையே கையெழுத்தானது.
The Treaty of Bassein (1802) was signed between Peshwa Baji Rao II and the British under Lord Wellesley, accepting the subsidiary alliance.
The Treaty of Bassein (1802) was signed between Peshwa Baji Rao II and the British under Lord Wellesley, accepting the subsidiary alliance.
22. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த சீனப் பயணி யார்?
Which Chinese traveller visited India during the reign of Chandragupta II?
(A) பாஹியான் / Fa-hien
(B) யுவான் சுவாங் / Hiuen Tsang
(C) இட்சிங் / I-tsing
(D) மெகஸ்தனிஸ் / Megasthenes
சீனப் பௌத்தத் துறவி பாஹியான் இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியா வந்தார்; யுவான் சுவாங் ஹர்ஷர் காலத்திலும், மெகஸ்தனிஸ் சந்திரகுப்த மௌரியர் காலத்திலும் வந்தனர்.
The Chinese Buddhist monk Fa-hien visited India in Chandragupta II's reign; Hiuen Tsang came under Harsha and Megasthenes under Chandragupta Maurya.
The Chinese Buddhist monk Fa-hien visited India in Chandragupta II's reign; Hiuen Tsang came under Harsha and Megasthenes under Chandragupta Maurya.
23. எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
In which year did the Govt. of India declare Tamil as the first Classical Language?
(A) 2008
(B) 2004
(C) 2010
(D) 2002
இந்திய அரசு 2004 அக்டோபர் 12 அன்று தமிழை இந்தியாவின் முதல் செம்மொழியாக அறிவித்தது.
The Government of India declared Tamil the first classical language of India on 12 October 2004.
The Government of India declared Tamil the first classical language of India on 12 October 2004.
24. ________ கல்வெட்டு சோழர்களின் கிராம நிர்வாக முறையைப் பற்றி குறிப்பிடுகிறது.
The ______ inscription of the Cholas describes the administration of a village.
(A) திருவிசலூர் கல்வெட்டு / Tiruvisalur inscription
(B) பட்டிப்ரோலு கல்வெட்டு / Bhattiprolu inscription
(C) மீனாட்சிபுரம் கல்வெட்டு / Meenakshipuram inscription
(D) உத்திரமேரூர் கல்வெட்டு / Utteramerur inscription
முதலாம் பராந்தகச் சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் (பொ.ஆ. 919, 921) கிராம சபை நிர்வாகம், குடவோலை முறைத் தேர்தல், வாரியங்கள் பற்றிக் கூறுகின்றன.
The Uthiramerur inscriptions of Parantaka I (919 and 921 CE) describe the village assembly's administration, the kudavolai election and its committees.
The Uthiramerur inscriptions of Parantaka I (919 and 921 CE) describe the village assembly's administration, the kudavolai election and its committees.
25. "கண்டாசாரா" என்றழைக்கப்படும் ஒழுங்கான இராணுவத்துறையினைக் கொண்டிருந்த அரசர்கள்
Name the rulers who had organized a military department called Kandachara.
(A) மொகலாயர்கள் / Mughals
(B) பாமினி சுல்தான்கள் / Bahmani Sultans
(C) மராத்தியர்கள் / Marathas
(D) விஜயநகர ஆட்சியாளர்கள் / Vijayanagar rulers
விஜயநகர அரசில் இராணுவத் துறை கண்டாசாரா எனப்பட்டது.
Kandachara was the military department of the Vijayanagar rulers.
Kandachara was the military department of the Vijayanagar rulers.
26. 1801ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளிப் பிரகடனத்தை (ஜம்புத்வீபப் பிரகடனம்) வெளியிட்டவர்கள் யார்?
Who issued the Tiruchirappalli Proclamation (Jambudweepa Proclamation) of 1801?
