வினாடி வினா
← திரும்பச் செல்ல
₹299 →
தினசரி நடப்பு நிகழ்வுகள், தேர்வு அறிவிப்புகள் – உடனுக்குடன் பெற எங்களைப் பின்தொடருங்கள்
YouTube
WhatsApp சேனல்
Telegram சேனல்
Facebook பக்கம்
Instagram
நண்பர்களுடன் / குழுவில் பகிருங்கள்
உங்கள் இணையதளம் / Blog-இல் இணைக்க (HTML code)
1.
சொல்லைப் பிரித்தெழுதுக : பிரித்தெழுதுக
Correct Answer: B [பிரித்து + எழுதுக]
Notes:
பிரித்தெழுதுக = பிரித்து + எழுதுக.
2.
‘அங்கை’ சரியாகப் பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க
Correct Answer: B [அகம் + கை]
Notes:
அங்கை = அகம் + கை. ‘அகம்’ என்பதன் முன் ‘கை’ வரும்போது இடையிலுள்ள ககரம் கெட்டு, மகரம் வருமொழி ககரத்துக்கு இனமான ஙகரமாகத் திரிந்தது.
3.
அடைப்புக்குள் உள்ள சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது (எந்தமிழ்நா)
Correct Answer: C [எம் + தமிழ் + நா]
Notes:
எந்தமிழ்நா = எம் + தமிழ் + நா.
4.
‘அந்தமான்’ என்ற சொல் அந்த+மான் எனப் பிரிந்து நின்று எப்பொருளைத் தருகிறது
Correct Answer: A [விலங்கு]
Notes:
அந்த + மான் எனப் பிரிக்கும்போது ‘மான்’ என்பது ஒரு விலங்கைக் குறிக்கும்.
5.
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்
வற்றல் மரந்தளிர்த் தற்று
இதில் அன்பகத்து இல்லா என்பதனை எவ்வாறு பிரிக்கலாம்
Correct Answer: D [அன்பு + அகத்து + இல்லா]
Notes:
அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா.
6.
பிரித்தெழுதுக – ‘அன்மொழித்தொகை’
Correct Answer: B [அல் + மொழி + தொகை]
Notes:
அன்மொழித்தொகை = அல் + மொழி + தொகை.
7.
‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: B [அமுது + என்று]
Notes:
அமுதென்று = அமுது + என்று. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதி உகரம் கெட்டு, த் + எ = தெ என்று புணர்ந்தது.
8.
‘அருந்துணை’ என்பதைப் பிரித்தெழுதுக.
Correct Answer: A [அருமை + துணை]
Notes:
அருந்துணை = அருமை + துணை. பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டது (ஈறுபோதல்) – அரு + துணை; வருமொழி தகரத்துக்கு இனமான நகரம் மிகுந்தது (இனமிகல்) – அருந்துணை.
9.
பிரித்தெழுதுக : அறைந்தறைந்து
Correct Answer: B [அறைந்து + அறைந்து]
Notes:
அறைந்தறைந்து = அறைந்து + அறைந்து.
10.
பிரித்து எழுதுக.
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
‘அவ்வுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: B [அ + உருவம்]
Notes:
அவ்வுருவம் = அ + உருவம். சுட்டெழுத்து ‘அ’ முன் உயிர் வரும்போது வகர மெய் தோன்றி இரட்டித்தது: அ + வ் + வ் + உருவம் = அவ்வுருவம் (அந்த உருவம்).
11.
பிரித்து எழுதுக :
ஆற்றுணா
ஆற்றுணா
Correct Answer: C [ஆறு + உணா]
Notes:
ஆற்றுணா = ஆறு + உணா. நெடில்தொடர்க் குற்றியலுகரமான ‘ஆறு’ – றகர ஒற்று இரட்டி ‘ஆற்று’ ஆனது; பின் உகரம் கெட்டு ற் + உ = று.
12.
பிரித்தெழுதுதல்
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
Correct Answer: B [இடம் + எல்லாம்]
Notes:
இடமெல்லாம் = இடம் + எல்லாம். ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – நிலைமொழி இறுதி மெய் ம் உடன் வருமொழி உயிர் எ சேர்ந்து ‘மெ’ ஆனது.