(A) மருது சகோதரர்கள் / Marudhu Brothers
(B) வீரபாண்டிய கட்டபொம்மன் / Veerapandiya Kattabomman
(C) வேலுநாச்சியார் / Velu Nachiyar
(D) தீரன் சின்னமலை / Dheeran Chinnamalai
1801 ஜூன் மாதம் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றுபட அழைக்கும் திருச்சிராப்பள்ளிப் பிரகடனத்தை வெளியிட்டனர்.
In June 1801 the Marudhu Brothers issued the Tiruchirappalli Proclamation calling on all people to unite against the British.
In June 1801 the Marudhu Brothers issued the Tiruchirappalli Proclamation calling on all people to unite against the British.
27. 1873இல் சத்ய சோதக் சமாஜத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Who founded the Satya Shodhak Samaj in 1873?
(A) ஸ்ரீ நாராயண குரு / Sri Narayana Guru
(B) ஜோதிராவ் பூலே / Jyotirao Phule
(C) பண்டித ரமாபாய் / Pandita Ramabai
(D) தயானந்த சரஸ்வதி / Dayananda Saraswati
ஜோதிராவ் பூலே 1873இல் சத்ய சோதக் சமாஜத்தை (உண்மை தேடுவோர் சங்கம்) நிறுவினார்.
Jyotirao Phule founded the Satya Shodhak Samaj in 1873 to help non-Brahmins live with self-respect.
Jyotirao Phule founded the Satya Shodhak Samaj in 1873 to help non-Brahmins live with self-respect.
28. பின்வருவனவற்றைப் பொருத்துக: (a) லாகூர் காங்கிரஸ் – 1. பார்வர்டு பிளாக் (b) மூவர்ண கொடி – 2. ராவி நதி (c) நேதாஜி – 3. பூரண சுயராஜ்யம் (d) யூனியன் ஜாக் – 4. பிரிட்டிஷ் கொடி
Match the following: (a) Lahore Congress – 1. Forward Bloc (b) Tricolour flag – 2. Ravi river (c) Netaji – 3. Poorna Swaraj (d) Union Jack – 4. British Flag
(A) 4231
(B) 3214
(C) 1324
(D) 1342
லாகூர் காங்கிரஸ் (1929) – பூரண சுயராஜ்யம்; மூவர்ணக் கொடி – ராவி நதிக்கரையில் ஏற்றப்பட்டது; நேதாஜி – பார்வர்டு பிளாக்; யூனியன் ஜாக் – பிரிட்டிஷ் கொடி; எனவே 3 2 1 4.
The Lahore Congress declared Poorna Swaraj, the tricolour was hoisted on the Ravi river bank, Netaji founded the Forward Bloc and the Union Jack stood for British rule, giving 3 2 1 4.
The Lahore Congress declared Poorna Swaraj, the tricolour was hoisted on the Ravi river bank, Netaji founded the Forward Bloc and the Union Jack stood for British rule, giving 3 2 1 4.
29. பின்வருவனவற்றில் எது பொருத்தமற்றதாக உள்ளது?
Which one of the following pairs is not correct?
(A) நேரு அறிக்கை – 1946 / Nehru Report – 1946
(B) பாகிஸ்தான் தீர்மானம் – 1940 / Pakistan Resolution – 1940
(C) காந்தி இர்வின் ஒப்பந்தம் – 1931 / Gandhi-Irwin pact – 1931
(D) கிரிப்ஸ் குழு – 1942 / Cripps Mission – 1942
நேரு அறிக்கை 1928இல் மோதிலால் நேரு தலைமையிலான குழுவால் தயாரிக்கப்பட்டது; 1946 அல்ல.
The Nehru Report was prepared in 1928 under Motilal Nehru, not 1946, so that pair is incorrect.
The Nehru Report was prepared in 1928 under Motilal Nehru, not 1946, so that pair is incorrect.
30. ஆச்சார்யா வினோபா பாவே நவீன இந்தியாவின் மிக முக்கியமான மனிதநேய மற்றும் சமூகச் சீர்திருத்தவாதிகளில் ஒருவர். அவர் பிறந்த நாள் ______.
Acharya Vinoba Bhave was one of the most prominent humanists and social reformers of modern India. He was born on ______.