13.
பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
Correct Answer: B [இனிமை + அருமை + பொழில்]
Notes:
இன்னரும்பொழில் = இனிமை + அருமை + பொழில்.
14.
‘இன்னோசை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: C [இனிமை + ஓசை]
Notes:
இன்னோசை = இனிமை + ஓசை. ‘இனிமை’ என்னும் பண்புப்பெயர் ‘மை’ விகுதி கெட்டு ‘இன்’ என நின்று, தனிக்குறில் முன் ஒற்று இரட்டி (இன்ன்), வருமொழி உயிருடன் புணர்ந்தது.
15.
‘இன்மொழி’ – பிரித்து எழுதுக.
Correct Answer: D [இனிமை + மொழி]
Notes:
இன்மொழி = இனிமை + மொழி. பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் ‘மை’ விகுதி கெட்டது.
16.
‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
Correct Answer: D [இரண்டு + அல்ல]
Notes:
இரண்டல்ல = இரண்டு + அல்ல. ‘உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்’ – நிலைமொழி இறுதி உகரம் கெட்டு, ட் + அ = ட என்று புணர்ந்தது.
17.
பிரித்து எழுதுக :
உயர்வடைவோம்
உயர்வடைவோம்
Correct Answer: C [உயர்வு + அடைவோம்]
Notes:
உயர்வடைவோம் = உயர்வு + அடைவோம்.
18.
பிரித்தெழுதுக : எந்தாய்
Correct Answer: B [எம் + தாய்]
Notes:
எந்தாய் = எம் + தாய். நிலைமொழி இறுதி மகரம், வருமொழி தகரத்துக்கு இனமான நகரமாகத் திரிந்தது.
19.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
Correct Answer: B [என்று + என்றும்]
Notes:
என்றென்றும் = என்று + என்றும்.
20.
‘எற்பாடு’ – பிரித்து எழுதுக.
Correct Answer: A [எல் + பாடு]
Notes:
எற்பாடு = எல் + பாடு. நிலைமொழி லகரம் வல்லினம் (ப) முன் றகரமாகத் திரிந்தது.
21.
பிரித்து எழுதுக : கடிந்தொரார்
Correct Answer: A [கடிந்து + ஒரார்]
Notes:
கடிந்தொரார் = கடிந்து + ஒரார்.
22.
பிரித்து எழுதுக.
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
‘கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: B [கண்டு + அறி]
Notes:
கண்டறி = கண்டு + அறி. நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் கெட்டு, ட் + அ = ட என்று புணர்ந்தது.
23.
கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்து எழுதுக.
Correct Answer: A [கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன]
Notes:
கண்டெடுக்கப்பட்டுள்ளன = கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன.
24.
‘கண்ணுறங்கு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
Correct Answer: A [கண் + உறங்கு]
Notes:
கண்ணுறங்கு = கண் + உறங்கு. ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ – ‘கண்’ என்பதில் ணகர ஒற்று இரட்டி, ண் + உ = ணு என்று புணர்ந்தது.
25.
பிரித்தெழுதுக :- ‘கரியன்’
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி.
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி.
Correct Answer: B [கருமை + அன்]
Notes:
கரியன் = கருமை + அன்.
26.
பிரித்து எழுதுக : கருநிறத்தரக்கியர்
Correct Answer: D [கருமை + நிறத்து + அரக்கியர்]
Notes:
கருநிறத்தரக்கியர் = கருமை + நிறத்து + அரக்கியர்.
27.
“கலனல்லால்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
Correct Answer: C [கலன் + அல்லால்]
Notes:
கலனல்லால் = கலன் + அல்லால். ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ன் + அ = ன.
28.
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Correct Answer: B [கலம் + பகம்]
Notes:
கலம்பகம் = கலம் + பகம். கலம் = பன்னிரண்டு, பகம் = ஆறு; பதினெட்டு உறுப்புகள் கலந்து வரும் சிற்றிலக்கியம் என்பதால் இப்பெயர்.
29.