(A) 11 செப்டம்பர் 1891 / 11 September 1891
(B) 11 செப்டம்பர் 1895 / 11 September 1895
(C) 11 செப்டம்பர் 1893 / 11 September 1893
(D) 11 செப்டம்பர் 1896 / 11 September 1896
ஆச்சார்யா வினோபா பாவே 11 செப்டம்பர் 1895இல் மகாராஷ்டிரத்தின் ககோடே (Gagode) கிராமத்தில் பிறந்தார்; 1982இல் மறைந்தார்.
Acharya Vinoba Bhave was born on 11 September 1895 at Gagode village in Maharashtra.
Acharya Vinoba Bhave was born on 11 September 1895 at Gagode village in Maharashtra.
31. நெறிமுறைக் கோட்பாடுகளை எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்த முடியாது எனக் கூறும் அரசியலமைப்புப் பிரிவு எது?
Which Article says that the Directive Principles are not enforceable by any court?
(A) பிரிவு 37 / Article 37
(B) பிரிவு 38 / Article 38
(C) பிரிவு 39 / Article 39
(D) பிரிவு 40 / Article 40
பிரிவு 37: நெறிமுறைக் கோட்பாடுகள் எந்த நீதிமன்றத்தாலும் செயல்படுத்தப்பட முடியாதவை; ஆயினும் அவை நாட்டின் ஆட்சிக்கு அடிப்படையானவை.
Article 37 says the Directive Principles are not enforceable by any court, though they are fundamental in governance.
Article 37 says the Directive Principles are not enforceable by any court, though they are fundamental in governance.
32. மாநிலங்களவையின் அலுவல்வழித் தலைவர்
The Ex-officio Chairman of the Rajya Sabha is
(A) குடியரசுத் தலைவர் / The President
(B) பிரதமர் / The Prime Minister
(C) மக்களவைத் தலைவர் / The Speaker
(D) துணைக் குடியரசுத் தலைவர் / The Vice-President
துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் அலுவல்வழித் தலைவர் (பிரிவு 64, 89).
The Vice-President of India is the ex-officio Chairman of the Rajya Sabha under Articles 64 and 89.
The Vice-President of India is the ex-officio Chairman of the Rajya Sabha under Articles 64 and 89.
33. "அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்" எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு
The landmark document "The Universal Declaration of Human Rights" (UDHR) was adopted by the ______.
(A) ஐக்கிய நாடுகள் சபை / UNO
(B) ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் / UNICEF
(C) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு / UNESCO
(D) உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பு / UHRO
UDHR-ஐ ஏற்றது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (1948 டிசம்பர் 10, பாரிஸ்).
The Universal Declaration of Human Rights was adopted by the United Nations General Assembly in Paris on 10 December 1948.
The Universal Declaration of Human Rights was adopted by the United Nations General Assembly in Paris on 10 December 1948.
34. கூற்று (A): 73-வது திருத்தத்தின் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. காரணம் (R): உள்ளாட்சி அரசாங்கங்களின் மூலம் மக்களாட்சி அடித்தட்டு மக்களைச் சென்றடைந்தது.
Assertion (A): The 73rd Amendment Act brought rural local bodies. Reason (R): Democracy reached the grassroots level through local governments.
(A) (A), (R) இரண்டும் சரி; (R), (A)-க்குச் சரியான விளக்கம் / Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
(B) (A), (R) இரண்டும் சரி; ஆனால் (R), (A)-க்குச் சரியான விளக்கம் அல்ல / Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
(C) (A) சரி, (R) தவறு / (A) is true but (R) is false
(D) (A) தவறு, (R) சரி / (A) is false but (R) is true
73-வது திருத்தம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை (பஞ்சாயத்துகளை) அரசியலமைப்பு அமைப்புகளாக நிறுவியது; அதன் நோக்கமே மக்களாட்சியை அடித்தள நிலைக்கு (கிராமம் வரை) கொண்டு செல்வது.
The 73rd Amendment made rural local bodies (Panchayats) constitutional bodies, and its aim of taking democracy to the grassroots explains A.
The 73rd Amendment made rural local bodies (Panchayats) constitutional bodies, and its aim of taking democracy to the grassroots explains A.
35. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 'போக்சோ' சட்டம் என்பது ______ ஆகும்.
POCSO Act stands for ______.
(A) குழந்தைகள் மீதான பொருளாதாரச் சுரண்டல் / Children Economic Exploitation
(B) குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் / Children Sexual Exploitation
(C) குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் / Children Sexual Abuse
(D) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் / Protection of Children from Sexual Offences Act
POCSO = Protection of Children from Sexual Offences Act, 2012 – பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்.
POCSO stands for the Protection of Children from Sexual Offences Act, 2012.
POCSO stands for the Protection of Children from Sexual Offences Act, 2012.
36. கீழ்க்காணும் ஆணையங்களில் எது இந்திய மாநிலங்களை மொழிவாரியாக மறுசீரமைக்கப் பரிந்துரைத்தது?
Which among the following commissions recommended the reorganisation of Indian States on linguistic basis?
(A) கே.எம். பணிக்கர் ஆணையம் / K.M. Panikkar Commission
(B) பசல் அலி ஆணையம் / Fazal Ali Commission
(C) பானுபிரதாப் சிங் ஆணையம் / Bhanu Pratap Singh Commission
(D) உபேந்திரா ஆணையம் / Upendra Commission
பசல் அலி ஆணையம் (மாநிலச் சீரமைப்பு ஆணையம், 1953 – 55) மொழியை முக்கிய அடிப்படையாக ஏற்று மாநிலச் சீரமைப்பைப் பரிந்துரைத்தது; அதன்படி 1956 சீரமைப்பு நடந்தது.
The Fazal Ali Commission (States Reorganisation Commission, 1953-55) accepted language as a major basis for reorganising Indian states.
The Fazal Ali Commission (States Reorganisation Commission, 1953-55) accepted language as a major basis for reorganising Indian states.
37. 1956 தொழில் கொள்கைத் தீர்மானத்தின் அட்டவணை A-இல், அரசின் தனிப் பொறுப்பாக எத்தனை தொழில்கள் சேர்க்கப்பட்டன?
Under the Industrial Policy Resolution 1956, how many industries were placed in Schedule A as the exclusive responsibility of the State?
(A) 12
(B) 17
(C) 18
(D) 6
1956 தீர்மானம்: அட்டவணை A – 17 தொழில்கள் அரசுக்கு மட்டும்; அட்டவணை B – 12 தொழில்கள் அரசும் தனியாரும் இணைந்து; மற்றவை அட்டவணை C.
The 1956 Resolution placed 17 industries in Schedule A (State only) and 12 in Schedule B (State and private), leaving the rest in Schedule C.
The 1956 Resolution placed 17 industries in Schedule A (State only) and 12 in Schedule B (State and private), leaving the rest in Schedule C.
38. 15ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
In which year was the 15th Finance Commission established?
(A) 2015
(B) 2017
(C) 2019
(D) 2021
15ஆவது நிதி ஆணையம் 2017 நவம்பர் 27 அன்று அமைக்கப்பட்டது.
The 15th Finance Commission was constituted on 27 November 2017.
The 15th Finance Commission was constituted on 27 November 2017.
39. சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (SEZ) முக்கிய நோக்கம் அல்லாதது ______
______ is not the main objective of Special Economic Zones.
(A) வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் / Reduction of income inequality
(B) பொருள்கள், சேவைகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு / Promotion of exports of goods and services
(C) வேலைவாய்ப்பு உருவாக்குதல் / Creation of employment opportunities
(D) கூடுதல் பொருளாதார நடவடிக்கைகளை உருவாக்குதல் / Generation of additional economic activity
SEZ சட்டம் 2005-இன் நோக்கங்கள் ஏற்றுமதி, முதலீடு, வேலைவாய்ப்பு, கூடுதல் பொருளாதார நடவடிக்கை, உள்கட்டமைப்பு; வருமான ஏற்றத்தாழ்வைக் குறைத்தல் அதன் முக்கிய நோக்கம் அல்ல.