பிரித்து எழுதுக : காட்டுக்கோழி
Correct Answer: B [காடு + கோழி]
Notes:
காட்டுக்கோழி = காடு + கோழி. நெடில்தொடர்க் குற்றியலுகரமான ‘காடு’ – டகர ஒற்று இரட்டி ‘காட்டு’ ஆனது; வருமொழி வல்லினம் க் மிகுந்து காட்டுக்கோழி ஆனது.
30.
‘குறுகினன்’ – சரியாகப் பிரித்தெழுதுக.
Correct Answer: C [குறுகு + இன் + அன்]
Notes:
குறுகினன் = குறுகு + இன் + அன்.
31.
‘கைப்பொருள்’ – என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது
Correct Answer: B [கை + பொருள்]
Notes:
கைப்பொருள் = கை + பொருள். நிலைமொழி ‘கை’, வருமொழி ‘பொருள்’; இடையே வல்லின மெய் ப் மிகுந்தது.
32.
கோடிட்ட இடத்தை நிரப்புக :
காட்சி என்னும் தொழிற்பெயர் _____ எனப் பிரியும்
காட்சி என்னும் தொழிற்பெயர் _____ எனப் பிரியும்
Correct Answer: C [காண் + சி]
Notes:
காட்சி = காண் + சி. ‘காண்’ என்னும் பகுதியோடு ‘சி’ என்னும் தொழிற்பெயர் விகுதி சேர்ந்தது; ணகர மெய் வல்லினத்தின் முன் டகரமாகத் திரிந்தது (மண் + குடம் = மட்குடம் போல).
33.
கோட்டோவியம் – பிரித்தெழுதுக.
Correct Answer: B [கோடு + ஓவியம்]
Notes:
கோட்டோவியம் = கோடு + ஓவியம். நெடில்தொடர்க் குற்றியலுகரமான ‘கோடு’ – டகர ஒற்று இரட்டி ‘கோட்டு’ ஆனது; பின் உகரம் கெட்டு ட் + ஓ = டோ.
34.
பிரித்து எழுதுக : சின்னாள்
Correct Answer: B [சில + நாள்]
Notes:
சின்னாள் = சில + நாள். ‘சில’ இறுதி அகரம் கெட்டு, லகரம் னகரமாகவும் வருமொழி நகரம் னகரமாகவும் திரிந்தது (பல + நாள் = பன்னாள் போல).
35.
சிற்றோடை – பிரித்தெழுதுக
Correct Answer: B [சிறுமை + ஓடை]
Notes:
சிற்றோடை = சிறுமை + ஓடை. ‘மை’ விகுதி கெட்டு (ஈறுபோதல்) ‘சிறு’; றகர ஒற்று இரட்டி (தன்னொற்று இரட்டல்) ‘சிற்று’; பின் உகரம் கெட்டு ற் + ஓ = றோ என்று புணர்ந்தது.
36.
பிரித்தெழுதுக.
சீரிளமை
சீரிளமை
Correct Answer: A [சீர் + இளமை]
Notes:
சீரிளமை = சீர் + இளமை. ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ – ர் + இ = ரி.
37.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
Correct Answer: B [செத்து + இறந்த]
Notes:
செத்திறந்த = செத்து + இறந்த. நிலைமொழி இறுதிக் குற்றியலுகரம் கெட்டு, த் + இ = தி என்று புணர்ந்தது.
📘 TNPSC பொதுத் தமிழ் PYQ – PDF புத்தகம்
இங்கே ஒரு வரி விளக்கம் மட்டும். 3,867 வினாக்கள் · ஒவ்வொரு வினாவுக்கும் முழு விளக்கம் · இலக்கணக் குறிப்புப் பெட்டிகள் · 1,062 பக்கங்கள்
புத்தகத்தைப் பெற – ₹149 மேலும் வினாடி வினாக்கள்
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 4
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 3
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 2
› TNPSC மாதிரித் தேர்வு – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› TNPSC பயிற்சி வினாக்கள் – பொதுத் தமிழ் – தொகுப்பு 1
› பொதுத் தமிழ் PYQ – தமிழ் அறிஞர்கள் · தமிழ்த்தொண்டு – பகுதி 3 (வினா 101–149)
மதிப்பெண்: 0
விடையளித்தவை: 0 / 0