Special Economic Zones aim at promoting exports, investment, employment and infrastructure, but reducing income inequality is not their main objective.
Special Economic Zones aim at promoting exports, investment, employment and infrastructure, but reducing income inequality is not their main objective.
40. ஒன்றிய அரசின் நேர்முக வரி வருவாயுடன் தொடர்பில்லாதது எது?
Which is not related to direct tax revenues of the Central Government?
(A) வருமான வரி / Taxes on income
(B) பண்டங்கள், சேவைகள் மீதான வரி / Taxes on commodities and services
(C) சொத்து, மூலதனப் பரிவர்த்தனை மீதான வரி / Taxes on property and capital transactions
(D) ஈவுத்தொகை, லாபம் மீதான வரி / Taxes on dividends and profits
பண்டங்கள், சேவைகள் மீதான வரிகள் (GST, சுங்க வரி, உற்பத்தி வரி) மறைமுக வரிகள் – அவற்றின் சுமை விலை வழியாக நுகர்வோருக்கு மாறுகிறது.
Taxes on commodities and services such as GST and customs are indirect taxes, not direct taxes, because their burden is passed on to consumers.
Taxes on commodities and services such as GST and customs are indirect taxes, not direct taxes, because their burden is passed on to consumers.
41. பற்றாக்குறை நிதியாக்கத்தின் விளைவு
The effect of deficit financing is
(A) விலைகள் குறைதல் / Decrease in prices
(B) பண அளிப்பு அதிகரிப்பு / Increase in money supply
(C) வேலையின்மை அதிகரிப்பு / Increase in unemployment
(D) வட்டி வீதம் உயர்தல் / Increase in interest rates
பற்றாக்குறையை ஈடுசெய்யப் புதிய பணம் உருவாக்கப்படுவதால் பண அளிப்பு அதிகரிக்கிறது; அளவுக்கு மீறினால் பணவீக்கம் ஏற்படும்.
Deficit financing creates new money, so it increases the money supply and, if excessive, causes inflation.
Deficit financing creates new money, so it increases the money supply and, if excessive, causes inflation.
42. 15ஆவது நிதி ஆணைய அறிக்கையின்படி, 2021 – 2026 காலத்துக்கு ஒன்றிய வரிகளில் மாநிலங்களின் பங்கு ______ சதவீதம்.
As per the 15th Finance Commission's report, the states' share of central taxes for the period 2021 – 2026 is ______ percent.
(A) 42
(B) 48
(C) 43
(D) 41
15ஆவது நிதி ஆணையம் பகிர்வுக்குரிய ஒன்றிய வரிகளில் மாநிலங்களின் பங்கை 41% எனப் பரிந்துரைத்தது.
The 15th Finance Commission recommended a 41% share of divisible central taxes for states for 2021-26 (42% under the 14th).
The 15th Finance Commission recommended a 41% share of divisible central taxes for states for 2021-26 (42% under the 14th).
43. உலகிலேயே அதிக மழை பெறும் இடமான மௌசின்ராம் அமைந்துள்ள இந்திய மாநிலம்
Mawsynram, the place which receives the highest rainfall in the world, is located in ______ state of India.
(A) மிசோரம் / Mizoram
(B) நாகாலாந்து / Nagaland
(C) மேகாலயா / Meghalaya
(D) திரிபுரா / Tripura
மௌசின்ராம் மேகாலயாவின் கிழக்குக் காசி மலைப் பகுதியில், சிரபுஞ்சிக்கு அருகே உள்ளது.
Mawsynram, in the East Khasi Hills near Cherrapunji in Meghalaya, receives the world's highest rainfall.
Mawsynram, in the East Khasi Hills near Cherrapunji in Meghalaya, receives the world's highest rainfall.
44. பின்வருவனவற்றுள் பெரிய இமயமலையையும் சிறிய இமயமலையையும் பிரிப்பது எது?
Which among the following separates greater and lesser Himalaya?
(A) கரோல் படுகை / Karol Basin
(B) டூன் பள்ளத்தாக்கு / Dun valley
(C) முதன்மை மைய உந்துதல் / Main Central Thrust
(D) காத்மாண்டு பள்ளத்தாக்கு / Kathmandu valley
பெரிய இமயமலையை (இமாத்ரி) சிறிய இமயமலையிலிருந்து (இமாச்சல்) பிரிக்கும் பெரும் பிளவுப் பெயர்ச்சி முதன்மை மைய உந்துதல் (Main Central Thrust – MCT).
The Main Central Thrust separates the Greater Himalaya (Himadri) from the Lesser Himalaya (Himachal).
The Main Central Thrust separates the Greater Himalaya (Himadri) from the Lesser Himalaya (Himachal).
45. இந்தியாவின் வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ள இடம்
The headquarters of the Northeast Frontier Railway is at
(A) மாலிகான் / Maligaon
(B) சென்னை / Chennai
(C) மும்பை / Mumbai
(D) டெல்லி / Delhi
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் தலைமையகம் அசாமின் குவாஹாத்தி நகரில் உள்ள மாலிகான்.
The North East Frontier Railway has its headquarters at Maligaon in Guwahati, Assam.
The North East Frontier Railway has its headquarters at Maligaon in Guwahati, Assam.
46. தவறான பதிலைத் தேர்ந்தெடுக்கவும். வனத்துறையின் இலக்குகளும் நோக்கங்களும் :
Choose the wrong answer. The objectives of the forest department are:
(A) சுற்றுச்சூழல் உறுதிப்படுத்தலும் வன உற்பத்தித் திறனை மேம்படுத்துதலும் / Environmental stabilization and enhancement of forest productivity
(B) சூழல் அமைப்புகளையும் அவற்றின் மரபியல் பன்முகத்தன்மையையும் பாதுகாத்தல் / Conservation of eco systems and their genetic diversity
(C) இயற்கைக் காடுகளையும் வன உயிரினங்களையும் பாதுகாத்தல் / Preserving natural forests and wildlife
(D) காடழிப்பும் வாழிட அழிவும் / Deforestation and Habitat destruction
காடழிப்பும் வாழிட அழிவும் வனத்துறை தடுக்க வேண்டிய அச்சுறுத்தல்கள்; அவை நோக்கங்கள் அல்ல.
Deforestation and habitat destruction are threats that forest departments try to prevent, not their objectives.
Deforestation and habitat destruction are threats that forest departments try to prevent, not their objectives.
47. ஒரு நீர்மக் கரைசலின் pH 25°C வெப்பநிலையில் 8 என்றால், அதன் pOH எதற்குச் சமம்?
If the pH of an aqueous solution at 25°C is 8, then its pOH is equal to
(A) 1
(B) 6
(C) 0
(D) 7
25 °C-இல் pH + pOH = 14; எனவே pOH = 14 − 8 = 6.
At 25 degrees C, pH + pOH = 14, so pOH = 14 - 8 = 6.
At 25 degrees C, pH + pOH = 14, so pOH = 14 - 8 = 6.
48. CSIR (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம்) ஒரு தன்னாட்சி அமைப்பாக ______ கீழ் பதிவு செய்யப்பட்டது.
CSIR (Council of Scientific and Industrial Research) is an autonomous body registered under the ______.
(A) 1860-ஆம் ஆண்டு இந்தியப் பதிவுச் சட்டத்தின் / Registration of Indian Act of 1860
(B) 1860-ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் / Registration of Societies Act of 1860
(C) 1860-ஆம் ஆண்டு குடியியல் பதிவுச் சட்டத்தின் / Registration of Civil Act of 1860
(D) 1860-ஆம் ஆண்டு மேம்பாட்டுப் பதிவுச் சட்டத்தின் / Registration of Developmental Act of 1860
CSIR 1942-இல் தொடங்கப்பட்ட தன்னாட்சி அமைப்பு; இது சங்கங்கள் பதிவுச் சட்டம் 1860 (Societies Registration Act, 1860)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டது.
CSIR, founded in 1942, is an autonomous body registered under the Societies Registration Act of 1860.
CSIR, founded in 1942, is an autonomous body registered under the Societies Registration Act of 1860.
49. HIV-I வைரஸ்களில் ஒரே மாதிரியான நேர்புலனுடைய இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. அவைகள் _____ ஆகும்.
The HIV-I virus contains two identical molecules of positive-sense ______.
(A) எம்.ஆர்.என்.ஏ / mRNA
(B) எஸ்.எஸ்.ஆர்.என்.ஏ / ssRNA
(C) ஆர்.ஆர்.என்.ஏ / rRNA
(D) (B) மற்றும் (C) / (B) and (C)
HIV ஒரு ரெட்ரோவைரஸ்; அதன் மரபுப்பொருள் நேர்ப்பொருள் (positive sense) ஒற்றை இழை RNA-வின் இரண்டு ஒத்த மூலக்கூறுகள்.
HIV is a retrovirus whose genome consists of two identical molecules of positive-sense single-stranded RNA.
HIV is a retrovirus whose genome consists of two identical molecules of positive-sense single-stranded RNA.
50. நடனம் ஆடுதல், வாகனம் ஓட்டுதல் மற்றும் எழுதுதல் ஆகியவை எந்தக் கற்றல் களத்திற்கு எடுத்துக்காட்டு?
Dancing, driving and writing are examples of ______ learning domain.
(A) உடலியக்கம்சார் (செயல்பாடு சார்ந்த) கற்றல் களம் / Psychomotor learning domain
(B) அறிவுசார் கற்றல் களம் / Cognitive learning domain
(C) உணர்வுசார் (உளம்சார்) கற்றல் களம் / Affective learning domain
(D) இயந்திரக் கற்றல் களம் / Mechanical learning domain
நடனம், வாகனம் ஓட்டுதல், எழுதுதல் போன்ற உடல் இயக்கத் திறன்கள் உடலியக்கம்சார் (psychomotor) கற்றல் களத்தைச் சேர்ந்தவை.
Dancing, driving and writing are physical skills belonging to the psychomotor learning domain.
Dancing, driving and writing are physical skills belonging to the psychomotor learning domain.
தரவரிசை · Rank list
| # | பெயர் · Name | மாவட்டம் | மதிப்பெண் | நேரம் |
|---|---|---|---|---|
| 1 | PADMA (96xxxxxx65) | தூத்துக்குடி | 43 | 14:11 |
| 2 | Panneer Selvam (63xxxxxx23) | தென்காசி | 32 | 15:40 |
| 3 | Ayisha (79xxxxxx91) | திருச்சிராப்பள்ளி | 30 | 11:28 |
| 4 | THANIKASALAM V (73xxxxxx10) | செங்கல்பட்டு | 29 | 11:11 |
| 5 | Jayaprakash Ramalingam (84xxxxxx11) | கடலூர் | 27 | 17:39 |
| 6 | BHUVANESHWARI A (90xxxxxx45) | இராணிப்பேட்டை | 24 | 40:42 |
| 7 | Jose Maximuse Thaya J (75xxxxxx06) | கோயம்புத்தூர் | 24 | 46:00 |
| 8 | sarveshwaran.k (63xxxxxx53) | தூத்துக்குடி | 23 | 18:34 |
| 9 | Gowsalya (94xxxxxx95) | சேலம் | 22 | 10:21 |
| 10 | Rajesh M (88xxxxxx10) | நாகப்பட்டினம் | 21 | 9:44 |
| 11 | S.AMUDHA (86xxxxxx88) | திருவள்ளூர் | 21 | 14:54 |
← அனைத்து வாராந்திரத் தேர்வுகள் · இலவச வினாடி வினா · இலவச வகுப்புகள்
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups

